WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
The
French petty-bourgeois “left” and the rise of the neo-fascist vote
பிரெஞ்சு குட்டி முதலாளித்துவ "இடது"
மற்றும் நவ பாசிச வாக்குகளின் எழுச்சி
By F. Dubois
31 January 2012
2012 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில், கடந்த கால்
நூற்றாண்டில் மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றிய இரு முதலாளித்துவக் கட்சிகளான
கன்சர்வேடிவ்
UMP (Union for a Popular Movement,
முன்னதாக
Rally for the Republic - RPR
என
இருந்தது) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS)
இரண்டும் நவ பாசிச தேசிய முன்னணியை (National
Front – FN)
விடச் சற்றே கூடுதலான செல்வாக்கைத்தான் கொண்டிருக்கின்றன.
2002 ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் சுற்றில்
PS
வேட்பாளராக அப்பொழுது இருந்த லியோனல் ஜோஸ்பனையும்
தாண்டி,
FN
இரண்டாவது இடத்திற்கு வந்தது. இது தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம்
சுற்றுக்களுக்கு இடையே தீவிர அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது; அப்பொழுது
இளைஞர்கள் குறிப்பாக
FN
க்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். உத்தியோகபூர்வ
“இடது”
கட்சிகள், மற்றும் குட்டி முதலாளித்துவ புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR)
ஆகியவை 2009ல் புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சியை (NPA)
நிறுவியவை,
வலதுசாரி வேட்பாளரான வெளியேறும் ஜனாதிபதியான ஜாக் சிராக்கிற்கு,
FN
வேட்பாளரான ஜோன் மரி லு பென்னிற்கு எதிராக, ஆதரவு கொடுத்தன.
இந்த ஆண்டு
FN
அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நேரடிச் செல்வாக்கைப் பெறுவதற்குப் போதுமான
வாக்குகளைப் பெறக்கூடும். இக்கட்சி சமீபத்தில்
“மதச்
சார்பற்ற தன்மையைக் காத்திடுக”
(laïcité)
என்னும் கோஷத்தை ஏற்றுள்ளது. எல்லாக் கட்சிகளும்
“இடது”
வலது அனைத்தும், இந்த கோஷத்தை இஸ்லாமியவாத எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஜனநாயக
உரிமைகளான பர்க்கா அணிவதைத் தடைசெய்வதிலும் இழிந்த அளவில் பயன்படுத்தியுள்ளன
—
அதாவது
ஜனநாயகமற்ற தன்மையையும், பாகுபாட்டுணர்வையும் காட்டுகின்றன, அவைகளோ
மதச்சார்பற்ற நடவடிக்கைகள்தான்.
முதலாளித்துவ
“இடது”
கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவப் போலி-இடது ஆகியவை
இந்நிலைமைக்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளன.
NPA
ஒரு
குறிப்பிடத்தக்க நச்சுத்தன்மை வாய்ந்த பங்கைக் கொண்டுள்ளது. நவ பாஸிஸ்ட்டுக்களுக்கு
NPA
கொடுக்கும் விடையிறுப்பு பல விதங்களிலும் முற்றிலும் மனத்தளர்ச்சியைத்தான்
காட்டுகிறது. ஆரம்பத்தில்
இருந்தே
NPA,
தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் பல அடுக்குகளின்
நோக்குநிலையை
கொண்டிருந்த வகையில் தொழிலாள வர்க்கத்திடம் முற்றிலும் நம்பிக்கையை
கொண்டிருக்கவில்லை. இதன் மனத்தளர்ச்சி,
ஆழ்ந்த முறையில் அதன் முன்னோக்குடனேயே பிணைந்துள்ளது.
இந்த
விஷயத்தை
பொறுத்தவரை
NPA
இன்
முக்கியமான செய்தி, நவ பாசிஸ்ட்டுக்களின் முன்னேற்றத்திற்கு எதிராகப்
போராடுவதற்குத் தொழிலாள வர்க்கம்
ஏதும்
செய்யமுடியாது, இடதிற்கு மாற்றீடு ஏதும் இல்லை என்பதுதான்.
மொத்தத்தில்
NPA ஆனது,
FN
வேட்பாளர் மரின் லு பென் மிகப் பெரிய ஜனரஞ்சகத் திருப்தியாளர் என்பதால், அவர்
நெருக்கடியில் இடரும் தொழிலாளர்களை நம்பவைக்கும் திறன் உடையவர் என்று கூறுகிறது:
“தன்
ஜனரஞ்சகத்திருப்தியை FN
இயன்றளவு செயல்படுத்துகிறது, தொழிலாள வர்க்கத்திற்காகவும் பேசுவதாகக் கூறுகிறது.
