சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
இலங்கை:
பாராளுமன்ற தெரிவுக்
குழு
பிரதம
நீதியரசருக்கு
எதிரான குற்றப் பிரேரணையை
ஆதரிக்கின்றது
By K. Ratnayake
11 December 2012
இலங்கை
பிரதம
நீதியரசர்
ஷிரானி
பண்டாரநாயக்க மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு
குற்றவாளி
எனக் கூறி
கடந்த
சனிக்கிழமை அறிக்கை
ஒன்றை முன்வைத்த
பாராளுமன்ற
தெரிவுக்
குழு,
அவருக்கு
எதிரான
குற்றப் பிரேரணையை
அங்கீகரித்தது.
அரசாங்கம் பண்டாரநாயக்கவை
நீக்க
தயாராகின்ற
நிலையில்,
ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷவின்
சகோதரரான பாராளுமன்ற சபாநாயகர்
சமல்
இராஜபக்ஷ,
அறிக்கை
பற்றி
ஜனவரி 8
அன்று
விவாதம்
நடத்தப்படும் என்று அறிவித்தார்.
பண்டாரநாயக்க தலைமையிலான
உயர்
நீதிமன்ற
நீதிபதிகள்
குழு,
அரசாங்கத்தின்
திவிநெகும
அபிவிருத்தி
மசோதா
ஒன்பது மாகாண
சபைகளில்
அங்கீகரிக்கப்படாவிட்டால் அது
அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த பின்னரே,
ஜனாதிபதி
மற்றும் அவரது ஆளும் கூட்டணியும்
அவருக்கு
எதிரான
குற்றப் பிரேரணையை
கொண்டுவந்தனர். இந்த மசோதா,
முன்னர் மாகாண
சபைகளுக்கு
பங்கிடப்பட்ட சில
பொருளாதார
அதிகாரங்களை
ஜனாதிபதியின்
இன்னொரு
சகோதரரான
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ஷவுக்கு மாற்றுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே
இந்தக் குற்றப் பிரேரணையின்
ஜனநாயக-விரோத
மற்றும் அரசியல்
நோக்க குணாம்சம்
தெளிவாக
இருந்தது.
குற்றப் பிரேரணையில்
உள்ள 14
குற்றச்சாட்டுக்கள்
என்னவென்று கூட
தெரியாமல் ஆளும் கூட்டணியின்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில்
கையெழுத்திட்டனர்.
சபாநாயகரால்
தேர்வு
செய்யப்பட்ட
குழுவின்
பதினோரு
உறுப்பினர்களில்
ஏழு
பேர்
ஆளும் கூட்டணியைச்
சேர்ந்தவர்களாவர்.
அதன் விசாரணை தனி
அறையில் இடம்பெற்றதோடு
அதன்
நடவடிக்கைகள் பற்றி
செய்தி வெளியிடுவது
தடை செய்யப்பட்டிருந்தது.
அனைத்து
குற்றச்சாட்டுக்களும்
பொய்யானவை
என்று
வலியுறுத்தினாலும்,
ஆரம்பத்தில்
பண்டாரநாயக்க
விசாரணையில்
பங்கேற்ற
அதே வேளை,
அது
அரசியலமைப்புக்கு
விரோதமானதும்
சட்ட
அடிப்படைகள்
இல்லாததுமாகும் என
அறிவித்தார்.
கடந்த
வியாழக்கிழமை மூன்றாவது நாள் விசாரணையில்,
குழு
தலைவரும்
அமைச்சருமான
அனுர
பிரியதர்ஷன
யாப்பா,
விசாரணை ஒழுங்குகள்,
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின்
பட்டியலை
வழங்க மறுத்ததை
அடுத்து,
பண்டாரநாயக்கவும்
அவரது
வழக்கறிஞர்களும்
விசாரணையில்
இருந்து
வெளியேறினர்.
தான்
"ஒரு சுயாதீன நீதிமன்றத்தினை
எதிர்கொள்ளத்
தயார்"
என
சபாநாயகருக்கு அறிவித்தார்.
இந்தக்
குழுவில் பங்கேற்றதன் மூலம் அதற்கு சட்டப்பூர்வத் தன்மையை கொடுத்த பின்னர்,
ஐக்கிய தேசிய
கட்சி (யூ.என்.பீ.),
தமிழ்
தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.)
ஆகிய எதிர்க்
கட்சிகளைச் சேர்ந்த
நான்கு
உறுப்பினர்களும்,
யாப்பா அதே கோரிக்கைகளை மறுத்ததாலும் விசாரணைகளை ஒரு மாதம் ஒத்திவைக்கும்
வேண்டுகோளை நிராகரித்ததாலும்
கடந்த
வெள்ளிக்கிழமை
அதிலிருந்து
விலகிக்கொண்டனர். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஜனநாயக உரிமைகளை மதிப்பதனால் அதில்
இருந்து வெளியேறவில்லை.
