சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germanys Left Party and the closure of GM-Opels Bochum plant

ஜேர்மனியின் இடது கட்சியும் ஜி.எம். ஓப்பல் போஹும் ஆலை மூடலும்

By Dietmar Henning
19 December 2012
use this version to print | Send feedback

போஹுமில் உள்ள ஓப்பல் ஆலை மூடப்படுவது 1949க்குப் பிறகு ஜேர்மனியில் அத்தகைய கார்த்தயாரிப்பு ஆலை முதல் தடவையாக மூடப்படுவது ஆகும். டிசம்பர் 10 நடந்த ஆலைக் கூட்டத்தில் ஓப்பல் நிர்வாகம் ஆலையில் உற்பத்தி அதிகப்பட்சம் 2016 அளவில் நிறுத்தப்படும் என்று அறிவித்தது.

தொழிலாளர்கள் பெரிதும் சீற்றமும் கசப்புணர்வையும் அடைந்ததுடன், கூட்டத்தில் பல குழப்பங்களும் ஏற்பட்டன. மறுநாள் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல மணி நேரம் வேலைநிறுத்தம் செய்திருந்தனர்.

டிசம்பர் 15ம் திகதி, சனிக்கிழமையன்று இதன் பின் நிர்வாகம் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டிருந்த போஹும் ஆலை நிறுவிய 50 ஆண்டு நிறைவு விழாவை, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோளிட்டு இரத்து செய்தது. எதிர்ப்புக்களும் பிற நடவடிக்கைகளும் ஆலை மூடலுக்கு எதிராக இருக்கும் என்று அவர்கள் தெளிவாக எதிர்பார்த்தனர். ஆலை மூடல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்து திறந்த நாள்நிகழ்வில் முதலில் திட்டமிட்ட 15,000 பேர் என்பதற்குப் பதிலாகக் கிட்டத்தட்ட 40,000 பேர் விழாவில் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

இச்சூழ்நிலையில் தொழிலாளர்களின் எதிர்ப்பை முட்டுச்சந்திக்கு திருப்பவும் தொழிற்சாலை தொழிலாளர்குழு மற்றும் IG Metall தொழிற்சங்கத்திற்கு ஆதரவளிக்கவும் இடது கட்சி நடவடிக்கையில் இறங்கியது. இவை இரண்டுமே பல ஆண்டுகளாக ஓப்பலில் வேலைகளைத் தகர்க்கவும் எதிர்ப்பு எதையும் நெரிக்கவும் நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக உதவுவதில் முக்கியப் பங்கைக் கொண்டவையாகும்.

கடந்த வியாழன் அன்று பாராளுமன்றம் இடது கட்சிப் பிரதிநிதி செவிம் டாக்டேலனின் வேண்டுகோளுக்கு இணங்க போஹும் ஆலை மூடல் பற்றி விவாதித்தது.

போஹுமில் இருந்து வரும் டாக்டேலென் கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பின்வருமாறு தெரிவித்தார்: “ஓப்பல் தொழிலாளர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தாலும், GM நிர்வாகத்தின் நச்சுத்தனமான கொள்கைகளாலும் இரண்டு முனைகளில் இருந்து தாக்கப்படுகின்றனர்.” ஓப்பல் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உடைய ஐரோப்பிய வெட்டுக்கள் ஆணைகளுடைய முதல் பலியாகியுள்ளது என்றும், குறிப்பாகக் கண்டத்தின் தென்பகுதியில் சான்ஸ்லர் கார்ச் சந்தைகள் சரிவிற்கு பங்களிப்பு செய்துள்ளார் என்று டாக்டேலென் தொடர்ந்து கூறினார்.

ஆனால் டாக்டேலென் இதே மேர்க்கெலுக்கு போஹும் தொழிலாளர்களைக்கைவிடாதீர்கள்என்று அழைப்பு விடுத்தார். கூட்டாட்சி அரசாங்கம்ஊழியர்கள், நிர்வாகத்துடன் சேர்ந்து ஆலை மூடலுக்கு மாற்றீடுகளுக்கு ஆராய வேண்டும்என்று கோரிய அவர், சான்ஸ்லர் அவர்களே, ஓப்பலை உங்கள் உயர்மட்ட முன்னுரிமையாக்குங்கள்என்றார்.

