WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
US,
Arab League push for UN action against Syria
அமெரிக்காவும் அரபு லீக்கும் சிரியாவிற்கு எதிராக ஐ.நா. நடவடிக்கைக்கு கோருகின்றன
By
Jean Shaoul
30 January 2012
கட்டார், சௌதி அரேபியா
இன்னும் பிற அரபு லீக் உறுப்பு நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு ஐ.நா.
பாதுகாப்பு சபையில் கடந்த ஆண்டு லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரைப் போல் ஒரு
இராணுவத் தலையீட்டிற்கு தளம் அமைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர முற்பட்டுள்ளது.
சிரிய ஜனாதிபதி பஷர் அல்
அசாத்தின் தலைமீது ஒரு துப்பாக்கையை அழுத்துவதற்கு ஒப்பாக அத்தீர்மானம் இருக்கும்.
அசாத் பதவியிலிருந்து கீழிறங்கி அவருடைய உப ஜனாதிபதியிடம் பதவியை ஒப்படைக்க
வேண்டும், எதிர்த்தரப்பினருடன் உரையாடலை
தொடங்க
வேண்டும், ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும், பின் ஆறு மாதங்களுக்குள்
பல கட்சிகள் பங்கு பெறும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள
அரபு லீக்கிற்கு ஒப்புதல் கொடுக்கிறது.
இத்தீர்மானத்திற்கு
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் முழு ஆதரவும் உண்டு. இந்த இரு ஐரோப்பிய
நாடுகளும், முயம்மர் கடாபியை அகற்றுவதற்கு, அமெரிக்கா நம்பியிருந்தது. இது நிக்கோலா
சார்க்கோசியின் ஆட்சியுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது; அதே நேரத்தில்
பிரித்தானியாவின் ஐ.நா. தூதர் மார்க் லயல் கிராண்ட் இத்தீர்மானம் புதன்கிழமைக்குள்
விரைவிலேயே முன்வைக்கப்படும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
அசாத் ஆட்சி
இத்தீர்மானத்தைக் கண்டித்துள்ளது. அதன் ஐ.நா.விலுள்ள தூதர் பஷார் ஜாபரி கூறினார்:
“இவர்கள்
நாங்கள் ஏதோ முன்னாள் காலனித்துவ
நாடு, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிபணிந்து நடக்க வேண்டும் என்பது போல் எங்களை
நடத்துகின்றனர்.... சிரியா ஒன்றும் லிபியா அல்ல; சிரியாவானது ஈராக் போன்றும் இல்லை;
சிரியாவானது சோமாலியா போலும் செயற்படாது. சிரியா ஒரு தோல்வியுற்ற அரசாகப் போகாது.”
சிரியாவிற்குள்ளேயே
போராட்டங்கள் விரிவடைந்துள்ள நிலையில் இக்கோரிக்கை வந்துள்ளது; இராணுவப் படைகள்
அங்கு மேற்கத்தைய ஆதரவுடைய
“எழுச்சியாளர்களுடன்”
மோதுகின்றன; பிந்தையவை சிரியத் தலைநகரான டமாஸ்கசின் கிழக்குப்
புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. கிட்டத்தட்ட 2,000 சிரிய இராணுவத்தினர்,
டாங்குகள் ஆதரவுடன் புறநகர்ப் பகுதிகளான சக்பா, க்பர் பட்னா மற்றும் ஹமௌரியா
ஆகியவற்றில் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவர முற்படுகின்றனர்.
அசாத் எதிர்ப்புப் போராளிகள்,
“கெரில்லா
தந்திரோயபாயங்களைக் கடைப்பிடிக்கின்றனர்; எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்களை
தகர்க்கின்றனர், துருப்புக்கள் மீது கட்டிடங்களில் இருந்து தாக்குகின்றனர்;
போக்குவரத்து வாகனங்களைத் தாக்குகின்றனர்; அண்டை ஈராக்கில் அமெரிக்கப் படைக்களுக்கு
எதிராக கைவரிசை அடையாளமாக இருந்த சாலையோரக் குண்டுத் தாக்குதலையும் நடத்துகின்றனர்”
என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
சிரிய அரசாங்கச் செய்தி நிறுவனமான
SANA
இராணுவ மரியாதைப்படி 28 சிப்பாய்கள் மற்றும் பொலிசாரின் இறுதிச் சடங்குகள்
சனிக்கிழமை நடைபெற்றது என்றும், மற்றொரு 23 பேருடைய இறுதிச் சடங்குகள் ஞாயிறன்று
நடைபெற்றது என்றும் தகவல் கொடுத்துள்ளது. சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு
அமைப்பு கூறியுள்ளபடி, 31 சிப்பாய்கள், 41 குடிமக்கள் மற்றும்
“எழுச்சிப்
போராளிகள்”
ஞாயிறன்று கொல்லப்பட்டனர்.
