சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

New Japanese government marks dangerous turn to militarism

புதிய ஜப்பானிய அரசாங்கம் இராணுவவாதத்தை நோக்கி ஆபத்தான முறையில் திரும்புவதை குறிக்கிறது.

Peter Symonds
19 December 2012
use this version to print | Send feedback

கடந்த ஞாயிறு தேர்தலில் ஜப்பானின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP), மீண்டும் பதவிக்கு வந்துள்ளது ஜப்பானியர்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச அரசியலிலும் கடலெனப் பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தைச் சூழ்ந்திருந்த தேசியவாதம், இராணுவ வாதம் ஆகியவை ஜப்பானிய ஆளும் வர்க்கம் அதன் நலன்களை ஆசியா மற்றும் உலகெங்கிலும் இராணுவ சக்தி உட்பட அனைத்து வழிவகைகளிலும் மீண்டும் உறுதிப்படுத்தத் தயார் என்பதை சமிக்ஞையிடுகிறது.

அடுத்த வாரம் பிரதமராக இருத்தப்பட உள்ள LDP தலைவர் ஷின்சோ அபே (Shinzo Abe), ஏற்கனவே ஜப்பானில் சென்காகு, சீனாவில் டயோயு என்று அறியப்படும் தீவுக் கூட்டங்கள் குறித்த பெய்ஜிங்குடனான நிலப்பூசல்களில் கடின நிலைப்பாட்டை விடையிறுப்பாக அடையாளம் காட்டியுள்ளார். ஜப்பானின் தேசிய தொலைக் காட்சி அமைப்பு NHK இடம் பேசுகையில், அபே சென்காகுத் தீவுகள் “ஜப்பானின் இயல்பான நிலப்குதி” என்று அறிவித்து, “நம்முடைய இலக்கு சீனாவிடம் இருந்து வந்துள்ள சவாலை நிறுத்துவதாகும்” என்றும் எச்சரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது LDP ஒருவரும் வசிக்காத தீவுகளில் நிரந்தரக் கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்று வாதிட்டது – இது சீனாவுடனான உறவுகளை வியத்தகு அளவில் மோசமாக்கியிருக்கும் நடவடிக்கையாகும். கிழக்கு சீனக் கடலில் தற்போதைய ஜப்பானிய ஜனநாயகக் கட்சியின் (DPJ) அரசாங்கம் செப்டம்பர் மாதம் தீவுகளை “தேசியமயமாக்கிய அளவில்” ஏற்கனவே அழுத்தம் நிறைந்த நிலைமை நிலவுகிறது. கடந்த வாரம் ஜப்பானிஇராணுவத்தின் போர் ஜெட்டுக்கள் மூலம், ஒரு சீனக் கடற்படைக் கண்காணிப்பு விமானம் தீவுகளைச் சுற்றியுள்ள வான்பகுதியில் நுழைந்ததைத் தடுக்க முற்பட்டது.

ஜப்பான் மற்றும் சீனாவில் இருக்கும் அரசாங்கங்கள், உலகப் பொருளாதார நெருக்கடி அதிகரித்து தங்கள் பொருளாதாரங்களை பாதித்துள்ள நிலையில், தேசியவாதத்தைத் தூண்டியுள்ளன; இந்த பாதிப்பு, சரிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைத் தரங்களை ஒட்டி பரந்த அதிருப்தி மற்றும் சீற்றத்திற்கு எரியூட்டியுள்ளது. சென்காகுத் தீவுகள் “தேசியமயமாக்கப்பட்டதற்கு” விடையிறுக்கும் வகையில் பெய்ஜிங் வெளிப்படையாகவே இனவெறித்தன்மை உடைய ஜப்பானிய-எதிர்ப்பு ஆர்ப்பாட்ங்களுக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது.

ஜப்பானியப் பொருளாதாரம் இப்பொழுது 15 ஆண்டுகளில் 5வது முறையாக மந்தநிலைக்குச் சரிந்துள்ளது. ஜப்பானிய ஏற்றுமதிகள் அதிக மதிப்புடைய யென் மற்றும் சுருங்கும் அமெரிக்கா, ஐரோப்பா, சீனச் சந்தைகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பொருளாதாரத் தேக்கத்திற்குப்பின், ஆளும் வட்டங்களில் நாட்டின் நீடித்த சரிவு குறித்து ஆழ்ந்த திகைப்பு உள்ளது; கடந்த ஆண்டு உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரம் என்னும் நிலையை ஜப்பானில் இருந்து சீனா அடைந்தவுடன் இது முழு உருவகம் பெற்றது.

