சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

GM-Opel plant in Germany to be shut down

ஜெனரல் மோட்டார்ஸ்-ஓப்பல் ஆலை ஜேர்மனியில் மூடப்பட உள்ளது

By Dietmar Henning
12 December 2012
use this version to print | Send feedback

ஜேர்மனியில் போஹும் நகரத்தில் உள்ள ஓப்பல் ஆலை அதிகப்பட்டம் 2016 க்குள் மூடப்பட்டுவிடும். தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் ஓப்பலின் நிர்வாகம் ஊழியர்களிடம் திங்கள் அன்று மூடுதல் குறித்து ஒரு கூட்டத்தில் தகவல் கொடுத்தனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரு ஜேர்மனிய ஆலை முதல் தடவையாமூடப்படுவதாகும்.

வெள்ளியன்று போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர் ரைனர் ஐனென்கல் ஆலையில் எந்தப் புதிய மாதிரியின் உற்பத்தியும் 2016 இறுதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவித்தார். போஹும் ஆலை கிட்டத்தட்ட 3,200 ஊழியர்களை நேரடியாகப் பணியில் அமர்த்தியுள்ளது; துணை நிறுவனங்களில 1,000 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரிகின்றனர். இந்த ஆலை தற்பொழுது நிறுவனத்தின் Zafira குடும்பக் கார்களைத் தயாரித்து வருகிறது. போஹுமில் முதன்மை பணிகொடுக்கும் நிறுவனமான ஆலையை மூடுதல் என்பது வழங்கும் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும். ஆலை மூடல் அறிவிக்கப்பட்டபோதிலும்கூட, இந்த சனிக்கிழமை ஆலையின் 50 ஆண்டு வரலாறு சிறப்பாகக் கொண்டாடப்படுவது நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“2016 உடன் போஹுமில் முழு வாகனங்கள் தயாரிப்பும் முடிவடைகிறது” என்று ஓப்பலின் தலைமை நிர்வாக அதிகாரி தோமாஸ் செட்ரான், திங்களன்று ஊழியர் கூட்டத்தில் தொழிலாளர்களிடம் கூறினார். அவருடைய ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிக்கையைத் தொடர்ந்து செட்ரான் அவசர அவசரமாகக் கூட்ட அறையில் இருந்து ஒரு பின்புற வாயிலின் வழியாக வெளியேறினார். கண்ணால் பார்த்தவர்கள், IG Metall ஆலையின் தொழிற்சங்க அதிகாரி ஒருவர், பொறியியல் மற்றும் உலோகத் தொழிலாளிகள் அவர் புறப்படும் முன் செட்ரானுடன் பேச முற்பட்டனர் என்று தெரிவிக்கின்றனர். அந்த அதிகாரி பாதுகாப்புப் பிரிவினரால் உடனடியாகத் தரையில் தள்ளப்பட்டுத் தாக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பு பல மாதங்களாக ஆலை தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் IG Metall க்குத் தெரிந்திருந்த தகவலை உத்தியோகபூர்வம் ஆக்குகிறது; ஆனால் இதுவேண்டுமென்றே தொழிலாளர் தொகுப்பில் இருந்து மறைக்கப்பட்டு இருந்தது. ஓப்பல் இயக்குனர் குழுவும் அமெரிக்காவில் இக்குழுவின் பெற்றோரான ஜெனரல் மோட்டார்ஸும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் போஹும் ஆலை மூடப்படும் கோரிக்கை குறித்து விவாதிக்க பேச்சு வார்த்தைகளை தொடக்கினர். ஆனால் ஐனென்கல் பலமுறையும் ஆலை மூடலைப் பற்றித் தான் பேச்சுக்களை நடத்தவில்லை என்றுதான் கூறிவந்தார்.