அசாத் பதவியில் இருந்து
கீழிறங்க வேண்டும் என்னும் அரபு லீக்கின் கோரிக்கை, சௌதி ஆதிக்கத்தின் கீழுள்ள
வளைகுடா ஒத்துழைப்புச் சபையுடன் (GCC)
இணைந்த வகையில் உள்ளது, யேமன் நாட்டில் அலி அப்துல்லா சலே
உடன்பாட்டிற்கு மத்தியஸ்தம் செய்திருந்த வகையைப் போல் வருகிறது; கடந்த ஞாயிறன்று
கெய்ரோவில் சிரியாவிற்கு அது அனுப்பிய பணிக்குழுவின் செயல்கள் குறித்து மதிப்பீடு
செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின் இது வந்துள்ளது. ஆனால் சலேயைப் போல் இல்லாமல்,
அசாத் மருத்துவச் சிகிச்சைக்காக என்னும் காரணத்தைக் கூறிக்கொண்டு அமெரிக்காவிற்கு
ஒரு விசாவைப் பெற்றுவிட முடியாது. வாஷிங்டன் இவருடைய விதி கடாபி, சதாம் ஹுசைன்
ஆகியவர்களுடையதைப் போல் இருக்க வேண்டும் என்று கருதுகிறது; இருவருமே தத்தம்
நாடுகளில் அமெரிக்கா பொறுப்பு எடுத்துக் கொண்ட பின் கொலை செய்யப்பட்டனர்.
அரபு லீக் நோக்கர்
பணிக்குழுவின் உரித்த நோக்கம் கடந்த டிசம்பர் மாதம் அசாத் ஒப்புக் கொண்டிருந்த
திட்டத்தைக் கண்காணிப்பதும், இரு புறமும் வன்முறையை நிறுத்துவதைக் கண்காணிப்பதும்
ஆகும். அரபு லீக்கின் சாசனத்தில் ஓர் உறுப்பு நாட்டின் அரசாங்க முறை குறித்து
தலையிடக்கூடாது என்னும் வெளிப்படையான தடை இருந்தும்கூட, நோக்கர் பணிக்குழு
தோற்பதற்காகவே வடிவமைப்பு கொடுக்கப்பட்டிருந்தது; அதையொட்டி அசாத் பதவியில் இருந்து
இறங்க வேண்டும் என்ற போலிக் காரணத்தை முன்வைப்பதற்காக.
அரபு லீக்கின் தலைவர்
சுடானின் ஜெனரல் மகம்மத் அல்-தாபி நிலைமை முன்னேறியுள்ளது, பணிக்குழு
வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியபோது, சௌதிக்கள், கட்டாரிகள் இன்னும் பிற
வளைகுடா நாட்டினர் பணிக்குழு தோல்வி அடைந்துவிட்டது என முத்திரையிட்டு, தங்கள்
நிதிகளையும் நோக்கர்களையும் பின்வாங்கிக் கொண்டனர். இப்பணிக்குழு இப்பொழுது
தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
லீக்கானது இப்பொழுது
வாஷிங்டனில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தைத்தான் செயல்படுத்துகிறது. ஜனாதிபதி பராக்
ஒபாமா பலமுறையும் சிரிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
“ஏற்கத்தக்கவையல்ல”
என்றும் அசாத் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் அழைப்பு
விடுத்துள்ளார்.
கடந்த வாரம் நாட்டிற்கு
ஆற்றிய உரையின் மையக் கூறுபாடாக இக்கோரிக்கை இருந்தது; இந்த உரையில் அவர்,
“ஈராக்கில்
போரை நிறுத்திவிட்டது, நமக்கு நம் எதிரிகள் மீது உறுதியான தாக்குதல்களை நடத்த
அனுமதித்துள்ளது”
என்று பெருமை பேசிக்கொண்டார்.
“ஓராண்டிற்கு
முன் உலகில் நீண்டகாலம் செயல்படும் சர்வாதிகாரிகளில் ஒருவராக இருந்தார்—அமெரிக்க
இரத்தத்தைத் தன் கரங்களில் கொண்டிருந்த கொலைகாரராகவும் இருந்தார். இன்று அவர்
போய்விட்டார்”
என்று ஒபாமா தொடர்ந்தார்.
