சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Florange steelworkers betrayed by French government, unions

பிளோரஞ் எஃகுத் தொழிலாளர்கள் பிரெஞ்சு அரசாங்கம், தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்படுகின்றனர்

By Pierre Mabut
4 December 2012

use this version to print | Send feedback

கடந்த வெள்ளியன்று சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் எஃகுத் தயாரிக்கும் நிறுவனம் Arcelor Mittal க்கு அடிபணிந்து கிழக்கு பிரான்சிலுள்ள பிளோரஞ்ச் வெடிப்பு ஆலைகளில் 629 வேலைகளை இழக்க வைத்தது.

பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் கடந்த செவ்வாயன்று Arcelor Mittal உடைய தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மி மிட்டாலுடன் நடத்திய பேச்சுக்களில் கூறிய "தற்காலிக தேசியமயமாக்கல்" என்று அச்சுறுத்தியதில் இருந்து பின்வாங்கினார்; பிந்தையவர் டிசம்பர் 1ம் தேதியை ஒட்டி பிளாரஞ்சில் இரு வெடிப்பு ஆலைகளை மூடும் நோக்கத்தைக் கொண்டிருந்தார். மாறாக, அரசாங்கம் ஆர்ஸ்லர் மிட்டாலுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது; அதன் விதிகளை அரசாங்கம் வெளியிட மறுத்துள்ளது. ஆனால் ஆரம்ப அறிக்கைகள் பிளோரஞ்ச் ஆலை "தன்விருப்பத்துடன்" தொழிலாளர்கள் வெளியேறுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்று தெரிவிக்கின்றன.

அரசாங்கம் குறிப்பிடப்படாத தொகை ஒன்றை ஆலையில் முதலீடு செய்யும் திட்டங்களையும் அறிவித்துள்ளது; ஐரோப்பியத் திட்டம் ஒன்று UCLOS (மிகவும் குறைந்த கார்பன் டயாக்சைட் எஃகுத் தயாரிப்பு -Ultra Low Carbon Dioxide Steelmaking ) உடனான தொடர்பு இதில் இருக்கும் ; அதில் 50% கார்பன் டயாக்சைட் மாசு வருவது குறைக்கப்படும், அதிக இலாபமும் இருக்கும். இது இன்னும் குறிப்பிடப்படாத திகதி ஒன்றில் தொடங்கும். இதற்கிடையில் வெடிப்பு உலைகள் பற்றிப் பேச்சு ஏதும் இல்லை. பிரதம மந்திரி Jean-Marc Ayralt, மிட்டால் ஆலையில்180 மில்லியன் யூரோக்களை (அமெரிக்க $235) முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

பிளோரஞ் எஃகுத் தொழிலாளர்கள் இந்த உடன்பாட்டை அது ஒரு காட்டிக் கொடுப்பு என்று கூறியவகையில் முகங்கொடுத்துள்ளனர். மிட்டாலின் உறுதிமொழிகள் பற்றி அவர்கள் நியாயமான முறையில் அவநம்பிக்கையைத்தான் கொண்டுள்ளனர்; கடந்த காலத்தில் அத்தகைய உறுதிமொழிகள் போலியாகிவிட்டன. 2008ல் மிட்டால் முந்தைய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியிடம் Gandrange என்னும் இடத்தில் துணை ஆலையில் 320 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தார்; ஆனால் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை. ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்களுடன் ஆலை மூடப்பட்டது.

சோசலிஸ்ட் கட்சியும் ஆர்ஸ்லர் மிட்டாலும் இப்பொழுது கருத்து வேறுபாடுகளைப் புதைத்துவிட்டு, உடன்பாட்டை விளம்பரப்படுத்த முயல்கின்றன. உள்ளூர் PS பிரதிநிதி Michel Liebgott இந்த உடன்பாடு "அப்படியும் நல்லதுதான்" என்றார்; அதே நேரத்தில் ஆர்ஸ்லர் மிட்டால் இதை "நல்ல உடன்பாடு" என்று கூறி, "தன்விருப்பத் தளத்தில்" தொழிற்சங்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வரும் உடன்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர் தொகுப்பு குறைக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் இக்கூற்றை மறுக்கவில்லை. Force Ouvrière (தொழிலாளர் சக்தி) உடைய பொறியியல் தொழில்துறையின் தொழிற்சங்கத் தலைவர் Frédéric Souillot தான் உடன்பாட்டில் "திருப்தி" அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

PS உடன் பிணைப்புடைய CFDT என்னும் பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலைப் பிரதிநிதி Edouard Martin, அரசாங்கம் "முழுவதும் பொய்கூறி வந்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்; "தேசிய மயமாக்கல் இல்லை என்று போய்விட்டது" என்றார்.

