தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு Global retail giants and the Bangladesh factory fire உலகச் சில்லறை விற்பனைப் பெருநிறுவனங்களும், பங்களாதே ஷ் ஆலைத் தீயும்By Peter Symonds use this version to print | Send feedbackநவம்பர் 24ம் திகதி குறைந்தப்பட்சம் 112 தொழிலாளர்களைக் கொன்ற பங்களாதே ஷ் ஆடைகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ வால்மார்ட் போன்ற உலகச் சில்லறை விற்பனைப் பெருநிறுவனங்களுக்கும் இவர்களுக்குப் பொருட்களை உற்பத்தி செய்யும் பங்களாதேசம் இன்னும் வறிய நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாதுகாப்பற்ற அடிமை உழைப்பு நிலையங்களுக்கும் இடையே உள்ள இருண்ட, மறைந்துள்ள உறவுகள் பற்றிய ஒரு காட்சியைக் கொடுக்கிறது.தீவிபத்திற்குப் பின், வால்மார்ட் தன்னை தலைநகர் டாக்காவிற்கு வடக்கே அஷூலியா தொழிற்பேட்டையில் உள்ள தஹ்ஜ்ரீன் பாஷன்ஸ் ஆலையில் இருந்து உடனடியாக ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்பட்டது. அதன் மறைந்த பெருமை என்னும் முத்திரை கருகிய ஆலையில் கண்டுபிடிக்கப்பட்ட பின், வால்மார்ட் தனக்கு அளிக்கும் நிறுவனத்தைக் கூறுகூறியது: நிறுவனம் தஹ்ஜ்ரீன் பாஷன்ஸில் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியது. Bangladesh Centre for Worker Solidarity கண்டெடுத்த ஆவணங்கள் குறைந்தப்பட்சம் வால்மார்ட்டின் ஐந்து வழங்குவபர்கள் பொருட்களை இந்த ஆண்டு ஏதேனும் ஒரு காலத்தின் தஹ்ஜ்ரீன் பாஷன்ஸில் வாங்கினர் என்பதைக் காட்டுகின்றன. இந்த வாரம் புளூம்பேர்க்குடனான ஒரு தொலைப்பேசிப் பேட்டியில் வால்மார்ட்டின் செய்தித் தொடர்பாளர் கெவின் கார்டினர் "2012ல் ஒரு நேரத்தில் ஆலை தீவிரச் செயலில் இருந்தது" என்பதை ஒப்புக் கொண்டார்; தீவிபத்திற்கு "சில மாதங்கள் முன்பு அதற்கு ஒப்புதல் பின்வாங்கப்பட்டது என்றாலும்கூட."வால்மார்ட்டும் பிற சர்வதேச நிறுவனங்களும் எந்தப் பொறுப்பையும் மறுப்பதில் பெரும் திகைப்புடன் உள்ளன; ஏனெனில் இதில் பணயம் அதிகமாகிவிட்டது. முழுப் பெருநிறுவனத் துறைகளும் ஒவ்வொரு நிறுவனத்தின் பொது உறவுகள் தோற்றத்தைப் பாதுகாக்கும் வடிவமைப்பு கொண்ட "நெறிகளில்" தீவிரமாக உள்ளன; சட்டபூர்வ நடவடிக்கைத் திறனைத் திசைதிருப்புவதிலும், இலாபங்களில் குறைவு இல்லாமலும் இருப்பதற்குச் செயல்படுகின்றன. வால்மார்ட்டும் சீயர்ஸ் ஹோல்டிங்க்ஸும் தஹ்ஜ்ரீன் பாஷன்ஸ் ஆலையைப் பயன்படுத்திய வழங்கியவர்களை நிறுத்திவிட்டதாகக் கூறுகின்றன. ஆனால் தனிப்பட்ட வழங்குபவர்களை நீக்குவது என்பது இதே அளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மற்ற வழங்குபவர்கள், ஆலைகளுக்கு உற்பத்தியை மாற்றுதல் என்ற பொருளைத்தான் தரும். வோ ல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, வால்மார்ட் ஆண்டு ஒன்றிற்கு 1 பில்லியன் டாலருக்கும் மேலான ஆடைகளைப் பங்களாதேசத்தில் இருந்து வாங்குகிறது; அங்கு தொழிலாளர் செலவு பிற குறைவூதிய அரங்குகளான சீனா, இலங்கை ஆகியவற்றைவிடக் குறைவு ஆகும். தரம், பெறும் நேரம் மற்றும் செலவு என்று வரும்போது சில்லறை விற்பனைப் பெருநிறுவனம் அனைத்து விவரங்களையும் கடுமையாகக் கண்காணிக்கிறது. பாதுகாப்பு பிரச்சினை ஆகும்போது, வால்மார்ட் வழிகாட்டி நெறிகளை நிறுவி, சில நேரங்களில் ஆலைத் தணிக்கைகளையும் மேற்கொள்ளுகிறது; ஆனால் இசைவு பெற்றுள்ள ஆலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது வழங்குபவர்களின் பொறுப்பு என்றும் வலியுறுத்துகிறது.