தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு The “rule of law” and state killings " சட்டத்தின் ஆட்சியும்" அரசாங்க கொலைகளும்By Bill Van Auken and David North3 December 2012 use this version to print | Send feedbackசெய்தித்தாட்களில் வரும் அறிக்கைகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் அவை மேற்கோளிட்டு காட்டப்படும் என்று நியாயமாகக் ஒருவர் கணிக்கக்கூடியளவிற்கு சில சந்தர்ப்பங்களில் மிக முக்கியமானதாகவுள்ளன.அத்தகைய ஒரு செய்திதான் நவம்பர் 29அன்று நியூ யோர்க் டைம்ஸில் “இலக்கு வைத்துச் செய்யப்படும் கொலைகள்” என்ற தலைப்பில் வெளிவந்த ஆசிரியதலையங்கமாகும். அமெரிக்க ஆளும் தட்டு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்புக் கொள்கைகளை நிராகரிப்பதில் இது மற்றொரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது.ஒபாமா நிர்வாகம் "உலகெங்கிலும் இருக்கும் பயங்கரவாதிகளை எப்பொழுது கொல்லுவது என்பதற்கான விதிகளை இயற்றுகிறது" என்று தலையங்கம் ஒப்புதலுடன் குறிப்பிடுகிறது.இந்த “விதிகளை” வரைதல் என்பது, ஒபாமா தோற்றுப்போனால் “தரங்கள், வழிவகைகளை” உருவாக்கப்படுவற்கு என்று தேர்தலுக்கு முன் நிர்வாகம் கொண்டிருந்த கவலைகளை ஒட்டி ஏற்பட்டது எனக்கூறப்படுகிறது. இதையும்விட இன்னும் முக்கியமான கட்டாய உந்துதல், ஒரு நாள் இவர்கள் அனைவரும் போர்க்குற்றங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சமும் இருந்தது. புதிய விதிகளும் டைம்ஸின் தலையங்கமும் கூட மறைமுகமாக குற்றத்தை ஒப்புக் கொள்பவைதான். ஆயினும்கூட டைம்ஸ் இதை “அரசாங்கம் போர்க்களத்திற்கு வெளியே மக்களைக் கொல்லும்போது, அது சில முறையான வழிகாட்டும் நெறிகளுக்குள் இருக்க வேண்டும், அது சட்டத்தின் ஆட்சியைத் அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும் குறிப்பாக அமெரிக்கக் குடிமகன் ஒருவரின் வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது என்பதின் முதல் படி இது.” என்று பாராட்டியுள்ளது.ஓர்வெலிய வகை என அழைக்கப்படும் இத்தகைய சொல்லாட்சி, அதற்கு நியாயம் கற்பிப்பதின் தொடக்கம்தான்.“ இலக்கு வைக்கப்படும் கொலைகள்” அல்லது “அரசாங்கம் மக்களை போர்க்களத்திற்குப் புறத்தே கொல்லுதல்” என்பவை அரசாங்கம் நடத்தும் படுகொலைகள் மற்றும் நீதித்துறைக்குப் புறம்பாக நடத்தப்படும் கொலைகள் ஆகியவற்றின் வெளிப்படையான மாற்றுவார்த்தைகளாகும். இவை வெளிப்படையாக சர்வதேச சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதுடன் அமெரிக்க அரசியலமைப்பிலும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒபாமா நிர்வாகம் இத்தகைய குற்றங்களை ஒரு தொழில்துறை அளவில் டிரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நடத்தி வருகிறது.