சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

SPD leader calls for a strong German state

சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒரு வலிமையான ஜேர்மன் அரசாங்கம் தேவை என அழைப்பு விடுகிறார்

By Ulrich Rippert
14 December 2012
use this version to print | Send feedback

கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவின் ஒருமித்த முடிவைத் தொடர்ந்து,  சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD)  சிறப்பு மாநாடு கடந்த வார இறுதியில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் மத்திய தேர்தலில் முக்கிய வேட்பாளராக பீர் ஸ்ரைன்புரூக்கிற்கு 93% வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் 2005க்கும் 2009க்கும் இடையே ஜேர்மனியை ஆட்சி செய்த பழைமைவாத - சமூக ஜனநாயகக் கட்சியின்  பெரும் கூட்டணியில் முன்னாள் நிதி மந்திராக இருக்கையில் பாரியச் சமூகநலச் செலவுக் குறைப்புக்களை அறிமுகப்படுத்தினார். சமூக ஜனநாயகக் கட்சியினுள்  தீவிரவலது பிரிவில் இருக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஆளும் வர்க்கத்திற்கு கட்சி கொடுக்கும் தெளிவான அடையாளம் ஆகும்.

இவ்வகையில் சமூக ஜனநாயகக் கட்சி வணிகச் சங்கங்கள் மற்றும் பழைமைவாத செய்தி ஊடக வட்டங்களில் இருந்து அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு பிரதிபலித்துள்ளது. அவை அங்கேலா மேர்க்கெல் தலைமையில் உள்ள  தற்பொழுதைய கிறிஸ்தவ ஜனநாய ஒன்றியம்(CDU)  மற்றும் தடையற்றச் சந்தைச் சார்பு உடைய தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP)  ஆகியவற்றின்தயக்கத் தன்மை, ஒத்திப்போடும் தன்மையைக் குற்றம் சாட்டியுள்ளன. (Handelsblatt, Welt, FAZ). ஏராளமான வர்ணனைகள்மேர்க்கலின் வழமைஎன்று அனைத்து முக்கியக் கொள்கை முடிவுகளையும் கடைசிக் கணம் வரை ஒத்திபோட்டுவிட்டு பின்னர் நிகழ்வுகளின் அழுத்தத்தின்கீழ் அவசரக்கால நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மாற்றீடுகள் என்று முன்வைப்பது குறித்தும் குறைகூறியுள்ளன. தன்னுடைய ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் ஒருதொடர் உள்முரண்பாடுகளுக்கு மேர்க்கெல் இவ்வகையில்தான் விடையிறுப்பைக் கொடுத்துள்ளார்.

அரசாங்கம் அதிகரித்தளவில்  அதன் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கையில் ஒரு தேக்கத் தன்மையை முகங்கொடுக்கிறது என்று வணிகப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.  யூரோ நெருக்கடியை சுற்றியுள்ள நாடுகளுக்கு)  கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல்( மாற்றிவிட்டு,  ஒப்புமையில் அதன் வலுவான பொருளாதாரத்தினால்  ஐரோப்பாவை நெருக்கடியில் இருந்து மீட்க ஜேர்மனி தலைமை தாங்க முடியும் என்னும் கருத்து தவறு என நிரூபணம் ஆகிவிட்டது. ஐரோப்பிய மற்றும் உலக மந்தநிலை ஜேர்மனியின் ஏற்றுமதித் தொழிலுக்குப் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன்,  சுற்றியுள்ள நாடுகளில் மட்டும் இல்லாமல் ஐரோப்பாவின் இதயத்தானத்திலேயே, குறிப்பாக ஜேர்மனியிலும் இன்னும் கடுமையான சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் அதற்கு தேவைப்படுகின்றன.

GM-Opel ஆலை போஹும் நகரில் மூடப்பட்டுள்ளமை மத்திய  குடியரசின்  வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு முழுக் கார்த்தயாரிப்பு ஆலையே மூடப்படும் நிகழ்வு ஆகும்.  Daimler, ThyssenKrupp, Lufthansa  இன்னும் பிற பெரிய நிறுவனங்கள் பாரிய செலவுக் குறைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளதுடன், ஜேர்மனியப் பெரு வணிகம் தொழிலாளர் வர்க்கத்தின்மீது கடுமையான ஒரு புதிய சுற்று தாக்குதல்களுக்குத் தயாரிப்பை நடத்துகிறது.

இதுதான் சமூக ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் கட்சியின் முக்கிய வேட்பாளராகப் பீர் ஸ்ரைன்புரூக்கைத் தேர்ந்தெடுத்துள்ள முடிவின் பின்னணி ஆகும். சமூக ஜனநாயகக் கட்சி தற்பொழுதையே மேர்க்கெல் தலைமையிலான கூட்டணியையும் விட இன்னும் தொடர்ச்சியாக பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசாங்கத்தை நிறுவ தன் சேவையை வழங்குகின்றது.

