சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

US-backed Muslim Brotherhood unleashes bloody crackdown in Cairo

அமெரிக்க ஆதரவு பெற்ற முஸ்லிம் சகோதரத்துவம் கெய்ரோவில் குருதிகொட்டும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது

By Johannes Stern
6 December 2012

use this version to print | Send feedback

எகிப்தின் இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சிக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம் சகோதரத்துவ (MB) சக்திகள், கெய்ரோவில் குருதிகொட்டும வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக முர்சிக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்லாமியவாதிகள் தங்கள் சக்திகளை திரட்டி வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களை நசுக்க முற்படுகின்றனர்.

அப்போதைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாக்கின் குண்டர்கள் கடந்த ஆண்டு எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் தஹ்ரிர் சதுக்கத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள்மீது தாக்கிய நாட்களை, "ஒட்டகங்களின் போர்" எனப்பட்டதை நினைவுபடுத்தும் காட்சிகளாக, முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள், Salafist Call, al-Gama al-Islamiyya சக்திகளுடன் கெய்ரோவில் ஹெலியோபொலிஸிலுள்ள ஜனாதிபதி அரண்மனைக்கு முன்பு அமைதியாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தி வந்த நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

செவ்வாய் இரவு தனக்குத்தானே சர்வாதிகார அதிகாரங்களைக் டுத்துக் கொண்ட முர்சியின் ஜனாதிபதி ஆணை இரத்து செய்யப்பட வேண்டும், அவர் அகற்றப்பட வேண்டும் என்று கோரிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்ள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்புக்காட்டியபின், இந்த அமரும் எதிர்ப்புக்கள் தொடங்கின. அன்று நடந்த ஆர்ப்பாட்டம் முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் முர்சிக்கு எதிராக, அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாரத்தைக் கைப்பற்றியபின் நடந்த வெகுஜன எதிர்ப்புக்களில் மிகப்பெரியவற்றுள் ஒன்றாகும்.


எதிர்ப்பாளர்கள் டிசம்பர் 4ம் திகதி முர்சியின் அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர் (புகைப்படம்: Moud Barthez)

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான இஸ்லாமியவாதிகள் புதன் பிற்பகல் அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் மீது பெரும் தாக்குதல் நடதிதனர். அவர்கள் முகாம்களை அழித்து, பங்கு பெற்றவர்களை கற்களாலும், தடிகளாலும் தாக்கி, "ஜனாதிபதியின் முடிவுகளுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர்", "ஜனாதிபதி முர்சி நீடூழி வாழ்க", "அரண்மனையை தூய்மைப்படுத்துவோம்" என்ற கோஷங்களையும் முழங்கினர்.

மாலையிலும் இரவு முழுவதும், இஸ்லாமிய வாதிகள் எதிர்ப்பாளர்கள் மீதான தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினர்.

இஸ்லாமியவாதிகள் ஜனாதிபதி அரண்னையை நோக்கி தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிவகுத்துச் செல்லுவதை தடுப்பதற்காக உலோகத் தடைகளை நிறுவினர். அவர்கள் வெகு நெருக்கமாக CSF எனப்படும் மத்திய பாதுகாப்புப்படைகள் உடன் ஒத்துழைத்தனர். Ahram Online "நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவாளர்கள் அரண்மனைக்கு முன்னே நின்று கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு முன் மத்திய பாதுகாப்புப் படைகள் இரு வரிசைகளில் உள்ளனர்" என்று எழுதியுள்ளது.

CSF பிரிவுகள் முர்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலிபா எல் மாமௌன் தெருவிலுள்ள ராக்சி சதுக்கத்தில் தாக்கினர்; இன்னும் அரண்மனைக்கு அருகே உள்ள பல இடங்களிலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர தோட்டாக்களையும் இயக்கினர். உயிர்த்த தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலுக்கு எதிர்ப்பாளர்கள் கற்களைப் பாதுகாப்புப் படையினர் மீதும் இஸ்லாமியவாத குண்டர்கள் மீதும் வீசியதோடு, "மகம்மது முர்சி, வீழ்க, வீழ்க" என்றும், "ஆட்சி கவிழவேண்டுமென மக்கள் விரும்புகின்னர்" என்றும் கூவினர்.

இஸ்லாமியவாதக் கூட்டத்தை, எதிர்ப்பாளர்களுக்கு எதிரான கடுமையான வன்முறையைப் பயன்படுத்த இமாம்கள் தூண்டினர். "அவர்ளை விரட்டுங்கள், இறைவன் பெயரில் பிடியுங்கள்" என்றனர். முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களும் அவர்களுடைய இஸ்லாமியவாத நண்பர்களும் எதிர்ப்பாளர்களைத் தெருக்கள் வழியே துரத்தினர், அடித்தனர்; கத்தி மற்ற ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கருதப்பட்டவர்களை அச்சுறுத்தினர்.