இத்தகைய முக்கிய கட்சிகளின் பிரச்சாரங்கள்,
“மற்றவர்
போல் வேடம் போடுபவர்களின் அணிவகுப்புக்கள்”...
மிக அதிக வேடம் போடுபவருக்குத்தான் நலன்களைக் கொடுக்கும்; இது சிறிதும் வெட்கமின்றி
ஒவ்வொரு பாரபட்சத்தையும் ஊக்குவிப்பவர்களுக்குத்தான் நலன்களைக் கொடுக்கும்.
இவ்வகையில் சார்க்கோசியை விட லு பென் அதிகமாகத்தான் செயல்படுகிறார்”
(NPA magazine Tout
est à nous, January
19).
இத்தகைய தளர்வுற்ற, தவறான முடிவுகள், அத்தகைய பகுப்பாய்விலிருந்து
வருபவை, இன்னும் அதிகத் தொழிலாளர்கள் நெருக்கடியால் பாதிக்கப்படுகையில், லு பென்
இன்னும் அதிகமான வெற்றியைப் பெறுவார் என்பதாகும்.
NPA
யின் ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டு
கூறுகிறார்:
“இருக்கும்
நிலைமையை மாற்றுகைக்கான நம்பிக்கையை மீட்பது ஒரு பெரும் போராட்டம் ஆகும்!
NPA
தேர்தல் மூலம் இவற்றை மாற்றுவதற்கு வாய்ப்பைக் காணவில்லை என்றால், வாக்குகள்
நம்பிக்கையை நாளை மீட்பதற்கு உதவும்.”
அவர் தொடர்ந்து கூறுவதாவது:
“மக்கள்
போராட வேண்டும் என்னும் சிந்தனைக்கு நாங்கள் உறுதியாக ஆதரவு கொடுக்கிறோம், ஆனால்
மக்கள் அதை இனியும் நம்பவில்லை, நம் சிந்தனைகளை அவர்கள் பகிர்ந்துகொண்டாலும்.”
(Liberation,
January 11)
இது ஒரு பொய்க்குவியல் ஆகும். இத்தகைய கசப்பான சமூக
அதிருப்தியினால்தான் வாக்காளர்கள்
UMP
மற்றும்
PS
ஆகியவற்றைவிட்டு நீங்குகின்றனர். சமூகச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும், உலக
முதலாளித்துவத்திற்கு எதிராகவும்
NPA
உள்ளது என்பதைத்தான் ஏன் இந்த வாக்காளர்கள்
“இனியும்
நம்புவதில்லை”
என்பது விளக்கப்பட வேண்டும். இதற்கான காரணம்
NPA
மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் பிற
“இடதுகளின்”
செயல்கள், முன்னோக்குகள் ஆகியவற்றில் காணப்பட வேண்டும்.
சமூகச் சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படுதல், ஜனாதிபதி சார்க்கோசி
நடத்திய லிபியப் போர், சிரியாவிற்கு எதிராக பிரெஞ்சு அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள்
ஆகியவற்றை
NPA
ஆதரித்துள்ளது. இனவெறிபிடித்த
“மதசார்பற்ற”
பிரச்சாரத்திற்கு எதிராக
NPA
எத்தகைய போராட்டத்தையும் நடத்தவில்லை—சார்க்கோசி,
PS,
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி
(PCF),
FN
ஆகியவை நடத்திய பர்க்கா-எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக எந்த எதிர்ப்பையும்
காட்டவில்லை. 2010ல் நடந்த தொழிலாளர்களின் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான
வேலைநிறுத்தங்களுக்கு விரோதப் போக்கு காட்டியதுடன், அரசாங்கம் வேலைநிறுத்த முறிப்பு
நடத்தியதற்கு
“அடையாள”
எதிர்ப்பிற்குத்தான் அழைப்புக் கொடுத்தது. அதேபோல் 2011 ல் வட ஆபிரிக்காவில் நடந்த
புரட்சிகளுக்கு அவைகள் ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் கருவிக்குத்தான் உதவும்
என்று கூறி விரோதப் போக்கைக் காட்டியது. இவ்வகையில் அவர்கள்
FN
இன் எழுச்சிக்கு ஊக்கம் கொடுத்தனர்.
