World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

African National Congress anoints the butchers of Marikana    

மாரிக்கானா கொலைகாரர்களுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் முடிசூட்டுகின்றது

Chris Marsden
24 December 2012

Back to screen version

கடந்த வாரம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) 53வது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஜாகோப் ஜுமாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளின் 75% த்தினருடைய வாக்குகளை அவர் பெற்றார். அவருடைய நண்பர்கள் அனைத்து உயர்மட்ட 5 கட்சிப் பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், தேசிய நிர்வாகக் குழுவின் 80 இடங்களில் பெரும்பாலானவற்றையும் அவர்கள் கைப்பற்றினர். தேசியச் சுரங்கத் தொழிலாளர்களின் முன்னாள் தலைவரும் இப்பொழுது ராண்ட் பில்லியனருமான சிரில் ராமபோசா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாரிக்கானாவில்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த34  தொழிலாளர்கள் படுகொலை மற்றும் ஏராளமானவர்கள் காயமுற்ற  நிகழ்விற்கு நான்கு மாதங்களின்  பின்னர்  இம்மாநாடு வந்துள்ளது.  அப்படுகொலைகள் தென்னாபிரிக்க பிளாட்டினம், தங்கம், வைரம் மற்றும் நிலக்கரித் துறைகளில் வேலைநிறுத்த அலை ஒன்றை தூண்டியது. இந்த வேலைநிறுத்தங்கள் NUM, COSATU தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களுக்கு எதிரான ஒரு அரசியல் மற்றும் அமைப்புரீதியான எழுச்சியையும் வெளிப்படுத்தின. அத்துடன் இது கொடூரமான சமத்துவமற்ற நிலை, சுரண்டுதல் ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸின் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியையும் கொண்டிருந்தது.

ஜுமாவும்  ராமபோசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் படுகொலைக்கும் , அதேபோல் அதைத்தொடர்ந்த சுரங்கத் தொழிலாளர்களின் மீதான தாக்குதலுக்குக்கும் ஒப்புதல் கொடுத்தற்கு  ஒப்பானதாகும்.  இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்,  தாக்கப்பட்டனர்,  ஏராளமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன்,  அதன் பின் போலியாக தயாரிக்கப்பட்ட கொலைக்குற்றச் சாட்டுக்களும் வெளிவந்தன. உலகப் பெருநிறுவனங்கள் மற்றும் தென்னாபிரிக்க வணிகத்தின் கோரிக்கைகளுக்கு எத்தகைய சமூக, அரசியல் எதிர்ப்பு வந்தாலும் அவை அடக்கப்பட தேவையானவை செய்யப்படும் என்னும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உறுதிமொழிதான் இது.

லோன்மின் நிறுவனத்தில் இயக்குனர்கள் குழுவில் ராமபோசா உள்ளார். இவர் லோமினின் கறுப்பு பொருளாதார மேம்பாட்டு கூட்டினரான  Incwala Resources இனை கட்டுப்படுத்தும் மாரிக்கானாவில் 9%பங்குகளைக் கொண்டுள்ளதுடன், ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட  18மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது பைகளில் போட்டுக் கொள்ளுகிறார். இவர்தான்அப்பட்டமான இழிந்த குற்றச்செயல்கள்என்று அவர் விளக்கம் கொடுத்த போராட்டங்களுக்கு எதிரானஉறுதியான நடவடிக்கைள்தேவை என்று லோன்மின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.  Business Day  ஒரு தலையங்கத்தில் ராமபோசாவின்கட்சி அரசியலில் மீண்டும் நுழைதல் என்பது சித்தாந்தரீதியான கற்பனையுலகில் வாழ்பவர்களுக்கு மாறாக உண்மை உலகில் பேச்சுக்களை நடத்தி அதைச் சமாளிப்பவர்களுக்கு ஒரு வெற்றி ஆகும்என்று கூறியுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உத்தியோகப்பூர்வக் கொள்கையானமூலோபாயத் தேசியமயத்திற்கு”  ஒரு பங்களிப்பு என்பதை ஜுமா நேரடியாக அகற்றுவதையும் இம்மாநாடு கண்டது. இச்சூத்திரம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் பிரிவிற்குள் இருக்கும் ஜுமாவின் எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களுக்கு விடையிறுக்கும் வகையில் ஏற்கப்பட்டு இருந்தது. இளைஞர் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தலைவர் ஜூலியஸ் மலேமா ஆபிரிக்க தேசிய காங்கிரஸினுள் தனது பிரிவினரின் நிலையை உயர்த்திக்கொள்வதற்காக சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுடைய ஆதரவை பெற தேசியமயமாக்கல் கோரிக்கையைப் பயன்படுத்தினார்.