 “ஓப்பல் தொழிலாளர்களுக்கு 2016க்கு அப்பாலும் வேலை உத்தரவாதம் உறுதிப்படுத்த GM நிர்வாகத்திற்கு மேர்க்கெல் அழுத்தம் கொடுக்க வேண்டும்என்று இவர் கோரினார். CDU கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்(CDU)கிறிஸ்தவ சமூக ஒன்றியம்(CSU), தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP), சமூகஜனநாயகக் கட்சி(SPD), பசுமைக் கட்சி ஆகியவற்றை பாரிய பணிநீக்கங்களை தடைசெய்ய இடதுகட்சி நாடும் ஆரம்பமுயற்சியில் சேருமாறும் டாக்டேலென் அழைப்பு விடுத்தார்.

இதைவிடப் பயனற்ற, திவால்தன்மை மிகுந்த முன்னோக்கை கற்பனையும் செய்யப்பட முடியாதது.

இடது கட்சிக் கருத்துக்கள்படி விடயங்கள் நகர்ந்தால், போஹும் ஓப்பல் தொழிலாளர்கள் ஜேர்மனி முழுவதும், ஐரோப்பா மற்றும்அமெரிக்காவில் இருக்கும் தங்கள் சக ஊழியர்களுடன் ஒன்று சேர்ந்து ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள், சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் இவற்றை எதிர்த்துப் போராடக்கூடாது. மாறாக அவர்கள் பணிவுடன் பேர்லினில் இருக்கும் அதிகாரங்களுக்கு மனுக்கொடுத்து, ஐரோப்பா முழுவதும் செயல்படுத்தப்படும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மேர்க்கெல் மீது தங்கள் நம்பிக்கைகளை வைக்கவேண்டும் என்பதாகும்.

உள்ளூர் செய்தித்தாளான WAZ இற்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில், மேர்க்கெல் ஓப்பல் விவகாரத்தில் தான் தலையிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். 2008ல் GM  உடைய நெருக்கடி அனைத்து ஓப்பல் ஆலைகளையும் மூடும் அச்சுறுத்தலைக் கொடுத்தபோது, கூட்டாட்சி அரசு செயல்பட்டதற்கு மாறாக, இப்பொழுது அது தலையிடாது என்று மேர்க்கெல் கூறினார்.

 “இப்பொழுது பல கார்த்தயாரிப்பு ஆலைகளில் ஒன்றில் உற்பத்தி மூடப்படுகிறது என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி அது போஹுமிற்கும் அங்குள்ள மக்களுக்கும் ஓர் அடிதான். ஆனால் இதற்கு அதன் உரிமையாளரே பொறுப்பான ஒரு வணிக விவகாரம்என்று சான்ஸ்லர் வலியுறுத்தினார்.

பாரிய பணிநீக்கங்கள்மீது தடைவேண்டும் எனக் கோரப்படுவது ஒரு ஏமாற்று நடவடிக்கைதான். ஆலை தனியார் உடைமையாக இருக்கும் வரை, உலகச் சந்தையின் போட்டித்தன்மையை நம்பியிருக்கும் வரை, அத்தகைய தடை செயல்படுத்தப்பட முடியாதது ஆகும். பங்குதாரர்கள் தங்கள் மூலதனத்தை பாதிக்கப்படும் ஆலைகளில் இருந்து எடுத்துக் கொண்டுவிடுவர், நிறுவனம் திவால் தன்மைக்குத் தள்ளப்படும்.

இடது கட்சி வேலைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை திட்டவட்டமாக உதறித்தள்ளுகிறது. வேலைகளை பாதுகாப்பதற்கு பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை கைப்பற்றி எடுத்துக்கொண்டு மற்றும் உற்பத்தியைச் சமூகம் முழுவதற்குமான நலன்களுக்காக மறுகட்டமைக்க வேண்டும்.

இடது கட்சிக்கும் போஹும் தொழிற்சாலை தொழிலாளர்குழுத்தலைவர் ரைனர் ஐனென்கலுக்கும் இடையே உள்ள நெருக்கமான கூட்டு இவ்கையில் காணப்பட முடியும்.

பல ஆண்டுகள் ஐனென்கல் போஹும் ஆலை படிப்படியாக மூடப்படுவதற்கு உதவ முக்கியப் பங்கைக் கொண்டுள்ளார். ஐனென்கலும் IG Metall  தொழிற்சங்கமும் ஒவ்வொரு கட்டத்திலும் வேலைகள் அழிப்பு, ஊதியங்கள் குறிப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு விட்டுக்கொடுப்பும் போஹுமில் உற்பத்தியைக் பாதுகாப்பதற்குஅடிப்படை என்று கூறிவந்தனர். உண்மையில் தொழிற்சாலை தொழிலாளர்குழு ஆதரவு கொடுத்த ஒவ்வொரு விட்டுக்கொடுத்தலும் ஆலை மூடலை ஒரு அடி அருகில்தான் கொண்டுவந்தது.

