WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :ஆசியா
:
பாகிஸ்தான்
அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி
இராணுவத்தின் வழி செயல்பட முனைகிறார்
By
Keith Jones
1 February 2012
use
this version to print | Send
feedback
பாக்கிஸ்தானின் சிவிலிய அரசாங்கத்திற்கும் அதன் இராணுவத்திற்கும்
இடையே இருந்த அழுத்தங்கள் பிரதம மந்திரி யூசப் ராஜா கிலானி இழிவாகத் தாழ்ந்து சென்ற
அளவில் குறைந்துவிட்டது போல் தோன்றுகிறது. கடந்த வாரம் சுவிட்சர்லாந்திலுள்ள
டாவோஸிற்கு உலகப் பொருளாதார அரங்கத்திற்குச் செல்லுமுன், கிலானி இராணுவத் தலைவரான
ஜெனரல்
அஷ்பக் பர்வேஸ் காயானி, மற்றும் பாக்கிஸ்தானின் முக்கிய உளவுத்துறை அமைப்பின்
தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் அஹ்மத் பாஷா ஆகியோர் அரசாங்கத்திற்கு கீழ்ப்படியவில்லை
என்று கூறிய தன் குற்றச்சாட்டுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
“இராணுவத்
தலைமை அரசியலமைப்பிற்கு முரணாகவோ அல்லது விதிகளை மீறியதாகவோ செயல்பட்டது என்று
தோற்றுவித்த உணர்வை நான் அகற்ற விரும்புகிறேன். தற்பொழுதைய நிலைமையில்
நிறுவனங்களுக்கு இடையே பூசல்கள் என்பது இருக்கக் கூடாது”
என்று கிலானி கூறினார்.
டிசம்பர் கடைசியில் கியானி மற்றும் பாஷா ஆகியோர் அரசாங்கம் தள்ளுபடி
செய்ய வேண்டும் என்று விரும்பிய அதிக அரசியல் நிறைந்த நீதிமன்ற வழக்கு, மெமோகேட்
விவகாரம் என்பதைத் தலைமை நீதிமன்றம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையீடு
செய்ததற்காக அவர்களைக் கண்டித்திருந்தார்; அவர்களுடைய குறுக்கீடு
“அரசியலமைப்பிற்கு
முரணானது, சட்டவிரோதமானது”
என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் கொடுக்கும் வகையில், இராணுவ
உயர்மட்டம் பகிரங்கமாக கிலானி தன் குற்றச்சாட்டுக்களைத் திரும்பப் பெறவில்லை
என்றால்
“அரசியலளவில்
துயரடையும் விளைவுகளைச்”
சந்திக்கும் என்று எச்சரித்தது. இந்த அச்சுறுத்தல் இராணுவம்
தீவிரமாக நான்கு ஆண்டுகாலமாக பதவியில் இருக்கும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சித்
தலைமையிலான கூட்டணியை அகற்றுவது குறித்துப் பரிசீலிக்கிறது என்ற ஆதாரங்களுக்கு
நம்பகத் தன்மையைக் கொடுத்தது.
இராணுவ அச்சுறுத்தல்களுக்கு தாழ்ந்து நின்றதைப் பொருட்படுத்தாமல்
கௌரவமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்பட்ட கிலானி, கடந்த வாரம் டிசம்பர் மாதம் தான்
கூறிய கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன, அவற்றின் உண்மையான இலக்கு
“சில
அதிகாரிகளைக்”குறித்தது
என்றார். ஆனால் இது யாரையும் நம்பவைக்கவில்லை.
“உட்கொள்ளப்பட்ட
சொற்களைக் கொண்ட உணவு”
என்னும் தலைப்பில் ஜனவரி 29ம் திகதி
Express Tribune,
“பிரதம
மந்திரி தன் சொற்களை வாபஸ் பெற்றது கடந்த காலத்தில் எப்பொழுதும் இருந்திராத
அளவிற்கு அதிகமாக உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. இராணுவம் அரசில் நடைமுறை
மேலாதிக்கத்தைக் கொண்டுள்ளது.”
