WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
As EU
crisis summit opens: 23 million unemployed across continent
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு ஆரம்பிக்கையில்:
கண்டம் முழுவதும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 23 மில்லியன்
By Patrick Martin
31 January 2012
திங்களன்று பொருளாதார நெருக்கடி குறித்த உச்சிமாநாட்டில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் தலைவர்கள் கூடுகையில், கண்டம் முழுவதிலும்
வேலையில்லாதவர்களுடைய எண்ணிக்கை 23 மில்லியனை அடைந்துவிட்டது. ஆனால் பெல்ஜியத்தில்
கூடும் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம்,
அவர்கள் கன்சர்வேடிவ் ஆயினும் சரி, சமூக ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி,
நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு அளிப்பதற்கு அவர்களிடம் ஏதும் இல்லை, இன்னும்
அதிக சிக்கன நடவடிக்கைகள்தான் உள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் பெயரளவு நோக்கம் கிரேக்கத்தில்
இருக்கும் நெருக்கடியைத் தீர்ப்பது ஆகும்; அங்கு வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள்
மற்றும் சமூகநலப் பணிகளில் மிருகத்தன வெட்டுக்களை எதிர்பார்க்கும் விளைவான
பொருளாதாரத்தை இன்னும் ஆழ்ந்த சரிவிற்குச் செலுத்தும் உந்துதலையும், நாடு
திவால்தன்மைக்குத் தள்ளப்படுவதை விரைவாக்கவும் யூரோப் பகுதியிலிருந்து
அகற்றப்படுவதை நோக்கியும்தான் செல்கின்றன.
கிரேக்க வணிகக் குழுவின் கருத்துப்படி, 2010-11 ஆண்டில் அனைத்து
கிரேக்க வணிகத்தின் 20 சதவிகித நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, மற்றும் 15 சதவிகிதமோ
கிட்டத்தட்ட திவால்தன்மையில் உள்ளன. வேலையின்மை விகிதம் தற்பொழுது 18.8 சதவிகிதம்
என்று உள்ளது; இளைஞர்களில் 46.6 சதவிகிதம் வேலையற்று உள்ளனர்.
ஆனால் கிரேக்கத்தில் நடைபெறுவது கண்டம் முழுவதும், உலக
விகிதாசாரங்களை உடையதொரு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்திற்கு
ஒரு உதாரணம்தான். எல்லா முக்கிய ஐரோப்பிய நாடுகளும் இப்பொழுது ஒன்று
உத்தியாகபூர்வமாக மந்தநிலையில் உள்ளன, அல்லது அதை நோக்கி விரைவாகச்
சரிந்துகொண்டிருக்கின்றன; இதில் பெரும் பொருளாதாரச் சக்தி எனக் கருதப்படும்
ஜேர்மனியும் அடங்கும்.
நான்கு பெரிய ஐரோப்பியப் பொருளாதாரங்களின் புள்ளிவிபரங்கள் பெரும்
கவலையை அளிக்கின்றன:
பிரித்தானியா: நான்காம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2
எனச் சரிந்தது; உற்பத்தித்துறையோ 0.9 சதவிகிதத்தைச் சரிவாகக் கொண்டது.
இத்தாலி: நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 1.5 சதவிகிதம் சுருங்கும்
என்று பாங்க் ஆப் இத்தாலியால் கணிக்கப்பட்டுள்ளது; சர்வதேச நாணய நிதியமோ (IMF)
2.2
சதவிகிதம் சுருக்கம் இருக்கும் என்று முன்கணிப்பு செய்துள்ளது.
பிரான்ஸ்: வேலையின்மை விகிதம் 9.7 சதவிகிதம் என்று 11 ஆண்டுகளில்
இல்லாத உயர்வை அடைந்துள்ளது; பிரெஞ்சு அரசாங்கக் கடன் 639 பில்லியன் யூரோக்கள்
என்று அதிகரித்துவிட்டது. ஸ்டாண்டர்ட் & பூவர்ஸ் பிரெஞ்சுக் கடன்தரத்தை
AAA
என்பதிலிருந்து ஜனவரி 14ம் திகதி குறைத்துவிட்டது.
ஜேர்மனி: ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரம் ஜேர்மனிய புள்ளிவிபர
அலுவலகத்தின் கணக்குப்படி, 2011 ன் கடைசி மூன்று மாதங்களில் 0.25 சதவிகிதம்
சுருங்கியது; இது 2009 தொடக்கத்தில் ஏற்பட்ட வோல்ஸ்ட்ரீட் சரிவிற்குப் பின் முதல்
சரிவு ஆகும்.
