World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Rape of Delhi woman sparks protests in India

டெல்லிப் பெண் மீதான பலாத்காரம் இந்தியாவில் எதிர்ப்புக்களைத் தூண்டுகிறது

By Deepal Jayasekera
28 December 2012

Back to screen version

இம்மாதம் முன்னதாக ஓர் இளம் பெண்ணை ஒரு கும்பல் பலாத்காரப்படுத்தியது இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் பிரச்சினையாகியுள்ளதுடன், எதிர்ப்புக்களையும் தூண்டியுள்ளது. இது பொலிஸ் ஒடுக்குமுறைகளையும்  அரசாங்கத்தின் அதிகாரங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் தூண்டியுள்ளது.

டிசம்பர் 16 அன்று ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் பெரும் துன்பங்களை சந்தித்ததால் ஏற்பட்ட ஆழ்ந்த  உட்காயங்களால் இன்னமும் மருத்துவ மனையில் உள்ள 23 வயது உடலியல் மருத்துவ மாணவி, கடந்த வெள்ளியன்று மருத்துவமனைப் படுக்கையில் இருந்து பொலிஸுக்குத் தன் அனுபவத்தைக் கூறினார்.

அவரும், அவருடன் இருந்த 28வயது மென்பொருள் பொறியியலாளரான நண்பரும் ஒரு பொதுப் பயணிகள் பஸ் என நினைத்ததில் ஏறினர் என்று அவர் கூறினார். வழக்கமான பாதையில இருந்து பஸ் வேறுபாதையில் செல்வதையும், கதவுகள் மூடப்பட்டும் உள்ளதைக் கண்டபோது, அவருடைய நண்பர் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் தாக்கப்பட்டு இப்பெண் மிருகத்தனமாக பலாத்காரப்படுத்தப்பட்டார். அவர்கள் இருவரும் பின்னர் மயக்கமடைந்துவிட்டனர். கிட்டத்தட்ட 30 நிமிடப் பயணத்திற்குப் பின் அவர்கள் பஸ்ஸில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டனர்.

இக்குற்றம் பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடன், டெல்லி நகர மையப்பகுதியிலும் டெல்லியில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் இந்தியா முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்கத்தாவில் மௌன ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்; பெங்களூரில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள்மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்ப்பாளர்கள் டெல்லி பொலிஸ், ஆளும் காங்கிரஸ் கட்சியின் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீக்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சித் தலைமைக்கு வாரிசு எனக் கருதப்படும் அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராகக் கோஷமிட்டனர். எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் பொலிசார் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியவர்கள் எனக் கருதப்படும் ஆறு பேரையும் கைது செய்தனர். பொலிஸ் காவலில் வைக்கப்படுமுன் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது குற்றம் இழைத்ததை ஒப்புக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த எதிர்ப்புக்கள் பாதிக்கப்பட்ட பெண்மணி கொடூரமான நிகழ்வு குறிந்த உணர்ந்த பரந்த பயங்கரத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. இது இந்தியாவின் தற்போதுள்ள  வெடிப்புத் தன்மை உடைய சமூகப்பின்னணி குறித்த    ஆய்வில் இருந்து இந்த வழக்கு பிரிக்கப்பட்டு, முற்றிலும்சட்டம் மற்றும் ஒழுங்குஎன்ற பிரச்சினையாக முன்வைக்கப்படுகையில், வலதுசாரிச் சக்திகள் அவற்றைப் பயன்படுத்தி பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் அடக்குமுறை அதிகாரங்கள் இன்னும் வலுப்படுத்துவதைத்தான் முயல்கின்றன.

வலதுசாரி அரசியல் மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட சில புள்ளிகளான யோகா ஆசிரியர் ராம்தேவ், இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைவர் விஜய குமார் சிங்க உட்பட, பலாத்காரம் குறித்த எதிர்ப்புக்களில் கலந்து கொண்டு பொலிசுடன் மோதினர். ஹிந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியுடன் (BJP) அவர்கள் வழக்கில் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும், இன்னும் கடுமையான கண்காணிப்புமுறை வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசாங்கத்திற்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்னும் அழைப்பு சாதாரண இந்தியர்களின் உரிமைகளைக் பாதுகாப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, இது சமூக எதிர்ப்பிற்கு எதிராக இயக்கப்படும் ஒரு அடக்கு முறைக் கருவிக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கொடுக்க உந்துதல் கொடுக்கும்.

