World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel threatens war against Iran within months

ஈரானுக்கு எதிராக சில மாதங்களுக்குள் போர் தொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்துகிறது

By Peter Symonds
4 February 2012
Back to screen version

ஈரானுக்கு எதிரான தண்டனையாக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் ஈரானிய அணுச்சக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல்கள் இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் பெருகியுள்ளன. இந்தக் கட்டத்தில், ஒபாமாவின் நிர்வாகம் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்துள்ளது என்றாலும், அத்தகைய தாக்குதலை முற்றிலும் வாஷிங்டன் தடுத்துவிட்டது என்பதற்கான குறிப்புக்கள் இல்லை. வாஷிங்டன் போஸ்ட்டின்  கட்டுரையாளர் டேவிட் இக்நேஷியஸ் நேற்று அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா, ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரானைத் தாக்கக் கூடும் என்பதை நம்புகிறார் அதுவும் பாதிக்கப்படாத பகுதி என்று இஸ்ரேலியர்கள் விவரிக்கும் ஈரான் அணுகுண்டுத் தயாரிப்பைத் தொடங்குமுன் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

இக்நேஷியஸிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஐயத்திற்கு இடமின்றி இதைத் தெரிவித்துள்ள பானெட்டா கட்டுரை பற்றிக் கருத்துக் கூற மறுத்துவிட்டார். ஆனால் அறிக்கையின் பொருளுரையை அவர் மறுக்கவில்லை. மேலும் கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, பானெட்டா, ஒரு தாக்குதலைப் பரிசீலிப்பதாக இஸ்ரேல் குறிப்புக்காட்டியுள்ளது, நாங்கள் எங்கள் கவலைகளைக் கூறியுள்ளோம் என்று உறுதிபடுத்தினார்.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அவைகள் முற்றிலும் தந்திரோபாயத்தை ஒட்டியவைதான். அமெரிக்கா தாக்குவதற்கு முன் நேரம் எடுத்துக் கொள்ளவும் என்று பகிரங்கமாகவேனும் கூறுகையில், இஸ்ரேல் உடனடி நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கிறது; இதற்குப் போலிக்காரணமாக ஈரானின் போர்டா யுரேனிய அடர்த்தி ஆலை முற்றுப்பெறும் தறுவாயில் உள்ளது, அதன் பின் அது தாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுவிடும். இரு நாடுகளுமே பலமுறை அனைத்து விருப்புரிமைகளும் மேசையில் உள்ளன, அதாவது ஈரானிய ஆட்சி இவர்களின் கோரிக்கைகளுக்கு தாழ்ந்து நடந்தால் ஒழிய போர் உட்பட அனைத்தும் என்று பலமுறை கூறியுள்ளன.

இஸ்ரேலியர்கள் தாக்கினால் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி வெள்ளை மாளிகை இன்னும் துல்லியமாக முடிவெடுக்கவில்லை. ஒரு வலுவான அமெரிக்க பிரதிபலிப்பை தூண்டிவிடக்கூடிய வகையில் ஈரான் அமெரிக்க சொத்துக்களை தாக்கினால் ஒழிய, மோதலில் இருந்து ஒதுங்கி இருப்பது சாதகம் என்று நிர்வாகம் கருதுகிறது. என்றும் இக்நேஷியஸ் கூறியுள்ளார். நிர்வாகத்தின் அதிகாரிகள் இஸ்ரேலின் மக்கள் உள்ள மையங்கள் தாக்கப்பட்டால் [ஈரானின் பதிலடியால்], அமெரிக்காவானது இஸ்ரேலின் பாதுகாப்பிற்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குவதை வாஷிங்டன் தன் செல்வாக்கினால் தடுத்துவிட முடியும்; இஸ்ரேலோ பெரிதும் அமெரிக்காவை ராஜதந்திர, பொருளாதார, இராணுவ வகைகளில் நம்பியுள்ளது. இக்கட்டுரை இத்தகைய நிலை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இதன் பொருள் ஒபாமா நிர்வாகம் உட்குறிப்பாக ஒரு சட்டவிரோத, தூண்டுதலற்ற தாக்குதலை ஈரான் மீது நடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்து ஈரான் பதிலடி கொடுத்தால் தன்னுடைய இராணுவத்தை கொண்டு வருவோம் என்று அச்சுறுத்துவது போல் தோன்றுகிறது.

இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் வியாழனன்று மீண்டும் இராணுவ நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஈரானிய இராணுவ அணுச்சக்தித் திட்டம் மெதுவாக, ஆனால் உறுதியாக இறுதிக் கட்டங்களை அடைந்து கொண்டிருக்கிறது என்று கூறிய அவர் ஒரு பாதுகாப்புக் கட்டத்திற்கு இத்திட்டம் வந்துவிட்டால், திறமையான தலையீடு இல்லாவிடில் அது முடிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவித்தார். உடனடிச் செயற்பாட்டை வலியுறுத்திய பாரக், “ ‘பின்னர் என்று கூறுபவர்கள் பின்னர் என்பது மிகத் தாமதம் என்று அறிவர் என்றும் எச்சரித்தார்.

அணுவாயுதத் திட்டம் முடிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருக்க, ஈரானிடம் ஒரு  இராணுவ அணுவாயுதத் திட்டம் உள்ளது என்பதற்கு பாரக் சான்று ஏதும் கொடுக்கவில்லை. தெஹ்ரான் பலமுறை அணுவாயுதம் தயாரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மறுத்துள்ளது. சமீபத்தில் ஈரானிய அரசு அணுகுண்டு தயாரிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதைப் பானெட்டாவோ ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஈராக்கை தாக்குவதற்கான இஸ்ரேலின் நடவடிக்கைகள் வேறு காரணங்களினால் உந்துதல் பெற்றிருந்தன; இதில் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இராணுவ மேலாட்சிக்கு எச்சவாலும் அற்ற தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும். இஸ்ரேலிடம் சொந்தத்தில் கணிசமான அணுவாயுதங்கள் ஏராளமாக உள்ளன; ஆனால் அது ஈரானோ வேறு ஏதேனும் நாடு ஒரு அணுவாயுதத்தைக் கட்டமைத்துவிடும் திறனைத் தடுப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் இஸ்ரேலியத் தலைவர்கள் தனியே செயல்பட்டு தங்கள் பாதுகாப்பு அரபு வசந்தத்தினால் குறைமதிப்பிற்கு உட்படும்போதும் உறுதிபட இருக்கும் என்பதை நிரூபிக்க முற்படுகின்றனர் என்று இக்நேஷியஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் இப்பிராந்தியத்தை மோதலில் ஆழ்த்தி, அதையொட்டி இஸ்ரேலிய இராணுவ வலிமையை நிரூபிக்கவும், பெருகிய தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள், சமூகச் சமத்துவத்திற்கான இயக்கத்தை, இஸ்ரேல் உட்பட, எல்லா இடங்களிலும் தகர்த்துவிடவும் விரும்புகின்றன.

ஒபாமா நிர்வாகம் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தன் மேலாதிக்கத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது; அமெரிக்க விழைவுகளுக்கு ஈரானிய ஆட்சி முக்கிய தடை என்றும் கருதுகிறது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்கா ஈரான் மீதான அழுத்தத்தை முறையாக அதிகரித்து வருகிறது; இது புதிய கடுமையான பொருளாதாரத் தடைகள், பாரசீக வளைகுடாவில் கடற்படைக் குவிப்பு, தெஹ்ரானின் பிராந்திய நட்பு நாடுகளை இலக்கு வைத்தல், குறிப்பாக ஜனாதிபதி பஷிர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியைத் தகர்த்தல் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது.

வியாழனன்று அமெரிக்க செனட் குழு ஒன்று ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது; இது காங்கிரசினால் ஏற்கப்பட்டுவிடக்கூடும். இத்தொகுப்பு ஈரானின் தேசிய எண்ணெய், எண்ணெய் வாகன நிறுவனங்கள் ஆகியவற்றைக் கையாளும் வெளிநாட்டு வங்கிகளுக்கு எதிரான இலக்கைக்கொண்டுள்ளது. இதைத்தவிர ஈரானுக்கு யுரேனிய ஏற்றுமதி அல்லது அதற்கு சுரங்கப்பிரிவில் உதவி செய்யும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களையும் இலக்கு கொண்டுள்ளது. குறிப்பாக இச்சட்டம் அமெரிக்க நிர்வாகம் பெல்ஜியத்தைத் தளமாகக் கொண்ட Swift நிறுவனத்தைத் தண்டிக்க விரும்புகிறது; உலகெங்கிலும் பல வங்கிகள் நிதியங்களை மின்னஞ்சல் முறையில் பணத்தை இதற்கு மாற்றுகின்றனர். அம்முயற்சி தோற்றால், நிர்வாகம் ஈரானின் மத்திய வங்கி மற்றும் பிற நிதிய நிறுவனங்களை மூடிவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ஈரானுடனான அமெரிக்க மோதல் ஈரானிய ஆட்சியை தீயதாக சித்தரிக்கும் பிரச்சாரத்தை விரிவாக்கி, போருக்கான சூழலைத் தோற்றுவிக்கும் முறை என்றுதான் விளக்கப்பட முடியும். 2003ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் படையெடுப்பிற்கு முன் நடந்ததைப் போலவே, வாஷிங்டனுக்கு வளைந்து கொடுக்கும் அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள், பெரும் சிதைவான தகவல்கள், அரை உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் என மக்களுடைய கருத்தை நச்சுப்படுத்தும் நோக்கத்தைப் பிரச்சாரப்படுத்தும் கருவிகளாக உள்ளன.