மாநாட்டில் பிரதிநிதிகளுக்கு ஸ்ரைன்புரூக் ஓர் இரண்டு மணி நேர உரை நிகழ்த்தினார். பெருவணிகம் மற்றும் வங்கிகளின் உற்ற நண்பராக இருந்த தன்னுடைய சுவடுகளை மறைக்கும் முயற்சியில் உரையைத் தொடங்கினார். ஏராளமான செய்தி ஊடகங்கள் அவர் வங்கி மற்றும் பெருநிறுவனப் பிரதிநிதிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில்  80க்கும்  மேற்பட்ட உரைகளைக் நிகழ்த்தி அதிலிருந்து  மில்லியன் கணக்கான சொற்பொழிவுக் கட்டணத்தையும் தனது பைக்குள் போட்டுக் கொண்டார் என்று வெள்ளமெனக் கொடுத்துள்ள தகவல்களை தொடர்ந்து  அவருடைய முயற்சி வந்துள்ளது.  எவ்வாறாயினும் சமூக ஜனநாயகக் கட்சி மாநாட்டில் அவர் நிதிய மற்றும் வங்கித்துறை நெருக்கடி என்பது பெரும்பாலான மக்கள்முதலாளித்துவத்தின் மிதவாத  வடிவமைப்பிலும்,  ஒரு சமூகச் சந்தைப் பொருளாதாரத்திலும்  நம்பிக்கையை இழக்கின்றனர் என்ற பொருளைத் தரும் என்றார்.

 “இலாபங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன, இழப்புக்கள் சமூகமயமாக்கப்படுகின்றன, வங்கிகள் அறியாமையினால் தவறுகளாலும் ஆபத்தான செயல்பாடுகளினாலும் உருவானவற்றிற்கு  வரிசெலுத்துபவர்களே இறுதி  பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும்  என்று ஸ்ரைன்புரூக் தொடர்ந்து கூறினார்.

 “இது நிறுத்தப்பட வேண்டும்என்று ஸ்ரைன்புரூக் உரக்கக் கூவியபோது பிரதிநிதிகள் பெரும் ஆர்வத்துடன் கைதட்டினர். ஆனால் முன்னாள் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக்கூட்டணி, சான்ஸ்லர் ஜெகார்ட் ஷ்ரோடர்(SPD)   தலைமையில்தான் நிதியச் சந்தைகள் மீது இருந்த பல கட்டுப்பாடுகளை அகற்றியது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அந்தநேரத்தில் ஸ்ரைன்புரூக் நிதியத் துறைக்கு மிக அதிக தாராளமயத்தன்மை கொடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தவர்களில்  முன்னணியில் இருந்தார்.

சமூகச் சீர்திருத்தம் குறித்த வாயடிப்பான உறுதிமொழிகள் நிறைய அவருடைய உரையில் இருப்பதற்கு ஸ்ரைன்புரூக்கின் உரை எழுதுபவர்கள் பெரும் முயற்சியை எடுத்திருந்தனர்.  பல இடங்களிலும் அவர் பயன்படுத்திய வார்த்தைபிரயோகங்கள் ஒஸ்கார் லாபொன்டைன், சாரா வாக்ன்கிநெக்ட் போன்ற இடது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பயன்படுத்தும் வனப்புரையைத்தான் நினைவுபடுத்தியது.

 “சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பொருளாதார  கணக்கீடுகளையும் அடிபணியச் செய்யும் ... ஒரு சந்தைச் சமூகத்திற்குஎதிராக ஸ்ரைன்புரூக் எச்சரித்தார். தன்னலம், இலாபங்கள் மிகஅதிகரிக்கப்படல்இவற்றிற்கு எதிராக அவர்அறெநெறிகள், நன்மதிப்புகளின் பெறுமதிகளை  முன்வைத்து புகழ்ந்தார்.

 “சந்தையின் முதன்மைக்கு மேலாகஅரசியலின் முதன்மைநிறுவப்படும் தேவை குறித்து மற்ற கருத்துக்கள் குறிப்பிட்டன. சந்தை வாழ்க்கையிலும் மற்றும் பணிகளிலும் ஜனநாயக வழிவகையில்  தன்னை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும், எதிரான வகையில்  அல்ல என்றார் அவர்.  மீண்டும் ஜேர்மனிக்குகூடுதலான நாம் என்னும் உணர்வும்குறைவான நான் என்ற சுயநலம் தேவை என்றார் அவர். முன்னாள் ஜேர்மனிய சான்ஸ்லர் லுட்விக் எர்ஹார்ட் இன் இறுதியில் நுகர்வோருக்கு நலன்கள் கொடுத்தால்தான்...பொருளாதாரக் கொள்கை சமூகத் தன்மை உடையதுஎன்ற புகழ்பெற்ற மேற்கோளையும் அவர் சேர்த்துக் கொண்டார். ஜேர்மனியின் அரசியலமைப்பில் சொத்துடைமையை கொண்டிருப்பது என்பது பொறுப்புக்களையும் கொண்டுள்ளதுஎன அறிவித்திருப்பது குறித்து அவர் மேற்கோளிட்டார்.

