WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
US,
Russia clash over Washington’s war drive against Syria
சிரியாவிற்கு எதிரான வாஷிங்டனின் உந்துதல்பற்றி அமெரிக்காவும், ரஷ்யாவும்
மோதுகின்றன
By
Chris Marsden
2 February 2012
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அரபு லீக் அனைத்தும் ஐக்கிய
நாடுகள் பாதுகாப்புக் குழு சிரியா மீது ஒரு தீர்மானத்தை ஏற்க
வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றன. அதே நேரத்தில் அவை அத்தகைய தீர்மானம் ஆட்சி
மாற்றம் மற்றும் சிரியாவில் மேற்கத்திய இராணுவத்தலையீடு ஆகிய நோக்கங்களைக் கொண்டது
என்பதை மறுத்துள்ளன.
இது ஒரு பொய் ஆகும். ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின்
கைப்பொம்மைகளும் சிரியாவில் தீவிரமாகும் ஒரு உள்நாட்டுப்போரில்
“எழுச்சி
படைகளுக்கு”
ஆதரவளிக்கையில், அவை அதே நேரத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை மிரட்ட
முனைகின்றன. இவையிரண்டும் தலையீட்டை எதிர்க்கின்றன. அந்நாடுகள்தான் சிரியாவில்
குருதி கொட்டலை அதிகப்படுத்துவதற்குப் பொறுப்பு என்றும் கூறுகின்றன.
இத்தீர்மானம் ஆட்சி மாற்றத்தை வெளிப்படையாகக் கோருகிறது. அசாத்
பதவியில் இருந்து அவருடைய உதவியாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் பதவி விலக வேண்டும்,
பல கட்சிகள் பங்கு பெறும் தேர்தல்களுக்கு வழிவகுக்க வேண்டும் என்று
வலியுறுத்துகின்றன.
அரபு லீக் தீர்மானம் குறித்த விவாதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்குழுவின் ஒரு நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா அதன்மீது தடுப்பதிகாரத்தை
பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு, ஐ.நா.வில் உள்ள
தூதர்கள், பேச்சுக்களுக்காகப் புறப்படுகையில் பல நாடுகளுக்கு இடையே
“முக்கிய
வேறுபாடுகள்”
தொடர்கின்றன என்றனர்.
பிரச்சாரவகைத் தாக்குதல் ஒன்றில், ஆட்சி மாற்றம் குறித்து ஒவ்வொரு
அரசியல் பிரதிநிதியிடமும் கலந்த வகையில் கோரிக்கைகள் உள்ளன. ஆனால் ஆட்சி மாற்றத்தை
அடைவதற்காக லிபிய மாதிரியிலான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படமாட்டாது என்ற
உத்தரவாதங்கள் கூறப்படுகின்றன.
அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் அசாத்தின்
“அச்சுறுத்தும்
ஆட்சி”
முடிவிற்கு வந்து விடும் என்றும் ஆனால்
“எத்தகைய
இராணுவ தலையீடு தொடரப்படும் நோக்கமும்”
இல்லை என்றார்.
பிரெஞ்சு வெளியுறவு
மந்திரி அலென் யூப்பே வெளிநாட்டுத் தலையீடு என்பது
“ஒரு
கற்பனை”
என்றார்.
ஐக்கிய அரசின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்,
“இத்தீர்மானம்
இராணுவ நடவடிக்கைக்கு அழைப்புவிடவில்லை; அதை அங்கீகரிப்பதற்கு பயன்படுத்தப்படவும்
முடியாது”
என்றார்; ஆனால் அதன்பின்,
“வன்முறைக்கு
உடனடி முடிவு இல்லை என்றால் இக்குழுவினால் தக்க நடவடிக்கைகள் குறித்து
பரிசீலிக்கப்படும்”
என்று எச்சரித்தார்.
இத்தகைய உறுதிமொழிகளை மாஸ்கோ நிராகரித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு
மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் கூட்டத்தில் கலந்து கொள்ள, குறிப்பிடத்தக்க முறையில்
மறுத்துவிட்டார். கிளின்டனின் செய்தித் தொடர்பாளர் நிலைமை குறித்து விவாதிக்க
அவரைத் தொலைபேசியில் அழைத்தபோது அவர் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இத்தீர்மானம்
“மற்றொரு
லிபியாவிற்கு”
வழிவகுக்கும் என்று லாவ்ரோவ் எச்சரித்தார். எதிர்த்தரப்பு
“ஆட்சியுடன்
பேச்சுக்களை நடத்த மேசைக்கு அருகில் உட்கார வரவில்லை என்றால், என்ன மாற்றீடு?
