WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
நோர்வேயில் பாரிய படுகொலையை செய்த ப்ரீவிக்கிற்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை
By Jordan Shilton
25 August 2012
use this version to print | Send
feedback
பாசிச பாரிய கொலையாளி ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் தெளிந்த
அறிவுடையவர்தான் என்று கூறி, ஜூலை 22, 2011ல் நடத்தப்பட்ட இரட்டைப் பயங்கரவாதத்
தாக்குதல்களுக்கு அதிகப்பட்ச தண்டனையாக 21 ஆண்டுகள் சிறைவாசத்தினை அவருக்கு ஒஸ்லோ
மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. உட்டோயா தீவில் சமூக ஜனநாயக கட்சி இளைஞர்
மீது நடத்தப்பட்ட பாரிய துப்பாக்கி சூட்டினாலும், அதற்கு முன்னர் நடத்தப்பட்ட கார்
குண்டுத்தாக்குதலாலும் 77 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த முடிவை அறிவித்த நீதிபதி எலிசபெத் ஆர்ட்ஜேன் பிரீவிக்
“முன்கூட்டிய
தடுப்புக்காவலில்”
வைக்குமாறும் உத்தரவிட்டார். இதன் பொருள் அவருடைய சிறைத்
தண்டனைக்காலம் அவர் சமூகத்திற்கு ஆபத்து என்று கருதப்படும் வரை நீடிக்கப்படலாம்
என்பதாகும்.
இத்தீர்ப்பு,
ப்ரீவிக்கின் விசாரணை அவர் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து
செயல்படுத்தப்பட்ட ஓர் உத்தியோகபூர்வ மூடிமறைப்பின் உச்சக்கட்டம் தான் என்ற உண்மையை
மாற்றவில்லை. அவருடைய மூளைக்கோளாறற்ற நிலை பற்றிய வினா, விசாரணையில் மேலாதிக்கம்
பெற்றிருந்தது. இது அரசியல் உந்துதல் பெற்ற குற்றம் என்று தெளிவாகியிருந்ததை
நேர்மையாக ஆராய்வதை தடுக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட திசைதிருப்புதல்
ஆகும். கொலைகள் ஐரோப்பா முழுவதும் உள்ள தீவிர வலதுசாரி பரிவுணர்வாளர்களின்
உதவியுடன் நடத்தப்பட்டதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அரசாங்க ஆதரவு பெற்ற குற்றச்சாட்டு பிரீவிக் ஒரு பைத்தியக்காரர்,
ஒரு மனநோய் மருத்துவமனையில் தனிமையில் இருத்தப்பட வேண்டியவர் என்றுதான் வாதிட்டது.
ப்ரீவிக் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு குற்றத்தன்மையில் பொறுப்பு
என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் பெரும் பொதுமக்கள் ஆதரவு இருக்கையில்
இந்நிலைப்பாடு எடுபடவில்லை. சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் நோர்வே மக்களில்
75% இனர் ப்ரீவிக் தெளிந்த அறிவுடையவர் என அறிவிக்கப்படுவதற்கு ஆதரவைக் காட்டினர்.
பத்தில் ஒருவர்தான் அவர் பைத்தியக்காரர் என்று நம்பினார். பைத்தியக்காரர் என்னும்
தீர்ப்பு பொதுமக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பைத் தூண்டியிருக்கும். மற்றும்
அதிகாரிகளுக்கு வசதியற்ற வினாக்களை எழுப்பியிருக்கும், நீதிமன்றத்திலும்
விவாதிக்கப்பட்ட காலத்தில் சிந்தனையில் இருந்திருக்கும்.
அப்படியிருந்தும்கூட, விசாரணையே ப்ரீவிக்கின் செயல்களை அவற்றின்
உண்மையான தன்மையான பாசிய பயங்கரவாதம் பற்றிய விசாரணை வழிவகையைப் புறக்கணித்தது.
இரண்டு உளரீதியான மதிப்பிடுகள் அவருடைய மனநிலை பற்றி விசாரணைக்கு
முன்னதாக வெளியிடப்பட்டன. முதலாவது அவர் குழம்பிய மனநோயாளர் என்றும் இரண்டாவது
அவரைத் தெளிந்த அறிவுடையவர் என்றும் கூறின.