உண்மையில் நிறுவன நிர்வாகி, ஆரம்பத்தில் இருந்தே தன் முடிவான போஹும் ஆலையை மூடுவது என்பது தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் செல்வாக்கிற்கு உட்படாது என்றே தெளிவாக்கி வந்துள்ளார். மாறாக, தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் வேலை நிர்வாகத்தின் மூலோபாயத்தை அளித்து, காத்து, செயல்படுத்துவது என்பதாகும். எட்டு ஆண்டுகளாக நடக்கும் பேச்சு வார்த்தைகளில் ஓப்பல் நிர்வாகக் குழுவும் ஐனென்கெலும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவை திகைப்பிற்குட்படுத்தி ஆலை முற்றிலும் மூடப்படுவதற்கான நிலைமையை படிப்படியாகத் தோற்றுவித்தனர்.

ஐனென்கல், தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவராக 2004 இறுதியில், 2005 ஆரம்பத்தில் பதவியை எடுத்துக் கொண்டபோது, போஹுமின் ஆலையில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அக்டோபர் 2004ல் தொழிலாளர்கள் இன்னும் கூடுதலான பணிநீக்கங்களை ஒரு ஆறு நாள் தொழிலாளர் பூசலில் தடுக்க முடிந்தது; இது தொழிற்சாலை தொழிலாளர் குழுவில் இருந்து சுயாதீனமாக நடைபெற்றது. ஜெனரல் மோட்டார்ஸ் இதன்பின் சேமிப்புத் திட்டம் ஒன்றை ஐரோப்பிய துணை நிறுவனத்திற்காக அளித்தது; அதில் ஜேர்மனியில் 10,000 உட்பட 12,000 பணி நீக்கங்கள் இருந்தன.

இதற்கு அடுத்த ஆண்டுகளில் ஐனென்கலின் கீழ் இருந்த தொழிற்சாலை தொழிலாளர் குழு பெரும் எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி பாரிய வேலை வெட்டுக்களும் அதையொட்டிய பணிக் குறைப்புகளும் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தினர். “வேலைப் பாதுகாப்பு” என்ற பெயரில் ஐனென்கல் நிறுவனத்தில் பெல்ஜியம் ஆலையை 201க்குள் மூடுவதற்கும் ஒப்புக் கொண்டார். இப்பொழுது போஹும் ன் முறை வந்துவிட்டது.

இதே தந்திரோபாயத்தை ஐனென்கல் பலமுறை பயன்படுத்தியுள்ளார். போஹும் ஓப்பல் தொழிலாளர்கள் தங்கள் பணிகளுக்காப் போராடுவதற்குத் ன் ஆதரவை அவர் பகிரங்கமாக அறிவித்தார்; ஆனால் தனியே அவர் திரைக்குப்பின் நிர்வாகத்துடன் இணைந்து வேலைகள், ஊதியங்களை வெட்டுவதற்கு உழைத்தார்; தொடர்ச்சியாக இறுதி முடிவைத் தொழிலாளர் தொகுப்பிற்கு “குறைந்த தீமை”, “ஆலையைக் காப்பாற்ற” “நீண்டக்கால வேலைப் பாதுகாப்பிற்கு” சமரசம் என்று அளித்த வகையில். உண்மையில், ஒவ்வொரு சமரசமும் ஆலை மூடலை ஒரு தப்படி கிட்டத்தான் கொண்டுவந்தது.

இந்தக் கட்டத்தில்கூட ஐனென்கலும் ஓப்பல் நிர்வாகமும் தொழிலாளர்களை ஏமாற்றத்தான் முயல்கின்றனர். ஆலையில் கார்களைத் தயாரிப்பை நிறுத்துவது என்பது உலகின் முடிவல்ல என்று செட்ரான் அறிவித்தார்: “ஓப்பல் போஹுமிலும் வருங்காலத்தில் இருக்கும்; அதன் தளவாடங்கள் மையத்துடன் மட்டுமின்றி, கூறுபாடுகள் தயாரிப்புத் திறனுக்காகவும்தான் – இது இனி நிர்ணயிக்கப்படும்.”