புதிய அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில், ஜப்பானின் போட்டி நாடுகள், மற்றும் ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் மாற்ற உறுதி கொண்டுள்ளது. ஒரு ஆக்கிரோஷமான நிதியக் கொள்கையை அபே அறிவித்துள்ளார்; இது அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கையை ஒத்துள்ளது—பணவீக்கத்தை தூண்டும் யென்னின் மதிப்பைக் குறைக்கும்; இந்த நடவடிக்கைகள் சர்வதேச நாணயப் போர்கள் வெளிப்படுவதைத்தான் அதிகப்படுத்தும். LDP விற்பனை வரி தீவிரமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அதையொட்டி ஜப்பானின் பாரிய பொதுக்கடன் தொழிலாளர்கள் தலையில் சுமத்தப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறது.

“புதிய LDP” என்று அவரால் அழைக்கப்படுவதின் ஆக்கிரோஷ நிகழ்ச்சி நிரலை அபே உருவகப்படுத்துகிறார். அவர் LDP ஸ்தாபனத்தின் வாரிசாவார். வருடைய தாய்வழிப் பாட்டனார் நொபுஷுகே கிஷி சிறையில் அடைக்கப்பட்டார்; ஆனால் அமெரிக்காவால் போருக்குப் பிந்தைய ஆக்கிரமிப்பை ஒட்டிப் போர்க்குற்றங்கள் அவர் மீது சுமத்தப்படவில்லை. அவர் பின்னர் பிரதம மந்திரியாகி, நாட்டின் அரசியலமைப்பில் உள்ள சமாதான விதி என்பது அகற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். தன் பாட்டனாரைப் போலவே, அபேயும் ஜப்பானிய இராணுவத்தை “இயல்பாக ஆக்கவும்” வலுப்படுத்தவும் அரசியலமைப்பு மாற்றத்தை விரும்புகிறார்; அது அவரால் கூறப்படும் நாட்டின் “சுயசித்தரவதை வரலாற்றுக்கு” முடிவு கட்டும் என்றகிறார்; அதாவது ஜப்பானின் போர்க்காலக் குற்றங்கள் குறித்த ஒப்புதலைக் குறிப்பிடுகையில்.

தற்போதைய நிலைமை ஒரு அச்சமூட்டும் வகையில் 1930 களை ஒத்திருக்கிறது. உலக வணிகச் சரிவினால் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ள ஜப்பான் ஆழ்ந்த பொருளாதார, அரசியில் நெருக்கிடியிலும் மூழ்கியிருந்தது. டோக்கியோவில் பெரும் திகைப்பில் இருந்த இராணுவ ஆட்சி, ஜப்பானின் பொருளாதாரத் தீமையை சந்தைகளுக்கான போர்கள், மூலப்பொருட்களுக்கான போர்கள் மூலம் தீர்க்க முற்பட்டது; இதையொட்டி 1931ம் ஆண்டு அது மஞ்சூரியா மீது படையெடுத்தது. முழுச்சீனா மீதும் 1937ல் படையெடுத்தது. சீனா மீதான இராணுவ ஆக்கிரமிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அழுத்தங்களை அதிகப்படுத்தியது; அமெரிக்காவோ தன் சொந்த கொள்ளைமுறை நலன்களை சீனாவில் தொடர்ந்து தன் நிலைமைக்கு ஆதாரவான “திறந்த கதவுகள்” தேவை எனக் கோரியது. இத்தகைய போட்டியிட்ட நலன்கள்தான் 1941 பசிபிக் போருக்கு வழிவகுத்தன.