உண்மையில் பங்களாதேசத்தில் இருக்கும் உற்பத்தியாளர்கள், மிக இறுக்கமான இலாபங்கள், கடுமையான காலக்கெடு, செலவுகளைக் குறைக்கும் முறை ஆகியவற்றில்தான் செயல்படுகின்றனர்; ஒரு ஆடைகள் உற்பத்தியாளர் ராய்ட்டர்ஸிடம் "துணை ஒப்பந்தக்காரர்களிடம் பணியை ஒப்படைத்தல் என்பது சாதாரண நடைமுறைதான்" என்றார். இத்தகைய பல அடுக்குகள் கொண்ட உறவுகள், சர்வதேச நிறுவனங்களில் இருந்து வழங்குபவர்கள், உற்பத்தியாளர்கள் அல்லது உற்பத்தி செய்யும் குழுக்கள், துணை ஒப்பந்தக்காரர்களுக்கு என்பது உளவுத்துறை அமைப்புக்களில் மறுக்கும் வாய்ப்புடையவை என்று கூறுவதற்கு அளிப்புக்களைத் தருகின்றன. வால்மார்ட் போன்ற பெருநிறுவனங்களுக்கு தங்கள் பொருட்களை மிகவும் குறைந்த விலைக்குத் தயாரிப்பதற்கு அடிமை உழைப்பு நிலைமைகள்தான் தேவை என்பது நன்கு தெரியும்; ஆனால் ஏதேனும் தவறு நடந்தால் பொறுப்பை ஏற்பதில் ஆர்வம் காட்டமாட்டா.வாஷிங்டன் தளமுடைய தொழிலாளர்கள் உரிமைகள் குழுமம் நியூ யோர்க் டைம்ஸில் எழுதியது: "வால் மார்ட் கூறியதுபோல் ஒற்றை தவறு செய்த து வழங்கும் நிறுவனம் அல்ல; அந்த ஆலையில் வால்மாரட்டிற்காகப் பல அமெரிக்க வழங்கும் அமைப்புக்கள் செயல்படுகின்றன. அதன் உலகத்திற்கு வழங்கும் சங்கிலியின்மீது கடுமையான கட்டுப்பாட்டிற்காக புகழ் பெற்ற வால்மார்ட்டிற்கு இதைப்பற்றித் தெரியாது என்பது நம்பகத்தன்மை உடையது அல்ல."அதேபோல் இது ஒன்றும் ஒரு தவறு செய்யும் ஆலை பற்றிய பிரச்சினை அல்ல. பங்களாதேச தொழிலாளர் ஒற்றுமை மையத்தில் நிர்வாக இயக்குனர் கல்போனா அக்தர் கருத்துப்படி நாட்டிலுள்ள ஆடை ஆலைகளில் கிட்டத்தட்ட 50% அரசாங்கத்தின் மிக அடிப்ப டையான, சட்டப்பூர்வ தேவைப் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்கவில்லை; இவற்றில் அவசரகால வெளியேறும் வழிகள், தீயணைப்புக் கருவிகள் ஆகியவை உள்ளன. தஹ்ஜ்ரீன் பாஷன்ஸில் தீ, தரைத் தளத்தில் தொடங்கி மேலே இருந்த தளங்களில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைப் பொறியில் ஆழ்த்திவிட்டது.பங்களாதேசத்தில் ஆலைப்பாதுகாப்பு குறித்த வால்மார்ட்டின் உண்மையான மனப்பாங்கு டாக்காவில் ஏப்ரல் 2011ல் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் வெளிப்பட்டது; அப்பொழுது பாதுகாப்பு முன்னேற்றங்களுக்கான அதிக விலைகள் கொடுக்குமாறு அது கேட்கப்பட்டது; செயல்படுத்தப்படக்கூடிய ஒப்பந்தக்குறிப்பில் உள்ள விதிகள் செயல்படுத்தப்பட அப்பொழுதுதான் முடியும் என்று கூறப்பட்டதற்கு, வால்மார்ட்டின் அறநெறி அடிப்படைப் பிரிவின் இயக்குனரான ஸ்ரீதேவி கலவகோலனா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கலவகோலனா மற்றும் Gap இல் அவரைப் போன்ற நிலையில் உள்ளவரும் எடுத்த நிலைப்பாடு ப்ளூம்பெர்க் பெற்றுள்ள கூட்ட விவரிப்புக்களில் அடங்கியுள்ளது. "மின்சார மற்றும் தீ பாதுகாப்பு குறித்த பிரச்சினை பற்றி, நாம் 4,500 