அத்தகைய அழைப்பின் பிற்போக்குத்தனத் தன்மை ஆர்ப்பாட்டம் செய்தோர் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறையில் இருந்தே தெளிவாகியுள்ளது. அரசாங்கம் எத்தகைய சமூக அதிருப்தியின் சமிக்கையையும் பொலிஸ் நடவடிக்கை மூலம்தான் பதிலளிக்கின்றது.

கடந்த சனிக்கிழமை பொலிஸ் அரசுச் செயலகக் கட்டிடம் மற்றும் ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களை நீர்பாய்ச்சுதல், கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு, மற்றும் மூங்கில் தடியடி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாக்கியது. ஆர்ப்பாட்டம் செய்தோர் பொலிசாருடன் அதே தினத்தில் இந்தியா கேட் நினைவுச் சின்னத்திற்கு அருகே மோதினர்.

மறுநாள், இன்னும் அதிக மக்கள் எதிர்ப்பு ஊர்வலங்களில் சேருவதைத் தடுக்கும் முயற்சியில், பொலிசார் அருகே இருந்த மெட்ரோ இரயில் நிலையங்களை மூடி பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டு, பாதைகள்  தடுக்கப்பட்டன. இரவில் முகாமிட்டிருந்த எதிர்ப்பாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாள் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இவற்றில் 35 எதிர்ப்பாளர்கள் 37 பொலிஸார் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. முந்தைய இரவு முகாமிட்டிருந்த டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் முதலில் கொலைமுயற்சிக் குற்றவிசாரணையில் பதிவு செய்யப்பட்டனர். மோதலில் ஒரு பொலிஸ் காயமுற்றது இதற்குக் காரணம் காட்டப்பட்டது. அப்பொலிஸ் செவ்வாயன்று காயங்களின் விளைவாக இறந்தபின், பொலிசார் எட்டு காவலில் இருப்பவர்கள் மீது கொலைக்குற்றம் கொண்டுவர இருப்பதாக அறிவித்தனர்.

காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட இந்திய அரசியல் ஆளும்வர்க்கம் எதிர்கொண்டவிதம் மகளிருக்கு எதிராக இழைக்கப்படும் வாடிக்கையான வன்முறையை இந்தியாவில் உள்ள பரந்த சமூக நெருக்கடியில் இருந்து பிரிக்கும் முயற்சியாகும். இந்நெருக்கடிக்கு  ஆளும் வர்க்கம் முழுவதுமே பொறுப்பு ஆகும்.

இந்தியாவில் மக்கட்தொகையில் 70% மேலானவர்கள் நாள் ஒன்றிற்கு $2 டாலருக்கும் குறைவான தொகையில் வசிக்கின்றனர். இந்த வறுமை நிலை சோவியத்யூனியனின் உடைவிற்குப் பின் வந்த இரு தசாப்தங்களுக்கும் மேலான தடையற்ற  சந்தைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் தீவிரமடைந்தது. கிராமப்புறப் பிற்போக்குத்தனத்துடன் பெரும் சுரண்டலைக் கொண்டுள்ள முதலாளித்துவம் இரண்டும் இணைந்துள்ள நிலை ஒரு மிகச் சிறிய, பெரும் செல்வக்கொழிப்பு உடைய உயரடுக்கு தான் கிட்டத்தட்ட சமூக வாழ்வில் எதையும் செய்யலாம் என்ற நிலையில் உள்ள தன்மையுடனான ஒரு சமூகத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த அடுக்கிற்கும் பொது அதிகாரிகளுக்கும் இடையே உள்ள ஊழல் மிகுந்த உறவுகள் குறித்து பரந்த சீற்றம் உள்ளது.

இந்தியாவில் சாதாரண உழைப்பாளிகள், தொழிலாளர் வர்க்கம் ஆகியவற்றின் மீது ஆளும் வர்க்கம் கொண்டுள்ள இகழ்வுணர்வு மிகத் தெளிவாகச் சமீபத்தில் டெல்லி முதல் மந்திரி தீக்ஷித் கூறிய கருத்துக்களில் வெளிப்பட்டுள்ளது. அவர் ஐந்து பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு மாதம் உணவு, உறைவிடம், உடைகள் ஆகியவற்றிற்குப் 600 இந்திய ரூபாய்கள்($US11)  போதுமானது என்று கூறினார்.