சமூக ஜனநாயக கட்சி வேட்பாளர் பல நேரமும் மிகச்சிறந்த தகுதிகளைக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை இளைஞர்கள் ஒரு தொழில்பயிற்சியில் இருந்து மற்றொரு தொழிற்பயிற்சிக்கு பாய்வது மற்றும் அவர்களுக்கு உண்மையான வேலைவாய்ப்புக்கள் இல்லை என்றும் தங்கள் சொந்த இரு கால்களில் நிற்கமுடியாத நிலையை தனக்கு சாதகமாக பாவித்துக்கொண்டார்.

மேர்க்கெல் அரசாங்கம் அதன் சமீபத்திய வறுமை பற்றிய அறிக்கையில் உண்மைகளை மறைப்பதாகவும் ஸ்ரைன்புரூக் குற்றம் சாட்டினார்.  ஆனால் இத்கைய வறுமையைப் பரவுவதில் பெரும்அதிகரிப்பில் பங்கு பெற்றிருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் கொள்கைகுறித்து அவர் ஏதும் கூறவில்லை.

முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கம் (1998-2005) இயற்றியிருந்த ஹார்ட்ஸ் சட்டங்கள் (Hartz laws) ஜேர்மனியில் ஒரு பரந்த குறைவூதியத் துறையைத் தோற்றுவித்தன. முன்னாள் மேர்க்கெல் அரசாங்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நிதிமந்திரி என்னும் முறையில் ஸ்ரைன்புரூக் சொந்த முறையில் கடன் தடை என்பதை அறிமுகப்படுத்தினார். இது ஒவ்வொரு மாநிலஅரசாங்கமும் கடுமையான சிக்கனப் போக்கைப் பின்பற்ற வலியுறுத்தியது. இவருடைய கட்சிச் சக ஊழியர் பிரன்ஸ் முன்டபெயரிங்தான் புதிய ஓய்வூதிய வயது 67 என்பதை அறிமுகப்படுத்தியபோதும், தன்னுடைய உரையில் குறைகூறப்படும் முதியோரின் வறுமை பற்றியும் ஸ்ரைன்புரூக் முக்கிய கவனத்தை கொடுத்தார்.

ஒரு சிலமேலெழுந்தவாரியான  மாற்றங்களைத் தவிர ஸ்ரைன்புரூக் ஒரு சான்ஸ்லராக இந்நடவடிக்கைகளில் எதையும் மாற்றமாட்டார்.  சமூகப்பிளவு குறித்த அவருடைய எச்சரிக்கைகள் நாட்டின் செல்வம் நிறைந்த உயர்மட்ட வகுப்புக்களுக்கு கூறப்பட்டதே  ஒழிய வறியவர்கள், வேலையற்றவர்கள், பயிற்சியிலுள்ளவர்களுக்கு தொடர்பற்றதாகும்.

சமூகத்தில் பெரும் பிளவு அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது வசதியான அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இது பொருந்தும்என்று அவர் கூறியபோது இது தெளிவாயிற்று.தங்களின் உண்மை நிலையில் வசதியாக அமர்ந்துள்ள செல்வம்மிக்க உயர்மட்டபிரிவுகள் பெருகும் சமூகப்பிளவு குறித்துச் சிறிதும் பொருட்படுத்ததேவையில்லை.

இதன்பின் அவர் தன் முக்கியத் திட்டமான சமூக நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளுவது என்பதைப் பற்றிக் கூறினார். எனவே நமக்கு வலுவான அரசாங்கம் தேவைப்படுகிறது”. இந்த அறிக்கையில் அவர் பலமுறை இதுபற்றிக்கூறி, சமூகநல சேவைகள் அகற்றப்படுகையில் சமூக நல்லிணக்கம் மறைந்துவிடும் என்றும் எச்சரித்தார். எனவேதான் மற்ற வகைகளிலும் அரசாங்கம் வலுப்படுத்தப்படுவது தேவை என்றார் அவர்.