உதாரணமாக நேற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்கா அல் குவேடாவுடனான ஈரானியப் பிணைப்புக்களைக் கண்டு அஞ்சுகிறது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது; இத்தகைய அச்சம் பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் கூற்றான தெஹ்ரான் சிறையில் 2003ல் இருந்து அடைக்கப்பட்டுள்ள ஐந்து அல் கெய்டாக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்பதை தளமாகக் கொண்டுள்ளது. தெஹ்ரானிலுள்ள ஷியைட் அடிப்படைவாத ஆட்சிக்கும்  சுன்னித் தீவிரவாத அல்கெய்டாவிற்கும் இடையே உள்ள வெளிப்படையான மோதல்கள் இருந்தாலும், இக்கட்டுரை சில அதிகாரிகளும் வல்லுனர்களும் ஒரு நேரடிப் பங்காளித்தனத்திற்கான காலம் கனிந்திருக்கலாம் என்று கவலைப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது.

இதேபோல் ஆய்வு விளையாட்டும் தொடங்கிவிட்டது. தெஹ்ரானின் அழைப்பின்பேரில், ஐ.நா. ஆய்வாளர்கள் இந்த வாரம் ஈரானுக்கு அதன்அணுச்சக்தித் திட்டங்கள் குறித்து விவாதிக்கச் சென்றனர். இப்பொழுதுள்ள அழைப்பான இருக்கும் அணுச்சக்தி நிலையங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக (அதில் போர்டோ ஆலையும் உண்டு), இக்குழு பார்ச்சின் இராணுவ வளாகத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரியதுஅது பற்றி அணுவாயுதங்கள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், தெஹ்ரான் விருப்பத்தை மறுத்தது வியப்பு அல்ல. ஆனால் இந்த மறுப்பு அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் உயர்த்திக்காட்டப்பட்டதுடன், இரகசிய ஆயுதத் திட்டம் என்னும் கூற்றுக்களும் வெளிவந்துள்ளன. இவைகள் அனைத்தும் ஈராக்கின் இராணுவத் தளங்களைப் பார்வையிட வேண்டும், ஜனாதிபதி அரண்மனைகளைப் பார்க்க வேண்டும், மற்றும் இரகசிய நிலையங்களைப் பார்க்க வேண்டும் என்று அமெரிக்காவானது ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்வைத்த முடிவில்லாத கோரிக்கைகளைத்தான் நினைவிற்குக் கொண்டு வருகின்றன.

இச்செய்தி ஊடகப் பிரச்சாரம் பாரசீக வளைகுடாவில் போர் ஆபத்தை உயர்த்தும் வகையில் அழுத்தங்களை நேரடியாகத் தீவிரப்படுத்துகிறது. ஈரானை இஸ்ரேல் தாக்கிவிட்டால், அது வெறும் அறுவை சிகிச்சைத் தாக்குதல், ஈரானின் முக்கிய அணுச்சக்தி நிலையங்களை அழிப்பதற்கு என்று அழைக்கப்படும். ஈரானிய பதிலடி அமெரிக்காவால் ஈரானின் இராணுவ மற்றும் உள்கட்டுமானத்தை அழித்து விடும் நோக்கம் கொண்ட பெரும் வான் போருக்கு போலிக்காரணமாகப் பயன்படுத்தப்படும். இதன் விளைவாக, எந்தமோதலும் பிராந்திய போராக மாறும் உண்மையான ஆபத்தைக் கொண்டிருப்பதுடன் முக்கிய சக்திகளையும் இச்சச்சரவில் சிக்கவைத்துவிடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.