சுரங்கப் பெருநிறுவனங்களுக்கு மறுநம்பிக்கையை கொடுக்கும் வகையில், தேசியமயமாக்கல்  குறித்த வழமையான கருத்துக்களுக்குப் பதிலாகமூலோபாய அரசாங்க சொத்துடைமைஎன்னும் தெளிவற்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது தனியார் நிறுவனங்களில் தேவைக்கு ஏற்பசமநிலைக்கான சான்றுகள்”  உறுதிப்படுத்துப்படும் பட்சத்தில் உகந்த வகையில் பங்குகள் வாங்கப்படுவதால் அவற்றிற்கு பாதுகாப்பளிக்கப்படும். ராமபோசா தெரிவித்த கருத்தாவது: “தெளிவு பற்றிய பற்றாக்குறை இருந்தால் மக்கள் இப்பொழுது ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் அதன் கொள்கைகளைப் பொருத்தவரை எந்த நிலைப்பட்டை கொண்டுள்ளது என்று இப்பொழுது தெரிந்துகொள்ள வேண்டும்.” தன் பங்கிற்கு சுரங்கத் தொழில் முதலாளிகள் கூட்டமைப்பு, “முழுத் தேசியமயமாக்கல் என்பது ஒரு நியாயமான அல்லது செயல்படுத்தக்கூடிய விருப்புரிமை இல்லை என்னும்  ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தீர்மானத்தைவரவேற்றுள்ளது.

COSATU தொழிற்சங்கக் கூட்டமைப்பு நீண்டகாலமாக வெறுமனே ஆதரவளித்திருந்த (தேசியமயமாக்கலுக்கு) கொள்கை கைவிடப்பட்டதற்குத் ஆதரவை தெரிவித்துள்ளது. புதிய ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ்  தலைமைக்கும் அரசாங்கத்திற்கும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ், COASATU  மற்றும் தென்னாபிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு  இடையே உள்ள கூட்டிற்கும் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

 “இந்தக் கூட்டு பாதுகாப்பானதுஎன்று COSATU வின் பொதுச் செயலாளர் சுவிலிங்கஸீமா வாவி தன்னுடைய  ஆண்டு இறுதி உரையில் கூறினார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அமைப்புரீதியான அறிக்கையில் உள்ள “COSATU அவ்வப்பொழுது ஜனநாயக அரசாங்கத்தை நிறப்பாகுபாடு காட்டிய ஆட்சியைப்போன்றே அல்லது அதைவிட மோசமானதாகவும் காண்கிறது என்ற குறிப்பிட்டது என்ற கருத்தை அவர்கடுமையாகநிராகரித்தார். “COSATU  ஒருபொழுதும் அத்தகைய கருத்தைக் கூறியதில்லை, கூறவும் கூறாது என்றார் அவர்.

மாரிக்கானாவிற்குப் பின் தொழிற்சங்கங்கள் ஒரு இடது முகத்தைக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர் பிரிவில்  5 விகிதம்தான் தொழிற்சங்கமயப்படுத்தப்பட்ட மேற்கு கேப்  மாநிலத்தில் பண்ணைத் தொழிலாளர்கள் நடத்தும் கடுமையான, போர்க்குணமிக்க  திடீர் வேலைநிறுத்தங்களுக்கு அவை பெயரளவு ஆதரவுகொடுக்கின்றன.  ஆனால் இது விரைவில் ஒரு வெளிப்படையான பாசாங்கான முயற்சி எனத் தெரியவந்துள்ளது. COSATU தொழிலாளர்களிடைய இருக்கும் அதிருப்தியைத் திசைதிருப்ப, அடக்குவதற்குத்தான் தலையிட்டு, டிசம்பர் மாதத்தில் எந்தக் கோரிக்கைகளும் ஏற்கப்படாமலே  தொழிலாளர்கள் பணிக்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டனர்.

COSATUவின் ஆண்டு இறுதி அறிக்கை இப்பொழுது கூறுவது: “நாம்தென்னாபிரிக்காவில் உள்ள வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை என்பவற்றிற்கு  எதிராக வெற்றிபெறவில்லை என்றால் இந்த ஆண்டு அலைகளெனத் தன்னியல்பான வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாட்டிற்கான அதன் தீவிர விளைவுகள் குறித்து தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.  மில்லியன் கணக்கான வறிய, ஒதுக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்து  வறுமை, வேலையின்மை, சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிராகவும் பொருளாதார மாற்றத்திற்காகவும் தங்கள் சொந்த போர்க்கணமிக்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.”