பாரதிய ஜனதாக் கட்சி போன்ற பிற்போக்குச் சக்திகள் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேஏண்டும் என்று கோரும் வகையில் இப்பிரச்சினைகள் ஒருபுறம் ஒதுக்கப்படுகின்றன. பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற மக்கள் பிரிவின் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ், பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கு மகளிருக்கு எதிரான மிக இழிந்த குற்றங்களுக்கு கொலைத்தண்டனை வழங்குதல், மற்றும் புதியசட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் பரிசீலிக்க சிறப்புப் பாராளுமன்றக் கூட்டம் தேவை என்று கோரியுள்ளார். இதைப் பரிசீலிப்பதாக சிங் கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

பெருகும் எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இப்பிரச்சினை குறித்துப் பல நாட்கள் மௌனம் சாதித்த பின், இப்பொழுது டிசம்பர் 16 நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்னும்உத்தரவாதங்களை அளிக்கின்றனர். ஞாயிறு காலை சோனியா காந்தியும் உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களும் சோனியா காந்தியில் இல்லத்தில் எதிர்ப்பாளர்கள் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தனர். “அமைதி காக்கப்பட வேண்டும், அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதிலும் உறுதியாக உள்ளது என்று நாங்கள் அவர்களிடம் கூறினார்என்று சிங் தெரிவித்தார்.

தெருக்களில் ஆர்ப்பாட்டக்கார்களைத் தாக்குகையில், அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் என்ற சூழ்ச்சியின் மறைப்பில் எதிர்ப்புக்களை கலைத்துவிடுவதற்கான அழைப்புகளை விடுகின்றது. திங்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிங், “அனைத்துக் குடிமக்களும் அமைதி, சமாதானத்தைக் காக்க வேண்டும்என்று முறையீட்டார். “இந்நாட்டில் உள்ள அனைத்து மகளிருக்கும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடுவோம் என்று உறுதிளிக்கிறேன். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுடைய ஒத்துழைப்பையும் இம்முயற்சிக்கும் அமைதி காக்கவும் எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

ஞாயிறன்று காங்கிரஸ் அரசாங்கம்விரைவுத்தட விசாரணைகளைபாலியல் குற்றங்களுக்கு நிறுத்துவும், பொலிஸ் படைகளை விரிவுபடுத்தவும், சாதாரண உடையில் அதிகாரிகள் சுற்றிவருவதை அதிகரிக்கவும், பொலிஸ் ரோந்துகளை அதிகப்படுத்தவும், CCTV கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பயன்பாடு அதிகமாக்கப்படும் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், குற்றங்களைக் களைய என்ற பெயரில் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளை இன்னும் அடக்கத்தான் பயன்படுத்தப்படும்.

சட்ட வல்லுனர்கள் பலாத்கார வழக்குகளுக்காகச் சிறப்பு நீதிமன்றங்கள் தேவை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். அத்தகைய நீதிமன்றங்கள் ஆபத்தான முன்னோடிகளை ஏற்படுத்தும்; இவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய உரிமைகள் ஒரு நியாமான விசாரணைக்கு என்பது விரைவான நீதி என்ற பெயரில் மிதித்து நசுக்கப்படும். கடுமையானபயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் நிறுவப்படும் சிறப்பு நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை அடக்குவதில் இழி பெயர் கொண்டவை ஆகும்.

இந்தியப் பொலிஸார் சந்தேகத்திற்கு உரியவர்களை நடத்துதல்  பற்றி இழிபேர் பெற்றவர்களாவர். அரசியல் வழக்குகள், அற்பக் குற்றங்கள் ஆகியவற்றிலும் பொய்யான ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்குச் சித்திரவதையையும் பயன்படுத்துகிறது. இந்திய நீதிமன்றங்களும் ஊழலுக்கும் சலுகை பெற்ற, சக்தி வாய்ந்த, முக்கிய வணிகர்கள், முக்கிய அரசியல்வாதிகள் ஆகியோரைத் தண்டிக்காமல் விடுவதில் நன்கு பெயர் பெற்றவை.