World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Ten years since Germany’s Hartz IV labor reform

ஜேர்மனியில் Hartz IV தொழில்துறைச் சீர்திருத்தங்கள் ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கு பின்

By Sybille Fuchs
27 August 2012
Back to screen version

ஆகஸ்ட் 16, 2012 ல் வோக்ஸ்வாகன் நியமனக்குழு இயக்குனர் பீட்டர் ஹார்ட்ஸ் தலைமையிலான வல்லுனர் குழு ஒன்று சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) உடைய சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கத்திற்கு தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் குறித்த அதன் திட்டங்களை முன்வைத்தது. பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ஜேர்மன் சமூகம் ஹார்ட்ஸ் சீர்திருத்தங்களினால் பெரிதும் மாற்றத்திற்குள்ளாகிவிட்டது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பின் –OECD- ஆய்வு ஒன்று, மற்றைய எந்தப் பிற அங்கத்துவ நாட்டையும் விட ஜேர்மனியில் வருமான சமத்துவமின்மை விரைவில் அதிகரித்துவிட்டது என்ற முடிவிற்கு வந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனியப் பொருளாதாரம் அதிக ஊதியங்கள் கொடுத்தல், வளைந்து கொடுக்காத தொழிற்சந்தையை கொண்டிருத்தல் மற்றும் மிகத்தாராளமான ஒரு சமூகத்திட்டங்களை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ஜேர்மனிய அரசாங்கத்தை எதிர்கொண்ட பிரச்சினை எப்படி தொழிலாளர் பிரிவு ஒப்பந்தங்கள், சமூக உடன்படிக்கைகள் என்று பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் போராடி வெற்ற ஆதாயங்களில் கணிசமான எதிர்ப்பை தூண்டாமல் எப்படி மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதாக இருந்தது. அரசாங்கம் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுத்தது.

தொழிலாள வர்க்கத்தின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகளுடன் நேரடி மோதலை நாடுவது என்பதற்குப் பதிலாக, இது ஒரு துணைத் தொழிற்சந்தையை தோற்றுவித்தது. இதில் குறைந்த ஊதியங்கள் மேலாதிக்கம் செலுத்தியதுடன், சமூக உரிமைகளுக்கு உடன்பட்டிருக்கவில்லை. இதுதான் ஹார்ட்ஸ் ஆணைக்குழுவின் பணி ஆகும்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மனியின் மிகப் பெரிய தொழிற்சங்கமான IG Metall இரண்டிலும் உறுப்பினர் என்னும் முறையில் தேவையான தொடர்புகளை ஹார்ட்ஸ் கொண்டிருந்தார். ஆணைக்குழுவுடன் இணைந்த வணிகப்பிரிவு ஆலோசகர்கள், மேலாண்மையர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளான இசொல்ட குங்கிள் வேபர் (Verdi),   பீட்டர் லேன் (IG Metall) போன்றோரும் பங்கு பெற்றனர். இதன் ஆணையாளரான ஹரால்ட் ஷார்ட்டௌ, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தொழிலாளர்கள், சமூக விவகாரங்கள் துறையின் மந்திரியும் ஒரு முன்னாள் தொழிற்சங்க அதிகாரியுமாவார்.

தொழிற்சாலைகளில் தங்களுடைய நிலைமைகள், முன்னுரிமைகளில் பாதிக்காத வரை தொழிற்சங்க அதிகாரிகள் குறைவூதியப் பிரிவிற்கு எதிர்ப்புக் காட்டவில்லை. உண்மையில், இவர்கள் தொழிலாளர் செலுவுகளைக் குறைக்கும் திட்டங்களை ஆர்வத்துடன் வரவேற்றனர். ஏனெனில் ஜேர்மனியப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மை உலகச் சந்தையில் வலுப்படுத்தப்படும் என்ற கருத்து அவர்களிடம் இருந்தது.

தொழிலாளர்களை ஆபத்தின் விளிம்பில் நிறுத்தி வைக்கும் குறைவூதியப் பணியில் தள்ளும் கட்டாயத்தை ஏற்படுத்தும் வகையில் ஹார்ட்ஸ் ஆணைக்குழு அதிக திட்டங்களை முன்வைத்தது. இவற்றுள் பல நீண்டகாலம் முன்னரே மறக்கப்பட்டுவிட்டன.

ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களை ஏற்படுத்துவது முதலில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும் (Hartz I). இதையொட்டி அரசாங்கமே ஒரு தொழிலாளர்களை வழங்கும் அமைப்பாகச் செயல்படும். வேலையில்லாத தொழிலாளர்கள் சமூகநலன்களில் இருந்து அகற்றப்படுவார்கள். இதற்குச் சிறு-வேலைகள், நடுத்தர வேலைகள் மற்றும் சிறிய தனியார் நிறுவனங்களை (Hartz II) உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கான சமூக நலன்களை இல்லாதொழிக்கும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. மத்திய தொழில்துறை அலுவலகத்தை ஆதரவு மற்றும் தேவை (Hartz III) கொள்கை அடிப்படையில் மாற்றியமைத்து வேலையில் இருத்துதலை விரைவுபடுத்தும் நோக்கத்தையும், வேலையில்லாதவர்கள் எத்தகைய வேலையையும் செய்யவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

உத்தியோகப்பூர்வ ஆதாரங்கள் அனைத்தும், Hartz IV எனப்படும் வேலையில் இல்லாத தொழிலாளர்கள் முழு வேலையின்மைக்கான ஊதியத்தின் அனைத்து உரிமைகளையும் ஓராண்டிற்குப் பின் இழப்பர் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு சமூகத்தில் இருந்து கிடைக்கும் எச்சங்களுக்கு பிச்சை எடுக்கும் நிலையில் குறைக்கப்பட்ட தன்மை மாபெரும் வெற்றி எனக்கூறப்பட்டது. ஓராண்டிற்கு பின்னர் தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 347 யூரோக்கள்தான் என்ற அற்பத் தொகை நலனுக்குத்தான் விண்ணப்பிக்க முடியும். அது கூட அவர்கள் தங்கள் சேமிப்புக்கள் அனைத்தையும் தீர்த்தபின், அவர்களுடைய வாழ்க்கைதுணைவர்கள் அவர்களை ஆதரிக்க முடியவில்லை என்றால்தான். இதைவிட அவர்கள் தகுதி, முந்தைய வருமானம் இவற்றைப் பொருட்படுத்தாமல் எத்தகைய வேலையையும் செய்ய வேண்டும்.

Hartz IV பொறியில் விழுந்த எவருக்கும் வறுமையைத் தவிர்க்க வாய்ப்பு குறைந்துபோயிற்று. கூட்டுப் பொதுநல அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பாதிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப்பேர் Hartz IV ஐ நிரந்தரமாக நம்பும் நிலை ஏற்பட்டது எனத் தெரிகிறது.

Hartz IV பொறிச் சக்திக்குள் விழுந்துவிடக்கூடும் என்ற அச்சமே பல வேலையில்லாதவர்களை குறைவூதிய வேலைகள், குறைந்த மணி நேர வேலைகள் ஆகியவற்றை பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்கள் இன்னும் பிற நலன்கள் இல்லாது ஏற்றுக்கொள்ளுமாறு செய்தது. ஹார்ட்சின் ஆண்டு நிறைவு நாளில் வெளியிட்ட கருத்தில், Süddeutsche Zeitung பத்திரகை, அரசாங்கத்தை நிரந்தரமாக நம்பியிருக்கும் வாழ்வை விட குறைந்த ஊதியத்திற்காக வேலை பார்ப்பது எப்பொழுதும் நலன்தான் என்ற கொள்கையை Hartz IV ஸ்தாபித்துள்ளது என்ற முடிவுரையைக் கூறியது.

