கடந்த வாரம் யூரோப்பகுதி நிதி
மந்திரிகள் ஸ்பெயினின் வங்கிப் பிணையெடுப்பிற்காக 39.5 பில்லியன்
யூரோக்களை
வழங்குவது என்ற முடிவு இன்னும் பரந்த நடவடிக்கைகளுக்கான ஒரு பரிசோதனை
நடவடிக்கையாகும்.
இதன் மையத்தில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையில் இன்னும் கூடுதலான தாக்குதல்கள்
இருக்கும்.
இந்த உடன்பாட்டின்படி, 37 பில்லியன்
யூரோக்கள்
ஏற்கனவே ஸ்பெயினின் அரசாங்கத்திடம் இருந்து ஆதரவு பெற்று வரும் நான்கு பெரிய
வங்கிகளுக்கு அளிக்கப்படும். 2.5 பில்லியன் யூரோக்கள் ஒரு "bad
bank" என்று கூறப்படுவதில் வைப்பு
செய்யப்படும். அது ஸ்பெயினின் சொத்துச் சந்தைச் சரிவில் விளைந்த இழப்புகளை
ஈடுகட்டும் நோக்கத்தை கொண்டது.
இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய
வங்கிகளில் வேலை வெட்டுக்களில் கவனம் செலுத்தப்படுவதுடன், அதன் சிக்கன நடவடிக்கைகளை
அதிகப்படுத்துமாறு ஏற்கனவே சமூகநலப் பணிகளில் இருந்து 150 பில்லியன்
யூரோக்களை
வெட்டிவிட்ட ஸ்பெயினின் அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும். எவ்வாறாயினும்,
ஸ்பெயினின் கடனைத் தீர்ப்பதற்குத் தேவையான நிதியைவிட பிணையெடுப்பு நிதி மிகவும்
குறைவாகத்தான் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஸ்பெயினின்
வங்கிகளுக்குக் குறைந்தப்பட்சம் 100 பில்லியன்
யூரோக்கள்
தேவைப்படும் என்றும் 60 பில்லியன் யூரோக்கள் இழக்கப்பட்டதாக
மதிப்பிடப்பட்டுள்ளபோது, இதன் ஒரு சிறு துளியான 2.5 பில்லியன் யூரோக்கள்
சொத்துக்கள் சந்தையின் சரிவை ஈடுகட்ட ஒதுக்கப்படும். இந்த ஆரம்ப நடவடிக்கைகள்
ஸ்பெயின் அரசாங்கத்தைப் பிணையெடுக்கும் முழு அளவான செயலின் முன்னோடியாக இருக்கும்
என்றும், கிரேக்கத்தில் இப்பொழுது உள்ள நிதியச் சர்வாதிகாரத்தையும் நிறுவும் எனவும்
பரந்தளவில் கருதப்படுகின்றன.
சமீபத்திய தலையீடு பொருளாதார மீட்சியை
வளர்ப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அத்தகைய வெற்றுத்தனக்கூற்றுக்கள்
பொதுமக்களைத் திருப்தி செய்வதற்காகக் கூறப்படுகின்றன. யூரோப்பகுதி நிதிய அதிகாரிகள்
கோரும் சிக்கன நடவடிக்கைகள் ஸ்பெயினில் மந்தநிலையைத் தீவிரப்படுத்தத்தான் செய்யும்.
அங்கோ
வேலையின்மை ஏற்கனவே 25 சதவிகிதம் என்று மொத்தத்திலும், இளைஞர்களிடையே 50% என்றும்
உள்ளது.
பிணையெடுப்பின் நோக்கம் நிதிய
உயரடுக்கிற்கு முட்டுக் கொடுக்கவும், தொழிலாள
வர்க்கத்தின் மீது முழுச் செலவையும்
சுமத்துவதும்தான். இது சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்களை ஏற்படுத்துவதும்,
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் குறைப்பதன் மூலம் வங்கிகள்
மற்றும் நிதிய நிலையங்கள் ஊகவணிகம் மூலம் சொத்துக்கள் சந்தையில் கொண்ட இழப்புக்களை
ஈடுகட்ட தொழிலாளர்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றர்.
சமீபத்திய வாரங்களில் அனைத்து முக்கிய
மத்திய வங்கிகளும் தங்கள் நிதிய ஊக்கமளிக்கும் கொள்கைகளான கிட்டத்தட்ட வரம்பற்ற
குறைந்த வட்டிக் கடன்களை நிதிய முறையில் உட்புகுத்துவதை முடுக்கிவிட்டுள்ளன. பெருகி
வரும் உலகப் பொருளாதாரச் சரிவின் அடையாளங்களால் அவை உந்துதல் பெற்றுள்ளன. இதனால்
முக்கிய சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு வலுவிழந்துள்ளது. கடந்த வார ஸ்பெயினின்
வங்கிப் பிணையெடுப்பு ஒரு பரந்த ஐரோப்பிய, சர்வதேசக் கொள்கையின் ஒரு
பாகமாகும்.
வங்கிகளுக்குப் பிணையெடுப்பில்
விரிவாக்கம் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலகளை தீவிரப்படுத்துவதுடன்
இணைந்துள்ளது. இத்தாக்குதல்கள் ஐரோப்பா முழுவதும்
படர்ந்துள்ளன.
இக்கொள்கை பொருளாதார அடிப்படையை
மட்டும் தளமாகக் கொண்டிருக்கவில்லை; இன்னும் அதிக அளவில் அரசியல் அடிப்படையைக்
கொண்டுள்ளது. இதுவரை கிரேக்கத் தொழிலாளர்கள் மீது பெருமந்தநிலைக்கால நிலைமைகளைச்
சுமத்தியதில், அதன் வெற்றியைக் கருத்திற்கொண்டு, நிதிய மூலதனம் இந்த சமூக
எதிர்ப்புரட்சியை ஸ்பெயின், இத்தாலி, ஐரோப்பாவின் மற்ற பகுதிகள் இன்னும் அப்பாலும்
விரிவாக்குவதற்குத் துணிவை கொண்டுள்ளதாக உணருகின்றது.
ஆனால் கிரேக்கத்தின் மீது வரலாற்றுத்
தன்மை கொண்ட
தாக்குதல்களை சுமத்தும் அதன் தகமை, தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, கடுமையான
எதிர்ப்பையும் மீறி, என்பது போலி இடது அமைப்புக்கள், சிரிசா தலைமையில் இருப்பவற்றை
நம்பியுள்ளது. அவை இந்த எதிர்ப்பை தொழிற்சங்கங்களுக்குப் பின் தள்ளவிடுவதுடன்,
மேலும் அரசியல் அதிகாரத்தை வெல்லுவதற்கு ஒரு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர
சுயாதீன இயக்கத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்பெயினின் முதலாளித்துவ அரசை அகற்றும்
இலக்கையும் எதிர்க்கின்றன.