சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

US warns of “consequences” over North Korean rocket launch

வட கொரியாவின் ராக்கெட் ஏவுதலின் பின்விளைவுகள் பற்றி அமெரிக்கா எச்சரிக்கின்றது

By Peter Symonds
13 December 2012
use this version to print | Send feedback

நேற்று அதன் உன்ஹா-3 (Unha-3) என்ற மூன்று கட்ட ராக்கெட்டை  வெற்றிகரமாக வடகொரியா செலுத்தியமை உடனடியான அமெரிக்காவினதும்  அதன் நட்பு நாடுகளினதும் கண்டனங்களுக்கு உட்பட்டதுடன், பியோங்யாங்கிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் கடுமையான பொருளாதாரத் தடைகளும் கோரப்பட்டன. ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ராக்கெட் சோதனை வட கொரியாவின் நட்பு நாடான சீனாவை இலக்கு கொண்ட அமெரிக்காவின் மூலோபாயமான ஆசியாவில்முன்னிலைஎன்தை முடுக்கிவிடுவதற்கு வசதியான போலிக் காரணத்தைக் கொடுத்துள்ளது.

இந்த ராக்கெட் செலுத்துதல் அமெரிக்க, தென் கொரிய மற்றும் ஜப்பானிய இராணுவங்களால் நெருக்கமாக தானிக்கப்பட்டது. இவை அனைத்தும் ராக்கெட் மஞ்சள் கடல், கிழக்கு சீனக்கடல் மற்றும் தென்சீனக் கடல் வழியே சென்றதைக் கண்காணித்தன. வட கொரியாவின் அதிகாரிகள் இதுபற்றி முன்னர் தகவல் கொடுத்திருந்தனர். தொடர்ச்சியாக உந்துதல் கொடுக்கும் கருவிகள் பாதுகாப்பாக சர்வதேச நீர்நிலையில் விழுந்தன. இந்த ராக்கட் செலுத்துதல் எதிர்பார்க்கப்படவில்லை. ஏனெனில் பியோங்யாங் இந்த வாரம் முன்னதாக இது சில தொழில்நுட்ப இடர்களால் தாமதமாகும் என்று அறிவித்திருந்தது.

நேற்றைய செலுத்துதல் பல தொடர்ச்சியான தோல்விகளைத் தொடர்ந்து வந்துள்ளது. மிகச் சமீபத்தில் ஏப்ரல் மாதம்  இதே மாதிரி ராக்கெட் புறப்பட்டு 90 வினாடிகளுக்குள் செயலற்றுப் போயிற்று. அந்த விளைவு வட கொரியாவின் புதிதாக பதவியேற்றுள்ள  தலைவர் கிம் ஜோங்-உன்னிற்கு பெரிய அடியாகும். அவர் அந்நிகழ்வை வட கொரியாவின் முதல் ஸ்ராலினிச ஆட்சியின் தலைவரான தன்னுடைய பாட்டனார் கிம் II சுங் உடைய 100 வது பிறந்தநாள் நினைவு தினத்தில் அமைத்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் அவருடைய தந்தை கிம் ஜோங்-இல் இறந்தபின் தலைவராக நியமிக்கப்பட்ட கிம் ஜோங்-உன் சந்தேகத்திற்கு இடமின்றி ராக்கெட் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை தன் நிலைமையை உறுதிப்படுத்த  பயன்படுத்துவார். ஜூலை மாதம், எதிர்பாராமல் படைகளின் தலைவர் என்ற பதவியில் இருந்து வைஸ் மார்ஷல் ரி யோங் கோ, அகற்றப்பட்டார். சில ய்வாளர்கள் நாட்டின் இராணுவத்தின் மீது னது பிடியை இறுக்கமாக்கவேண்டும் ன்பதற்காகிம் ஜோங்-உன் இதை செய்தார் எனக் கருதுகின்றனர். டிசம்பர் 17 இவருடைய தந்தையார் இறந்து ஓராண்டு நினைவு தினமாகும்.

அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் குழுவின் செய்தித்தொடர்பாளர் டோமி விகடர் இச்செலுத்தலைபிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சம் கொடுக்கும் ஆத்திரமூட்டும் செயல்என்று கண்டித்துள்ளார். இது .நா. பாதுகாப்புக் குழுவின் வட கொரியா அணுச்சக்தி, ஏவுகணைகள் சோதனைத் தடைகளை மீறியுள்ளது என்றும் கூறியுள்ளார். பியோங்யாக் இது ஏவுகணைச் சோதனை அல்ல என்றும் ஓர் அறிவியல் செயற்கைக் கோளை ஏவப்பயன்படுத்தப்பட்ட ராக்கெட் என்றும் கூறுகிறது. வடகொரியா பூமியின் சுற்றுவட்டத்தை அடையக்கூடிய ஒரு பொருள் போல் தோன்றுவதைஅபிவிருத்திசெய்துள்ளது என்பதை அமெரிக்க இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது; அதாவது ஒரு செயற்கைக் கோளை.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னேஇதற்கான பின்விளைவுகள் இருக்கும்என்று வடகொரியாவை எச்சரித்தார். ஆனால் அமெரிக்கா என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை விளக்கவில்லை. அமெரிக்காவின் ஆதரவைக் கொண்ட ஜப்பான், .நா. பாதுகாப்புக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது நேற்று முறையாகக் கூடி வட கொரியச் செயல்களை கண்டித்து, தான்ஒரு உரிய விடையிறுப்பைபரிசீலிக்கும் என்றும் கூறியுள்ளது. ஏப்ரல் மாதம் தோல்வியுற்ற செயலுக்குப்பின் அமெரிக்கா வட கொரியாவிற்கு உணவு நிதிக்கான உதவிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளது.

ராக்கெட் இயக்கம் குறித்து சீனாகவலைதெரிவித்துள்ளது. ஆனால் விடையிறுப்பு நிதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. சீன வெளியுறவு மந்திரியின் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறினார்: “.நா. பாதுகாப்புக் குழுவின் விடையிறுப்பு மதிநுட்பத்துடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டும், ஸ்திரப்பாட்டைத் தக்கவைக்கும் வகையிலும், நிலைமை மோசமாகாவகையிலும் இருக்க வேண்டும்.” சீனா சமீபத்திய வாரங்களில் வட கொரியாவிற்கு உயர்மட்டக் குழு ஒன்றை அனுப்பியிருந்தது.

அமெரிக்க இராணுவக் கட்டமைப்பு ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் கட்டமைக்கப்படுதல், அமெரிக்க இராணுவக் கூட்டுக்கள் அமைக்கப்படுதல் ஆகியவற்றை நியாயப்படுத்த வடகொரியாவை ஒபாமா நிர்வாகம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்று பெய்ஜிங்கிற்கு நன்கு தெரியும். வட கிழக்கு ஆசிய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டிலுமே பென்டகன் பெரும் இராணுவப் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. வட கொரியா ஏவுவதற்கு முன் அமெரிக்கா மூன்று வழிகாட்டப்படும் ஏவுகணை தகர்ப்புக் கப்பல்கள் மற்றும் USS Shiloh வழிகாட்டி ஏவுகணை தாங்கி ப்பல் உட்பட நான்கு போர்க்கப்பல்களை ந்தபிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு உறுதியளிக்க” நிறுத்தியிருந்தது.

ஒபாமாவின் ஆசியாவில் முன்னிலை என்பது பிராந்தியம் முழுவதும் அதன் போட்டித்திறன் கொண்ட சீனாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி அமெரிக்க மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் இராஜதந்திர, மூலோபாயத் தாக்குதல் ஆகும். வாஷிங்டனின் பிரச்சாரம் அதன் நட்பு நாடுகளை சீனாவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க ஊக்கம் கொடுத்துள்ளது. இது பிராந்திய அழுத்தங்களை உயர்த்தியுள்ளதுடன், பல கடற்பகுதிகள் முரண்பாடுகளுக்கும் எரியூட்டியுள்ளது.

ராக்கெட் ஏவப்பட்டமை அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருந்தும் கூட்டு விமர்சனங்களை கொண்டுவந்துள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் செயற்கை கோள் ஏவுதலை கடுமையாக கண்டித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் மற்றும் வெளியுறவு மந்திரி பாப் கார் இருவரும் கூட்டாக இதை .நா.தடைகளை மீ றும் ஒரு ஆத்திரமூட்டும்  பொறுப்பற்ற செயல் என்று முத்திரை குத்தியுள்ளனர்.