இது ஆளும் உயரடுக்கிற்கு அதன் ஆட்சிக்கு எதிரான ஒரு சமூகப் புரட்சி பற்றிய அச்சுறுத்தல் தொழிலாளர்களின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மீதும் தொழிற்சங்கங்கள்மீதும் கொண்டுள்ள வெறுப்புணர்வின் நேரடி விளைவினால் வளர்கிறது என்ற எச்சரிக்கையாகும்.

1994ல் நிறப்பாகுபாட்டிற்கு முடிவைப் பேச்சுவார்த்தைகள்  மூலம் அடைந்ததில் இருந்து தென்னாபிரிக்காவை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆட்சி செலுத்திவருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் பரந்துபட்ட புரட்சிகர எதிர்ப்பின் விளைவாக அது அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் அது தன்னுடைய சலுகை பெற்ற அந்தஸ்த்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், ஏகாதிபத்தியச் சக்திகள் மற்றும் உலகப் பெருநிறுவனங்களின் ஆதரவு உண்டு. அதற்குக் காரணம் இதன் உறுதிப்பாடான முதலாளித்துவச் சொத்து உடமைகள் பாதுகாக்கப்படும் என்பதுதான். இந்த வழிவகையில் ஒரு சிறிய கறுப்பின வணிகர்கள் அரசாங்கம் அனுமதிக்கும்ஒப்பந்தம்கோரும் முறையால் முன்னுக்கு வருபவர்கள்ஆகியோர் செல்வக்கொழிப்பு அடையும் வழிவகை உள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பங்கினை புதிய பணக்காரக் பிரிவுகளான 675 மில்லியன் டாரல் மதிப்புடையவர் என்று கருதப்படும் ராமபோசா போன்றோரின் நிலைமையை தொழிலாளர் வர்க்கம் மற்றும் வறிய விவசாயிகளுடைய நிலைமையை நேரெதிரே வைத்து காண்கையில் அளவிடப்படலாம். முதலாளித்துவத்தின் உண்மை ஆட்சியை மறைக்கும் அமைப்புமுறையான 18 ஆண்டுக்கால “கறுப்பின்  பெரும்பான்மை ஆட்சிக்கு” பின் வருமானம் ஈட்டுபவர்களில் உயர்மட்ட 10 சதவிகிதத்தினர் இன்னமும் மக்களின் கீழ்மட்டத்தில் இருக்கும் 10 விகித்தத்தினரைப் போல் 101 மடங்கு அதிகம் ஈட்டுகின்றனர். வெள்ளையினத் தென்னாபிரிக்க மக்கள்  கறுப்பினத்தவரைவிட  வீட்டிற்கு 6 மடங்கு அதிக வருமானத்தை எடுத்துச் செல்லுகின்றனர். வேலையின்மை உத்தியோகப்பூர்வமாக 25விகிதமாக உள்ளது.  நாட்டின் இளைஞர்களில் மூன்றில் இருவர் வறிய வீடுகளில், மாதம் ஒன்றிற்கு 650 ராண்டிற்கும் குறைவான ($75) தொகையில் வசிக்கின்றனர்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முதலாளித்துவச் சார்புடைய கொள்கைகள் சில நேரம்புரட்சிமற்றும்சோசலிசம்என்ற சொற்களைக் கூறினாலம் கூட தென்னாபிரிக்காவில் அரசியல் நிலைமை மற்றும் வரலாறு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ள வெகுஜனங்களின் அடிப்படைய ஜனநாயக, சமூகத் தேவைகள் தேசிய முதலாளித்துவ ஆட்சியின்கீழ் நிறைவேற்றப்பட முடியாது என்பதைத்தான் நிரூபிக்கின்றன. .

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தொழிற்சங்கங்களில் உள்ள அதன் கூட்டுக்கள், மீண்டும் தொழிலாளர் வர்க்கத்தின் கடுமையான விரோதிகள் என்பதைத்தான் காட்டியுள்ளன. அவை அழுத்தம் கொடுத்து இடதுநோக்கி மாற்றப்படவும் முடியாதவை, சீர்திருத்தப்படுத்தப்படவும் முடியாதவை. இவை தூக்கிவீசப்பட வேண்டும்.

 தொழிலாளர் வர்க்கம் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டமைக்க வேண்டும்.  அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டு  மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள் மூலோபாய சுரங்கத் தொழில்கள் ஆகியவற்றின் சொத்துக்களை எடுத்துக் கொண்டு தங்கள் சொந்த அரசாங்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இப்போராட்டம் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியில் அபிவிருத்திசெய்யப்பட்டுள்ள சர்வதேச சோசலிச மூலோபாயத்தை அடித்தளமாக கொண்டிருப்பதுடன்  நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தென்னாபிரிக்கப் பிரிவின் தலைமை தாங்கப்பட வேண்டும்.