இக்கொள்கை , “பயங்கரவாதிகளை” இலக்குக் கொள்வது என்பதைப் பொறுத்தவரை, இச்சொல்லே வாஷிங்டன் செய்திப் பிரிவுகளில் ஓர் அடிப்படையாகிவிட்டது. அமெரிக்காவில் உலகளாவிய நலன்களுக்கு சாத்தியமான தடையாக இருக்கக்கூடியவர்கள், நேரடியாக அவ்வாறு கருதப்படுபவர்களை விளக்கவும், அமெரிக்கா எவரைக் கொன்றாலும் அதற்குப் பின் அத்தகைய முத்திரையை இடுவதற்கும் பயன்படுத்தப்படும்.தொலைவிலிருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி CIA பாக்கிஸ்தானில் மட்டும் 320க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி, குறைந்தப்பட்சம 2,560 பேரைக் கொன்றுள்ளது என்பதை தலையங்கம் ஒப்புக் கொள்கிறது. பாக்கிஸ்தானிய அரசாங்கம் வைத்துள்ள சான்றுகளின் படி, இறந்தவர்களில் 80% நிரபராதியான குடிமக்கள் ஆவர். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் ஹெல்பைர் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் உடல் உறுப்புக்களை இழந்துவிட்டனர். பலர் மூளைக் காயங்களினால் துயருற்றுள்ளனர், உறுப்புக்களை இழந்துள்ளனர் மற்றும் கடுமையான தீக்காயங்களை கொண்டுள்ளனர்.தொலைவிலிருந்து இயக்கப்படும் படுகொலைக்கு இலக்கு வைக்கப்பட்டவர்களுள் பல அமெரிக்கர்களும் உள்ளனர். இதில் நியூ மெக்சிகோவில் பிறந்த மதகுருவான அன்வர் அல்-அவ்லாகி மற்றும் சமீர் கான் ஆகியோர் அடங்குவர். இவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி கொல்லப்பட்டனர். அவ்லாகியின் 16 வயது மகன் அப்துல் ரஹ்மான் அல்-அவ்லகி இரண்டு வாரங்களுக்குப் பின் கொலையுண்டார். இம்மூன்றும் யேமனில் நடைபெற்றது.“ சட்டத்தின் ஆட்சியைத் தளமாகக் கொண்ட முறையான வழிகாட்டி நெறிகள்” கடைப்பிடிக்கப்பட வேண்டும், “குறிப்பாக அமெரிக்கக் குடிமகன் ஒருவருடைய உயிர் பணயமாக இருக்கையில்” என்று டைம்ஸ் உறுதிபடுத்துகிறது. இதன் தெளிவான உட்குறிப்பு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களைக் கொலை செய்வது பெரிய அக்கறை இல்லை, கிட்டத்தட்ட விருப்பப்படி செய்யப்படலாம், என்பதாகும். இத்தகைய இழிந்த வேறுபாடு அமெரிக்க அரசியலமைப்பில் எங்கும் இல்லை.ஆனால் மேலும் அடிப்படையான எண்ணக்கரு “முறையான வழிகாட்டிகள்” பற்றியதாகும். தலையங்கத்தில் வேறு இடத்தில் “கொலை செய்வதற்கான விதிகள் ... கடுமையாக இருக்க வேண்டும், முறைப்படுத்தப்பட வேண்டும்” என்று தலையங்கம் வலியுறுத்துகிறது. ஓர் அரசாங்கம் செய்யக்கூடிய மிக இழிந்த குற்றம், சந்தேகத்திற்கு இடமில்லாததை எப்படியும் நியாயப்பபடுத்துதல், அதாவது முறையான சட்டவழிவகை இல்லாமல் மனித உயிரைப் பறித்தலாகும்.அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவு இக்கொலைகளைச் செய்வதற்கு ஏற்றுள்ள “விதிகள்” அல்லது “வழிகாட்டி நெறிகள்” தொகுப்பு பற்றிப் பேசுவது. அதுவும் “சட்டத்தின் ஆட்சியைத் அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது” சட்டபூர்வமாக மோசடி, அறவழிப்படி இழிந்தது என்பவைதான். டிரோன் படுகொலைகள் என்னும் முழுத்திட்டமும் சட்டத்தின் கொள்கைகள் என்னும் தளத்தை நடைமுறையில் நிராகரிப்பதைத்தான் பிரதிபலிக்கிறது; அவற்றுள் ஆட்கொணர்தலில் இருந்து ஒருவருடைய குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்ளும் உரிமை மற்றும் சக மக்களை நடுவர்களாகக் கொண்டு நடத்தப்படும் விசாரணையைப் பெறுதல் என்ற உரிமையும் அடங்கும்.அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என்னும் விவாதம் ஒரு புறம் இருக்க, ஓர் இயல்பான குற்றம் நியாயப்படுத்தப்பட முடியாதது. அதுவும் இதற்கு செய்முறைகள், கட்டுப்பாடுகள் என்று இரகசியமாக இயற்றி உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்டு, மறைக்கப்படும்போது. அதன் காலத்தின் நாஜி ஆட்சி அனைத்துவித இரகசிய செய்முறைகளையும் இயற்றியது: அவை வெகுஜனக் கொலைகளுக்கு வடிவமைப்பாகப் பயன்பட்டன. ஒபாமா மற்றும் அவருடைய இராணுவம், உளவுத்துறை ஆலோசகர்கள் “பயங்கரவாத செவ்வாய்க்கிழமைகளில்” விவாதித்துக் கொண்டுவரும் வழிகாட்டிகளும் விதிகளும் இத்தகைய வழக்கத்தை நியாயப்படுத்த முடியாது. எப்படி மூன்றாம் குடியரசு (Third Reich) நாஜிக்களால் நடத்தப்பட்ட வெகுஜனக் கொலைகளை அதன் விதிகள், கட்டுப்பாடுகள் என்பவற்றால் சட்டபூர்வமாக ஆக்க முடியாதோ அப்படித்தான் இதுவும்.அமெரிக்க அரசாங்கம் நீதித்துறைக்குப் புறத்தே நடத்தும் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கொலை செய்தல் என்பதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுவிட்டால், ஜனாதிபதி அமெரிக்காவிற்குள்ளேயே படுகொலை செய்வதற்கு உத்தரவிட ஒரு சிறிய காலம்தான் பிடிக்கும். அதாவது கவனத்துடன் தயாரிக்கப்படும் அரசியல் வாய்ப்பிற்குக் காத்திருக்கும் நேரம்தான்.டைம்ஸின் தலையங்கத்தில் நலிந்த உறுதியாக “தரமான போலிஸ் வழிவகைகள் அமெரிக்க மண்ணில் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறப்படுவதின் உட்குறிப்பு இதுதான். ரைம்ஸ் இந்த கோழைத்தன நினைவுறுத்தலை அதன் தலையங்கத்தில் சேர்க்கும் கட்டாயத்தில் உள்ளது என்பதற்கு அதன் வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர்ளுக்கு அமெரிக்காவிற்குள் இலக்கு வைத்து நடத்தப்பட உள்ள கொலைகள் ஒபாமா நிர்வாகத்தில் தீவிர பரிசீலனையில் உள்ளது என்பது பற்றி நன்கு தெரியும் என்றுதான் பொருளாகும். இக்கட்டத்தில் அரச வன்முறையை பயன்படுத்துதல் என்று வரும்போது எதுவுமே “மேசைக்கு வெளியே இல்லை” .“ வெளிநாட்டில் செயல்படும் ஓர் அமெரிக்கர் இலக்கு வைக்கப்படுபவர் என்றால், முறையான வழிவகை தேவை” என்று தலையங்கம் வலியுறுத்துகிறது. இந்த “முறையான வழிவகை” யில் என்ன உள்ளது? நிச்சயமாக அமெரிக்க அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுடன் அதற்குத் தொடர்பு இராது. மாறாக இதில் நிர்வாக செயல்முறைகள் பல இருக்கும். அவை இராணுவ அதிகாரிகள், உளவுத்துறைச் செயலர்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் அடங்கிய குழுவினால் உருப்பெறும். அக்குழுவினரே நீதிபதி, நடுவர் மற்றும் கொலை செய்பவர் ஆகச்செயல்பட ஒப்புதல் கொடுக்கப்படும்.