World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Horror in Newtown

நியூடௌனில் பயங்கரம்

The editorial board
17 December 2012

Back to screen version

கனக்டிக்கட்டில் ஒரு சிறுநகரான நியூடௌனில் ஒரு பள்ளியில் நடந்த பயங்கரப படுகொலை நாடு முழுவதையும் துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது. 6 வயதில் இருந்து 7வயது வரையிலான 20 குழந்தைகள் உட்பட 28 பேர் இறந்து கிடந்தனர். இவர்கள் பலமுறை சுடப்பட்டிருந்தனர். வெள்ளியன்று நடைபெற்ற துப்பாக்கிக் கோரச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியான ஆடம் லான்சா தன்னை தானே சுட்டுக்கொல்ல முன்னர் ஆறு பெரியவர்களும் கொல்லப்பட்டனர். முன்னதாக அன்று காலை அவர் தன் தாயாரைச் சுட்டுக் கொன்றான்.

மனிதாபிமானமற்ற இந்தக் குற்றம் ஆழ்ந்த குழப்பத்தை தருகிறது. கொலை செய்தவனின் தனிப்பட்ட உந்துதல்களுக்கும் அப்பால், நியூடௌனில் நடைபெற்ற துப்பாக்கிச் சம்பவம் அமெரிக்க சமூகத்தைச் சூழ்ந்துள்ள ஒரு மிருகத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக்காட்டுகின்றது.

ஒரு தொடர் நீண்ட நிகழ்வுகளில் வெள்ளிக்கிழமை நடந்த வெகுஜனக் கொலைகள் சமீபத்தது ஆகும். அமெரிக்கா வரலாற்றுரீதியாக மீண்டும் மீண்டும் வன்முறை வெடிப்புக்களைக் கண்டுள்ளது. ஆயினும்கூட, கடந்த இரு தசப்தங்கள் அமெரிக்கத்தரப்படிக்கூட அசாதாரணமானவை. ஏராளமான பேர் அடிக்கடி கொலை செய்யப்படுவது அடித்தளத்தில் உள்ள காரணத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் கீழ்க்கண்டவை உள்ளன; 1995ம் ஆண்ட ஓக்லஹோமா நகரக் குண்டுத் தாக்குதல் (19 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்); 1999இல் கொலோரடோ கொலம்பைன் படுகொலை (14 பேர் இறந்தனர்); வேர்ஜீனிய தொழில்நுட்பக் கல்லூரிப் படுகொலை 2007(34 பேர் மரணம்). இந்த ஆண்டு மட்டும் கொலோரடோவில் ஒரு திரையரங்கான அரோராவில் படுகொலை (12 பேர் இறப்பு, 58 பேர் காயம்); விஸ்கான்சினில் ஓக் கிரீக்கில் சீக்கியர் கோயில் ஒன்றில் தக்குதல் (6 பேர்  இறப்பு); மினசோட்டா மின்னியாபொலிஸ் சைகை வணிகப் பகுதிப் படுகொலை (6 பேர் மரணம்); ப்ரூக்பீல்டில் மருந்துவநீரூற்று ஒன்றில் (spa)  படுகொலை (3 பேர் மரணம்); மற்றும் ஆறு நாட்களுக்கு முன்னால் ஓரேகான் போர்டலாந்தில் ஒரு விற்பனை அங்காடித்தொடர் படுகொலை (3பேர் மரணம்).

அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஆளும்தட்டு சமீபத்திய துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்ட விதம் நன்கு அறியப்பட்ட பாதையைத்தான் காட்டுகிறது. “தீமையின்புரிந்துகொள்ள முடியாத, பொருளற்ற தன்மை குறித்து வெற்று அறிக்கைகள் வந்துள்ளன. ஏதேனும் பரந்த பிரதிபலிப்பு வந்துள்ளது என்றால், அது துப்பாக்கிக் கட்டுப்பாடு மீது ஒருதேசிய உரையாடல் தேவைஎன்பது பற்றி கவனத்தைக்காட்டுகிறது. மற்றும் புத்திசுவாதீனமான நிலை  பற்றி அதிகம் கவனமெடுக்கப்படும் என்னும் வெற்று உறுதிமொழிகள் (இருக்கும் சுகாதார திட்டங்களை எலும்பளவிற்குக் குறைக்க, இயன்றதை செய்யும் அரசியல் வாதிகள் கூறுவது) என்பதும் உள்ளது.

