சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Italian Prime Minister Monti resigns

இத்தாலியப் பிரதம மந்திரி மொன்டி இராஜிநாமா செய்கிறார்

By Peter Schwarz
11 December 2012
use this version to print | Send feedback

இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மொன்டி தனது முன்கூட்டிய இராஜிநாமாவை அறிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை அவர் நாட்டின் தலைவரான ஜியோர்ஜியோ நப்போலிடனோவிடம் தான் "முடிவை மாற்றுவதற்கு இல்லை என்று முறையில்" இராஜிநாமா செய்வதாகவும், இது 2013 வரவு-செலவுத் திட்டம் ஏற்கப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்; வரவு-செலவுத் திட்டம் அடுத்த இரண்டு வாரங்ளில் ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப்பின் நப்போலிடனோ பாராளுமன்றத்தை கிறிஸ்துமஸிற்கு முன்பு கலைத்து, ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்தல்கள் பெப்ருவரியில் நடத்தப்படுவதற்கு உத்தரவிடலாம்.

மொன்டியின் இராஜிநாமாவிற்கு உடனடிக் காரணம் PDL (Popolo della Liberta) எனப்படும் சில்வியோ பெர்லுஸ்கோனியின்ட்சியின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டதுதான். அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக மொன்டியின் தொழில்நுட்ப அரசாங்கத்திற்கு ஒப்புதல் கொடுத்திருந்தனர். கடந்த வார இறுதியில், அவர்கள் செனட்டிலும் பாராளுமன்றத்தின் கீழ்பிரிவிலும் நம்பிக்கை வாக்குகளின்போது ஆதரவைக் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் பெர்லுஸ்கோனி, தான் மீண்டும் பிரதம மந்திரியாக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அதையொட்டி PDL இன் முக்கிய வேட்பாளாராக நிற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெர்லுஸ்கோனி கடுமையான நிதிய நெருக்கடி மற்றும் ஏராளமான ஊழல்களுக்கு நடுவே பிரதம மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்தார். அக்டோபர் கடைசியில்கூட அவர் தன் கட்சியின் முக்கிய வேட்பாளராக மீண்டும் நிற்பதாக இல்லை என்றுதான் உறுதிபடக் கூறிவந்தார். இப்பொழுது தலைகீழாக மாறியதை நியாயப்படுத்தும் வகையில் அவர் மொன்டியின் சிக்கன கொள்கைகள், வரி அதிகரிப்புக்கள், செலவு வெட்டுக்கள் ஆகியவை இத்தாலியை "ஒரு பெரும் பள்ளத்தின் விளிம்பில்" நிறுத்தியுள்ளது என்று கூறுகிறார்.

ஆனால் மொன்டியின் இராஜிநாமா, கட்டாயவிதிகளுக்கு உட்பட்டது அல்ல. பெர்லுஸ்கோனியின் PDL முன்கூட்டியே அரசாங்கத்தின் தலைவரைப் பதவியில் இருந்து அகற்றத் தான் விரும்பவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கில், PDL பிரதிநிதிகள் மொன்டிக்கு எதிராக வாக்களிக்கவில்லை, மாறாக வாக்களிக்கவே இல்லை, அறையை விட்டு வெளியேறினர்; இதற் பொருள் மொன்டி வெற்றி பெற முடியும் என்பதுதான். PDL பிரதிநிதிகள் 2013 வரவு-செலவுத் திட்டத்திற்கும் அது கொடுத்துள்ள கடன் வரம்பிற்கும் ஆதரவு கொடுத்து வாக்களிப்பதாகத்தான் உள்ளனர்.

ஆயினும்கூட மொன்டி தந்திரோபாயக் காரணங்களுக்காக இராஜிநாமா செய்தார். ஒரு நீண்டகால உறுதியான பாராளுமன்ற பெரும்பான்மையை தன்னுடைய பெருகிய முறையில் செல்வாக்கற்ற நடவடிக்கைகளுக்குப் பெறுவதற்கு அவர் முயல்கிறார்.