ஆட்சியைக் குண்டுபோட்டுத் தகர்ப்பதா? அதை முன்னர் நான் பார்த்துள்ளேன்.
பாதுகாப்புக்குழு இதற்கு ஒப்புதல் ஒருபோதும் தாரது என்று நான் உறுதியளிப்பேன்.”
என்றார் அவர்.
ஐ.நா.விற்கு ரஷ்ய தூதரான விட்டாலி சுர்கின்,
“சர்வதேச
சமூகம் பொருளாதாரத் தடைகள் அல்லது இராணுவ சக்தி ஆகியவற்றின் மூலம் தேவையில்லாமல்
தலையிடக்கூடாது”
என்று அறிவித்தார்.
ஐ.நா.விற்கு சீனத் தூதரான லி பௌடாங்
“சிரியாவில்
கட்டாய ஆட்சிமாற்றத்திற்கு நடத்தும் முயற்சிகள் குறித்து”
தன்
எதிர்ப்பைக் கூறினார்;
“அது
ஐ.நா.வின் சர்வதே உறவுகளின் நடைமுறை உறவுகளுக்கு வழிகாட்டும் அடிப்படை நெறிகளையும்
மற்றும் ஐ.நா பட்டயத்தையும் மீறுவது.”
என்றார்.
இந்த வரைவு ஒரு சமாதான முறையில் அதிகார மாற்றத்திற்கு என்று
முன்வைக்கப்படுகிறது, பாதுகாப்புக் குழு
“இறைமை,
சுதந்திரம், சிரியாவின் பிராந்திய
ஒற்றுமை
ஆகியவற்றிற்கு வலுவான உறுதிப்பாட்டை
காட்டுகின்றது.
தற்போதைய சிரிய நெருக்கடி சமாதான முறையில் தீர்க்கப்பட வேண்டும், இத்தீர்மானத்தில்
எதுவும் நாடுகளை பலத்தை பயன்படுத்தவோ, பலத்தினால் அச்சுறுத்தவோ
கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது.”
ஆனால் இது இராணுவத் தலையீட்டிற்கு அழைப்புக் கொடுக்கவில்லை; அதேபோல்
அதை ஒதுக்கிவிடவும் இல்லை. மாறாக,
“இத்தீர்மானத்தை
சிரியா 15 நாட்களுக்குள் செயல்படுத்துவது குறித்து பரிசீலனை இருக்கும், சிரியா
செயல்படுத்தவில்லை என்றால், மேலதிக நடவடிக்கைகள் அரபு லீக்
நாடுகளைக் கலந்து எடுக்கப்படும்.”
[வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது]
அரபு லீக்தான் அமெரிக்காவிற்கு லிபியாவிற்கு எதிராகத் தலையிடுவதற்கு
ஒரு
போர்க்காரணத்தைக்
கொடுத்தது. அது அப்பொழுது ஒரு பறக்கக்கூடாது பகுதி நிறுவப்படலாம் என்பதற்கு
ஒப்புதல் கொடுத்தது. இது நேட்டோ குண்டுத்தாக்குதல்கள், இராணுவத் தலையீடு
ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.
எனவேதான், நேற்று ரஷ்யாவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதர்
விளாடிமிர் ஜிஸ்கோவ் இத்தீர்மானம்
“மிக
அடிப்படையானதை அடக்கியிருக்க வேண்டும்: அதாவது ஒரு தெளிவான விதி சிரிய
விவகாரங்களில் வெளியில் இருந்து இராணுவத்தலையீட்டை நியாப்படுத்துவதற்கு
பயன்படுத்தப்பமுடியாத வகையில் சேர்க்கப்பட வேண்டும்”
என்று தன் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
திரைக்குப்பின்னால், அமெரிக்கா ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதற்கு
கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
“சிரிய
எதிர்த்தரப்பு தலைவர்கள் மேலை மற்றும் அரபு அதிகாரிகளுடன் நியூ யோர்க்கில் சேர்ந்து
கொண்டு மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். முக்கிய எதிர்த்தரப்பு குழுவான
சிரியத் தேசியக் குழுவின் தலைவரான பர்ஹன் காலியௌன் ரஷ்யாவின் ஐ.நா. தூதரைத்
திங்களன்று சந்தித்து அசாத் சகாப்தத்திற்கு பிந்தைய காலத்தில் ரஷ்யாவின் நலன்கள்
பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்”
என்று பைனான்ஸியல் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.