முறையான வழிவகையின் நெறிப்படுத்தப்பட்ட தேவைகள் “ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதின் மூலம் திருப்திப்படுத்தப்படலாம், வெளிநாட்டு உளவுக் கண்காணிப்பு நீதிமன்றம் போல் அமைக்கப்பட்டு, அது ஒரு நபர் கொலைப்பட்டியலில் இருத்தப்படமுன் சான்றுகளைப் பரிசீலிக்கலாம்” என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.வேறுவிதமாகக் கூறினால் அரசாங்கம் ஒரு நட்சத்திர அறையை (Star Chamber) ஒரு சட்டவிரோத இரகசிய அமைப்பை நிறுவலாம். அதன் செயற்பாடு சி.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை உத்தரவிடும் கொலைகளுக்கு முத்திரையிடுவதாக இருக்கும். அப்படித்தான் இப்பொழுது FISA நீதிமன்றம் அரசாங்கத்தின் உள்நாட்டு உளவுக்கு தொடர்பாக செயல்படுகின்றது.இந்த “சிறப்பு நீதிமன்றத்தின்” ஒவ்வொரு உறுப்பினரும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார், நீண்டகாலம் அரச உளவுத்துறை அதிகாரத்துவத்திலும், இரகசியப் பிரமாணம் செய்துகொண்டவராகவும் இருப்பார் என்பதைக் கூறத் தேவையில்லை.ஒரு தசாப்தத்திற்கு சற்று முன்னதாக வாஷிங்டன் “இலக்கு வைத்து கொல்லுதலை” பகிரங்கமாகக் கண்டித்தது, இச்சொற்றொடர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் சட்டவிரோதப் படுகொலகளை நியாயப்படுத்த இஸ்ரேலினால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு தலைமுறைக்கு முன், CIA நடத்திய படுகொலைகள் அந்த அமைப்பிற்கு கொலை, நிறுவனம் என்ற செல்லப் பெயரைப் பெற்றுத் தந்தது. இவை காங்கிரஸ் விசாரணைகளில் பரந்த முறையில் விவாதிக்கப்பட்டன. பின் அத்தகைய கொலைகள் சட்டவிரோதம் என்று முத்திரையிடப்பட்டன.ஜூன் 5, 1975 அன்று நியூ யோர்க் டைம்ஸ் மறைந்த செனட்டர் பிராங்க் சர்ச் அரச படுகொலைகளைக் கண்டித்ததை ஒப்புதலுடன் மேற்கோளிட்டது. “எவர் அதற்கு உத்தரவிட்டது என்பது குறித்த நான் பொருட்படுத்தவில்லை. கொலை ஒரு கொலைதான். அமெரிக்கா ஒரு தீய நாடு அல்ல, ஒரு தீய அரசாங்க உத்தரவிற்கு நாம் இணங்க வேண்டியதில்லை”. 37 ஆண்டுகளுக்குப் பின்னர் படுகொலைகளுக்கு டைம்ஸ் கொள்கை ரீதியாக ஆட்சேபனையை கொள்ளவில்லை. அதிகாரத்துவம் செயல்படுத்தும் விதித்தொகுப்பிற்குட்பட்டு கொலைகள் நடத்தப்பட வேண்டும் என்றுதான் அது விரும்புகிறது.டைம்ஸின் தலையங்கம், ஆளும் உயரடுக்கு அதைச் சுற்றியுள்ள வசதியானவர்கள் ஆகியோரின் அதிகரிக்கும் மனப்பாங்கு குறித்த உட்பார்வையைத்தான் நமக்கு அளிக்கிறது. இவர்கள் தாங்கள் விருப்புவதை பெறுவதற்கு போர்கள், கொலைகள் மற்றும் பயங்கரங்கள் என எதைச் செய்வதற்கும் அவர்கள் தயங்க மாட்டார்கள். |
|
|