இத்தாலிய அரசாங்கத்தின் தலைமையை நவம்பர் 2011 ல் மரியோ மொன்டி சர்வதேச நிதிகளின் பிரதிநிதி என்ற முறையில் எடுத்துக் கொண்டார். முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர், கட்சி சார்பு இல்லாத தொழில்நுட்பவாதிகளைக் கொண்ட மந்திரிசபை ஒன்றை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் நம்பிக்கையைக் கொண்டவர்களோடு அமைத்தார். அவருக்கு ஒரு பரந்த கூட்டணி ஆதரவு இருந்தது; அதில் வலதுபக்கத்தில் PDI இல் இருந்து இடது புறம் ஜனநாயக வாதிகள், SEL (இடது, சுற்றுச்சூழல், சுதந்திரத்திற்கானது) வரை இருந்தன.

தன்மீது நிதியச் சமூகத்திலுள்ள ஆதரவாளர்கள் வைத்திருந்த எதிர்ப்பார்ப்புக்களை மொன்டி நிறைவேற்றியுள்ளார். நாட்டின்மீது மிகவும் கடுமையான சிக்கன வேலைத் திட்டத்தை அவர் சுமத்தினார்; தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தினார், ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை அதிகரித்தார், தொழிலாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் மீதான வரிகளை உயர்த்தினார். இவற்றின் விளைவாக, இத்தாலி ஓர் ஆழ்ந்த மந்தநிலையில் விழுந்துள்ளது. வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவை கணிசமாக அதிகரித்துள்ளன.

மத்தியதர வர்க்கத் தட்டுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம், குடும்பங்கள் மீதான வரிச்சுமை கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாகிவிட்டது; இதற்குக் காரணம் சொத்துக்கள் மீதான ஒரு புதிய வரிதான். கிறிஸ்துமஸிற்கு முந்தைய விற்பனைகள் இதையொட்டி 13% குறைந்துவிட்டன.

தன்னுடைய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களின் கணிசமான எதிர்ப்பை தொழிற்சங்கங்களின் உதவியுடன் மொன்டி அடக்கினார். அவை அவருடைய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து, அத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்தன. ஆனால், இதற்கிடையில இன்னும் பரந்த சமூகத் தட்டுக்கள் அவருக்கு எதிர்ப்புக்களைத்தான் காட்டின. ஓராண்டிற்கு முன் கருத்துக்கணிப்புக்களில் நல்ல இடத்தைப் பெற்றிருந்த அவருடைய தரம் பதவியில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலையில் இப்பொழுது 33% எனச் சரிந்துள்ளது.

இப்பொழுது திடீரெனத் தேர்தல்கள் வைப்பது மொன்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருடைய சிக்கன நடவடிகைகளுக்குப் பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான்.

அவருக்கு அடுத்தாற்போல் அரசாங்கத்தை அமைக்கக் கூடிய வேட்பாளார் ஜனநாயகக் கட்சியின் தலைவரான Pier Luigi Bersani ஆக இருக்கலாம். ஒரு வாரம் முன்புதான் இவர் ஒரு மைய-இடது கூட்டின் முக்கிய வேட்பாளராக அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

61 வயது பெர்சானி தன்னுடைய அரசியல் வாழ்வை இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் தொடங்கினார்; அக்கட்சி ஒரு வலதுசாரி முதலாளித்துவ சார்பு ஜனநாயகக் கட்சியாக மாறவேண்டும் என்பது குறித்து உறுதியாக வாதிட்டவர் ஆவார். பல ஆண்டுகள் அரசாங்க அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்; இது அவருக்கு தயக்கமற்ற நம்பிக்கையை இத்தாலிய, சர்வதேச முதலாளித்துவத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்துள்ளது.