Ahram Online ல் எழுதிய அஹ்மத் பெடெஹா, எப்படி 24 வயது மகமுத் நபில், முர்சி ஆதரவாளர் குண்டர்களால் கை முறிக்கப்பட்டார் என்று விளக்கினார்: "ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவு கொடுத்த தாடிவைத்த நபரை இவர் அணுகி, அவரும் அவருடைய நண்பர்களும் செய்வது ஏற்கத் தக்கதுஅல்ல என்றார். பாதிக்கப்பட்டவர் கருத்துப்படி, தாடிவைத்தவர் உடனே அவரைத் தரையில் தள்ளினார், மற்றொரு மனிதர் ஒரு சுத்தியலால் அவருடைய தோளை முறித்தார்."

இக்கட்டுரை எழுதப்படுகையில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் காயமுற்றனர், குறைந்தப்பட்சம் நான்கு பேராவது கொல்லப்பட்டனர் என்ற தகவல் உள்ளது. இறந்தவர்களில் சோசலிஸ்ட் மக்கள முன்னணிக் கட்சியின் உறுப்பிரான மிர்னா எமத்தும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) உறுப்பினர் தகா மக்டியும் அடங்குவர்.

இத்தகைய மிருகத்தன வன்முறைத் தாக்கதலுடன் அரசாங்கம் மற்றும் இஸ்லாமியவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தின் தீய பிரச்சாரமும் இணைந்தது. புதன் அன்று இஸ்லாமிய வாதிகள் குழுக்கள் எதிர்ப்பாளர்கள் நாட்டைச் சதித்திட்டத்தில் தள்ளுவதாகவும் "எகிப்தில் அமைதியற்ற எதிர்ப்புக்கள் ஒரு குற்றம்" என்றும் அச்சறுத்தின.

முஸ்லிம் சகோதரத்துவ போராளிகள், எதிர்ப்பாளர்களை மிருகத்தனமாகத் தாக்குகையில், முஸ்லிம் சகோதரத்துவத்தின் சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் துணைத்தலைவர் (Freedom and Justice Party -FJP) எசம் அல்-எரியன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார்.

ஜனாதிபதி அரண்மனையில் நடைபெறுவது "ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்போருக்கும் இடையேயான மோதல்கள் அல்ல, மாறாக நெறித்தன்மை, புரட்சி இவற்றைக் காப்பவர்களுக்கும், நெறித்தன்மையை அகற்ற விரும்பும் எதிர்ப்புரட்சி முயற்சிகளுக்கும் இடையேயான பூசல் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை அகற்றச் சில குண்டர்கள் விரும்புகின்றனர்." என்றார் அவர். இந்தக் குண்டர்களை "முற்றுகையிட்டு மூன்றாம் நபர்களையும், உயிர்த்த தோட்டக்களைப் பயன்படுத்தியவர்களையும் குடிமக்கள் அம்பலப்படுத்த வேண்டும்" என்றும் எரியன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அடக்குமுறை அலையை முர்சி அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் முழு ஆதரவுடன் கட்டவிழ்த்துள்ளார். அவர்கள் கடந்த மாதம் மிருகத்தன இஸ்ரேலிய தாக்குதல் காசா மீதுநடத்தப்பட்டது மற்றும் பாலஸ்தீனியர்கள் அடக்கப்பட்டதற்கு முர்சி கொடுத்த ஆதரவையும் நம்பகத்தன்மையையும் பாராட்டி, இப்பொழுது அவர் ஆட்சி நடத்தும் அடக்குமுறைக்கு முழு இசைவும் கொடுத்துள்ளன.

காசாப் பகுதி தாக்குதலின்போது முர்சி தனிமைப்படுத்த உழைத்தபோது, ஒபாமா முர்சியுடன் "உறவு" இருப்பதாக உணர்ந்தார், ஆறு தொலைப்பேசித் தொடர்புகளையும் கொண்டார் என்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது. முர்சி மீது "அதிக முதலீடு" செய்யவும் ஒபாமா முடிவெடுத்துள்ளார் என்று அது சேர்த்துக் கொண்டுள்ளது.

ஓர் உத்தியோக பூர்வ அறிக்கையில் பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்கும் தன்னுடைய முர்சிக்கான ஆதரவை அடையாளம் காட்டினார். "ஐக்கிய இராஜ்ஜியம் எகிப்தின் அரசியல் மாற்றம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளது. எகிப்திய அதிகாரிகளுடனும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நாங்கள் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளோம்" என்றார் அவர்.