இது ப்ரீவிக்கின் அரசியல் காரணங்களைச் சவால்விடாமல் போக
அனுமதித்துவிட்டது. ஏப்ரல் மாதம் விசாரணையின் 2ம் நாளன்று, அவர் ஒரு நீண்ட உரையைக்
கொடுத்தார். அதில் தான் பல பேரைக் கொன்றதை நியாயப்படுத்தி, வாய்ப்புக் கிடைத்தால்
மீண்டும் அவற்றைச் செய்வதாகவும் கூறினார். தான் ஒரு இஸ்லாமிய-எதிர்ப்பாளர்,
கம்யூனிச
“எதிர்ப்பு
இயக்கத்தின்”
எதிர்ப்பாளர், நோர்வேயில்
“மார்க்சிச
சர்வாதிகாரத்திற்கு”
எதிராகப் போராடுபவர் மற்றும் ஜூலை 22 படுகொலை
“ஒரு
நயமான, வியத்தகு அரசியல் தாக்குதல்”
என்றும் கூறினார்.
விசாரணையில் தொடர்ந்த எதுவும் அல்லது எந்த உத்தியோகப்பூர்வ
விசாரணைகளில் நடந்த எதுவும் இத்தகைய கூற்றுக்களின் தாக்கங்கள் பற்றி ஆராய
முயற்சிக்கவில்லை. ப்ரீவிக்கின் வெளிப்படையான அரசியல் நிரல் ஒரு
“தனி
ஓநாய்”
உடைய கருத்துக்கள் என்று உதறித் தள்ளப்பட்டன.
ஜூலை 22, 2011 க்குப் பின் வெளிவந்துள்ள அனைத்துத் தகவல்களும்
இத்தகைய கூற்றுக்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன. படுகொலை
செய்வதற்கு சில மணி நேரங்கள் முன்புதான் ப்ரீவிக் ரு 1,500 பக்க
“அறிக்கை”
ஒன்றை ஓராயிரம் தொடர்புடையவர்களுக்கு இணைய தளத்தின் மூலம் அனுப்பினார். இவர்கள்
அனைவரும் நோர்வே மற்றும் ஐரோப்பா முழுவதும் தீவிர வலது குழுக்களின் உறுப்பினர்கள்,
ப்ரீவிக் இவர்களை
“மேற்கு
ஐரோப்பிய தேசப்பற்றாளர்கள்”
என அழைத்திருந்தார் என்பவை வெளிப்பட்டன.
இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர், பிரித்தானிய தளமுடைய ஆங்கிலப்
பாதுகாப்புக் குழு (EDL),
ப்ரீவிக் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட அமைப்பின் தலைமையில் இருந்தனர்.
சிலகாலம் இவர் ஸ்வீடனிலும் இருந்தார். அங்கிருந்த தீவிர வலதுசாரிகளுடன் தொடர்பு
கொண்டிருந்தார். ஒரு வலைத் தள அரங்கான
Nordisc
ல் அவர் உறுப்பினராக இருந்தார். அதில் வலதுசாரிச் சிந்தனைப் போக்கு
பற்றிய தீவிர விவாதங்கள் இருந்தன, வன்முறைச் செயல்கள் திட்டமிட்டுச்
செயல்படுத்துவது குறித்த விவாதங்களும் இருந்தன.
நோர்வேயில் ப்ரீவிக் தீவிர வலதுசாரி முற்போக்கு கட்சியில் 1997 ல்
இருந்து 2007 வரை உறுப்பினராக இருந்தார். இக்கட்சி அரசியல் ஆளும்தட்டுடன்
முற்றிலும் ஒருங்கிணைந்த அமைப்பாகும். அதன் குடியேறுவோருக்கு எதிரான தீய வார்த்தைப்
பிரயோகங்கள், நோர்வேயின் தேசியவாத உரைகள் தொழிற்கட்சியினால் பல அரசாங்கக்
கொள்கைகளில் ஏற்கப்பட்டிருந்தன.