அவர் Emilia-Romagna பிராந்தியத்தின் தலைவராக (1993-1996)ல் இருந்துள்ளார்; ப்ரோடியின் முதல் அரசாங்கத்தில் (1996-1999) தொழில்துறை மந்திரியாகவும், d’Alema, Amatoஅரசாங்கங்களில் (1999-2001) போக்குவரத்து மந்திரியாகவும், இரண்டாம் ப்ரோடி அரசாங்கத்தில் (2006-08) பொருளாதார மந்திரியாகவும் இருந்துள்ளார். நவம்பர் 2011ல் பெர்லுஸ்கோனி இராஜிநாமா செய்தபின் பெர்சானி தொழில்நுட்பவாதிகள் அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு வலுவான ஆதரவைக் கொடுத்தார். அப்பொழுது முதல் அவர் மொன்டிக்கு மிக முக்கியமான, நம்பிக்கையான ஆதரவாளராக இருந்து வருகிறார்.

ஜனநாயகவாதிகளுக்கு 35% வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. SEL உடன் சேர்ந்து (அதன் தலைவர் நிஷி வெண்டோலா கம்யூனிஸ்ட் மறு அஸ்திவாரக்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்) இவை 40%பெரும்பான்மையைப்பெற முடிந்துள்ளது.

ஆனால் ஒரு முழுப் பெரும்பான்மை பெறுவதற்கு இது இன்னும்போதாதது ஆகும். இக்காரணத்தை ஒட்டி மொன்டி அரசாங்கத் தலைவராக மீண்டும் வரலாம் என்ற பேச்சு உள்ளது; அல்லது மற்றொரு அரசாங்கப் பதவியை வகிக்கலாம். தேர்தல் தெளிவான முடிவைக் கொடுக்கவில்லை என்றால் தான் மீண்டும் பிரதம மந்திரியாக வரத்தயார் என்று மொன்டி ஏற்கனவே கூறியுள்ளார்.

இதற்கிடையில் மொன்டி ஒரு கட்சிக்கூட்டின் சார்பில் முக்கிய வேட்பாளாராக தேர்தலில் நுழையலாம் என்ற ஊகமும் உள்ளது. அவருடைய இராஜிநாமாவைத் தொடர்ந்து அவர் Corriere della Sera விடம் அவர் "கைகள் இப்பொழுது சுதந்திரமாக" இருப்பதாகவும் கூறியுள்ளார்; இது அத்தகைய ஊகத்திற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.

அரசியல்நடைமுறையின் மையத்தில் இருக்கும் கிறிஸ்துவ ஜனநாயக வாதிகள் போன்ற கட்சிகள் மொன்டியின் வேட்புத்தன்மைக்கு ஆதரவு கொடுக்கத்தயாராக உள்ளன. இதுவே "குடிமக்கள் பட்டியல்" என்பதற்கும் பொருந்தும். அது தற்பொழுது Luca Cordero de Montezemolo என்ற பெராரியின் முதலாளியால் கட்டமைக்கப்படுகிறது; அவர் முன்னதாக முதலாளிகள் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

இதன்பின் மொன்டி ஒரு கூட்டணி அரசாங்கத்தின் உதவியுடன், பெர்சானியின் மைய-இடதுக் கூட்டின் தலைவராக வரலாம். ஒரு பெருவணிக மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகப் பின்னணியைக் கொண்டுள்ள ரோமனோ ப்ரோடியும் இதேபோன்ற வழியைத்தான் பின்பற்றினார்.

இதுவரை பெர்லுஸ்கோனி தேர்தலில் வெற்றிக்கு அதிக வாய்ப்புகொண்டுள்ளார் என்று கூறுவதற்கு இல்லை. அவருடைய PDL உட்பூசல்களில் உள்ளது, தற்பொழுது கருத்துக் கணிப்புக்களில் 14முதல் 16 சதவிகிதம் வரை பெற்றுள்ளது. Lega Nord கூட்டணிப் பங்காளிகளுடன் அதற்கு 20% வரை வாக்குகள் கிடைக்கலாம். இது கடந்த பாராளுமன்றத் தேர்தல்கள் 2008ல் நடைபெற்றபோது அவை இணைந்து கொண்டிருந்த 45% த்தில் பாதியையும்விடக் குறைந்தது ஆகும்.