இத்தகைய விளைவு, PS அல்லது தொழில்துறை மீட்பு மந்திரி Arnaud Montebourg —ஆர்சிலர் மிட்டாலுடன் பேச்சுக்களுக்கு தலைமை தாங்கி "தற்காலிக தேசியமயமாக்கல் திட்டத்தை" முன்வைத்தவர்—தொழிலாளர்களுக்கு உதவ அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று கூறியவர்களின் அரசியல் திவால்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அரசாங்கம் ஆலையை வாங்கியபின் அதை வாங்கும் திறனுடையவர்கள் இருவர் உள்ளனர் என்று அவர் கூறினார்; அரசாங்கம் அவர்களுக்கு அதை விற்கலாம் என்றும் அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களும், வலது மற்றும் இடது என்று முதலாளித்துவத்தின் அரசியல் கட்சிகளும் Montebourg இன் திட்டமான "அரசாங்கம் தற்காலிகமாக எடுத்துக் கொண்டு ஆலையில் அனைத்து நடவடிக்கைகளையும் தக்கவைக்கும் மற்றொரு தொழில்துறை வல்லுனர் வாங்க உதவுவதை" ஆதரித்தன.

Montebourg இத்தகைய "தற்காலிக தேசியமயமாக்கல்" என்பதை, இலாபகரமான ஆலைகளை விற்க மறுத்து, பிளோரஞ்சில் எஃகு பொருட்களைத் தயாரிப்பது நிறுத்தப்படும் என்று கூறியபின் முன்வைத்தார்—அந்நிலையில் இது குறித்து ஆர்வம் காட்டும் வாங்குவோர் எவரும் முன்வரவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக PS மிகவும் செல்வாக்கிழந்து விட்டது என்பதால் Montebourg தேசியமயமாக்கல் பிரச்சினையை எழுப்பினார்; பெரிய அளவில் வேலை வெட்டுக்கள், சமூக நலச் செலவுக்குறைப்புக்கள் ஆகியவற்றை தொடர்ந்தபின் ஆளும் வர்க்கம் அது எஃகுத் தொழிலாளர்களின் வேலைகளையும் முற்றிலும் அழிக்க உடன்பட்டால் ஒரு சமுக வெடிப்பு ஏற்படும் என அஞ்சுகிறது. ஹாலண்டின் செல்வாக்கு விகிதம் சமீபத்திய கருத்துக் கணிப்புக்களில் 35% எனச் சரிந்தவிட்டது. அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட வேலையின்மை புள்ளி விவரங்கள் இன்னும் கூடுதலான 71,500 வேலை இழப்புக்களைக் காட்டியுள்ளது; செப்டம்பர் மாதம் மொத்த வேலையில்லாதவர் எண்ணிக்கை பிரான்சில் மூன்று மில்லியனைக் கடந்தது.

PS இன் தேசியமயமாக்கல் தந்திர உத்தி அதற்கு "இடது" வர்ணத்தை அளிக்கும் இழிந்த முயற்சியாகும்; இக்கொள்கைப்படி அரசாங்க நிதி நிறுவனத்தை வாங்கப் பயன்படும், தொழிலாளர்கள் நீடித்து இருப்பர், ஒரு புதிய தனியார் வாங்குபவரை நிறுவனத்தை வாங்கக் கண்டுபிடித்தல் என்பதே அது. இதற்கும் ஒரு சோசலிசத் தேசியமயமாக்கலுக்கும் எத்தொடர்பும் கிடையாது. அதாவது நிறுவனத்தைப் பொது உடைமையாக்கித் தொழிலாளர்களுக்கு உறுதியான, ஆக்கத்திறன் உடைய வேலையை உறுதியளித்தல். அத்தகைய கொள்கை இன்று முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலம்தான் செயல்படுத்தப்பட முடியும்; பிளோரஞ்சின் அனுபவம் அதைத்தான் தெளிவாக்கியுள்ளது.

கிட்டத்தட்ட 82 PS மற்றும் பசுமைக் கட்சி பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஜனாதிபதி ஹாலண்டிற்கு ஒரு கடிதம் எழுதி Montebourg திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர். அவர்கள் ஜனாதிபதி ஒபாமாவின் 2009ம் ஆண்டு அமெரிக்கக் கார்த்தொழில் பிணை எடுப்பை உதாரணமாகப் பின்பற்ற மேற்கோளிட்டனர்: "அவருடைய [ஒபாமாவின்] வெற்றி, கருத்தியல் போக்குச் செயல்கள் என்று இல்லாமல் நடைமுறைக்கேற்ற செயல்கள் மூலம்தான் நாம் உலகமயமாக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் குறுக்கீடு செய்யமுடியும் என்பதை நிரூபிக்கிறது."