மாறாக,
அவர்கள்
தொடர்ந்து
அந்தக்
குழுவில்
பங்கேற்பதனால் வரும் விமர்சனங்களையிட்டு அஞ்சினர்.
அவர்கள்
வெளிநடப்பு
செய்த
போதிலும்,
ஜனாதிபதி
இராஜபக்ஷ,
"நடவடிக்கைகளை
தொடர்ந்தும் முன்னெடுத்து"
அறிக்கையை
தயாரிக்குமாறு
குழுவில்
இருந்த
அரசாங்க உறுப்பினர்களைக்
கேட்டுக்கொண்டார்.
அதே தினம்,
மத்திய
வங்கி ஆளுனர் அஜித்
நிவார்ட் கப்ரால்
மற்றும்
ஜனாதிபதியின் செயலாளர் லலித்
வீரதுங்க
போன்ற அரசியல் தேவை கருதி நியமிக்கப்பட்டவர்கள் உட்பட
16 சாட்சிகளை
அழைத்த
அரசாங்க
உறுப்பினர்கள்,
பல மணி
நேரத்திற்குள் ஒரு அறிக்கையை
தொகுத்தனர்.
இந்த
அறிக்கை,
விசாரிக்கப்பட்ட
ஐந்து
குற்றச்சாட்டுக்களில்
மூன்றுக்கு
பிரதம
நீதியரசர்
குற்றவாளி என்று அறிவித்து,
அவருக்கு
எதிராக நடவடிக்கை எடுக்கப்
பரிந்துரைக்கின்றது.
இந்தக்
குழு,
அதற்கு
கொடுக்கப்பட்ட
ஒரு மாதகால
அவகாசத்துக்கும் மேலாக காலத்தை
நீட்டித்துக்
கேட்க
உரிமை இருந்தும் கூட,
நேரம் இல்லை
என்று
கூறி,
ஏனைய
ஒன்பது
குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவில்லை.
பண்டாரநாயக்கவும்
எதிர்க்கட்சி உறுப்பினர்களும்
அறிக்கையை நிராகரித்தனர்.
சண்டே
டைம்ஸ்
பத்திரிகையின்
படி,
இந்தக்
குற்றப் பிரேரணை
ஒரு அரசியல்
வேட்டை என்ற உண்மையை கோடிட்டுக் காட்டும் வகையில்,
ஒரு "சிரேஷ்ட
அரசாங்க
அரசியல்வாதி",
பண்டாரநாயக்கவின்
வழக்கறிஞருக்கு
கடந்த
வியாழக்கிழமை ஒரு "சமரச சூத்திரத்தை”
முன்வைத்தார். அந்த உடன்பாட்டின் நிபந்தனைகள் இவ்வாறு இருந்ததாக அந்த பத்திரிகை
செய்தி வெளியிட்டிருந்தது.
"அவர் இராஜினாமா
செய்துகொள்ள வேண்டும்.
பதிலுக்கு அவர்
ஒரு
'முக்கியமான'
பதவிக்கு
நியமிக்கப்படுவதோடு
அவரது கணவர்
பிரதீப்
காரியவசத்துக்கு
எதிரான
ஊழல் குற்றச்சாட்டுகள்
கைவிடப்படும்.” அந்த “சிரேஷ்ட
அரசியல்வாதி”
ஜனாதிபதி
இராஜபக்ஷவைத்
தவிர
வேறு யாரும்
அல்ல, என
கொழும்பு
டெலிகிராப்
செய்தி வெளியிட்டுள்ளது.
இராஜபக்ஷ நாட்டினுள்ளும்
வெளிநாட்டிலும் வளர்ச்சி
கண்டுவரும்
விமர்சனங்களை திசை திருப்பவே
இவ்வாறு
பிரஸ்தாபம் செய்துள்ளார்.
ஜூரிகளின் சர்வதேச
ஆணையத்தின்
ஆசிய
பசிபிக் இயக்குனர் சாம் ஸர்ஃபி
ஒரு
அறிக்கையில் கூறியதாவது: "நீக்குவதற்கான
எந்தவொறு
செயல்முறையும்,
சர்வதேச
சட்டத்தின்
கீழ் வழங்கப்பட்டுள்ள நடைமுறையின் போதான சகல உத்தரவாதங்கள் மற்றும் நியாயமான
விசாரணைகளுக்கு, குறிப்பாக
ஒரு
சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கான
உரிமைகளுக்கு, இணங்கியவையாக இருக்க வேண்டும்.”