ஜப்பானிய இராணுவ வாதம், தொழிலாள வர்க்கத்தை உள்நாட்டில் இரக்கமற்ற முறையில் அடக்கியது மற்றும் சீனாவில் அதன் ஆக்கிரமிப்பை வலியுறுத்த மிக மிருகத்தன வழிவகளைக் கையாண்டது ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்றது; பின்னர் இத்தகைய ஆக்கிரமிப்பு தென்கிழக்கு ஆசியா மற்றும் கொரியா, பார்மோசா (தைவான்) என்று இருந்த காலனித்துவ ஆட்சிப் பகுதிகள் மீதும் படர்ந்தது. கடந்த வாரம் இழிந்த நான்ஜிங் படுகொலையின் 75வது ஆண்டு தினம் குறிக்கப்பட்டது; அதில் ஜப்பானின் ஆக்கிரமிப்புப் படைகள் நூறாயிரக்கணக்கான சீனக் குடிமக்களையும் சிப்பாய்களையும் படுகொலை செய்தன. ஜப்பானிய ஆளும் வட்டங்களில் நிறைந்திருக்கும் உளப்பாங்கு இந்த ஆண்டு முன்னதாக முன்னாள் டோக்கியோ ஆளுனர் ஷின்டரோ இஷிகராவால் வெளிப்படையாகக் கூறப்பட்டது; அவர் இப்பொழுது ஜப்பானின் மீட்புக் கட்சி என்னும் வலதுசாரி அமைப்பிற்கு தலைவர் ஆவார். நான்ஜிங் பாரியபடுகொலை நடக்கவே இல்லை என்று அவர் அப்பட்டமாக மறுத்துள்ளார்.

1945ல் பசிபிக் போரை அமெரிக்கா ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுக்குண்டுகளைப் போட்டபின் உலகம் வியத்தகு அளவில் மாறிவிட்டது. ஆசியாவில் போருக்குப் பிந்தையை தன் மேலாதிக்கத்தை அமெரிக்கா, ஜனாதிபதி ஒபாமாவினால் ஆசிய பசிபிக்கில் முன்னிலை என்று அழைத்திருக்கும் கொள்கை மூலம் தக்க வைக்க முற்பட்டுள்ளது. சீனச் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆக்கிரோஷப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒபாமா ஜப்பானை அதன் இராணுவத்தை வலுப்படுத்த ஊக்கமளித்துள்ளார்; மற்றும் சீனாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டையும் எடுக்கச் சொல்லுகிறார்—இக்கொள்கை அபேயின் கீழ் இன்னும் விரைவுபடுத்தப்படத்தான் செய்யும்.

பெரும் தொலைநோக்கான மாற்றங்கள் உலகில் சீனாவின் நிலையில் ஏற்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949 புரட்சியின் பொருளாதார மற்றும் சமூக நலன்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, முதலாளித்துவ சொத்து உறவுகளை மீட்டு, சீனாவை உலகின் மிகப் பெரிய குறைவூதியத் தொழிலாளர் அரங்காக மாற்றிவிட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வளர்க்கும் தேசியவாதம், முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தன் ஆட்சியைத் தளமாகக் கொள்ளும் என்பது, அதன் விழைவுகள் இப்பொழுது அமெரிக்கா மேலாதிக்கம் கொண்டுள்ள ஏகாதிபத்திய ஒழுங்கினால் தடைக்கு உட்பட்டுள்ளன என்பதால் பெருந்திகைப்பில் உள்ளது. ஜப்பானின் போர்க் கொடுமைகளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19, 20ம் நூற்றாண்டுகளில் பிரதான சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட சீனாவின் “தேசிய அவமானத்தை” முடிக்க வேண்டும் என்னும் உந்துதலால் நியாயப்படுத்த முற்படுவதோடு தன்னுடை சொந்த செல்வாக்கு மண்டலங்களை நிறுவவும் முயல்கிறது.

ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம், பசிபிக் போருக்கு பாதையிட்ட தவறான வழிகளை மீண்டும் திறக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை ஏற்படுத்தும் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்கிறது. மீண்டும் போட்டியிடும் முதலாளித்துவ வர்க்கங்கள் ஒரு புதிய, மேலும் பேரழிவைத் தரும் மோதலை நோக்கிப் பொறுப்பற்ற முறையில் ஆழ்ந்து நகர்கின்றன.

இத்தகைய போர் உந்துதலைத் தடுக்கும் ஒரே வழி, முதலாளித்துவத்துக்கும் மற்றும் காலத்திற்கு ஒவ்வாத வகையில் உலகை தேசிய அரசுகளாக பிரித்துள்தற்கும் முற்றுப்புள்ளி வைப்பதுதான். சீனா, ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் தேசியவாதம், இராணுவ வாதம் என்னும் நச்சுக்களை நிராகரித்து, இலாப நோக்கு அமைப்பு முறையை அகற்றுவதற்கான தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி, பகுத்தறிவார்ந்த, திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவ போராடவேண்டும். அதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே நடத்தும் போராட்டவேலைத்திட்டமாகும்.