உண்மையில், இக்கடிதம் எல்லாவற்றிற்கும் மேலாக Montebourg இன் "தற்காலிக தேசியமயமாக்கல்" திட்டங்களின் பிற்போக்குத்தன தன்மையைத்தான் நிரூபிக்கிறது. ஒபாமாவின் 2009 கார்த்தொழில் பிணையெடுப்பு பல ஆலைகள் மூடுதல் மற்றும் மகத்தான வேலைக் குறைப்புக்கள், ஓய்வூதியக் குறைப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது—இவை அனைத்தும 50% க்கும் மேல் புதிய தொழிலாளர்களுக்குக் குறைக்கப்பட்டன. இது, PS உடைய கொள்கைகளுக்கு முன்மாதிரி என்று எடுத்துக் கொள்ளப்படுவது அடிப்படையில் PS கொள்கைகளின் தொழிலாள வர்க்க விரோதத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

PCF எனப்படும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, PS உடைய திட்டங்களை ஊக்குவிக்க முயன்றது; ஹாலண்டிற்கு பிளோரஞ்ச் ஆலையை ஒரு கலவையான தனியார், பொது நிறுவனத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு ஆதரவைக் கொடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில் "நம் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையில் எஃகுப் பிரச்சினை முக்கியத்துவம் கொண்டது..... நாம் இந்த இழிந்த நிதியாளரை நம் தேசிய சொத்துக்களை எடுக்க அனுமதிக்கக் கூடாது" என்று அது கூறியது.

ஆனால் ஒரு சில நாட்களுக்குள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட தொடர்ச்சியான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிப்பட்டன. STX-France கடற்படை கப்பல் கட்டுமிடங்களில் உள்ள தொழிலாளர்கள், எவரும் இந்நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில், அரசாங்கம் ஏற்கனவே 33% பங்கைக் கொண்டுள்ள நிலையில், இந்த நிறுவனம் கொரிய உரிமையாளர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று கோரினர். மேலும் சுவிஸ் எரிசக்தி நிறுவனம் பெட்ரோப்ளஸின் திவாலாகிவிட்ட ரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன—இது Montebourg லிபிய முதலீட்டு அதிகாரத்திற்கு இதை விற்கும் முயற்சிகள் தோல்வியுற்றபின் எழுந்தது.

PSA கார்த்தயாரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள், 8500 பணி வெடுக்களை எதிர்நோக்கியிருப்பவர்கள் கூட இதேபோன்ற முறையீட்டைச் செய்ய முடியும்; அங்கு தொழிற்சங்கங்கள் வேலைகளைக் காக்கும் எந்த முன்னோக்கையும் கைவிட்டுவிட்டன.

இத்தகைய எதிர்கொள்ளல் ஆளும் வர்க்கம் மற்றும் அரசாங்கத்தைப் பீதியில் ஆழ்த்தியது. நான்கு நாட்களுக்குள் PS அரசாங்கம் "தற்காலிக தேசியமயமாக்கல்" என்னும் வனப்புரையைக் கைவிட்டு, விரைவில்அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து தேசியமயமாக்கல் பிரச்சினையை அகற்ற முயன்றது.

பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பான மெடப்பின் தலைவர் Laurence Parisot "தற்காலிக தேசியமயமாக்குதல்" என்னும் கருத்திற்கு எதிராக வெறித்தனமாகக் கூவினார். "இது ஒரு அபகரிப்பு ஆகும்; நம் சமூகம் சொத்துரிமைக் கொள்ளகையின்அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது ... சொத்துரிமைக் கொள்கையை வலுவிழக்கச் செய்வது தீவிர விவகாரம் ஆகும்; மேலும் அதிக செலவும் ஆகும்." என்று இந்த அம்மணி கூறினார்.

ஜனாதிபதி ஹாலண்டிடம் இருந்து "தற்காலிக தேசியமயமாக்கலுக்கு" Montebourg ஆதரவைப் பெற்றிருந்தாலும், பிரச்சினையில் அரசாங்கம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. பிரதம மந்திரி Ayrault மற்றும் தொழில்துறை மந்திரி மைக்கேல் சபானும் இதை எதிர்த்தனர். சபான் கூறியதாவது: "அரசாங்கம் எஃகு உற்பத்தி செய்யும் என்னும் இப்பேச்சு எதற்கு? நாம் ஒன்றும் சோவியத் ஒன்றியம் அல்ல."

அரசாங்க அமைச்சர்கள் கூட Montebourg திட்டத்தை விமர்சித்து, பேச்சுவார்த்தைகளில் லக்ஷ்மி மிட்டாலுக்கு "அச்சுறுத்தல்கள், மிரட்டல்"ஆகியவற்றைப் பயன்படுத்தியதற்கு குறைகூறி, அவரை "விரும்பத்தகாத மனிதர்" என்று தாக்கினர்—இது பிரான்சில் 20,000 ஆர்சிலர் மிட்டால் வேலைகளை இடரில் ஆழ்த்தியுள்ளது என்றும் எச்சரித்தனர்.

வார இறுதியில் ஹாலண்டிடம் தன் இராஜிநாமாவை Montebourg கொடுக்க முன்வந்தார், ஆனால் ஹாலண்ட் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.