சிரேஷ்ட
வழக்கறிஞர்கள் மற்றும் இலங்கை
சட்டத்தரணிகள்
சங்கமும்,
பாராளுமன்ற
தெரிவுக்
குழுவை
தடைசெய்ய
உத்தரவிடுமாறும் அது
சட்டரீதியில்
செல்லுபடியற்றது
என்று
அறிவிக்குமாறும்
கோரி
உயர் நீதிமன்றங்களில்
மனு
தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு மனு,
இலங்கை
வர்த்தக
சம்மேளனத்தின்
முன்னாள் தலைவர்
சந்திரா ஜயரத்னவால்
தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை,
இந்தக் குற்றப் பிரேரணை சம்பந்தமாக
பெருவணிகர்கள்
மத்தியிலான கவலையை வெளிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்துக்கும்
நீதித்துறையின்
உயர்மட்டத்தினருக்கும்
இடையேயான
விரிசல்,
இராஜபக்ஷ
மற்றும் அவரது
கூட்டாளிகளின்
தலைமையிலான
ஒரு சிறு
எண்ணிக்கையினரைக் கொண்ட
கும்பலின்
கைகளில்
பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம்
குவிவதையிட்டு
முதலாளித்துவ
தட்டுக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பையே
பிரதிபலிக்கிறது. அரசாங்கத்தின்
மேற்கத்திய-விரோத வாய்சவடால்களுடன் அதன்
அரசியலமைப்பு
மீறல்கள்,
தங்கள் வணிக
நலன்களை பாதிக்கும் என்றும்
இந்த வட்டாரங்களில்
கவனம் செலுத்தப்படுகிறது.
கடந்த
வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட இலங்கை வர்த்தகர்கள் சம்மேளனம், "நிறைவேற்று
அதிகாரம்,
சட்டமன்றம் மற்றும் நீதித்துறை,
சட்ட
விதி ஆகியவற்றுக்கு இடையே,
பரஸ்பர
மரியாதை மற்றும் நம்பிக்கையும், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி
இலக்குகளை அடைவதற்கு
தீர்க்கமான
அத்தியாவசிய
முன்நிபந்தனைகளாகும்
என்று
வலுவாக
நம்புவதாக,"
தெரிவித்துள்ளது.
உயர்
நீதிமன்ற
நீதிபதிகள் குழுவொன்று, சபாநாயகர் மற்றும்
தெரிவுக்
குழுவின்
உறுப்பினர்களுக்கும்
நீதிமன்றத்தின்
முன்
தோன்றுமாறு
கோரி
அறிவித்தல்களை
அனுப்பியுள்ளது.
சபாநாயகர்
இராஜபக்ஷ,
அந்த
அறிவித்தல்கள்
"ஒரு
முரண்பாடான
மற்றும் சட்ட
விளைவுகளைக்
கொணரக்
கூடியவை"
என அறிவித்தார்.
அவரது
முடிவை புறக்கணித்த நீதிமன்றம்,
டிசம்பர்
14 அன்று விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அரசாங்கத்தின்
பக்கம் நின்ற
எதிர்க்
கட்சியான
யூ.என்.பீ.யின்
தலைவர்
ரணில் விக்கிரமசிங்க,
சட்டமன்றமே
அதி உயர்வானது
என்று அறிவித்து,
நீதிமன்றத்தின்
தீர்ப்பை
புறக்கணிக்குமாறு
சபாநாயகருக்கு
வலியுறுத்தினார்.
1978
அரசியலமைப்பு,
பாராளுமன்றம்
மற்றும்
நீதித்துறைக்கும்
மேலாக,
ஜனாதிபதிக்கு
பரந்த
அதிகாரங்களை
வழங்கியுள்ளது.
பெருகிய முறையில் அரசியல்மயப்படுத்தப்பட்ட
நீதித்துறை,
ஜனநாயக
உரிமைகளுக்கு
குழி பறிக்கவும்
மேலும்
ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவும்
பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஜனாதிபதியின்
இரண்டு
பதவிக் கால வரம்பை
நீக்கியதோடு,
சுதந்திரமானது
எனக்
கூறப்படும்,
முக்கிய அரச
ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு
அனுமதியளித்த,
இராஜபக்ஷ
அரசாங்கம்
கொண்டுவந்த அரசியலமைப்பின்
18வது
திருத்தத்துக்கு
2010ல்
அங்கீகாரம்
கொடுத்த
உயர்
நீதிமன்ற
நிதிபதிகள் குழுவுக்கு பண்டாரநாயக்கவே
தலைமை வகித்தார்.