ஆலைகள்பற்றிப் பேசுகிறோம், அவற்றுள் சிலவற்றில் மிகப் பரந்த அதிக செலவுடைய திருத்தங்கள் தேவைப்படும். அத்தகைய முதலீட்டுகளைச் செய்வதற்கு அரிய முத்திரை உடைய நிறுவனங்களால் நிதியளவில் இதற்கு இயலாது" என்று அவை கூட்டத்தில் கூறியுள்ளனதொழிலாளர்கள் உரிமைகள் குழுமம், ஆலைச் செலவுகள் ஓர் ஆடையின் விற்பனை விலையில் மிகச் சிறிய பகுதியைத்தான் பிரதிபலிக்கின்றன என்று சுட்டிக் காட்டியுள்ளது—அதாவது 20 டாலர் மதிப்புடைய சட்டையில் கிட்டத்தட்ட 4 டாலர்கள். பாதுகாப்பு அமைப்பு புதுப்பித்தலகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆலைச் செலவுகளில் 2.5% கூட்டுவிக்கலாம்; இதன் பொருள் சட்டையின் சில்லறை விற்பனை விலை 20.50 டாலர்கள் என அதிகரிக்கும்.Tommy Hilfiger முத்திரை அடையாளத்தைக் கொண்ட PVH பெருநிறுவனம் மற்றும் ஜேர்மனிய சில்லறை வணிக நிறுவனம் Tchibo என்னும் இரு நிறுவனங்களும் இறுதியில் இந்த ஆண்டு முன்னதாக குறிப்பில் கையெழுத்திட்டன. பேச்சுக்களுக்குப் பின் ஸ்காட் நோவா கருத்தின்படி, காப் கையெழுத்திட மறுத்தது; அதற்குக் காரணமாக அதிக விலைகள், தொடர்புடைய பங்களாதேச ஆலைகள் பற்றிய விவரங்கள் பகிரங்கமாக்கப்படல் மற்றும் குறிப்பின் சட்டபூர்வக் கட்டுப்பாட்டுத்தன்மை ஆகியவை கூறப்பட்டன. தன்னுடைய இன்னும் குறைந்த வரம்புடைய நான்கு பகுதி பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தது.வால்மார்ட்டின் செய்தித் தொடர்பாளர் கார்ட்னர் டாக்கா கூட்டம் பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். கலவகோலனாவி ன் கருத்துக்கள் "கூறப்பட்ட பின்னணிக்கு" மாறாக எடுக்கப்பட்டவை என்று நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்.நான்கு பெருநிறுவனங்க ளும் குறிப்பில் கையெழுத்திட்டு இருந்தாலும், பாதுகாப்புத் தரங்களில் முன்னேற்றம் குறைவாகத்தான் நடந்திருக்கும். ஒப்பந்தங்களை பெறுவதற்கு உற்பத்தியாளர்கள் கடுமையான போட்டித்தன்மையை முகங்கொடுகின்றனர். Sourcing Journal என்னும் வணிக ஏட்டை நடத்தும் எட்வர்ட் ஹெர்ட்ஸ்மன், ராய்ட்டர்ஸிடம் ஆலைக்கு உரிமம் அளிக்கும் வழிவகை பல நேரமும் பூச்சுவகைதான் என்றார். "பல ஆலைகளும் இந்த உரிமங்களை எப்படியும் பெற்றுவிடுகின்றன. தணிக்கை தினத்தன்று அனைத்தும் சிறப்பாக இருக்கும், ஆனால் அவை உண்மையிலேயே பின் அவ்வாறு இருப்பதில்லை" என்றார்அவர்.தொழிலாளர்கள் நிலைமை குறித்த பெருநிறுவனங்களின் அக்கறை என்னும் போலித்தனத்தை தக்கவைக்கும் பங்கு, பல அரசாங்க அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் என்று பங்களாதேசத்திலும் அமெரிக்காவிலும் உள்ளன; இவை பெருநிறுவனங்கள் தங்கள் பொருட்களின் "அறநெறித் தயாரிப்பு ஆதாரங்கள்" உறுதிப்படுத்தப்பட அழுத்தம் கொடுத்து, கேட்டுக் கொள்ளப்பட முடியும் என்னும் போலித் தோற்றங்களைத் தக்க வைக்கின்றன. சில்லறை வணிகர்கள் சீனா மற்றும் இலங்கையில் இருந்து செலவுகள் உயர்ந்ததால் பங்களாதேசத்திற்கு மாறியது போல், பங்களாதேசத்தில் செலவுகள் உயருமென்றால் இன்னும் குறைந்த ஊதியங்கள், தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கு இன்னும் குறைந்த தடைகள் இருக்கும் மற்ற நாடுகளில் பொருட்கள் தயாரிக்க வகை செய்யப்படும்.
|
|
|