WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The
unions, the pseudo-left and the South Africa massacre
தென்னாபிரிக்க படுகொலைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களும் போலி இடதுகளும்
Joseph Kishore
24 August 2012
தென்னாபிரிக்காவில்
மரிக்கானாவில் லோன்மின் சுரங்கத்தில் வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்த 34 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை உலகளாவிய வர்க்கப்
போராட்டத்தின் நடுவே தென்னாபிரிக்காவிலும், சர்வதேசரீதியாகவும் உத்தியோகபூர்வ
தொழிற்சங்கங்களின் பங்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
சுரங்கத்
தொழிலாளர்களை,
தேசிய சுரங்கத்
தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில்
(NUM)
இருந்து இப்பொழுது ஒரு
இரத்த ஆறு பிரிக்கிறது. இந்த அமைப்புத்தான் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ்
(ANC)
அரசாங்கத்துடன் நெருக்கமாக
பிணைந்துள்ள
COSASTU எனப்படும்
தென்னாபிரிக்க வணிகத் தொழிற்சங்கங்களின் காங்கிரசின் மத்திய பிரிவாகும். தேசிய
சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கமும்
(NUM)
அரச ஒடுக்குமுறை மற்றும் கொலைகான ஒரு கருவி என்பதை வெளிப்படுத்திக்
கொண்டுள்ளது.
தொழிலாள
வர்க்கத்தின் சீற்றம் மிகப் பெரிய சுரங்க உரிமையாளர்களுக்கு எதிராக வெடித்திருப்பது
தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களுடன் நேரடி
மோதலுக்கு கொண்டுசென்றுள்ளது. படுகொலைக்குப்பின் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள்
தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரான்ஸ் பலேனி
“அனைத்துத்
தொழிலாளர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும், சட்டத்தைச் செயல்படுத்தும்
நிறுவனங்கள் வன்முறை, கொலைகள் செய்தவர்களை தேடிப்பிடித்துத் தண்டிக்க வேண்டும்”
என்று கோரினார். அதாவது தேசிய சுரங்கத் தொழிலாளர்கள்
தொழிற்சங்கத்தன் கருத்துப்படி இது தொழிலாளர்களேதான்.
தொழிலாள
வர்க்கத்திற்கும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள
மோதல் மரிக்கானாவுடன் நின்றுவிடவில்லை. சுரங்கத் தொழில் வலைத்
தளம் mineweb.com
சமீபத்தில்,
“இங்கு
குறிப்பிடத்தக்க வகையில் கவலையளிப்பது சுரங்கத் தொழிலாளர்கள் தேசிய சுரங்கத்
தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை கடந்து சென்றுவிட்டார்கள் என்பதாகும். இது மரபார்ந்த
சுரங்கத் தொழிற்சங்க முறையின் மீது முழு நம்பிக்கையின்மையைத்தான்
தெரியப்படுத்துகிறது. தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஆளும் ஆபிரிக்க
தேசியக் காங்கிரஸ் அரசியல் கட்சிக்கு அடிபணிந்த அமைப்பு என்றே பார்க்கப்படுகிறது.
அதாவது புதிய தென்னாபிரிக்க ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றது”
என்று எழுதியுள்ளது.
தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பின்னே அணிவகுத்துள்ள
இவ்வாறான சக்திகள் இணைந்துள்ள நிலை ஒரு சர்வதேச அளவில் நிகழ்கின்றது. இதேபோல்தான்
ஆளும் வர்க்கம் சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு சர்வதேச திட்டத்தை
நடைமுறைப்படுத்துகையில் இந்த வலதுசாரித்தன, பெருநிறுவன சார்பு அமைப்புக்களுக்கு
எதிரான பெருகும் எழுச்சியும் உள்ளது.
ஐரோப்பாவில், போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்படும் தொழிற்சங்க
நடவடிக்கைகளின் வரம்புகளுக்கு அப்பாற்ப்பட்டு சென்றுவிட்ட நிலையில்,
தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குகின்றன. ஸ்பெயினில்
2010இல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தின்போது,
அரசாங்கம் வேலைநிறுத்தத்தை முறிக்க தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் அரசியல்
கூட்டுக்களுடன் சேர்ந்துகொண்டு, இராணுவத்தை அழைத்தது.
அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக
AFL-CIO
விற்கு
எதிராக கணிசமான போராட்டங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டுள்ளன. ஒபாமா நிர்வாகத்தால்
தலைமை தாங்கப்படும் வேலைகள் மற்றும் நலன்கள் மீது நிறுவனங்களால் நடத்தப்படும்
தாக்குதலை தொழிலாளர்கள் எதிர்க்க முற்பட்டுள்ளனர்.