அமெரிக ஆளும் வர்க்கம் சுய-ஆய்வுத் திறனை இழந்துவிட்டது. இதற்கும் பிற பெரும் துன்பங்கள் பற்றியவற்றிற்கும் எத்தகைய தீவிர பகுப்பாய்வும் தன்னையும் தான் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தையும்தான் சுட்டிக்காட்டும் என்பதை அது அறியும்.

ஞாயிறு இரவு நியூடௌனில் நினைவுப் பிரார்த்தனையின்போத ஜனாதிபதி ஒபாமாவின் உரை வாடிக்கையாக இருந்தது. அதில் இருப்புச் சொற்கள் இணைக்கப்பட்டன, நல்ல நடிப்பு மற்றும் த்தை இழுத்தல் ஆகியவை இருந்தன. அவரால் அறிவார்ந்து ஏதும் கூறுவதற்கு இல்லையாதலின், பேசாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இச்சடங்கு ஒரு பிற்போக்குத்தன நிகழ்வாகும். இதில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வருத்தப்படக்கூடாது, இதயத்தை இழந்துவிடக்கூடாது, ஏனெனில் அவர்களுடைய குழந்தைகள் சுவர்க்கத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டனர்.

இறைவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவிட்டான்என்று தன்னுடைய இறுதி உரையில ஒபாமா அறிவித்தார். இத்தகைய அறிக்கைகள் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களின் உணர்வைப் பொருட்படுத்தவில்லை என்பதோடு, அமெரிக்க மக்களின் அறிவிற்கும் ஓர் அவமதிப்பு ஆகும். அத்தகைய பெரும் சோகத்தை அனுபவிப்பவர்கள் ஆறுதலின் ஆதாரத்திற்காக த்தினை நோக்கி திரும்புவது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அரசங்கத்தின் கையில் இத்தகைய நிகழ்வுகளின் சமூக, அரசியல் வேர்களை மூடிமறைக்கும்  தெளிவற்ற செயல்தான் இது.

அரசியல் வாதிகள் த்தை இழுத்தல் என்பதை வலியுறுத்தினால், லிங்கன் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதைத் தங்களிடமே கேட்டுக் கொள்வது நலம்தான் வழிநடத்திய புரட்சிகரப் ரில் ஏற்பட்ட படுகொலைகளை விவரிக்கையில், 16வது ஜனாதிபதிசவுக்கடியால் கீழே விழுந்த ஒவ்வொரு இரத்தத் துளியும், கத்தியால் கொட்டப்படும் மற்றொரு இரத்தத்துளி மூலம் விடையிறுக்கும்”, பின்னர் இறைவனின் தீர்ப்புக்கள் முற்றிலும் சரியானவையே.” என்றார்.

இந்த உலகின் பெரும் துன்பங்கள் (உள்நாட்டுப்போர்) உலகக் குற்றங்களின் விளைவுகள்தான் என்று லிங்கன் வலியுறுத்தினார்.

நியூடௌன் படுகொலைகள் போன்றவை எவற்றிலிருந்து கணப்பீடு செய்யலாம்? புரிய இயலாது என்பதில் இருந்து முற்றிலும் அப்பால், இக்குற்றம் முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியதுதான். இதன வேர்களைப் பற்றுவது கடினம் அல்ல. முன்னோடியில்லத வகையில் சமத்துவமற்ற ஒரு சமூகம், ஒரு அளவு முன்னேற்றத்தன்மை கூட இல்லாத முற்றிலும் பிற்போக்குத்தன உத்தியோகபூர்வ சிந்தனைப்போக்கு, மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் நடத்தும் நம்பமுடியாத அளவிற்கு உள்ள வன்முறை, சமூகம் முழுவதும் இணைந்து மிருகத்தனமாக நடத்தப்படுவது ஆகியவை உள்ளன.