நீதித்துறைக்கு
எதிரான
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்,
ஆளும்
குழுவின் கைகளில்
மேலும்
அதிக
அதிகாரங்களை
குவித்துக்கொள்வதற்கான
உந்துதலின்
பகுதியாகும்.
அண்மையில்,
ரெய்டர் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த
பசில் இராஜபக்ஷ,
குடும்பத்தை மையமாகக் கொண்ட ஆட்சிக் குழுவை, “மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின்
இராஜ வம்சம்” எனத் தெரிவித்தார்.
"முடிவுகளை
எடுப்பதில் அதிகளவானவர்களை விட சிறிதளவானவர்கள் கவனம் செலுத்துவது
ஒரு நாட்டில்
முதலீடுகளுக்கு
உதவும்,"
என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்
அப்பட்டமான ஜனநாயக-விரோத
வழிமுறைகளை
"மக்களின் விருப்பம்"
என
சித்தரிக்கும்
அதே வேளை,
அரசாங்கம்
ஏற்றுமதி சந்தைகள் சுருங்கி வருகின்ற நிலைமையின் கீழ், மற்றும் ஆழமடைந்துவரும்
உலகப்
பொருளாதார சரிவின் தாக்கத்தின்
கீழ்,
சர்வதேச
மூலதனத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தும்
பொருட்டு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை
மேலும்
உக்கிரமாக்க தயாராகின்றது.
அரசாங்கம் அடுத்த ஆண்டு
நிதியப்
பற்றாக்குறையை
5.8 சதவிகிதம்
வரை
குறைக்க சர்வதேச நாணய நிதியத்துக்கு
வாக்குறுதி அளித்துள்ளது.
இது தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள்
மீது மேலும் சுமைகளைத் தினிக்கக் கூடிய,
அரசாங்க
செலவினங்களிலும்
மானியங்களிலும்
மேலும்
வெட்டுக்களைக்
கோரும்.
பொருளாதார “வெற்றி”
பற்றி
வீண்பெருமை பேசிய போதிலும்,
துணை
நிதி அமைச்சர் சரத் அமுனுகம,
அரசாங்கம் பணத்தை அச்சிடாமல்
மற்றும்
அதிக வட்டி விகிதத்தில் வெளிநாட்டு கடன்களை பெறாமல்
அடுத்த
ஆண்டு 500 பில்லியன் ரூபா வரவு செலவு திட்ட பற்றாக்குறையை
நிவர்த்தி செய்ய
முடியாது, என
சமீபத்தில்
கூறினார்.
"ஜனநாயக
உரிமைகளை
பாதுகாத்தல்
மற்றும்
நீதித்துறையின்
சுதந்திரத்தை
பாதுகாத்தல்"
என்ற பெயரில்,
போலி இடது
குழுக்களான
நவசமசமாஜ
கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும்
பெரு
வணிகத்
தட்டினர்,
சட்டத்துறை
அமைப்புகள்
மற்றும்
எதிர்க்
கட்சிகளுடன்
அணிசேர்ந்துள்ளன.
இரிதா
லக்பிம
பத்திரிகையின்
ஒரு பத்தியில்,
நவசமசமாஜ
கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன,
குற்றப் பிரேரணைக்கு
எதிரான
எதிர்ப்புக்கள் "வர்க்க வேறுபாடுகள் இன்றி
ஒரு
ஐக்கியத்தை ஏற்படுத்தியுள்ளது" எனப் பிரகடனம் செய்துள்ளதோடு
“அத்தகைய
ஒரு
ஜனநாயகத்துக்காகப்
போராடும்
இயக்கத்தின்”
மூலம் மட்டுமே,
சர்வாதிகார
ஆட்சியை
நிறுத்த
முடியும்
என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
இந்த
போலி "இடதுகள்",
தொழிலாள
வர்க்கத்தின் எந்தவொரு
இயக்கத்திற்கும்
எதிராக
தவிர்க்க முடியாமல்
அரசாங்கத்தின்
பக்கம்
சாரும்
பெருநிறுவன
பிரபுக்கள்
மத்தியில்
உள்ள
சக்திகள்
சம்பந்தமாக,
மிகவும் ஆபத்தான
பிரமைகளை விதைக்கின்றனர்.
ஒவ்வொரு
முதலாளித்துவக் குழுவில் இருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைந்து,
சோசலிச
கொள்கைகளை செயல்படுத்துவதற்கு
தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைப்பதற்கான
போராட்டத்தில்,
கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை
அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே உருவாகிவரும் இராஜபக்ஷவின் பொலிஸ்-அரச ஆட்சிக்கு
எதிராகப் போராட முடியும். |