ஸ்பெயின்: ஐரோப்பாவின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஸ்பெயின்
எல்லாவற்றையும் விட, குறைந்தப்பட்சம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்க்கள்
மீதான பாதிப்பைப் பொறுத்தவரை மிக மோசமாக இருக்கக்கூடும். இப்பொழுது மிக உயர்ந்த
அளவில் ஐந்து மில்லியன் தொழிலாளர்களை பதிவு செய்துள்ளது என்று ஸ்பெயின்
கூறியுள்ளது. வேலையற்றோர் விகிதம் 2011 நான்காம் காலாண்டில் 23.9 சதவிகிதம் என்று
உயர்ந்துவிட்டது; இளைஞர் வேலையின்மை விகிதமோ 50 சதவிகிதத்தை நெருங்கிக்
கொண்டிருக்கிறது.
வேலையின்மை விகிதம் மூன்றாம் காலாண்டில் 21.5 சதவிகிதம் என்பதில்
இருந்து நான்காம் காலாண்டில் 22.9 சதவிகிதம் என்று உயர்ந்தது; இதையொட்டி
வேலையின்மையில் உள்ளோர் எண்ணிக்கை 348,700 அதிகமாயிற்று என்று தேசியப்
புள்ளிவிபரங்கள் கூடம் தெரிவிக்கிறது.
புதிதாக பதவியேற்றுள்ள பிரதம மந்திரி மரியனோ ரஜோயின் வலதுசாரி
அரசாங்கம் இதை முகங்கொடுக்கும் வகையில் ஊதிய, நலன்கள் வெட்டுக்கள் வேண்டும்,
விடுமுறைநாட்கள் குறைக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுடைய பாதுகாப்பில்
எஞ்சியிருக்கும் கூறுபாடுகளும் அகற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளன; கடைசிக்
கொள்கையைப் பொறுத்தவரை ரஜோய் அதை
“தொழிலாளர்
சந்தைச் சீர்திருத்தம்”
என்று அழைக்கிறார்.
ஸ்பெயினின் பொருளாதாரம் வெள்ளியன்று பிராந்திய விமான நிலையம்
Spainair
திடீரென்று
செயற்பாடுகளை நிறுத்தி, 220 பயணங்களை இரத்துச்செய்து 22,000 பயணிகளை அப்படியே
நிறுத்திய வகையில் கூடுதலான அதிர்ச்சியைப் பெற்றது. பர்சிலோனாவைத் தளமாகக் கொண்ட
எயர்லைன்சுக்கு ‘தற்போதைய பொருளாதாரச் சூழலில்’ அதனுடைய செயற்பாட்டிற்கு எந்தவிதமான
மானியங்களையும் வழங்கமுடியாது என்று கதலோனா பிராந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
எயர்லைனில் 3200 தொழிலாளர்களும் அதனுடைய உப வேலைகளில் ஈடுபட்டவர்களும் வேலையைவிட்டு
நீக்கப்பட்டார்கள்.
ரஜோய் அரசாங்கம் ஏற்கனவே வரவு-செலவுத் திட்டச் சரிபார்ப்புக்களில்
40 பில்லியன் யூரோக்களை முன்வைத்துள்ளது; இவைகள் முக்கியமாக செலவினங்களில்
வெட்டுக்கள் என்று இருந்தாலும், கட்டணங்கள் மற்றும் நுகர்வோர் வரிகளில்
அதிகரிப்புக்களையும் கொண்டுள்ளது. வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்கள் இப்பொழுது
குறிப்பாக நாட்டின் 17 பிராந்திய அரசாங்கங்கள் மீது இலக்கு வைக்கப்படும்; அவைகள்
அனைத்தும் சமூகநலப் பணிகளான சுகாதாரம், கல்வி போன்றவற்றை நடத்துகின்றன. இத்தகைய
சிக்கன நடவடிக்கைகள் பொருளாதாரச் சரிவைத் தீவிரப்படுத்தும்; இப்பொழுது அது 1.7
சதவிகிதம் இருக்கும் என்று
IMF
ஆல் கணிக்கப்பட்டுள்ளது.
ரஜோயின் கொள்கைகள் வெகுஜன எதிர்ப்புக்களைத் தூண்டிவிட்டுள்ளன.
200,000 என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் கூட்டம் ஜனவரி 26 அன்று வாலென்சியா,
அலிகேன்ட் மற்றும் காஸ்டெலோனிவல் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்து பிராந்திய
அரசாங்கம் செய்துள்ள வெட்டுக்களை எதிர்த்தது. மற்றும் ஒரு 100,000 மக்கள் ஜனவரி
28ம் திகதி கதலான் பிராந்தியத்தில் வெட்டுக்களுக்கு எதிராக பார்சிலோனாவில்
குழுமினர்.