ஸ்ரைன்புரூக்கின் நோக்கத்தில்  நப்பாசைகள் வைக்கக்கூடாது. அவர் ஒன்றும் 1950, 1960களில் இருந்த  பொதுநல அரசாங்க வகைக்குத் திரும்ப வேண்டும் என்று குறிப்பிடவில்லை.  மாறாக, அவருடைய உரை அவர் தலைமையில் ஒரு வருங்கால அரசாங்கம் ஜெகார்ட் ஷ்ரோடரின் செயற்பட்டியல் கொள்கையில் பொதிந்திருக்கும் சமூகத் தாக்குதல்களைத் தொடரும் என்றும் அவர் ஜனநாயக உரிமைகளைக் குறைத்து, சர்வாதிகார அமைப்புக்களுக்கு ஊக்கம் கொடுப்பார் என்றுதான் தெளிவான அடையாளத்தைக் காட்டியது.

The call for a strong state is also aimed at the Greens, which Steinbrück expressly declared to be the favoured partner of the SPD in a future coalition government. The Greens are the German party with the largest percentage of German state officials and functionaries in its ranks.

வலுவான அரசாங்கத்திற்கான அழைப்பு என்பது பசுமைவாதிகளையும் இலக்கு கொண்டுள்ளது. எதிர்காலக் கூட்டணி அரசாங்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் உகந்தபங்காளி என்று ஸ்ரைன்புரூக் அக்கட்சியை வெளிப்படையாக அறிவித்தார்.  பசுமைவாதிகள் மிக அதிக ஜேர்மனிய அரசாங்க அதிகாரிகள், செயலர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஜேர்மனியக் கட்சி என்றார் அவர்.

ஸ்ரைன்புரூக்கின் திட்டம்  அவருடைய அழைப்பின் மூலம் உறுதியாயிற்று. “நான் ஒரு ஜேர்மனிய சமூக ஜனநாயகவாதி என்பதில் பெருமைப்படுகிறேன்!.” இப்பிரிவில் அவருக்கு முன்னோடி அரசாங்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அகஸ்ட் பேபல் அல்ல; 1969ல் ஜேர்மனிய முதலாளித்துவ முறைக்குள் எழுச்சி பெற்ற இளைஞர்களை ஒருங்கிணைப்பதறகு கல்விச்சீர்திருத்தங்கள் மற்றும் சட்டப்பூர்வத் தடைகளைப் பயன்படுத்தியிருந்த வில்லி பிராண்டும் அல்ல. ஸ்ரைன்புரூக்கின் விருப்பமான அரசியல் போதகர் ஒட்டோ வெல்ஸ் ஆவார்.

ஒட்டோ வெல்ஸ்  1912இல் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமைக்குத் தொழிற்சங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆரம்பத்தில் இருந்தே அவர் கட்சியின் வலதுசாரிப் பிரிவில் இருந்தவர். முதல் உலகப் போருக்கு அவர் ஆதரவு கொடுத்து 1918ல் நவம்பர் புரட்சி வெடித்தபோது பேர்லினில் நகரக் கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்தார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெல்ஸ்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த ஸ்பார்டசிஸ்ட்டுகள் மீது துருப்புக்கள் துப்பாக்சிச்சூடு நடத்த உத்தரவிட்டார். இதன் விளைவாக 16 பேர் இறந்து போயினர்.

ஓராண்டிற்குப் பின் வெல்ஸ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு 1933 வரை ஹிட்லர் மற்றும் அவருடைய நாஜிக்குண்டர்களுக்கு எதிரான எத்தகையத் தீவிர போராட்டமும் நடத்தாமல் சீர்குலைப்பதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார். ஓட்டோ வெல்ஸின் தலைமையில்தான் சமூக ஜனநாயகக் கட்சி நாஜிக்களை தடுப்பதற்கு முதலாளித்துவ அராசங்கத்தை நம்பியிருந்தது. 1932 ஜனாதிபதித் தேர்தலில் அவர் சில மாதங்களுக்குப் பின் ஹிட்லரைச் சான்ஸ்லராக நியமித்த பௌல் வொன் ஹின்டென்பேர்க்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்புவிட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சியின்  தலைவர் என்னும் முறையில் அதன் பின் வெல்ஸ் மார்ச் 1933 பாராளுமன்றத்தில் நாஜிகளுக்கு அதிகாரத்தை கொடுக்க உதவிய சட்டத்தை எதிர்த்து ஓர் உரை நிகழ்த்தினார். அச்செயலுக்கு ஸ்ரைன்புரூக்எத்தகைய அரசியல் மரபியம்!” என்று புகழாரும் கொடுத்துள்ளார். உண்மையில் ஆளும் வர்க்கத்திற்குப் பல ஆண்டுகள் விசுவாசமாக பணி புரிந்தபின், வெல்ஸ் தன்னுடைய சொந்தக்கட்சிக்கு மரணதண்டனை கொடுப்பதில் மட்டுமே கையெழுத்திட மறுத்தார்.

இதுதான் ஸ்ரைன்புரூக் பெரும் மதிப்பிற்கு உட்படுத்தியுள்ள சமூக ஜனநாயக கட்சியின்  மரபாகும்.