430 ஊழியர்களைக் கொண்ட தளவாட மையம் பாதுகாக்கப்படும், கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்கள் திட்டமிடப்பட்டுள்ள கூறுபாடுகள் பிரிவில் பணி செய்வர் என்று கூறப்பட்டது. இதைத்தவிர, ஓப்பலும் நகரம் அமைந்துள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலமும் “மற்ற மாற்றீடுகள்” குறித்து பேச்சுக்கள் நடத்துவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இவை அனைத்துமே நீண்டக்காலத் தயாரிப்பின் ஒரு பகுதியாகும்; தொழிலாளர் தொகுப்பின் ஒரு பிரிவினரிடையே போலித்தன நம்பிக்கைகளை உயர்த்தும் வெறும் சொல்லாடல்கள், அவற்றை அமைதியாக இருக்க வைப்பதற்குக் கூறப்பட்டவை. இந்த ஆண்டு மட்டும் ஓப்பல் 2,600 வேலைகளை ஐரோப்பாவில், பெரும்பாலும் ஜேர்மனியில் குறைத்துள்ளது; இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நிர்வாகம் நடுவர் குழுவை போஹும் இரண்டாம் ஆலை மூடுதல் குறித்துத் தலையிட அழைப்பு விடுத்துள்ளது; அங்கு 300 தொழிலாளர்கள் கார் பாகங்கள், கியர் பெட்டிகள் உட்படத் தயாரிக்கிறனர்.

நடுவர் குழுவை அழைத்துள்ளதற்கு ஓப்பல் தொழிற்சாலை தொழிலாளர் குழு பேச்சுக்களை இரண்டு வாரங்களுக்குள் தொடங்க வேண்டும் என்னும் தேவையைக் கொண்டுள்ளது ஆகும். இத்தகைய பேச்சுக்களின் நோக்கம் 300 தொழிலாளர்களில் எவர் வேலைகளை இழப்பர் என்பது குறித்த நிபந்தனைகளைச் சீராக்குவது ஆகும். மற்ற வாகன உற்பத்தி வேலைகளைப் போல் இல்லாமல், ஓப்பல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்பந்தங்களை நிறுத்திவிடலாம். அதையொட்டி பணிநீக்க செலவுகளைக் கணிசமாகக் குறைத்தும் விடலாம். போஹும் ஆலை இரண்டை மூடுவதைத் தொடர்ந்து, வருங்காலத்தில் கூறுபாடுகள் ஆலையில் தயாரிக்கப்படுமே என்பது ஒரு புதிராகத்தான் உள்ளது.

நவம்பர் 30 அன்று ஐனென்கல் அதிகாலை பணிமுறையினரை, கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்களை, ஆலையின் முன்வாயில் முன் அழைத்து கியர் பெட்டி ஆலை மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட்டினார். அதன்பின் அந்த வாய்ப்பை ஐனென்கல் இழிந்த முறையில் பயன்படுத்தி தொழிலாளர் தொகுப்பு முழு ஆலையையும் இறுதியாக மூடுவதற்கான தயாரிப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். “இது ஆலை ஒன்றிற்கும் ஒத்திகையாக இருக்கும்” என்று அவர் தடுமாற்றத்துடன் கூறினார்; இந்த நடவடிக்கை ஒரு முதல் எச்சரிக்கைதான் என்று கூறினார்: “நாமும் கடுமையாக எதிர்க்க முடியும்.”

திங்களன்று நடந்த ஊழியர் கூட்டத்தில் ஐனென்கல் “இந்த இடத்தில் இருந்து பலர் இனி கார்கள் கட்டமைக்கப்படாதுஎன்று கூறியுள்ளனர். அவர் தொழிலாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக, “நாம் தொடர்ந்து 2016க்குப் பிறகும் கார்களைத் தயாரிப்போம்” என்றார்.

இதுவரை போஹுமில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழு அனைத்து வேலையிழப்புக்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்களை ஏற்றுள்ளது. கடந்தக்காலப் படிப்பினைகள், தவிர்க்க முடியாத முடிவு ஒன்றிற்கு இட்டுச் செல்லுகின்றன. போஹும் ஆலை மூடுவது தடுக்கப்பட வேண்டும் என்றால், தொழிலாளர்கள் தாங்களே பணிக்குழு மற்றும் IG Metall  இல் இருந்து சுயாதீனமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.