ஐரோப்பாவில் பிற பொருளாதார இருண்ட பகுதிகளில் அயர்லாந்து—இங்குள்ள
வேலையின்மை விகிதமான 14.6 என்பது ஸ்பெயின் மற்றும் கிரேக்கத்திற்கு அடுத்தாற்போல்
உள்ளது—போர்த்துக்கல்
(கடன்தரம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி பிணை எடுப்பு
கொடுத்தும் கூட குப்பைத் தகுதிக்குத் தள்ளப்பட்டது), மற்றும் பெல்ஜியம் (இங்கு நாடு
திங்களன்று 19 ஆண்டுகளுக்குப் பின் முதல் பொது வேலைநிறுத்தத்தால் முடக்கம் கண்டது)
ஆகியவை உள்ளன. வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள்
பெல்ஜியத் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு நடக்கும் நேரத்திற்கு
இணையாக நடக்கும்வகையில் நடத்தப்பெறுகின்றன.
இரயில், விமானப் போக்குவரத்து மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கள்
மூடப்பெற்றன; இதைத்தவிர அஞ்சல்துறைப்பணிகள்,பெரும்பாலான அரசாங்க அலுவலகங்கள்
மற்றும் பல பள்ளிகளும் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன, வேலைநிறுத்தம் செய்தவர்கள்
ஆலைப் பகுதிகளை அணுகமுடியாத வகையில் தடுப்புக்களை நிறுவினர்.
ஐரோப்பிய பங்குகளின் விலைகள் நாள்முழுவதும் சரிந்து, ஆறு வாரங்களில்
மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டன; அதாவது டிசம்பர் 9 அன்று கிரேக்கக் கடன்
நெருக்கடிக்கு
“தீர்வு”
கண்டுபிடிக்கப்பட்டது என்ற கூறப்பட்ட தினத்திற்குப் பின். இப்பொழுது
நிதியச் சந்தைகளில் கிரேக்கம் மார்ச் 20 அன்று பணத்தைக் கொடுக்க முடியாத நிலை
ஏற்படும் என்ற பரந்த எதிர்பார்ப்பு உள்ளது; அத்திகதிதான் பெரிய கடன் திருப்பும்
நாளாகும்; அன்று அல்லது அதற்கும் சற்று பின்னே இது ஏற்படும், இதன் விளைவுகள்
மதிப்பிடுவது கடினம் எனக் கருதப்படுகின்றன.
இதன் விளைவுகள் ஐரோப்பாவிற்கும் மிக அப்பால் செல்லும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று New
York Times
ல்
வெளிவந்த அறிக்கை ஒன்றின்படி,
“ஐந்து
பெரிய அமெரிக்க வங்கிகள், JP
Morgan Chase, Goldman Sachs
உட்பட, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் கிரேக்கத்தில் 80
பில்லியன் யூரோக்கள் அளவிற்கு முதலீடுகளைக் கொண்டுள்ளன; இந்நாடுகள் அனைத்தும் யூரோ
நாணயப் பகுதியில் பெரும் பொருளாதார அழுத்தங்களைக் கொண்டவை.....”
டைம்ஸ்
இந்த ஐந்து வங்கிகளும் கடன் பிறழ்தலைமாற்றிக்கொள்ளும் (credit
default swaps)
வகையைப் பயன்படுத்தின, அதேபோன்ற நிதியக் கருவிப் பயன்பாட்டுமுறைதான் 2008ம் ஆண்டு
subprime mortgage
நெருக்கடியைத் தூண்டியது, அவற்றின் ஐரோப்பிய அரசாங்கக் கடன்கள் தொடர்பான ஒதுக்கு
நிதியிலும் (hedge)
நெருக்கடியைத் தூண்டியது. அத்தகைய எஞ்சிய முறைகள் உடைய பங்கு மீண்டும் ஏற்படுவதைத்
தள்ளிப்போடும் உத்தரவாதங்கள் பலமுறை வந்தும்கூட, இக்கட்டுரை
“29.6
டிரில்லியன் டொலர்கள் கடன் பிறழ்தல் மாற்றுச் சந்தையில் (credit
default swap)
9.4 சதவிகிதம் மட்டுமே இப்பொழுது மையமுறையில் தீர்க்கப்படுகிறது என சர்வதேச
தீர்த்தல் வழிக்கான வங்கி (Bank
for International Settlements)
கூறுகிறது”
என்று சுட்டிக்காட்டுகிறது.
வேறுவிதமாகக் கூறினால், கடன்பிறழ்தல் மாற்றத்தில் (credit
default swap)
பெரும் பகுதியும் மற்ற எஞ்சிய கூறுபாடுகளும் எவ்வித நிதியக் கட்டுப்பாட்டின்
அதிகாரத்திற்கும் அப்பால் உள்ளன. இவற்றின் செயற்பாடுகள் ஏதேனும் ஒரு கட்சி இத்தகைய
பிறழ்தலில் ஈடுபட்டிருப்பது அதன் கடப்பாடுகளை மீட்க முடியாமல், 2008ல் பெரும்
அமெரிக்க காப்பீட்டு சர்வதேசக்குழு (American
International Group)
செய்ததுபோல், செய்தால்தான் வெளிச்சத்திற்கு வரும். |