இப்பொழுது தொழிலாளர் பிரிவின் அதிருப்தி நிர்வாகத்திற்கு எதிராக திசையில் மட்டுமின்றி, அதிகரித்தளவில் IG Metall மற்றும் ஐனென்கலுக்கு எதிராகவும் உள்ளது. இடது கட்சி இவ்இரண்டிற்குமே ஆதரவைக் கொடுக்க முயல்கிறது.

டிசம்பர் 3ம் திகதி இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் கிரிகோர் கீசி, ஐனென்கல் மற்றும் போஹும் தொழிற்சாலை தொழிலாளர்குழுவைச் சந்தித்த குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது. அந்த நேரத்தில் ஓப்பல் போஹுமில் இருக்கும் வேகமாற்றி கருவிகள் செய்யும் பிரிவை மூட இருப்பதாக அறிவித்ததுடன், 300 வேலைகளை இழக்கப்பட்டன. அப்போது போஹும் ஆலை மூடப்படுவது என்பது உத்தியோகப்பூர்வமாக முழுமையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய சாத்தியம் பற்றி பேச்சுக்கள் இருந்தன. இதுபற்றி ஐனென்கலிற்கு சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்திருக்கவும் வேண்டும்.

ஒற்றுமை உணர்வு குறித்து ஒரு சில பொதுக்கருத்துக்களைத் தவிர, கீசியுடனான சந்திப்பு புதிதாக எதையும் ஏற்படுத்திவிடவில்லை. அதன் நோக்கம் போராடும் ஐனென்கலுக்கு ஒருஇடதுமூடுதிரையை  பிரத்தியேகமாக வழங்குவதுதான்.

ஐனென்கலும் இடது கட்சியும் ஒரு பொதுவான நீண்ட வரலாற்றை கொண்டவர்களாகும். 1988 வரை ஐனென்கல்DKP எனப்படும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆவார். இது அப்பொழுது கிழக்கு ஜேர்மனியை ஆண்ட சோசலிச ஐக்கிய கட்சியில்(SED) இருந்து தோன்றியது. 1990ல் பேர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் கிழக்கு ஜேர்மனி முடிந்தபின், அவர் SED யின் பின்தோன்றல் அமைப்புக்களான PDS  எனப்பட்ட ஜனநாயக இடது கட்சி பின்னர் இடது கட்சி (Left Party) என்பவற்றுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார். ஒருமுறை அவர் இடது கட்சித் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைனை போஹுமிற்கு அழைத்திருந்தார்.

இப்பொழுது இடது கட்சி, தொழிற்சாலை தொழிலாளர்குழு மற்றும் IGMetall  தொழிற்சங்கம் ஆகியவை நெருக்கமாக உழைத்து ஆலை மூடல் பற்றிய எதிர்ப்பைக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவும் ஆலையை சுலபமாக மூடவும் செயல்படுகின்றன. ஆண்டு நினைவுவிழா இரத்து செய்யப்பட்டது குறித்த அவற்றின் பிரதிபலிப்பு இவ்வகையில் எதிர்பார்த்தது போல்தான் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை இரத்துச்செய்யப்பட்டது உரிய நேரத்தில்தான் வந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

IG Metall  தனது தனிக்கூட்டத்தைக் கூட்டி இருக்கலாம் என்றாலும், அது தொழிலாளர்களை வீட்டில் இருக்குமாறும் ஆலைக்கு வரவேண்டாம் என்றும் கூறிவிட்டது. ஓப்பலுக்கு விநியோகிக்கும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றான Johnson Controls உடைய தொழிற்சாலை தொழிலாளர் குழு தங்கள் சொந்த கூட்டத்திற்கு விடுத்த அழைப்பு IG Metall  இன் காதுகளில் விழவில்லை.

மாறாக, ஓப்பலில் இருக்கும் தொழிற்சங்கமும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிலாளர் பிரிவினரையும் அதன் குடும்பங்களையும் சமாதானப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுத் ஆரம்பத்தில்ஒரு மகத்தான விழா நடக்கும், பிராந்திய மக்கள் அனைவரும், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இன்னும் பல புகழ்பெற்றவர்கள்அதற்கு வருவர் என்று கூறின. அப்போது ஆரம்பகால சீற்றங்கள் அடங்கிவிடும் என நம்புகின்றன.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்;

வாகன உற்பத்தித் துறை தொழில்களை பாதுகாக்கும் பொருட்டு ஐரோப்பிய அளவிலான ஒரு போராட்டத்திற்காக