இதுவரை ரஷ்ய அரசாங்கம் சிரியா பற்றிய அமெரிக்க உத்தரவாதங்களை
நிராகரித்துள்ளது.
இப்பிராந்தியத்தில் சிரியாவிற்கு ரஷ்யாதான் முக்கிய நட்பு நாடு
ஆகும். டமாஸ்கஸுடன் அது பில்லியன் கணக்கில் மதிப்புடைய பாதுகாப்புப்பிரிவு மற்றும்
எண்ணெய்த்துறை ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. அதன் ஒரே மத்தியதரைக்கடல் போர்க்கப்பல்கள்
தளமும் டார்ட்டஸ் துறைமுகத்தில்தான் உள்ளது. மேலும் ரஷ்யா, சீனா இரண்டுமே அசாத்தைப்
பதவியில் இருந்து அகற்ற நினைக்கும் முயற்சிகள் அனைத்தும் வாஷிங்டனின் முக்கிய
இலக்கான ஈரானை தனிமைப்படுத்துவதற்கு ஒரு வழிதான் என்பதை அறிந்துள்ளன. இதனால் மத்திய
கிழக்கிலும் காஸ்பியன் பகுதியிலும் எண்ணெய் வளம் உடைய பிராந்தியத்தில் வாஷிங்டன்
எவரும் சவாலுக்கு உட்படுத்தமுடியாத மேலாதிக்கத்தைப் பெற இயலும்.
இம்மாதம், மாஸ்கோ மூன்று போர்க்கப்பல்களை டார்ட்டஸிற்கு
அனுப்பியுள்ளது; அதில் அதன் ஒரே விமானத்தளம் உடைய கப்பலும் உள்ளது. அமெரிக்கா,
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஹார்முஸ் ஜலசந்திக்கு ஆறு போர்க்கப்பல்களை
USS Abraham Lincoln
என்னும் விமானத் தளமுடைய போர்க்கப்பலின் தலைமையின்கீழ் அனுப்பியுள்ள
நிலையில், பிராந்தியப் போர் மூளும் என்னும் ஆபத்து இதைவிடத் தெளிவாக இருக்க
முடியாது.
ஏற்கனவே சிரியாவில்
இராணுவத் தலையீட்டிற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சவுதி அரேபியா மற்றும் கட்டார், துருக்கி தலைமையிலுள்ள வளைகுடா
நாடுகளுடன் இணைந்து அமெரிக்க அசத் ஆட்சியை உறுதிகுலைப்பதற்குச் செயல்பட்டுவருகிறது.
FSA
எனப்படும் சுதந்திர சிரிய இராணுவமும் அதன்
SNC
எனப்படும் சிரிய தேசியக் குழுவின் அரசியல் ஆதரவாளர்களும் அவற்றின்
இராணுவச் செல்களுக்கு முன்னணி போல் நடந்து வருகின்றன.
ஐ.நா.பாதுகாப்புக்குழுவிற்குச் செல்வதற்கு முன்பு, சுதந்திர சிரிய இராணுவம்
டமாஸ்கஸ் மற்றும் ஹமா நகரத்திற்கு அண்டைப் பகுதிகளில் தன் தாக்குதல்களை
விரிவிபடுத்தியது.
சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஒபாமா நிர்வாகத்தால் ஆயுதங்கள்
கொடுக்கப்படலாமா என்பது பற்றி அமெரிக்கச் செய்தி ஊடகம் வெளிப்படையாக விவாதித்து
வருகிறது.
“அமெரிக்காவும்
அதன் நட்பு நாடுகளும், ஜனாதிபதி ஒபாமாவில் அசாத்
“விலக
வேண்டும்”
என்று ஆகஸ்ட் மாதம் கோடிட்டுக் காட்டிய மொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சுதந்திர
சிரிய இராணுவத்திற்கு என்ன விதங்களில் உதவமுடியும், உதவ வேண்டும்? அல்லது வாஷிங்டன்
இத்தகைய ஆதரவைக் கொடுப்பதற்குப் பிராந்திய நட்பு நாடுகளுக்கு துணை ஒப்பந்தத்தை
கொடுத்துவிட வேண்டுமா?....”