2010 இல்,
இந்தியானாவிலுள்ள இந்தியானாபோலிசில் தொழிலாளர்கள் பெரும்பாலோர் ஐக்கிய கார்த்
தொழிலாளர்கள் சங்கம்
(UAW)
ஆதரவு கொடுத்திருந்த 50%
ஊதிய வெட்டை நிராகரித்தனர். தொழிற்சங்க அதிகாரிகள் ஒரு உள்ளூர்க் கூட்டத்தில்
இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் அடிமட்ட
தொழிலாளர்கள் குழுவை அமைத்து, வேலைகளையும் ஊதியங்களையும் பாதுகாப்பதற்குப் போராட
முயன்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் பிரீமான்ட்டில்
NUMMI
ஆலையை மூடுவதற்கு
UAW
ஆதரவைக் கொடுத்தபோது
கார்த்தயாரிப்பு தொழிலாளர்கள்
UAW
அதிகாரிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட கலகம் போன்ற கிளர்ச்சியில் இருந்தனர்.
கடந்த
வாரம்தான் மிச்சிகனில் கிறைஸ்லர்
Dundee Engine
ஆலையில், கூடுதல் நேரக்
கட்டாயம், இரட்டை அடுக்கு ஊதிய முறை இவற்றால் சீற்றம் அடைந்த தொழிலாளர்கள்
தொழிற்சாலை ஒப்பந்தம் ஒன்றிற்கு எதிராகப் பெரிய அளவில் வாக்களித்தனர். இது
UAW
நிர்வாகத்திகு வியப்பையும் சீற்றத்தையும் கொடுத்தது. இல்லிநோய்ஸ் ஜோலியட்
காட்டர்பில்லர் போல் தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வெடித்துள்ள
போராட்டங்களில் தொழிற்சங்கத்தினால் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தோல்விக்கு
தள்ளப்படுகிறோம் என்ற உண்மையை விரைவில் தொழிலாளர்கள் உணர்ந்தனர்.
இந்த
நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொழிற்சங்கங்களின் தன்மை
பற்றிய ஆய்வை சக்திவாய்ந்த முறையில் உறுதிப்படுத்துகின்றன. 1993ம் ஆண்டு சோசலிச
சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி
அவற்றின் தேசியவாத மற்றும் முதலாளித்துவசார்பு முன்னோக்கில் வேர்களைக் கொண்டுள்ளது
என்று விளக்கியது. இம்முன்னோக்கு இன்னும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை மற்றும்
போருக்குப் பிந்தைய கால சமூக ஒழுங்கின் முறிவினால் குறைமதிப்பிற்கு
உட்பட்டுவிட்டது.
“இந்த
அதிகாரத்துவ அமைப்புகளின் பங்கு ஒவ்வொரு நாட்டிலும் முதலாளிகளுக்கும்
அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவது
என்பதில் இருந்து மூலதனத்தை ஈர்ப்பதற்காக தொழிலாளர்களிடம் இருந்து சலுகைகளை
முதலாளிகளுக்கு பெற்றுத் தருவதாக மாறியுள்ளது”.
என அது குறிப்பிட்டிருந்தது.
மரிக்கானாவில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் இருந்து
நகர்ந்து வெளிப்படையான வன்முறை அடக்குதலுக்கு சென்றுள்ளன. நிலைமைகளுக்கு
தேவைப்பட்டால் இவை ஐரோப்பா, அமெரிக்கா அதற்கும் அப்பாலும் இதேவகையில்தான்
செயல்படும்.
இந்த
நிறுவனங்களில் இருந்து தங்களை முறித்துக்கொள்ள முற்படும் தொழிலாளர்களின் முயற்சிகள்
பெருநிறுவன உயரடுக்கின் சீற்றத்தை தூண்டுவது மட்டும் இல்லாமல்,
“இடது”
அல்லது சோசலிஸ்டுக்கள் என்றுகூட காட்டிக் கொள்ளும் மத்தியதர வகுப்பு
அமைப்புக்களின் சீற்றத்தையும் தூண்டியுள்ளன.
தென்னாபிரிக்க படுகொலை குறித்து நான்கு நாட்கள் மௌனத்திற்குப் பின் அமெரிக்காவில்
உள்ள சர்வதேச சோசலிச அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 21 வந்த கட்டுரை ஒன்று
இதற்கு மாதிரியாக உள்ளது. இழிந்த முறையில் தொழிலாளர்கள் மீது பரிவுணர்வு
காட்டியபின்னரும் மற்றும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை
குறைகூறியபின், சர்வதேச சோசலிச அமைப்பு இந்த அமைப்பின் பிடியை முறிக்கும் எந்த
முயற்சியையும் வலுவாக எதிர்க்கிறது என்பதை தெளிவாக்கியுள்ளது. தேசிய சுரங்கத்
தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் போட்டிச் சங்கமும் இன்னும் போர்க்குணமிக்க சுரங்கத்
தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப்பணியாளர்கள் தொழிற்சங்கத்தை
(AMCU)
சர்வதேச சோசலிச
அமைப்பு குறைகூறுகிறது.