“சிரியாவிலும்,
அசாத் ஆட்சி விரைவில் மாற்றங்களின் சக்திகள் திரும்பப் பெறமுடியாதவை என்பதை
விரைவில் அறிவார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.”
வாஷிங்டனின் முக்கிய
இலக்கான ஈரான் என்பதில் சிரியா ஒரு முக்கியமான
படிதான்; எண்ணெய் வளமுடைய மத்தியகிழக்கு, காஸ்பியன் பகுதியில் அமெரிக்க
மேலாதிக்கத்தின் சவாலற்ற தன்மைக்கு ஈரான் ஒரு தடையெனக் கருதப்படுகிறது.
இப்பிரச்சாரம் ரஷ்யா, சீனா இரண்டையும் தனிமைப்படுத்தவும் உதவுகிறது—இவைதான்
பூகோள-அரசியல்
மேலாதிக்கத்திற்கான அமெரிக்க விழைவுகளில் அமெரிக்காவின் இறுதி இலக்குகள் ஆகும்.
“ஈரான்
அணுவாயுதம் தயாரிப்பதை தடுப்பதில் அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என்பதில் சந்தேகம்
ஏதும் தேவையில்லை. அனைத்து விருப்புரிமைகளையும் மேசையில் இருந்து நான் அகற்ற
மாட்டேன்”
என்று ஒபாமா அச்சுறுத்தியுள்ளார்.
அரபு லீக்கில் சில
உலகின் மிகச் சர்வாதிகாரம், மக்கள் செல்வாக்கற்ற ஆட்சிகள் இருப்பினும், வாஷிங்டன்
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அவற்றை மறைப்பாகப் பயன்படுத்த முடியும் என்று
வாஷிங்டன் நம்புகிறது. மற்றொரு அமெரிக்க ஒருத்தலைப்பட்ச தலையீடு இப்பிராந்தியத்தில்
இடம்பெறுவது அரபு மக்களின் சீற்றத்தைத் தூண்டிவிடும், அது நம்பியிருக்கும்
செல்வாக்கற்ற, நலிந்த ஆட்சிகளை அச்சுறுத்திவிடும் என்பதை வாஷிங்டன் நன்கு அறியும்.
GCC
மற்றும் அரபு லீக், ரியாத் மற்றும் டோஹா வழியாகச் சிரியாவிற்கு
எதிரான திட்டங்களைத் தொடக்குவதையும், இஸ்லாமியவாத ஆதிக்கம் நிறைந்த சிரிய
எதிர்ப்புக் குழுவிற்கு இராணுவ, அரசியல் ஆதரவு தரும் வகையிலும், லிபியாவில் செய்தது
போல் இங்கும் செய்யலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.
வெள்ளியன்று, சிரியத் தேசிய சபையின் (SNC)
உறுப்பினரான அஹ்மத் ரமதான் குவைத்தின் அல் ரை செய்தித்தாளிடம் சௌதி அரேபியா
SNC
ஐ சிரிய மக்களின் “உத்தியோகபூர்வப்
பிரதிநிதி”
என்று அங்கீகரிப்பது எனத் திட்டமிட்டுள்ளது என்றார்—இது
சிரியாவிற்கு எதிராக இராணுவத் தலையீட்டை நெறிப்படுத்தவதில் முக்கிய நடவடிக்கையாக
இருக்கும்.
பிரித்தானியாவின் டைம்ஸ் சிரிய எதிர்ப்பாளரிடம் இருந்து
சௌதி அரேபியா மற்றும் கட்டார் இரண்டும்
SNC
க்கு நிதி அளிக்கவும், சுதந்திர சிரிய இராணுவம் போன்ற
SNC
சார்புடைய ஆயுதக் குழுக்களுக்கும் அசாத் ஆட்சியை எதிர்த்துப் போராட
நிதியளிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
கட்டாரின் பிரதம மந்திரி ஹமத் பின் ஜசிம் பின் ஜாபரெ அல் தானி,
அல் ஜசிராவிடம்,
“நாங்கள்
அனைத்து அரபுத் தீர்மானங்களையும் கொடுப்போம்: இவற்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு
ஏற்கப்பட்டதும் அடங்கும்; ஐ.நா.பாதுகாப்புச் சபை என்னும் உலகில் உயர்ந்த
அதிகாரத்திற்கு அது ஏற்பதற்காக அனுப்பி வைப்போம்”
என்றார்.