இத்தொடர்பிற்கு வெகுஜனப் படுகொலைகளின் தன்மை சாட்சியாக உள்ளது. வாடிக்கையாக பின்வரும் சில கூறுபாடுகள் தோன்றுகின்றன: இராணுவ வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படுதல், தாக்குபவர்கள் (லான்சா போல்) போர்க்கள உடைகளில் வருதல், முன்னாள் இராணுவ வீரர்கள் தொடர்பு பலமுறையும் இருத்தல்.

கடந்த இரு தசாப்தங்கள் முடிவிலாப் போர் ஆண்டுகளாக உள்ளன. 1992ல் பிறந்த 20 வயது லான்சா தன் வாழ்வின் பெரும்பகுதியைபயங்கரவாதத்தின் மீதான போரில்கழித்துள்ளான். ஒன்றைத் தொடர்ந்து மற்றொரு புதிய காலனித்துவ வகை ஆக்கிரமிப்பு, ட்ரோன் தாக்குதல்கள், சித்திரவதை, கடத்தல்கள், ஜனநாயக உரிமைகள் மீது இடைவிடாத் தாக்குதல்கள். அச்சம் மற்றும் மனநோய் வளர்க்கப்படும் இடைவிடா முயற்சிகளால் அவன் பாதிப்பிற்கு உட்படாமல் இருந்திருக்க முடியாது.

அமெரிக்கக் குடிமக்கள் உட்பட எவரையும் எங்கும் படுகொலை செய்யும் உரிமையை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ள முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான். அவருடைய நேரத்தில் கணிசமான பகுதிகளை அவர் ஆளில்லா விமான ட்ரோன் கொலைகளுக்கு இலக்கு யார் எனத் தேர்ந்தெடுப்பதில் செலவழிக்கிறார். இதன் விளைவாக மகளிர், குழந்தைகள் ட்பட பல சாதாரண குடிமக்கள் இறப்பர் என்பதை ன்கு அறிந்துள்ளார். குறைந்த மதிப்பீட்டில் 176 குழந்தைகள் உட்பட 3,365 பேர் பாக்கிஸ்தானில் மட்டும் ட்ரோன் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசாங்கமும் செய்தி ஊடகங்களும் அமெரிக்க இராணுவம்  செய்யும் இக்கொலைகளை பாராட்டுகின்றன. மற்ற நாடுகளின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்ய அனுப்பப்படும் படையினர் பெரும் தீரர்கள்என்று போற்றப்படுகின்றனர். கடற்படை சீல்களும், சிறப்புப் படையினரும், அமெரிக்க இராணுவத்திற்காக இந்த இழிந்த கொலையைப் புரிபவர்கள் பெருமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நாடு உலகம் முழுவதும் வன்முறையைத் திணிக்கலாம், ஆனால் உள்நாட்டில் பெரும் விளைவுகளினால் பாதிக்கப்படாது என்று எவரேனும் தீவிரமாக நம்பமுடியுமா?

எதிர்வரவிருக்கும் நாட்களில் சமீபத்திய வெகுஜனக் கொலைகளின் பின்னாலிருக்கும் குறிப்பான உந்துதல்கள் குறித்து தவகல்கள் வெளிப்படும். எப்படியும், லான்சா ஆழ்ந்த உளைச்சலுக்கு உட்பட்டிருந்த இளைஞன். இல்லவிடின் இத்தகைய கொலைகளைச் செய்வது கடினம். ஆயினும் தனிப்பட்ட உளப்பங்கும் அதன் குறிப்பிட்ட வெளிப்பாடும், ஆழ்ந்த சமூக நோயின் விளைபொருளாகும்.