“சந்தேகத்திற்கு
இடமின்றி, சுரங்க உரிமையாளர்கள் தென்னாபிரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் பல
பிரிவுகளுக்கு இடையே உள்ள தீவிர வேறுபாடுகளில் களிப்படைந்துள்ளனர். சில நேரங்களில்
சுரங்க முதலாளிகள் தூண்டிவிட முயலும் பிளவுத்தன்மையை அதிகரிக்கும் உத்திகளில்
AMCU
தலைவர்கள்
இழுக்கப்படுகின்றனர்”
என சர்வதேச சோசலிச அமைப்பு எழுதுகின்றது.
உண்மையில்
சுரங்க நிறுவனங்கள் தொழிற்சங்கங்களுக்கு இடையே உள்ள
“தீவிர
வேறுபாடுகள்”
குறித்து
“களிப்படையவில்லை”.
ஆனால் பெரும் திகைப்புடன் அவர்களுடைய நட்பு அமைப்பான தேசிய சுரங்கத் தொழிலாளர்கள்
தொழிற்சங்கம்
(NUM) தொழிலாளர்கள்
மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். தானும்
“பிளவைத்”தடுப்பதில்
உறுதி கொண்டுள்ளதாக, அதாவது தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு எதிரான
தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தடுக்க முற்படுகிறது என்பதை சர்வதேச சோசலிச
அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இத்துடன்
இணைந்த கட்டுரை ஒன்று, சர்வதேச சோசலிச அமைப்பினால் தென்னாபிரிக்க இதழான
Journal
Amandla!
இல் இருந்து மறுபதிப்பு
செய்யப்பட்டது,
AMCU வை
“நடைமுறைக்கு
ஒவ்வாத கோரிக்கைகளை”
முன்வைப்பதற்காகவும்,
“அதன்
உறுப்பினர்களின் வன்முறையைக் கண்டிக்காததற்காகவும்”
கண்டனம் தெரிவிக்கிறது. அதாவது தொழிலாளர்களே தங்கள்
இறப்புக்களுக்குக் காரணம், ஏனெனில் அவர்கள் ஒரு கௌரவமான ஊதியத்தைக்கோரும் திமிரைப்
பெற்றுவிட்டனர்.
தென்னாபிரிக்க ஜனநாயக இடது முன்னணியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள
Amandla!
வேறு ஒரு இடத்தில், “தொழிற்சங்கத்தின்
பங்கு, முன்பு ஊதியப் பேரப்பேச்சுக்கள் முடிந்தவுடன் தொழிலாளர் பிரிவின்
மற்றவர்களுக்கு அறிவிப்பது என இருந்தது”
என எழுதியுள்ளது. அதாவது தொழிலாளர்கள் இப்படி
“கொடுக்கப்பட்ட
தகவலை”
புகாரின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும்.
சர்வதேச
சோசலிச அமைப்பு மற்றும் அதன் சர்வதேச சகசிந்தனையாளர்கள் சலுகை பெற்ற,
சுயதிருப்தியடைந்த மற்றும் பிற்போக்குத்தனமான பிரிவுகள் என்று மத்தியதரவர்க்கத்தின்
உயர்பிரிவில் இருப்பவர்களுடைய சார்பில் பேசுகின்றனர். அவர்களுக்கு தொழிற்சங்கங்கள்
அதிக ஊதியமுள்ள தொழிலுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது அமைப்புரீதியானதும்
அரசியல்ரீதியானதுமான கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஒரு அமைப்பு என்பதாகும். இதனால்
முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தைத் தடுத்துவிடலாம்.
தொழிற்சங்க
நிர்வாகிகள் மற்றும் அவர்களுடைய நண்பர்களின் நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும்,
புறநிலை நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை புதிய போராட்ட அமைப்புக்களை நிறுவும்
போராட்டத்திலும் மற்றும் சோசலிச அரசியலை நோக்கிய ஒரு வேறுபட்ட பாதையில்தான்
உந்திச்செல்லும். தென்னாபிரிக்காவின் குருதி படிந்த நிகழ்வுகள் வர்க்க
நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளதுடன், இவை முழு சர்வதேச தொழிலாள
வர்க்கத்திற்கும் ஒரு மூலோபாய அனுபவமாக கொள்ளவேண்டும்.
|