மொன்டியின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிராக, தன் பரந்த செய்தி ஊடகப்பேரரசை பெர்லுஸ்கோனி அணிதிரட்டினாலும், அவர் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான். 76 வயது பில்லியனர் அவருடைய வலதுசாரி அரசியலுக்காக பரந்த அடுக்குகளால் வெறுக்கப்படுகிறார்; தவிர அவருடைய குற்றம் சார்ந்த பின்னணி மற்றும் அவருடையா பாலியல், ஊழல் அவதூறுகளும் உள்ளன.

ஆனால் அவருடைய வேட்புத்தன்மை மொன்டி, பெர்சானி முகாமிற்கு வாக்காளர்களைத் தள்ளிவைக்கும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. 1996 மற்றும் 2006ல் Rifondazione Communista மற்றும் இதற்குள் சேர்ந்த பல போலி இடது குழுக்களும் ரோமனோ ப்ரோடி அரசாங்கத்திற்கு தாங்கள் கொடுத்த ஆதரவை நியாயப்படுத்தியுள்ளன; இல்லாவிடின் பெர்லுஸ்கோனி அதிகாரத்திற்கு வந்திருப்பார் என்று அவை கூறுகின்றன. உண்மையில் ப்ரோடியின் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள்தான் இரண்டு முறையும் பெர்லுஸ்கோனியை அதிகாரத்தைப் பெறச் செய்தன.

மொன்டியின் இராஜிநாமாவை நிதியச் சந்தைகள் எதிர்கொண்டுள்ள விதமும் வாக்காளர்களை ஒருவேளை அரச திவால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கும் மிரட்டல் வகையில்தான் உள்ளது. மொன்டியே தன்னுடைய இராஜிநாமா செய்யும் நேரத்தை சனிக்கிழமை நிதியச் சந்தைகள் மூடப்படும் நேரத்தை ஒட்டிச் செய்து அதை நியாயப்படுத்தியுள்ளார். திங்களன்று இத்தாலியப் பங்குச் சந்தைகள் சரிவுற்றன மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் உயர்ந்தது. ஆனால் வியத்தகு கணிப்புக்களில் இருந்து எதிர்பார்க்கக் கூடியதைவிட ஏற்ற இறக்கங்கள் சிறிய அளவில்தான் இருந்தன.

நிதியச் சந்தைகளில் செயல்படுவோர் மொன்டியின் தந்திர உத்தியை நன்கு அறிந்துள்ளனர். Wall Street Journal Deutschland கருத்துப்படி UniCredit என்னும் இத்தாலிய வங்கியின் பகுப்பாய்வாளர்கள் "சந்தைகளில் குறுகிய காலம் கொந்தளிப்பு இருக்கும் என்றும் நடுத்தர காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர்" என்றும் தெரிகிறது.

இத்தகைய நம்பிக்கைத் தன்மை கீழ்க்கண்ட முறையில் நியாயப்படுத்தப்படுகிறது: "ஒன்று இதையொட்டி Partito Deomcratic உடைய தலைவர் Pier Luigi Bersani, பிரதமர் ஆகலாம், மொன்டி ஜனாதிபதியாகலாம். அல்லது மற்றும் ஒரு மொன்டி தலைமையிலான தொழில்நுட்ப வாதிகள் அரசாங்கம் அமைக்கப்படலாம். இரண்டுமே சீர்திருத்த நிகழ்வுப்போக்கு தொடரும் என்பதைத்தான் குறிக்கும்."

ஒரு உறுதியற்ற தன்மை, நகைச்சுவை நடிகர் Beppe Grillo உடைய "ஐந்து நட்சத்திர" இயக்கத்தின் நடவடிக்கை ஆகும். இது இப்பொழுது 20% வாக்குகளைப் பெற்றுள்ளது. மரபார்ந்த கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகளை அது குறைகூறினாலும், சமூக நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கு மாற்றீட்டுத்திட்டம் எதையும் அது அளிக்கவில்லை.