ஞாயிறன்ற பாராளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கும் ஜப்பானில், எதிர்க்கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) தலைவர் ஷின்சோ ஏப் இந்த ஏவுதலைப் பயன்படுத்தி அரசாங்கம் வட கொரியாவிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். கடுமையான கண்டனம் தேவை என .நா தீர்மானத்திற்கு ஜப்பான் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். “ராக்கெட் இயக்கப்பட்டது சீற்றம் அளிப்பது ஆகும். சர்வதேச சமூகம் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சுமத்த வேண்டும்என்றார் அவர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, தன்னுடைய வலதுசாரி தேசியவாதத்திற்காக நன்கு அறியப்பட்டுள்ள ஏப் ஜப்பானின் தற்காப்பு படைகளை முறையான இராணுவமாக, அரசியலமைப்பின் அமைதிவாத விதியினால் கட்டுப்படாத ஒன்றாக, மாற்றுவதற்கு அரசியலமைப்பு மாற்றம் தேவை என்று அழுத்தம் கொடுக்கிறார். 2009ல் தேர்தல்களில் பெரும் சரிவைத் கண்ட தாராளவாத ஜனநாயகக் கட்சி, ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி மீது இருக்கும் மக்கள் அதிருப்தியை ஒட்டி மீண்டும் பதவிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் அனைத்து முக்கிய கட்சிகளும் நாட்டின் ஆழ்ந்த சமூகப் பிளவுகள் மற்றும் தேர்தலுக்குப்பின் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தீவிரமாகும் சிக்கனச் செயற்பட்டியலில் இருந்து திசை திருப்ப தேசியவாதத்தையும் மற்றும் இராணுவவாதத்தையும் வேண்டுமென்றே தூண்டிவிடுகின்றனஎதிர்க்கட்சிக்கு சற்றும் சளைக்காத முக்கிய அமைச்சரவை செயலாளர் ஓசாமு புஜிமுரா வடகொரியாவின் ராக்கெட் இயக்கம்பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் உறுதியைஅச்சுறுத்தியுள்ளது, “மிகவும் வருந்தத்தக்கது, பொறுத்துக் கொள்ளத்தக்கது அல்லஎன்று அறிவித்துள்ளார்.

தென் கொரியாவில் டிசம்பர் 19ல் ஜனாதிபதி பதவிக்காக தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஜனாதிபதி லீ மையுங் பக், வலதுசாரி செனூரிக் கட்சியின் (Saenuri Party) அவசர பாதுகாப்புக் கூட்டத்தில், வேண்டுமென்றே நெருக்கடி சூழ்நிலையை உயர்த்தியுள்ளார். தென் கொரிய கடற்படை மூன்று ஈஜிஸ் போர்க்கப்பல்களை ராக்கெட்டின் இயக்கத்தை ஆராய நிலைப்படுத்தியிருந்தது. வெளியுறவு   மந்திரி கிம் சுங் ஹ்வான் தென்கொரியாவ் ஆத்திரமூட்டும் செயலைச் செய்ததற்காக வட கொரியாவைக் கடுமையாகக் கண்டிக்கிறதுஎன்றார்.

எதிர் கட்சியான ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மூன் ஜே-இன், தன்னுடைய செனூரி கட்சி போட்டியாளர்  பார்க் கியுன் ஹையை மீறியவகையில் ஜனாதிபதி லீயை ராக்கட் ஏவுதல் குறித்துநாட்டின் பாதுகாப்புத் திறனற்ற தன்மைக்குதாக்கியுள்ளார். பார்க்கின் செய்தித் தொடர்பாளர் அதன்பின் வட கொரிய ராக்கெட் இயக்கத்திற்கு எதிரானசர்வதேச சமூகத்தின்கவலைகளை மூன் ஆதரிக்காமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லீயைப் போலவே, முன்னாள் தென் கொரிய இராணுவச் சர்வாதிகாரி பார்க் சுங் ஹீயின் மகளான பார்க் வட கொரியாவிற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பியோங்யாங்குடன் எத்தகைய கலந்துரையாடல் அல்லது அதற்கு எந்த உதவியும், அதன் அணுச்சக்தி திட்டங்களை நிறுத்துவதை நிபந்தனையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார். ஆனால் இரண்டு கொரியாக்களுக்கும் இடையே விரோதப்போக்குகளை முடித்து வடகொரியாவை தென்கொரிய பெருநிறுவனங்களுக்கு குறைவூதிய அரங்கு என்று திறந்துவிடும் நோக்கம்கொண்ட முந்தைய ஜனநாயக கட்சி ஜனாதிபதிகளின் சூரிய ஒளிக் கொள்கை எனப்படுவதற்குத் தொடர்ந்து ஆதரவைக் கொடுக்கிறார்ஆனால் 2008ல் பதவிக்கு வந்தபின் லீ இக்கொள்கைகளுக்கு முற்றிலும்  முற்றுப்புள்ளி வைத்து வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்.

கொரியத் தீபகற்பத்தில் உள்ள பதட்டமான நிலைமைக்கான முக்கிய பொறுப்பு ஒபாமா நிர்வாகத்திடம்தான் உள்ளது. இது புஷ் நிர்வாகத்தைத் தொடர்ந்து, வட கொரிய அணுவாயுத திட்டங்களைப் பற்றிய ஒரு உடன்பாடு காணுவதற்கு  சீனா ஆரம்பித்துவைத்த ர்வதேச பேச்சுவார்த்தைகளை திறமையுடன் தகர்த்துவிட்டது. ராக்கெட் ஏவியதற்குப் பின் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவர முயல்வது மோதல்கள் பற்றிய ஆபத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.