பாக்கிஸ்தானின் செய்தி ஊடகத்தில் கிலானியின் அறிக்கை
அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தைக் காண்பதற்காகத்தான்
கொடுக்கப்பட்டது என்றும், அந்த அறிக்கை கிலானி, காயானி மற்றும் பாஷா ஆகியோர்
முந்தைய தினம் மேற்கொண்டிருந்த அதிக நேரப் பேச்சுக்களுக்குப் பின்னர்தான்
வெளிப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பாக்கிஸ்தானிய மக்கள் அத்தகைய ஒப்பந்தத்தின் பொருளுரை குறித்துத்
தகவல் ஒருபொழுதும் கொடுக்கப்பட மாட்டார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால்
பாக்கிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் தடையற்ற
கட்டுப்பாடு தேவை என்று இராணுவம் வலியுறுத்தியிருக்க வேண்டும்; இன்னும் குறிப்பாக
வாஷிங்டனுடன் இஸ்லாமாபாத் கொண்டிருக்கும் உறவுகள் குறித்து. அதே நேரத்தில் இராணுவமானது
சிவிலிய அரசாங்கம் பிற்போக்குத்தன ஆப்பாக் போருக்கு மக்கள் எதிர்ப்பைத் தணிக்கும்
கருவியாகச் செயல்பட வேண்டும் என்றும் அனுமதித்திருக்கும்.
PPP
கட்சியின் தலைமை அமெரிக்காவின் ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கு உதவி அளித்தல் அல்லது
பாக்கிஸ்தான் இராணுவத்தை நாட்டின் பஷ்தூன் பேசும் பழங்குடிப் பகுதிகளில்
கட்டவிழ்த்து விடுவது குறித்தோ மன உளைச்சலைக் கொண்டுள்ளது என்ற பேச்சிற்கு
இடமில்லை. உண்மையில்,
PPP
ஆனது புஷ் நிர்வாகத்திடம் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை விட
“பயங்கரவாதத்திற்கு
எதிரான போரில்”
உற்ற நட்பு காட்டும் என்று நம்பவைக்கத்தான் முற்பட்டது.
அதிகாரத்தைப் பெற்றதில் இருந்தே, அது இராணுவத்தின் அரசியல் அதிகாரத்தைக்
கட்டுப்படுத்துவதற்கு வாஷிங்டனின் உதவியை நாடியதுடன், தான் இன்னும் கூடுதலான
அடிமைத்தன நட்பையும் கொள்ளுவேன் என்றுதான் தெரிவித்துள்ளது.
கிலானி மற்றும் கயானிக்கும் இடையே உடன்பாடு என்னும் கூற்றிற்கு
ஆதரவு கொடுக்கும் செய்தி ஊடகம்—உண்மையில்
இது பாக்கிஸ்தானிய மக்களுக்கு எதிரான ஒரு புதிய சதித்திட்டம்தான்—அழுத்தங்களை
அகற்றுவதற்குத் திரைக்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் குறித்துச்
சுட்டிக்காட்டியுள்ளது.
பாக்கிஸ்தான் இராணுவ உளவுத்துறையின் மிகச் சக்தி வாய்ந்த இரு
நபர்களுக்கும் விருந்து கொடுத்துப் பேச்சுக்கள் நடத்திய அதே தினத்தில்,
பாக்கிஸ்தானிய-அமெரிக்க வணிகரான மன்சூர் இஜஸ், இராணுவப் பிரிவிற்குப் பின்புலமாக
அமெரிக்காவுடன் பாக்கிஸ்தான் அரசாங்கம் கொடுத்த இரகசிய உடன்பாடு தன் மூலம் இருந்தது
என்று கூறியவர், அவருடைய குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரிப்பதற்குத் தலைமை
நீதிமன்றம் தோற்றுவித்த நீதிக்குழு ஒன்றின் முன் பங்கு பெறுவதற்கு பயணித்து
வரவில்லை.
திங்கள்கிழமையன்று தலைமை நீதிமன்றம் பாக்கிஸ்தானின் வாஷிங்டனுக்கான
முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி நாட்டை விட்டு நீங்கக்கூடாது என்று இருந்த தடையை
நீக்கியது. இரகசிய உடன்பாட்டைக் கோடிட்டுக் காட்டிய குறிப்பு ஹக்கானியினால்தான்
உரைக்கப்பட்டது என்று இஜஸ் கூறுகிறார்.
அரசாங்கம் தேர்தல்களை முன்கூட்டி நடத்துவதற்குத் தயார் என்று கிலானி
கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்திற்கும் இராவல்பிண்டியிலுள்ள இராணுவத்
தலைமையகத்திற்கும் இடையே ஓர் உடன்பாடு என்று கூறப்படுபவற்றில் என்ன உண்மை
இருந்தாலும்கூட, இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும்,
பாக்கிஸ்தானின் ஆளும் உயரடுக்கு முழுவதற்குமாக உள்ள உறவுகள் பூசல்களில்தான்
ஆழ்ந்துள்ளன.