அமெரிக்க
வெளியுறவுச்
செயலகம்
தீர்மானத்திற்குத் தான் ஆதரவு கொடுக்கும் என்பதை உறுதிபடுத்தியது. அது மத்திய
கிழக்கு விவகாரத்தின் உதவிச் செயலாளர் ஜேரேமி பெல்ட்மன்னை ரஷ்யாவிற்கு புதிய
தீர்மானத்திற்கு ஆதரவைப் பெறுவதற்காகப் பேச்சுக்களை நடத்த அனுப்பியுள்ளது;
இதையொட்டி உட்குறிப்பான ஆயுதங்கள் அளிப்பதற்கான தடைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும்
இராணுவக் குறுக்கீடு ஆகியவை வரும்.
சிரிய எதிர்ப்புப்
பிரச்சாரத்தை பகிரங்கமாக நடத்துவதற்கு அரபு லீக்கையும் ஐரோப்பிய சக்திகளையும்
அமெரிக்கா அனுப்பியிருந்தாலும், முன்வைக்கப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானம்
“அமெரிக்கத்
தயாரிப்பு”
என்னும் உண்மையை மறைப்பது மிகவும் கடினம். இத்தீர்மானம்
“ஏற்க
இயலாதது”
என்று கூறி ரஷ்யா உடன்பட மறுத்துவிட்டது. ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரியான
கென்னடி கடிலோவ் இந்த வரைவு
“நம்
நிலைப்பாட்டை ஒத்த எந்த அடிப்படைக் கருத்திற்கும் உட்படவில்லை”,
“எமது
அடிப்படையான கருத்துக்களின் முக்கிய கூறுபாடுகள் இதில் இல்லை”
என்று கூறினார்.
மேற்கத்தைய நாடுகள்
மற்றொரு லிபிய மாதிரியிலான இராணுவத் தலையீட்டைத் தான் அனுமதிக்கப்போவதில்லை என்று
ரஷ்யா கூறியுள்ளது. நேட்டோ செயற்பாடு குறித்த ஐ.நா. வாக்கெடுப்பில் அது பங்கு
கொள்ளவில்லை, பின்னர் மேற்கு நாடுகள் குடிமக்களைக் காத்தல் என்ற நிலைப்பாட்டில்
இருந்து அதிகமாகச் செயல்புரிந்தன என்று குற்றஞ்சாட்டியது.
பிரதம மந்திரி
விளாடிமிர் புட்டினும் அமெரிக்கா
“அனைத்தையும்
கட்டுப்படுத்த விரும்புகிறது”
மற்ற நாடுகளைத் தன் நட்பு நாடுகளாகக் கருதாமல்
“அடிமையாக
இருக்கும்
நாடுகள்”
என
ஆக்க விரும்புகிறது என்றார். லிபியத் தீர்மானம்
“புனிதப்
போர் நடத்த மத்தியகாலத்தில் வெளிவந்த அழைப்புக்கள் போல் இருந்தன”
என்றார் அவர்.
நேட்டோப் படைகளும்
அமெரிக்க டிரோன்களும்தான் கடாபி மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டதின்
பின்னணியில் இருந்தவை என்றும் புட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியாவுடன் மிகப் பரந்த
பாதுகாப்பு மற்றும் எண்ணெய்த்துறை ஒப்பந்தங்களை, கிட்டத்தட்ட 700 மில்லியன்
டொலர்களை ஆண்டு ஒன்றிற்கு என்ற நிலையில், ரஷ்யா கொண்டுள்ளது. இதன் ஒரே
மத்தியதரைக்கடல் தளமும் சிரியத் துறைமுகமான டார்ட்டஸில்தான் உள்ளது.
அமெரிக்காவின் நட்பு
நாடுகளான சௌதி அரேபியா, கட்டார் இன்னும் பிற வளைகுடா முடியாட்சிகள்—அனைத்தும்
சுன்னி உயரடுக்கினரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டவை—ஷியைட்
பிரிவு ஆளும் ஈரானுக்கு எதிராக வாஷிங்டனின் பின் நிற்கின்றன. இவைகள் எரியூட்டும்
குறும்நலவாதச் சொல்லாட்சியைப் பயன்படுத்தி உள்நாட்டுப் போருக்கு வழிவகை செய்யும்
கொள்கைக்கு ஆதரவைக் கொடுக்கின்றன; இது சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் 25
சதவிகிதம் என்று இருக்கும் ஷியைட் மற்றும் கிறிஸ்துவச் சிறுபான்மையினருக்கு மட்டும்
அச்சுறுத்தல் கொடுக்காமல், ஒரு பிராந்தியப் போரையும்கூடத் தூண்டிவிடக்கூடும். |