என்று
CNN வினா
எழுப்பியுள்ளது.
Christian Science Monitor
ல்,
“சுதந்திர
சிரிய இராணுவம்: ஐ.நா.வை விட சிரியாவின் அசாத்தை கவிழ்க்கச் சிறந்த கருவியா?”
என்று ஒரு கட்டுரையை நிக்கோலஸ் பிளாண்ட்போர்ட் எழுதியுள்ளார்.
“சில
சிரிய செயலர்கள் வெளிப்படையாக வாதிட்டுக் கொண்டிருக்கும் இராணுவத் தீர்வுக்கு
வார்ப்புகொடுக்கமுன் சிரியா பற்றி ஓர் ஐ.நா. தீர்மானம் கொண்டு வர முயல்வதுதான்
சர்வதேச சமூகம் கடைசியாக எடுக்க வேண்டிய நடவடிக்கையா என்பது நன்கு சிந்திக்க
வேண்டிய பொருள் ஆகும்”
என்று அவர் கூறியுள்ளார்.
“புதிய
கன்சர்வேடிவ் ஜனநாயப் பாதுகாப்பிற்கான அறக்கட்டளை என்பதின் பிரதிநிதியான அமெரிக்கத்
தளமுடைய சிரியச் செயலர் அம்மர் அப்துல்ஹமித்
‘ஐ.நா.
தீர்மானம் தேவையில்லை, சொல்லப்போனால் சிறந்த விளைவிற்கு எதிர்ப்பாகக்கூடப்
போகலாம்... இக்கட்டத்தில் தேவையானது எழுச்சியாளர்களுக்குத் தேவையான பொருட்களையும்
போக்குவரத்து வசதிகளையும் அளிக்க வேண்டும் என்றும் திறனையும், விருப்பத்தையும்
கொள்ளுவதுதான். மேலும் எதிர்ப்புத் தலைவர்களுக்கு இடைக்காலத்தில் அவர்களே
வழிநடத்துவதற்குத் தேவையான பயிற்சியையும் ஆலோசனையையும் அளிப்பதுதான்.”
அமெரிக்கா சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஆயுதம் கொடுக்க உள்ளது
என்பதற்குக் கணிசமாக சான்று உள்ளது. பெயர் குறிக்கப்படாத நேட்டோ போர்விமானங்கள்
சிரிய எல்லைக்கு அருகே
Iskenderun
என்னுமிடத்திற்கு வந்துள்ளன. இவை லிபியத் தன்னார்வலர்களையும்
ஆயுதங்களையும், அளிக்கின்றன; அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய சிறப்புப்
படைகள் பயிற்சி அளிக்கின்றன.
ஒரு இராணுவத் தீர்விற்கு தான் ஆதரவு கொடுக்கும் என்பதை துருக்கி
தெளிவாக்கியுள்ளது. ஜனாதிபதி அப்துல்லா குல் ஜனவரி 31ம் தேதி
Zaman
இடம் சிரியா இப்பொழுது “இனி
திரும்பமுடியாத பாதையில்”
உள்ளது என்றார்.
“முடிவு
உறுதியாகிவிட்டது. சர்வாதிகார ஆட்சியாளர்கள் சீர்திருந்தவில்லை என்றால்,
வெளிநாட்டுத் தலையீடு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்”
என்றார் அவர்.
சிரிய தேசியக் குழு,
சுதந்திர சிரிய இராணுவம் ஆகிய இரண்டிற்கும் செயற்தளமாக துருக்கி
உள்ளது. இப்பொழுது அது தன்னை ஹமாஸுக்கும் உறைவிடமாக இருக்கிறது. கிட்டத்தட்ட $300
மில்லியன் நிதியை அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹமாஸின் உயர்மட்டத்
தலைமை, முஸ்லிம் சகோதரத்துவத்தில் இருந்து தோன்றிய ஒரு சுன்னிக் குழு ஏற்கனவே
டமாஸ்கஸிற்குச் சென்றுள்ளது. அது முஸ்லீம் சகோதரத்துவத்தால் மேலாதிக்கத்திற்கு
உட்பட்ட சிரிய எதிர்த்தரப்புடன் நெருக்கமாக பிணைப்புக்களைக் கொண்டுள்ளது.
|