இராணுவவகை ஆட்சிமாற்றங்கள், அதிகார நாடகங்கள் ஆகியவற்றில்
ஒத்துழைப்புக் கொடுக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள தலைமை நீதிமன்றம்,
அரசாங்கத்தை உறுதிகுலைக்க வைக்கப் பயன்படுத்தப்படும் இரு நீதிமன்ற வழக்குகளில்
ஒன்றைக்கூடத் தள்ளுபடி செய்யவில்லை—மெமோகேட்
வழக்கு மற்றும் அரசாங்கம் சுவிஸ் அதிகாரிகளிடம்
PPP
துணைத்தலைவரும் பாக்கிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரிக்கு
எதிரான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிப்பது குறித்த வழக்கு ஆகியவற்றை; இவை
முஷரப்பினால் 2007ம் ஆண்டு தேசிய சமரச ஆணை மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பணத்திற்கும் பதவிக்கும் நடக்கும் கடுமையான போராட்டங்கள்
பாக்கிஸ்தானிய முதலாளித்துவ ஆட்சியில் துணைக்கண்டம் வகுப்புவாதரீதியாகப்
பிரிக்கப்பட்டு நாடு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்தே முக்கியக் கூறுபாடாக இருந்து
வருகிறது. ஆனால் அவை ஒரு வெடிப்புத்தன்மை உடைய புதிய பரிமாணத்தை எடுத்துள்ள காரணம்
முழு முதலாளித்துவ நடைமுறைக்கும் பாக்கிஸ்தானிய தொழிலாளர்கள், உழைக்கும்
மக்களுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட பரந்த சமூக இடைவெளியினால்தான்.
ஆப்பாக் போருக்குப் பெருகிய மக்கள் எதிர்ப்பு, பாக்கிஸ்தான் பல
தசாப்தங்களாக அமெரிக்காவுடன் தான் தாழ்ந்து நின்ற நிலையில் கொண்டிருக்கும் உறவு,
இரட்டை இலக்க விலைவாசி உயர்வுகள், தனியார்மயம் ஆக்கல், உதவிநிதிகளில் வெட்டுக்கள்,
பொது உள்கட்டுமான தகர்ப்பு ஆகியவை உயரடுக்கிற்குள் தான் விரைவில் ஒரு எகிப்திய
அல்லது துனிசிய மாதிரியிலான வெடிப்பை எதிர்கொள்ளக்கூடும் என்ற பரந்த அச்சங்களை
ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பாக்கிஸ்தானின் உயரடுக்கு வட ஆபிரிக்க சர்வாதிகாரிகளைப் போலவே
மக்கள் விருப்பம் குறித்துச் சிறிதும் பொருட்படுத்துவது இல்லை. அமெரிக்கா
மிரட்டுவது குறித்து எதிர்ப்புணர்வுகள் இருந்தபோதிலும்கூட, வாஷிங்டன்
பாக்கிஸ்தானின் தலையாய எதிரியான இந்தியாவின் மீது காட்டும் நேசம்
இருந்தபோதிலும்கூட, வாஷிங்டனுடன் அது கொண்டுள்ள ஆறு தசாப்தக் கால உறவு,
பாக்கிஸ்தானின் முதலாளித்துவத்துடைய புவிசார் அரசியல் மற்றும் வர்க்க மூலோபாயத்தின்
இதயத்தானத்தில் உள்ளது; அமெரிக்காவை நம்பியிருக்கும், நெருக்கடி நிறைந்த
பாக்கிஸ்தானிய பொருளாதாரம் பொதுமக்களுக்கு அதிகச் சலுகைகளை கொடுக்கப்படுவதை இயலாமற்
செய்து விடுகிறது.