செவ்வாயன்று முர்சியின் வெளியுறவு உதவியாளரும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் வழிகாட்டும் அலுவலக உறுப்பினருமான எசம் அல்-ஹடட் வாஷிங்டனில் செவ்வாயன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோம் டோனிலோனைச் சந்தித்தார். கெய்ரோவில் உள்ள தூதரகம் புதன் அன்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் "இரு அதிகாரிகளும் அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையே உள்ள மூலோபாய உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர்" என்று கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் நீண்ட நாள் கைக்கூலி முபாரக், கடந்த ஆண்டு பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டபின், அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எகிப்து மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் தன் புதிய நட்பு அமைப்பாக அமெரிக்க மூலோபாய, பொருளாதார நலன்களைக் காக்கும் என்று கருதுகிறது. முஸ்லிம் சகோதரத்துவத்தின் அமெரிக்க ஆதரவாளர்கள், இஸ்லாமியவாதிகளை ஆளும் வர்க்கத்தின் சிறந்த நம்பிக்கையாக, தொழிலாள வர்க்கத்திடையே கடந்த ஆண்டு முபாரக் அகற்றப்பட்டதினால் ஏற்பட்டுள்ள புரட்சிகர நம்பிக்கை அடக்குவதற்கு காண்கின்றனர். மேலும் முர்சி ஆதரவளிக்கும் சிரியா, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதல் தீவிரமாக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

எதிர்ப்புக்களுக்கு முன்பு, எகிப்தின் புதிய தலைமை அரசாங்க வக்கீல் தலத் இப்ராஹிம் அப்துல்லா, தாராளவாத, மத சார்பற்ற எதிர்க்கட்சியின் முக்கிய நபர்கள் மீது விசாரணைகளை நடாத்த உத்தரவிட்டுள்ளார். தேசத்தை சீரமைக்கும் முன்னணி (National Salvation Front -NSF) —தாராளவாதத் தலைவர் மகம்மது எல்பரடேய், நாசரைட் ஹம்தீன் சபாஹி, முன்னாள் முபாரக் ஆட்சியின் அதிகாரி அம்ர் மௌசா மற்றும் தாராளவாத வபட் கட்சியின் சயீத் அல்-பதாவி— ஆகியோர் ஒரு "சியோனிச சதித்திட்டத்தின்" பகுதியாக ஆட்சியை அகற்றுவதற்குத் தூண்டுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சியோனிச சதித்திட்டம் என்று முர்சி ஆட்சி கூறுவது எகிப்து சமூக்தின் மிகப் பிற்போக்குத்தன கூறுபாடுகளை எதிர்ப்பாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரட்டும் இழிந்த, அபத்தமான முயற்சி ஆகும். இது முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் பிரச்சாரத்தையும் நினைவுபடுத்துகிறது; அவரும் தன் ஆட்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களை இஸ்ரேலிய, அமெரிக்க சதித்திட்டம் எனச் சித்தரிக்க முயன்றார். உண்மையில் அவருக்குமுன் பதவியில் இருந்த முபாரக்கைப் போலவே, முர்சியும் அமெரிக்காவின் ஆதரவைக் கொண்டுள்ளார்; அவருடைய பிற்போக்குத்தனக் கொள்கைகளை, வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்துடனான நெருக்கமான கலந்துரையாடலோடு செயல்படுத்துகிறார்.

உண்மையில் பெரும்பாலன எதிர்ப்பாளர்களுக்கு மாறாக, NSF முர்சி அகற்றப்பட வேண்டும் என்று அழைக்கவில்லை. புதன் அன்று அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு முர்சியின் அரசியலமைப்பு பிரகடனம் திரும்பப்பெற வேண்டும் என்றும் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பை மறுபடி எழுத நியமிக்கப்பட வேண்டும் என்றுதான் கோரியுள்ளனர். இஸ்லாமியவாதிகள், எதிர்ப்பாளர்கள்மீது மிருகத்தனத் தாக்குதலை நடத்தியபோது, NSF ஒரு செய்தியாளர் கூட்டத்தை கூட்டி தன்னை "நிலைமையைச் சரிசெய்ய உண்மையான கலந்துரையாடலுக்கு தான் தயார்" என்று அறிவித்தது.

NSF எகிப்திய அரசாங்க இயந்திரத்திற்குள் அதிகாரம், செல்வப் பங்கீடு குறித்து முர்சியுடன் பூசலில் இருக்கும் எகிப்திய ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளுக்காக பேசுகிறது. ஆனால் அவற்றின் முக்கிய அச்சம், தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர இயக்கமாகும்; புதுப்பிக்கப்படும் வெகுஜன எழுச்சி வளரும் என்ற அச்சுறுத்தலே அவர்களுக்கு முர்சியுடன் சமரசம் செய்துகொள்ளப் போதுமானதாக இருந்தது. கடந்த வாரம் ஆயிரக்கணக்கான ஜவுளித் தொழிலாளர்கள் முர்சிக்கு எதிராக தொழில்துறை நகரான மைல்லா அல்-குப்ராவில் அணிவகுத்துச் சென்றனர். புதன் அன்று வேலைநிறுத்தம் செய்த டாக்டர்கள், முர்சியின் அரசியலமைப்பை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.