WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Fed
minutes point to a bankrupt economic order
Fed
கூட்ட நடவடிக்கை குறிப்புகள் ஒரு திவாலான பொருளாதார ஒழுங்கைச்
சுட்டிக்காட்டுகிறது
Nick
Beams
28 August 2012
அமெரிக்க
மத்திய வங்கி ஃபெடரல் திறந்த சந்தை குழுவின் (FOMC)
ஜூலை 31-ஆகஸ்டு 1 கூட்டத்தின் விவாதக் குறிப்புகள் சென்ற வாரத்தில்
வெளியிடப்பட்டது முதலாகவே தொகை இறைப்பின் (Quantitative
Easing -
இந்நிகழ்முறையின் ஊடாகவே மத்திய வங்கிகள் நூறு பில்லியன் கணக்கிலான
டாலர்களை பணச் சந்தைகளுக்குள் செலுத்துகின்றன) அடுத்த கட்டத்தை பெடரல் எப்போது
எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதன் மீது தான் நிதிச் சந்தைகள் மற்றும் ஊடகங்களின்
அநேக கவனம் குவிந்திருக்கிறது.
ஆனால்
நிதிச் சந்தைகளின் குறுகிய கால ஏற்ற இறக்கங்களுக்குத் தங்களது கவனத்தைச் செலுத்திய
ஊடகங்கள்
Fed
கலந்தாலோசனைகளின் உண்மையான முக்கியத்துவத்தையும் தொடர்பு
விடயங்களையும் குறித்து ஓசையெழுப்பாமல் கடந்து சென்று விட்டன.
அந்த அளவுக்கு ஊடகங்களின் பார்வை குறுகியதாக இருந்தது.
Fed
நடவடிக்கைகளின் மீதான ஊடகங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் கவனம்
இந்த வாரத்தில் வியாமிங்,
ஜாக்சன் ஹோலில் நடைபெற இருக்கும் மத்திய வங்கிகளின் வருடாந்திரக்
கூட்டத்தில் அதன் தலைவரான பென் பெர்னான்கே உரை நிகழ்த்தவிருப்பதை ஒட்டி இன்னும்
கூர்மைப்படவிருக்கிறது.
சனியன்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான மரியோ டிராகி
நிகழ்த்தவிருக்கும் உரை குறித்தும் பெரும் ஆர்வம் இருக்கும்.
யூரோவைப் பராமரிக்கத் தேவையான
”எதுவாயினும்
அதை”
ECB
செய்யும் என்று அவர் உறுதியளித்திருக்கிறார்.
Fed
தலைவர் தனது உரையில் பண இறைப்பின் ஒரு புதிய சுற்றை அறிவிப்பார்
என்று எதிர்பார்க்கப்படவில்லை என்கிற அதேவேளையில்,
நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
FOMC
இன் நடவடிக்கைக் குறிப்பேடு தெரிவித்தது:
“பொருளாதார
மீட்சியின் வேகத்தில் ஒரு கணிசமான மற்றும் பராமரிக்கத்தக்க வலுப்பாடு
ஏற்பட்டிருப்பதைக் காட்டும் தகவல்கள் வராத பட்சத்தில் கூடுதல் பணப் புழக்கத்திற்கான
ஏற்பாடுகள் ஓரளவுக்கு விரைவில் எதிர்பார்க்கப்படலாம் என பல உறுப்பினர்கள் கணித்தனர்.”
“நிதி
நிலைமைகளை மேலும் சரளமாக்கவும் மீட்சியை வலுப்படுத்தவும்
Fed
மேலதிகமான நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள்”
இருப்பதாக பெர்னான்கே குறிப்பிட்டதை அடுத்து சென்ற வெள்ளியன்று
இத்தகைய நடவடிக்கை குறித்த சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு மேலும் உரமிடப்பட்டது.
நிதி
அமைப்புமுறை அன்றாட நிலவரத்தின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளையும் தள்ளிக்
கொண்டிருக்கிறது என்பதையும்,
தொலைநோக்கு வரலாற்று அர்த்தத்தில் அது முழுமையாக முறிந்து போய்
விட்டிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்வதற்கு நிகரானதாக சமீபத்திய
FOMC
கூட்டம் இருந்தது.
மத்திய வங்கியின் தலைமைப் பணியென்பது இனியும் உண்மையான பொருளாதார
வளர்ச்சிக்கான சட்டகத்தை வழங்குவதாக இல்லை என்கிற அளவுக்கு உள்முகமாய் இற்றுப் போன
நிலையின் மட்டம் இருக்கிறது.
பதிலாக,
ஒட்டுமொத்த அமைப்புமுறையும் நிலைகுலைந்து விடுமோ என்கிற அச்சத்தில்
வங்கிகளுக்கும் நிதி ஸ்தாபனங்களுக்கும் அவற்றின்
செயல்பாடுகளுக்கான நிதியாதாரத்தை அளிக்கும் வகையில் பணத்தை அள்ளி
அவற்றுக்குள் கொட்டுவதற்குப் புதிய வழிவகைகளைக் காண்பது தான் அதன் தலைமைப் பணியாக
இருக்கிறது.
2008
செப்டம்பரில் லேஹ்மென் பிரதர்ஸ் திவாலானது முதலாக,
Fed
சுமார்
2.3
டிரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க நிதிச் சந்தைகளுக்குள்
கருவூலப் பத்திரங்கள் மற்றும் அடமானப் பத்திரங்களைக் கொள்முதல் செய்கின்ற
வடிவத்தில் செலுத்தியிருக்கிறது.
ஆயினும்,
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அவற்றின் நிதி ஊக செயல்பாடுகளை
நடத்துவதற்குத் தேவையான மலிவுப் பணத்தை பெருமளவில் விநியோகம் செய்ததற்கு நிகரான
இந்தக் கொள்கை எந்த உண்மையான பொருளாதார மீட்சியையும் கொண்டுவரத் தோற்றிருக்கிறது.
உண்மையில்
FOMC
இன் நடவடிக்கைக் குறிப்புகள் தெளிவாக்கியதைப் போல,
அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமான துறைகள் ஒன்று தேங்கி
நிற்கின்றன அல்லது பின்னோக்கிச் சென்று கொண்டுள்ளன.
ஒட்டுமொத்தமாய்,
பொருளாதாரமானது மந்தமடைந்திருந்தது என்பதோடு தொழிலாளர் சந்தையில்
முன்னேற்றம் அதிகமில்லை என்பதை இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் காட்டின.
அரசு வேலைவாய்ப்பு இரண்டாம் காலாண்டில் லேசாகக் குறைந்திருந்த
அதேவேளையில் உற்பத்தித் துறை உற்பத்தி
“கணிசமாய்
சரிந்திருந்தது”.
ஜூன் கூட்டத்திற்குப் பின் பெறப்பட்டிருந்த தகவல்கள்
“பொருளாதார
நடவடிக்கை என்பது சமீப மாதங்களில்”
எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வேகத்தில் சரிந்திருந்தது என்பதைக்
காட்டிய அதே நேரத்தில்
“நிதிக்
கொள்கையில் இருந்து ஒதுங்கியிருப்பது”
வளர்ச்சி விகிதங்களை இழுத்துப் பிடிக்கும் என நடவடிக்கைக்
குறிப்புகள் குறிப்பிட்டன.
2014
இன் இறுதியிலும் கூட வேலைவாய்ப்பின்மை
“அதிகரித்த”
நிலையிலேயே இருக்கும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டது.
குறிப்புகள்
குறிப்பிடுகின்றன:
“
சமீபத்திய சாதாரணமான பொருளாதார வளர்ச்சி விகிதமே தொடருகின்ற
பட்சத்தில்,
பொருளாதாரத்தால் மந்தநிலைக்குள் மீண்டும் சரியாமல் ஒரு பொருளியல்
எதிர்மறை அதிர்ச்சியைத் தாக்குப் பிடிப்பது என்பது கடினமாகி விடும்.”
உலகப்
பொருளாதாரமெங்கிலும் ஸ்திரமின்மைக்கான சாத்தியமான ஆதாரவளங்கள் ஏராளமான
எண்ணிக்கையில் உள்ளன.
சமீப வாரங்களில் ஐரோப்பிய நிதிச் சந்தைகளில் நிலவுகின்ற
ஒப்பீட்டளவிலான அமைதியும் விரைவில்
- ”முக்கூட்டின்”
(ஐரோப்பிய
ஆணையம்,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி)
பிரதிநிதிகள் கிரீஸின் நிதியாதார நிலை குறித்த ஒரு அறிக்கையை
வழங்குகின்ற சமயத்தில்
-
முடிந்து போகலாம்.
கிரேக்க பொருளாதாரம் தொடர்ந்து சுருங்கி வரும் நிலையில்
-
இது மந்தநிலையில் அதன் தொடர்ந்த ஐந்தாம் ஆண்டு
-
அரசு திவால்நிலை மற்றும் அந்நாடு யூரோமண்டலத்தில் இருந்து விலகிக்
கொள்வது ஆகிய பிரச்சினை
(ஜேர்மன்
சான்சலரான அங்கேலா மேர்கெல் கிரீஸ் யூரோமண்டலத்தில் இருப்பதையே தான் விரும்புவதாக
சமீபத்தில் உறுதியளித்திருக்கிறார் என்கிற போதிலும்)
மீண்டும் பூதாகரமாய் எழும்பக் கூடும்.
நீண்ட கால
நோக்கில்,
ஐரோப்பாவிலான நிதி ஸ்திரமின்மை என்பது கண்டமெங்கும் ஆழமடைகின்ற
மந்தநிலையால் தீவிரப்படுத்தப்படுகின்றது.
யூரோ மண்டலத்தின் ஆறு உறுப்பு நாடுகள் ஏற்கனவே உத்தியோகபூர்வமாய்
மந்தநிலைக்குள் இருக்கின்றன,
அத்துடன் ஒட்டுமொத்த பிராந்தியமும் இரு காலாண்டு கால எதிர்மறை
வளர்ச்சியை உணரலாம்.
“விளிம்பில்
உள்ள நாடுகள்”
எனச் சொல்லப்படுவதான நாடுகளில் தொடங்கிய இந்த சரிவானது இப்போது,
ஜேர்மன் பொருளாதாரத்தில் மந்தநிலையின் தெளிவான அறிகுறிகள்
காணப்படும் நிலையில்,
மையத்திற்கும் விரிந்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரமே,
ஒட்டுமொத்தமாக,
மூன்றாவது காலாண்டில் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யக் கூடும்
என்பதான கணிப்புகளுக்கு இடையில் உற்பத்தித் துறை நடவடிக்கைகள் தொடர்ந்து ஆறாவது
மாதமாய் சரிவு கண்டது,
புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் மூன்று ஆண்டுகளில் தங்களது மிக விரைந்த
சரிவினைக் காட்டின.
Barclays Capital
ஆய்வாளர்கள்
எச்சரித்தனர்:
“பலவீனமான
உலகத் தேவை விரைவில் ஜேர்மனியில் உணரப்படுவதோடு ஏற்றுமதியிலும் எதிரொலிக்கும்.
யூரோ பகுதி நெருக்கடியால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற நிலைமைகளால்
உள்நாட்டு முதலீடு பாதிக்கப்படுவது தொடரும்.”
உலகத்
தேவையிலான சுருக்கத்தின் பாதிப்பு இன்னும் உலகின் மூன்றாவது பெரிய தனிப்
பொருளாதாரமாய் திகழும் ஜப்பானில் பிரதிபலிக்கிறது.
சீனா மற்றும் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் சரிவின்
பாதிப்பினால் மூன்றாவது காலாண்டில் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(GDP)
தேக்கமோ அல்லது சுருக்கமோ ஏற்படுமென சமீபத்திய கணிப்புகள்
கூறுகின்றன.
சீனா,
இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலான மந்தநிலை
(இங்கு
அரசாங்கங்கள் பொருளாதாரத்தை தூண்டுவதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றன)
உலகப் பொருளாதாரத்தின் கீழமைந்த நிகழ்முறைகளை சுட்டிக் காட்டுகின்றன.
இந்த நாடுகள் எல்லாம் உலக முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய
உத்வேகத்தை வழங்குவதற்கெல்லாம் வெகு தூரத்தில்,
இப்போது நிதி முறிவால் கட்டவிழ்த்து விடப்பட்ட மந்தநிலை சக்திகளால்
கனமாய் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே
ஒருசமயத்தில்
“இயல்பான”
பொருளாதார நிலைமைகளாய் கருதப்பட்ட ஒரு நிலைமைகளுக்கு திரும்பவியலுமா,
எப்போது இயலும் என்பது குறித்து
FOMC
நடவடிக்கைக் குறிப்புகளில் எந்தப் பேச்சும் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
ஏனென்றால்
உலகளாவிய மந்தநிலை,
அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை,
நிதிக் குழப்பங்களின் நிரந்தர அச்சுறுத்தல் இவற்றுடன் ஒவ்வொரு
நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை மீதான மலை போன்ற தாக்குதல்கள் இவை
எல்லாம் தான்,
வரலாற்றுவழியில் திவாலாகி விட்ட உலகளாவிய முதலாளித்துவ
பொருளாதாரத்தின்
“புதிய
இயல்புநிலை”யில்
இடம்பெற்றிருக்கின்றன. |