PPP
தலைமையிலான அரசாங்கம் மக்களிடையே செல்வாக்கைப் பெரிதும் இழந்துவிட்டது; இதற்குக்
காரணம் ஆப்பாக் போர் நடத்தப்படுவதில் அதன் பங்கும், சர்வதேச நாணய நிதியமான (IMF)
ஆணையிடும் நடவடிக்கைகளை அது செயல்படுத்துவதும்தான். இன அடிப்படையில் அமைந்துள்ள
அல்லது மதச்சார்புடன் இருக்கும் தொகுப்பான எதிர்க்கட்சிகள், பலவும் இராணுவத்தின்
தயவை நம்பி இருப்பவை,
IMF
கோரும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தும் திறன் உடையதா என்பது
குறித்து முதலாளித்துவத்திற்கு அதனிடம் நம்பிக்கை இல்லை; ஏனெனில் போருக்கு எதிரான
மக்கள் சீற்றத்தை குறைப்பதற்கு நிதிய ஆதரவைப் பெறுவதற்கு அந்த அமைப்பு கொடுக்கும்
நிதி தேவைப்படுகிறது. இராணுவம் என்பது முதலாளித்துவ ஆட்சியின் அரண் ஆகும், ஆனால்
சிவிலிய ஆட்சிக்கு இது கொடுக்கும் அத்தி இலை மறைப்பைத் தள்ளிவிடுவதில் ஆபத்துக்கள்
உண்டு என்பதை அது அறியும். நான்கு குறுகிய ஆண்டுகளுக்கு முன்புதான், தன் சர்வாதிகார
ஆட்சி, இழிந்த முதலாளித்துவம் மற்றும் பெருகும் வறுமை, சமூக சமத்துவமின்மை
ஆகியவற்றிற்கு எதிராகப் பெருகிய மக்கள் எதிர்ப்புக்களை எதிர்கொண்ட இராணுவம், தன்
பரந்த பொருளாதார மற்றும் அரசியல் நலன்கள் அரசாங்கத்தின் மீது அது முறையாகக்
கொண்டிருந்த கட்டுப்பாட்டுகளை அகற்றுவதில் மூலம்தான் தொடரப்பட முடியும் என்ற முடிவை
எடுத்தது.
ஞாயிற்றுக்கிழமை அன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று ஒரு
“மூத்த
அமெரிக்க அதிகாரி”,
“கடந்த
வாரத்தையொட்டி விடயங்கள் அமைதியாகியுள்ளன... ஆனால் இது பாக்கிஸ்தான். எந்த முக்கிய
நபரும் சிறிதும் எதிர்பாராததை எந்த நேரமும் செய்துவிடக்கூடும்”
என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி கூறாமல் விட்டது, பாக்கிஸ்தானை
பலவகையிலும் சூழ்ந்துள்ள நெருக்கடிகளுக்கு அமெரிக்காதான் முக்கிய காரணம், அமெரிக்கா
தொடர்ந்து பல இராணுவ சர்வாதிகாரங்களுக்கு ஆதரவு கொடுத்திருப்பது மட்டும் இல்லாமல்,
இன்னும் அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகளில் இராணுவத்தின் முக்கிய பங்கு குறித்து
புரவலர் தன்மையுடன் நடந்துவருகிறது என்பதைத்தான்.
ஆப்கானிய போரின் சுமையில் கூடுதலான பங்கைப் பாக்கிஸ்தான் கொள்ள
வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டி, அச்சுறுத்தி வருகிறது; இதற்காக பாக்கிஸ்தான்
நாட்டின் வடமேற்கு பஷ்தூன் பேசும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாலிபனுடன்
பிணைந்துள்ள போராளிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும்
பாக்கிஸ்தானின் மறுகட்டமைப்பிற்கு
IMF
காட்டும் வழிதான் சிறந்தது என்றும் வாஷிங்டன் அதிகம்
வலியுறுத்துகிறது.
அமெரிக்கா தொடர்ந்து பாக்கிஸ்தானிய இறைமையை மீறும், மற்றும்
பாக்கிஸ்தானிய மக்களுக்கு எத்தகைய சீற்றம் வந்தாலும் குடிமக்களை கொல்லும்,
பாக்கிஸ்தானிய ஆளும் உயரடுக்கிற்கு அரசியல் இடர்களை அளிக்கும் என்பதை அடையாளம்
காட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திங்களன்று முதல்தடவையாக
பாக்கிஸ்தானுக்குள் டிரோன் தாக்குதல்களை அமெரிக்கா நடத்துகிறது என்று பகிரங்கமாக
அறிவித்தார்.
பாக்கிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மீண்டும் 65
ஆண்டுக்கால சுதந்திரத்திற்கு பின்னும் பாக்கிஸ்தானிய ஜனநாயகம் குறைப்பிரசவம்
போல்தான் உள்ளது என்பதைத்தான் நிரூபித்துள்ளது. ஏகாதிபத்தியம் மற்றும் முழு
பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத் தலைமையில்
அணிதிரட்டப்படுவதின் மூலம்தான், பாக்கிஸ்தானிய மக்களின் மிக அடிப்படையான ஜனநாயக
மற்றும் சமூக விழைவுகள் நிறைவேற்றப்பட முடியும். |