இத்தகைய அனுபவங்களுக்குப் பின், தொழிலாளர்கள்
NPA
மீது அவநம்பிக்கை கொள்வதற்கு ஒவ்வொரு
காரணங்களையும் கொண்டுள்ளனர்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR)
2009ல்
NPA
ஐக்
கட்டமைக்க வேண்டும் என்ற முடிவு, வெளிப்படையாக ட்ரொட்ஸ்கிசம் இல்லாத ஒரு கட்சியாக
அமைக்க வேண்டும் என்பது, ஆளும் உயரடுக்கிற்கு ஒரு அடையாளம் காட்டியதாகும். ஒரு
புரட்சிகர மார்க்சிசக் கட்சியை கட்டமைப்பதற்கு விரோதப் போக்கு காட்டிய வகையில்,
NPA
ஆனது பல்கலைக்கழகங்களில் இருந்தும் தொழிற்சங்க அதிகாரத்தில் இருந்தும்
PCF
க்கு ஒரு மாற்றீடு போன்ற அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும் என்று விருப்பியது;
PCF
ஆனது சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின் இழிவுற்றது. இக்கட்சி
தன்னை ஒரு நீடித்த தேர்தல் சக்தியாக பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் இடது என்று
இருத்திக்கொள்ள முற்படுகிறது; அதற்காக முன்னாள் 1970கள் மாணவர்களிடம் இருந்து
மரபியமாகப் பெறப்பட்ட வனப்புரையைப் பயன்படுத்துகிறது.
இவ்வகையில், இச்செயற்பாட்டின் பிரதான இலக்கு, தொழிலாள
வர்க்கத்திற்கும் ஒரு புரட்சிகர முன்னோக்கைத் தளமாகக் கொண்ட ஒரு கட்சியைக்
கட்டமைப்பதற்கும் இடையே ஒரு புதிய தடையைக் கொண்டு வருவதாகும்.
ஆனால் இப்புதிய கட்சி, கவனத்தை ஈர்க்கும் குவிப்பாக இருக்கும் என
LCR
கருதியது, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. குட்டி முதலாளித்துவ அரசியல்
வட்டங்கள் இன்னும் வெளிப்படையாக தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளை
செயல்படுத்துகையில் தொழிலாளர்கள்
NPA
ஐ
—அதன்
முக்கிய செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசென்ஸநோவின்
செய்தி ஊடகச் செல்வாக்கை நம்பி இருந்தது—
ஒரு போராட்டத்திற்கு உரிய கருவியாகக் காணவில்லை.
தங்கள் சொந்தக் காரணத்தை ஒட்டிச் செய்தி ஊடகம் அவரிடம் இருந்து
ஒதுங்கி விட்டது. சில மாதங்களுக்கு முன் பெசென்ஸநோ
மீண்டும் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டார்.
NPA
உடைய புதிய வேட்பாளரான பிலிப் புட்டு அனைவரிடமும் இடதிற்கு மாற்றீடு ஏதும் இல்லை,
தான் உட்பட என்று கூறுகிறார்.
LCR
சாதித்தது எல்லாம்
PCF
ற்கும் அதன்
Jean-Luc Mélenchon
வழிநடத்தும் (இவருக்கு இப்பொழுது அதிக செய்தி ஊடகக் கவனிப்பு வந்துள்ளது) இடது
முன்னணிக்கும்
(Left
Front)
வாக்குப் பெறுவதில் ஒரு ஏற்றம் கொடுத்ததுதான்; 2002ல் அது பெற்ற மோசமான நிலையில்
இருந்து இப்பொழுது அதற்குக் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் கிடைக்கிறது. தன்னுடைய
தோல்விக்குக் காரணத்தை விளக்கிக் கூறமுடியாத
NPA
தன்
தளர்விற்குக் காரணமாகத் தொழிலாளர்களைக் குறைகூறுகிறது. லிபரேஷனிடம் புட்டு
கூறினார்:
“இவைகள்
அனைத்தும் மனத்தளர்விற்குக் காரணமாகின்றன, ஒரு இயலாமை உணர்வை அளித்துள்ளன. மக்கள்
தங்கள் வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ளுவதிலும், செலவையும் வரவையும்
ஈடுகட்டுவதில்தான் முனைந்துள்ளனர். நாங்களோ மக்கள் போராட வேண்டும் என்று
கூறுகிறோம், ஆனால் எங்கள் கருத்துக்களுடன்
உடன்பட்டாலும்கூட, அதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய
நம்பிக்கையின்மையைத்தான் தேசிய முன்னணி சுரண்டிக்கொள்கிறது.”
மீண்டும் தொழிலாளர்கள் போராடாதது குறித்து அவர் குற்றம்
சாட்டுவதுடன் நவ பாஸிஸ்ட்டுக்களுடைய முன்னேற்றத்திற்கும் இவர்களைத்தான்
குறைகூறுகின்றார்.
“லு
பென்
‘நான்
செய்வேன்’
என்று பலமுறை கூறுகிறார், இது போராடுவதற்கு மக்களிடம் தைரியம் இல்லை என்றால்
கையைப்பிடித்து அழைத்துச் செல்லும் நிலையிலுள்ள மக்களிடையே ஒரு விளைவை
ஏற்படுத்துகிறது.”
உண்மையில், தொழிலாளர்களின் பெரும்பாலானவர்கள் இன்னும் ஒரு சோசலிச
முன்னோக்கைக் காணவில்லை என்றால், அது முற்றிலும்
NPA மற்றும்
முதலாளித்துவ
“இடது”களில்
இருக்கும் மற்ற கட்சிகள் உடைய தவறுதான். ஏனெனில் அவற்றின் கொள்கைகளில் இருக்கும்
வலதுசாரித்தன்மை யாரும் மறுக்க முடியாத அளவிற்கு மிகவும் வெளிப்படையாக உள்ளது.
ஆனால் இந்நிலையில் தன் பொறுப்பை மறைப்பதற்குத்தான் அது இவ்வாறு செய்கிறது; இந்த
நிலைமையில் அரசியல் முன்னோக்குகளுக்குள் உள்ள இடைவெளி மிகவும் குறைந்துவிட்டன;
அதாவது
PS
போன்ற முதலாளித்துவ
“இடது”
போன்றவற்றில் இருந்து அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை.
NPA
ஐப்
பொறுத்தவரை,
“மக்களின்
ஒற்றுமையைத் தளமாகக் கொண்ட ஒரு ஜனநாயக முன்னோக்கு...ஒன்றுதான் பிற்போக்குத்தன
ஜனரஞ்சகமுறை எழுச்சி பெறுவதை எதிர்த்து நிற்க முடியும்.”
உண்மையில் இது
NPA
ஐ
“ஜனநாயக”
முதலாளித்துவ ஐரோப்பிய முன்னோக்கு என்பதற்கு ஆதரவில்தான் நிறுத்திவிடுகிறது;
அக்கருத்து இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வேறுபாடு அற்றது. ஐரோப்பிய
ஒன்றியத்தின் அரசியலமைப்பிலுள்ள விதி 3 கூறுவதாவது:
“ஒன்றியத்தின்
நோக்கம் சமாதானத்தை வளர்த்தல் ஆகும், அதன் மதிப்புக்கள், மற்றும் மக்களுடைய நலன்களை
வளர்த்தல் ஆகும்... இது பொருளாதார, சமூக மற்றும் நிலப்பகுதி ஒருங்கிணைந்த,
ஒற்றுமைத்தன்மை உறுப்பு அரசுகளுடையே இருப்பதை வளர்க்கும்.”
இது ஒன்றும்
NPA
ஐ
தன் முதலாளித்துவ ஐரோப்பா பற்றிய முன்னோக்கு
“ஒரு
சர்வதேச தன்மை உடையது”
என்று இழிந்த முறையில் கூறுவதில் இருந்து தடுத்துவிடவில்லை.
NPA
உடைய முன்னோக்கு எவ்விதத்திலும் சோசலிச சர்வதேசியத்துடன் தொடர்பைக்
கொண்டிருக்கவில்லை. அத்தகைய முன்னோக்கின் பொருள் ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய
தொழிலாளர்கள் ஒரு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக பொதுவான போராட்டங்களில்
ஈடுபட்டு நிறுவுவதைக் குறிக்கும்; அதாவது அரசுகளின் ஒன்றியம், அதில் தொழிலாள
வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும், பொருளாதாரம் ஒரு சோசலிச அடிப்படையில்
மறுசீரமைக்கப்படும்.
NPA
ஐ
பொறுத்தவரை, முதலாளித்துவ ஐரோப்பா உறுதியாக இருக்கும், நவ பாசிச சிந்தனை அடையப்பட
முடியாத ஒன்று ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவு என்பது நினைத்துப் பார்க்க
முடியாதது.
“இந்த
[லு பென்னின்] கொள்கை, முதலாளித்துவ ஐரோப்பாவின் சரிவு என்ற பின்னணியில் மட்டுமே
செயல்படுத்தக் கூடியது, தொழிலாள வர்க்கமும் மக்களும் பாதிக்கப்படுபவர்கள் என்ற
முறையில் ஒரு பிற்போக்குத்தனச் செயலாகும்.”
வசதி நிறைந்த, மெத்தனம் மிகுந்த குட்டி முதலாளித்துவ
NPA
தெளிவாகப் புரிந்து கொள்ளாதது, முதலாளித்துவ ஐரோப்பா அனைவரும் காண்கையிலேயே சரிந்து
கொண்டிருக்கிறது,
NPA
ஆதரவுடன் சார்க்கோசி மற்றும் தொழிற்சங்கங்களின் பேச்சுக்களுக்குப்
பின் தொழிலாளர்கள் ஏற்கனவே முடிவாக்கப்பட்ட உடன்படிக்கைகளின் விளைவினால் ஏற்பட்ட
பிற்போக்குத் தன்மையினால் போதுமான அளவு பாதிக்கப்பட்டுவிட்டனர் என்பதேயாகும். |