ப்ரீவிக்கின் அறிக்கை அவருடைய பாசிச உலகப் பார்வையை விரிவாகக்
கூறியது. அதைத்தவிர, தாக்குதல்களுக்கான அவருடைய தயாரிப்புக்களைப் பற்றியும்
விரிவாகக் கூறியது. அவர் பயன்படுத்திய பொருளுரையில் 50முதல் 60 சதவிகிதம் வரை
முக்கிய அரசியல் தலைவர்கள், விமர்சகர்களிடம் இருந்த எடுக்கப்பட்டிருந்தன; இது
வலதுசாரிக் கருத்துக்கள் பரந்தமுறையில் ஆளும்தட்டினருக்குள் வளர்க்கப்படுகின்றன
என்ற உண்மையைக் குறிப்பிடுகின்றன. ப்ரீவிக்கின் விசாரணையில் மிக முக்கியமான
கணங்களில் ஒன்று அவர் தன்னுடைய சாட்சியத்தில்
“பிரான்ஸின்
நிக்கோலோ சார்க்கோசி, ஜேர்மனியில் அங்கேலா மேர்க்கல் மற்றும் பிரித்தானியாவின்
டேவிட் காமரோன் ஆகியோர் பன்முறைப் கலாச்சார முறை செயல்படவில்லை எனக்
குறிப்பிட்டுள்ளனர்”
என்று கூறியதில் இருந்தது.
நோர்வே மற்றும் ஐரோப்பாவில் உள்ள அரசியல் உயரடுக்கை முறையாகத் தீவிர
வலதுசாரிக்கருத்துக்களை பரப்புவதில் ஏற்படும் பொறுப்பில் இருந்து அகற்றுவது
உத்தியோகபூர்வ மூடிமறைத்தலுக்கு முக்கிய உந்துதல் ஆகும். ப்ரீவிக் தன் அறிக்கையை
அனுப்பிவைத்த எந்த நபரும் வினாவிற்கு உட்படுத்தப்படவில்லை, அல்லது எத்தகைய
குற்றச்சாட்டும் அவர்கள்மீது பதியப்படவில்லை. இதில் தாக்குதல்கள் குறித்த
திட்டங்களை விவாதித்த போது இருந்த நபர்கள் மற்றும் ப்ரீவிக் வெளிப்படையாகக்
குறித்தவர்கள் கூட வினாவிற்கு உட்படுத்தப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை.
இப்பிணைப்புக்கள் தொடர்வது என்பதற்கு ஐரோப்பா முழுவதும் ஒரு முறையாக
அமைக்கப்பட்ட வலதுசாரித் தீவிரவாத வலைப்பின்னல் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளுதல்,
இதற்கு உத்தியோகபூர்வ அரசியல் ஆளும்தட்டின் ஊக்கம் உள்ளது என்பதும் ஒப்புக்
கொள்ளுவதுபோல் ஆகும். இது ப்ரீவிக் ஜூலை 22 க்கு முன் கண்டுபிடிக்கப்பட்டிருக்க
முடியாது என்னும் கூற்றையும் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும்.
ப்ரீவிக் ஒரு தனிமையான பயங்கரவாதி என முன்வைக்கப்பட்டது பொலிஸ்
மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளின் பங்கினை உத்தியோகபூர்வமாக மூடிமறைத்தலுக்கு
முக்கியமானது ஆகும். சான்றுகள் பொலிஸ் பல நேரங்களில் ஜூல்2011க்கு முன்னதாக
ப்ரீவிக்கின் தயாரிப்புக்கள் குறித்து தொடர்பு கொள்ளப்பட்டனர், ஒருமுறை
ப்ரீவிக்கினாலேயே என்று உறுதி செய்கின்றன. ஆனால் அவருக்கு எதிராக எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏராளாமான அளவிற்கு வெடிமருந்துகள் ஒரு போலந்து
நாட்டு வணிகரிடம் இருந்து வாங்கினார் மற்றும் பொலிசாருக்கு அவர் ஒரு பயங்கரவாதத்
தாக்குதலை நடத்தும் விருப்பம் கொண்டுள்ளதாக எச்சரித்திருந்தார் என்றாலும் கூட.
கிடைக்கும் சாட்சியங்கள் உத்தியோகபூர்வ விசாரணையை அதன் அறிக்கையில் பொலிஸ்
ப்ரீவிக்கை ஜூலை 22க்கு முன் கண்டுபிடித்திருக்கலாம் என்று குறிப்பிட்டதைக்
காட்டுகின்றன.
பிரித்தானியாவில் உள்ள அதிகாரிகள்
EDL
உடன் ப்ரீவிக் கொண்டிருந்த உறவுகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். 2002 கூட்டம் ஒன்றில்
ஐரோப்பா முழுவதும் உள்ள தீவிரவாதிகள் லண்டனில் கூடி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு
அர்ப்பணித்துக் கொண்டதற்கும் விடையிறுப்புக் கொடுக்கவில்லை. ப்ரீவிக்கின் கூற்றான
இக்கூட்டம்
Knights Templar
என்னும் அமைப்பு, ஐரோப்பாவில்”
ஒரு
பழைமைவாத-கலாச்சார புரட்சிக்கு”
உறுதியாக இருக்க நிறுவப்பட உதவியது என்பதை அவருடைய கற்பனையின் ஒரு
கூறுபாடு என்று உதறித்தள்ளப்பட்டது.
EDL
பொலிஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புக்களால் பெரிதும்
ஊடுருவப்பட்டிருந்ததுடன், முஸ்லிம் சமூகங்களிடையே ஆத்திரமூட்டுவதை தோற்றுவிக்கும்
கருவியாகச் செயல்படுகிறது. அதன்பின் எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்புடைய
இளைஞர்களின் நடவடிக்கைகள் குறித்து ஒற்றுத் தகவல்களைச் சேகரிக்கிறது.
ப்ரீவிக் தொடர்பாக காட்டப்பட்ட அணுகுமுறை மற்ற பயங்கரவாதிகளுக்கு
எதிராக எடுக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிராக உள்ளது.
ப்ரீவிக் தண்டனை அளிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக
Le Monde
பொலிஸ்
இந்த ஆண்டு முன்னதாக மூன்று தாக்குதல்களில் துலூஸில் ஏழு பேரைக் கொன்ற முகம்மது
மேரா ஒரு
“தனி
ஓநாய் அல்ல”
என்ற முடிவிற்கு வந்தது. பொலிசார் தங்கள் முடிவை அவர் 20 நாடுகளில்
இருந்த 180 தொடர்பு கொண்டிருந்தவர்களுக்கு 1,800 தொலைபேசி அழைப்புக்கள் விடுத்த
உண்மையில் இருந்து எடுத்துக் கொண்டனர்.
மேராவிற்கும், ப்ரீவிற்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு ஒருவர் ஒரு
இஸ்லாமிய அடிப்படைவாதி, மற்றவர் ஒரு கிறிஸ்துவ பாசிஸ்ட் என்பதுதான். ஆயினும்கூட,
ப்ரீவிக்கின் தீவிர வலதுசாரிச் செயல்களுடனான ஈடுபாடு இருந்தபோதிலும், ஒவ்வொருவரும்
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவில் இருந்தனரா என்பது குறித்து முற்றிலும் எதிர்மாறான
முடிவுகள் ஐரோப்பா முழுவதுமான விவாதங்களில் இருந்து எடுக்கப்படுகின்றன.
ஜூலை 22 தாக்குதல்களை குறித்த உத்தியோகபூர்வ விசாரணை சமீபத்தில்
வெளியிடப்பட்டது அறிவிப்பது போல்,
“77
மதிப்புமிக்க மனித உயிர்களின் இழப்பிற்கு செயலைப் புரிந்தவரை தவிர வேறு எவரும்
காரணம் இல்லை; உடல்ரீதியாகவும், மனத்தளவிலும் தீமை புரிந்ததற்கும், பெரும் பொருள்
பேரழிவிற்கும் அவர்தான் காரணம்”
என்று உள்ளது. இது பல ஆண்டுகளாக நடக்கும் குடியேற்ற எதிர்ப்பு,
முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம், ஐரோப்பாவிலும் அப்பாலும் ஒவ்வொரு முக்கிய
அரசாங்கமும் அரசியல் கட்சியும் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரம், செயற்பாடுகளை
மூடிமறைப்பது ஆகும். |