ஹார்ட்ஸின் விளைவுகள் கணக்கிலடங்கா புள்ளிவிவரங்களில் காணப்படமுடியும். ஜேர்மனியின் கிட்டத்தட்ட 42 மில்லியன் தொழிலாளர்களில் 29 மில்லியன் தொழிலாளர்களுக்குத்தான் முழுச் சமூக நலன்களுடனான வேலைகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 5.5 மில்லியன் ஆண்களும் பெண்களும் பகுதிநேர வேலை செய்கின்றனர். 4.1 மில்லியன் பேர் நாள் ஒன்றிற்கு ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோக்களையும் விடக் குறைந்த ஊதியத்தைத்தான் ஈட்டுகின்றனர். கிட்டத்தட்ட 4.5 மில்லியன் மக்கள் ஹார்ட்ஸ் IV இனை நம்பியுள்ளனர். இதில் 1.4 மில்லியன் உழைப்பவர்கள் ஆனால் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கக்கூடிய அளவிற்கு மட்டுமே சம்பாதிப்பவர்களும் அடங்குவர்.

இதனால் குறைவூதியத் தொகுப்பு பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் ஊதியங்களைக் குறைக்க உந்துதலாகிறது. கடந்த தசாப்தத்தில் ஜேர்மனியில் ஒரு அலகிற்கான தொழிலாளர் செலவினங்கள் அதிகரித்துள்ளது மிகவும் குறைவாகும். இந்நாடு இவ்வகையில் ஐரோப்பிய அட்டவணைகளில் அடிப்பகுதியில்தான் உள்ளது. வணிகச் சங்கங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகள் Hartz சீர்திருத்தங்களை பெரிய வெற்றி என்று பாராட்டிக் களிக்கின்றன. Bild செய்தித்தாளின், முன்னாள் சான்ஸ்லர் ஷ்ரோடர் நடவடிக்கைகளை சமூகத்திற்கு நிகர இலாபம் கொடுத்தவை, நம் நாட்டிற்கு உகந்ததைச் செய்துள்ளவை என்று அழைத்துள்ளது.

நமது நாடு என்பது ஜேர்மனியச் சமூகத்தின் செல்வம் கொழிக்கும் 10 சதவிகிதனர்தான் என்றால், ஷ்ரோடர் கூறுவது சரிதான். அவர்கள் மகத்தான அளவில் இலாபம் அடைந்துள்ளனர். இங்கும் புள்ளிவிவரங்களே முழுவதையும் தெரிவிக்கின்றன. 2008ம் ஆண்டில் மிக அதிகச் செல்வம் படைத்த 10%த்தினர் வறிய நிலையில் உள்ள 10% இனரை விட எட்டு மடங்கு அதிக ஊதியம் ஈட்டினர். இந்தத் தொகை கடந்த நான்கு ஆண்டுகளில், பொருளாதார நெருக்கடித் ஆரம்பக் காலத்தில் இருந்து அதிகரித்துள்ளது. 1990களில் இந்த விகிதம் 6:1 என்று இருந்தது.

2010ல் 924,000 மில்லியனர்கள் ஜேர்மனியில் இருக்கையில் 4.5 மில்லியன் ஹார்ட்ஸ் IV இன் உதவிகளைப் பெற்றவர்கள் உள்ளனர். இந்த மொத்தம் இப்பொழுது 1 மில்லியனைவிட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்ட்ஸ் நடவடிக்கைகளும் அதையொட்டிய 2010 செயற்பட்டியல் என்று சமூக ஜனநாயக கட்சியாலும் மற்றும் பசுமைக்கட்சியினராலும் அறிமுகப்படுத்தப்பட்டது, ஜேர்மனிய பொதுநல அரசாங்கத்தின் மீது தாக்குதலை பிரதிபலித்தது. இப்படி வேறு எந்த பழைமைவாத அரசாங்கமும் சாதித்தது இல்லை. இச்சீர்திருத்தங்கள் தொழிற்சங்கங்களின் தீவிர ஆதரவினால்தான்  செயல்படுத்தப்பட முடிந்தது.

பீட்டர் ஹார்ட்ஸே தன்னுடைய வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. 2007ம் ஆண்டு அவர் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் மிகப் பெரிய நிதி அபராதம் விதிக்கப்பட்டு, இப்பொழுது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவர் ஒரு ஊழல் விவகாரத்தில் சிக்கினார். அதில் வோக்ஸ்வாகன் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் உள்ளடங்கியிருந்தனர். அந்த ஊழல் வெளிப்பட்டவிதம் காரணமாக ஜேர்மனிய நீதித்துறையே இறுதியில் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியது.