WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
Quebec: Thousands protest Liberals’ tuition hikes, user fees and
privatization
கியூபெக்:
ஆயிரக்கணக்கானவர்கள்
லிபரல்களின்
பயிற்சிக்
கட்டண
உயர்வு,பொதுச்சேவைக்கான
கட்டணம்
மற்றும்
தனியார்மயத்திற்கு
எதிராக
ஆர்ப்பாட்டம்
By Keith Jones
24 August 2012
புதன் அன்று
மொன்ட்ரியால் நகர மையத்தின் வழியே பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் தொழிலாளர்களும்
மாகாணத்தின் லிபரல் அரசாங்கத்தின் திட்டங்களான பயிற்சிக் கட்டங்களை உயர்த்துதல்
மற்றும் பொதுச்சேவைகளுக்குப் புதிய வடிவமான பிற்போக்குத்தனமான
“பணம்
கொடுத்துப் பயன்பெறுக”
என்ற கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த
ஆர்ப்பாட்ட அணிவகுப்பிற்கு மாணவர் குழுவான
CLASSE
மற்றும்
Coalition opposee a
latarification et a la privatisation des services publics
(பொதுப்
பணிகளைத் தனியார் மயமாக்குதல், கட்டண வசூலிப்பு இவற்றை எதிர்த்தல்), தொழிற்சங்கக்
கூட்டணி ஒன்று மற்றும் மாணவர்கள், சமூகக் குழுக்கள் அழைப்பு விடுத்திருந்தன.
புதன் கிழமை
ஆர்ப்பாட்டம்
CLASSE
இனால்
மாதத்தின் 22ம் திகதியில் ஏற்பாடு செய்யப்படும் ஆறாவது தொடர்ந்த பாரிய எதிர்ப்பு
ஆகும். 22ம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்தும் மரபு, கடந்த மார்ச் மாதம் பகிஸ்கரிப்பு
செய்த மாணவர்கள், கியூபெக் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் ஒன்றை
நடத்தியபோது ஆரம்பித்தது. அப்பொழுது 250,000க்கும் மேற்பட்டவர்கள் தெருக்களுக்கு
வந்து சட்டவரைவு 78ஐக் கண்டித்தனர். ஐந்து நாட்கள் முன்னர்தான்
நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இக்கடுமையான சட்டம் மாணவர் பகிஸ்கரிப்பை
குற்றமாக்கியிருந்ததுடன், கியூபெக்கில் எந்தப் பிரச்சினை குறித்தும் எந்த
இடத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையில் கடும் தடைகளைக் கொண்டு வந்தது.
புதன்
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, ஆறு மாதகாலம் நீடித்த கியூபெக் மாணவர் பகிஸ்கரிப்பு
பெரிதும் சிதறிப் போயிற்று. இதனால் மாணவர்களின் குறைந்தப்பட்சத் தேவையான பயிற்சிக்
கட்டண உயர்வு இரத்து செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகூட பூர்த்தி
செய்யப்படவில்லை.
தொழிற்சங்கங்கள் முறையாக பகிஸ்கரிப்பு செய்த மாணவர்களை தனிமைப்படுத்தி அவர்களை
சட்டவரைவு 78 (சட்டம் 12) உடைய குற்றத்தன்மை பிரிவுகளை அவர்களே தனிய
எதிர்நோக்குமாறு விட்டுவிட்டன. அதேநேரத்தில் அவையும் அவற்றின் அரசியல் செல்வாக்கின்
கீழ் பெரும்பாலும் இருக்கும்
FECQ, FEUQ
போன்ற சில மாணவர்
சங்கங்கள், மாணவர்களையும் பரந்த எதிர்ப்பு இயக்கம் என்று சட்டவரைவு 78க்கு எதிராக
வெடித்த எதிர்ப்பையும் பெருவணிக
Parti Quebecois (PQ)
இன் ஆதரவிற்கு திசை திருப்ப முற்பட்டன.
கடந்த
வசந்தகாலத்தில் வேலைநிறுத்தம் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தபோது,
CLASSE
சட்டம் 78 ஐ
மீறவேண்டும் என அழைப்புவிடுத்து ஒரு
“சமூக
வேலைநிறுத்தம்”
மற்றும் ஒரு பரந்த
எதிர்ப்பு இயக்கம் என்ற கருத்தையும் தீவிரமாக விளம்பரப்படுத்தியது. இதில்
மட்டுப்படுத்தப்பட்ட வேலை செய்வது என்ற நடவடிக்கையும் உள்ளடங்கியிருந்தது. ஆனால்
தொழிற்சங்கங்கள் ஒரு அரசியல் வேலைநிறுத்தம் போல் தோன்றும் எதற்கும் தங்கள்
எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்பதை தெளிவாக்கியவுடன், தங்கள் விருப்பம் சட்டவரைவு
78 செயல்படுத்தப்பட்டு, கீழ்ப்படியப்பட வேண்டும் என்றபின், மாணவர் தலைமை
“சமூக
வேலைநிறுத்தம்”
பற்றிய பேச்சுக்களை ஒதுக்கிவிட்டது.
இதையடுத்த
இரண்டரை மாதங்களில்
CLASSE
பெருகிய முறையில் வலதிற்கு
நகர்ந்து, அதன் எதிர்ப்பு மற்றும் கியூபெக் தேசியவாத முன்னோக்கு ஆகியவற்றை இன்னும்
தெளிவாக விரிவாக்கியதை அடுத்து
—அதாவது
தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புதல், மாணவர் போராட்டத்தை கியூபெக் மற்றும்
ஒன்டாரியாவில் உள்ள தாராளவாத, கூட்டாட்சி கன்சர்வேடிவ் அரசாங்கங்களின் சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிராக கனடா தழுவிய இயக்கமாக தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து
நடத்துவது என்பது இயலாததாகிவிட்டது.
வலதிற்கு
CLASSE
திரும்பியது,
தொழிற்சங்கங்கள் அதன்
“சமூக
வேலைநிறுத்த”அழைப்பை
எதிர்த்தது குறித்து எக்குறைகூறலையும் வெளியிட மறுத்ததில் முன்உதாரணமாக விளங்கியது.
மேலும் அதன் செய்தித் தொடர்பாளர்கள் பலமுறையும் செப்டம்பர் 4 மாகாணத் தேர்தலில்
லிபரல்கள் PQவிடம்
தோற்பது என்பது மாணவர்களுக்கு ஒரு ஆதாயம், ஏன் நேரடி வெற்றி என்றுகூடத் தெரிவித்த
அறிக்கைகள் மூலமும் விளங்குகிறது.
புதன்
ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தது, இளைஞர்களும் தொழிலாளர்களும்
எப்பொழுதும்போல் லிபரல் அரசாங்கம் மற்றும் அதன் வலதுசாரி நிகழ்ச்சிநிரலுக்கு தங்கள்
எதிர்ப்பில் உறுதியாக இருப்பதையும், பெருகிய முறையில் பெருவணிக எதிர்ப்பு மற்றும்
முதலாளித்துவ உணர்வு எதிர்ப்பு ஆகியவற்றினால் உந்துதல் பெறுவதை காட்டுகிறது.
ஆனால்
CLASSE
கடந்த ஆறு மாதக் காலப்
போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த முயற்சியையும்
எடுக்கவில்லை. மாறாக, புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தை அமைத்த முறை, அது இன்னும்
வெளிப்படையாக தேசியவாதத்தைக் கொண்டுள்ளது, தொழிற்சங்கங்களுக்கு அருகே செல்லுகிறது
மற்றும் பெருகியமுறையில் அவற்றிற்கு அரசியல் மூடிமறைப்பைக் கொடுக்கிறது. அதே
நேரத்தில் வழமையான எதிர்ப்புக் கருத்தான—“Crions
plus fort pour que personne ne nous ignore” (உரக்கக்
கூச்சலிடவும், இதனால் எவரும் நம்மைக் கவனிக்காமல் இருக்க முடியாது) என்ற கோஷத்தில்
ஒரு மாதிரியாக வெளிப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்திற்கு உரையாற்றிய பேச்சாளர்கள் எவரும்
Parti Qubecois
பற்றி ஏதும் கூறவில்லை; ஆனால் கருத்துக் கணிப்புக்கள் இது பெரும்பான்மையான
இடங்களில் வெற்றி பெறும் என்றும் தொழிற்சங்கத் தலைமையில் ஒரு பெரும் பிரச்சாரம்
சாரெஸ்ட்டின் எதிர்ப்பை கியூபெக்கின் ஆளும் உயரடுக்கின் மாற்றீட்டுக் கட்சி
அரசாங்கம் அமைப்பதற்குத் திருப்பும் என்றும் கூறுகின்றன. இப்பிரச்சாரம் வெளியே
இடதுசாரி எனக் கூறிக் கொள்ளும்
Quebec Solidaire
னாலும் கையாளப்படுகிறது. இது சட்டவரைவு 78க்கு மக்கள் எதிர்ப்பு வெடித்த உடனேயே
PQ
உடன் தேர்தல் உடன்பாடு
வேண்டும் என்றும்,
PQ
சிறுபான்மை
அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதைத் தான் வரவேற்கும் என்றும் கூறியது.
CLASSE
ன் செய்தித் தொடர்பாளர் ஜென்னி ரேனோல்ட்ஸ் அரசியல் கட்சிகள்
மாணவர்கள் மற்றும் கல்வி பற்றித் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகம் கூறவில்லை என்று
புகார் தெரிவித்துள்ளார். மாணவர் இயக்கம் தொடரும் என்றும் தேவையானால் செப்டம்பர் 4
தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கு அழுத்தம்
கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
அவரும் மற்ற
இரு பேச்சாளர்களும் முதலாளித்துவத்தை அல்லாது புதிய தாராளவாதத்தை குறைகூறிக்கொண்டு
உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் மீது பெருவணிகம் மற்றும் அதன்
அரசியல் பிரதிநிதிகள் நடத்தும் தாக்குதல்கள் பேராசையின் விளைவு என்றும்
முதலாளித்துவத்தின் இயல்பான திவால்தன்மை இல்லை என்னும் நப்பாசையை வளர்க்கின்றனர்.
இவ்வாறான கூற்றிலிருந்து உய்த்தறியப்படுவது என்னவெனில், எதிர்ப்பின் மூலம்
உயரடுக்கிற்கு அழுத்தம் கொடுப்பதால் பல தசாப்தங்களுக்கு முன்னிருந்த இரண்டாம்
உலகப்போருக்குப் பிந்தைய ஏற்றத்தின் உச்சக்கட்டத்தில் தொடரப்பட்ட கீன்சிய மற்றும்
சமூகநலக் கொள்கைகளுக்கு மீண்டும் கொண்டுவந்துவிட முடியும் என்பதாகும்.
முதல்
தடவையாக
CLASSE
தொழிற்சங்க அதிகாரியை அதன்
முக்கிய அணிவகுப்பில் பேச அழைத்ததும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
Federation
interprofessionnelle de la sant du Quebec
(FIQ
எனப்படும் Quebec
Interprofessional Health Federation) உடைய
தலைவர் Regine
Laurent “புதிய
தாராளவாதத்தைக்”
கண்டித்து ஒரு
மிகைப்படுத்தப்பட்ட கருத்தில் 1960களின் கடைசிப் பகுதிகள் மற்றும் 1970களின்
துவக்கப்பகுதிகளில் ஏற்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பாரிய எழுச்சியை வசதியாக
புறக்கணித்து, மாணவர்களை
“கியூபெக்
வரலாற்றிலேயே மிகப் பெரிய சமூக இயக்கத்தை”
நடத்தியதற்குப் பாராட்டினார்.
லோரண்டும்
FIQ
தலைமையும், முதல்நாள்தான்
PQ
தலைவர் பௌலீன் மரோய்ஸ் இனை
அவர்களுடைய தலைமையகத்திற்கு வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கூட்டத்தின்
கூறப்பட்ட நோக்கம் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்துவதற்கு
எனக்கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது
PQ
வின் தேர்தல் வாய்ப்புக்களை
அதிகரிப்பதற்கான வெளிப்படையான முயற்சி ஆகும். கூட்டத்திற்குப் பின்
FIQ
செய்தியாளர் அறிக்கை ஒன்றை
வெளியிட்டு, மரோய்ஸு உடனான
“நட்பார்ந்த”
கூட்டம் பற்றித்
தான் “திருப்தி
கொண்டதாக”
அறிவித்தது.
சோசலிச
சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பின்
ஆதரவாளர்களும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான போராட்டத்தை நடத்தும்
ஆர்ப்பாட்டத்தில் தலையிட்டு வேலைநிறுத்தத்தில் இருந்து படிப்பினைகள் பெறப்பட
வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக
ஒரு சர்வதேச சோசலிசத் திட்டத்தின் கீழ் அணிதிரட்டும் தேவை பற்றி வலியுறுத்தினர்.
ஆயிரம் பிரதிகளுக்கும் மேலான
“கியூபெக்
மாணவர்கள் வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்” அறிக்கை
விநியோகிக்கப்பட்டன.
உலக
சோசலிச வலைத்
தளம்
புதன்
அணிவகுப்பில் பங்கு பெற்ற சிலரைப் பேட்டி கண்டது.
ஒரு
செவலியரான
Émilie Rondeau
பகிஸ்கரிப்பு
தேர்தல்களுக்குப் பின் தொடரும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். கடைசியாக
அதிகாரத்தில் இருந்தபோது
PQ
செயல்படுத்திய பாரிய
சமுகநலச் செலவுக் குறிப்புக்களை சுட்டிகாட்டிய அவர்,
“PQ
வை நான்
நம்பவில்லை. இறைமைப் பிரச்சினை தவிர (கியூபெக்கின் சுதந்திரம்), அவர்கள் லிபரல்கள்
போல்தான் உள்ளனர். மரோய்ஸும் கியூபெக்கின் லிபரல் பிரதமரான சாரெஸ்ட்டும் சிறிதும்
வேறுபாடு இல்லாதவர்கள் என்றார்.
“தொழிற்சங்கங்கள்
பகிஸ்கரிப்பை நெரித்துவிட்டன. அவை இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை. உண்மையில்
பெரிய தொழிற்சங்கங்கள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது.
“என்னுடைய
முதலாளி என்னிடம், ஒரு செவிலியர் என்னும் முறையில் சிவப்புச் சதுரத்தை
(வேலைநிறுத்தத்தின் அடையாளம்) அணிய எனக்கு உரிமை கிடையாது என்றார். சிவப்புச்
சதுரத்தை அணிவது பணியிடத்தில் உணர்வுபூர்வமாகிவிட்டது. இது ஒரு வகை மிரட்டல்.”
UQAM
இல் புவியியல் மாணவராக இருக்கும் சைமன் பகிஸ்கரிப்பு
பிசுபிசுத்துவிட்டது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஏன் இப்படி
ஆயிற்று என்பது குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.
“உண்மையில்
எங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. எதற்காக சமாதான ஒப்பந்தம் என்பதில்
நாங்கள் உள்ளோம் என்பது பற்றியும் எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது எதற்காக நிறுத்த
வேண்டும் என்றும் எனக்குப் புரியவில்லை.”
சுதந்திரம்
பற்றிய கருத்து குறித்து தான் ஏதும் பெரும் பரபரப்பு அடையவில்லை என்று சைமன்
சேர்த்துக் கொண்டார். முடிவுகளை எடுப்பது எளிது, ஏனெனில் அது சிறிய அளவில்
இருக்கும். ஆனால் வர்க்கப் போராட்டங்கள் நீடிக்கும். இதே பிரச்சினைகள் அங்கும்
இருக்கலாம், ஆனால் ஒரு சிறிய மட்டத்தில்”
என்றார். |