WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா மாருதி சுசுகி பெரும்
எண்ணிக்கையிலான
தொழிலாளர்களை
வேலையிலிருந்து
அகற்றுகிறது போலிஸின்
இரும்புக்கரத்தின் கீழ் ஆலையை மீண்டும்
திறக்கிறது
By Palash Roy and Arun Kumar
23 August 2012
use this version to print | Send
feedback
மாருதி
சுசுகி
கார்
தயாரிப்பு
நிறுவனத்தின்
மானேசர்
ஒன்றுசேர்ப்பு
ஆலையில்
நிலவும்
மோசமான
வேலை
நிலைமைகளுக்கு
தொழிலாளர்கள்
காட்டும்
அத்தனை
எதிர்ப்பையும்
அடித்து
நொருக்குவதற்கு
அந்நிறுவனமும்
காங்கிரஸ்
கட்சி
தலைமையிலான
ஹரியானா
மாநில
அரசாங்கமும்
ஒரு
தீவிரமான
பிரச்சாரத்தை
இணைந்து
முன்னெடுக்கின்றன.
இந்த
ஆலையின்
நிரந்தர
மற்றும்
ஒப்பந்தத்
தொழிலாளர்களில்
பலரை
அகற்றுவது,
போலிஸையும்
பாதுகாப்புக்
காவலர்களையும்
நூற்றுக்கணக்கில்
நிறுத்துவது,
அத்துடன்
போர்க்குணம்
பெற்ற
தொழிலாளர்களில்
அநேகம்
பேரை
இட்டுக்கட்டிய
குற்றச்சாட்டுகளின்
பேரில்
சிறையில்
தள்ளுவது
ஆகியவை
இதில்
இடம்பெற்றிருக்கின்றன.
மானேசர்
கார்
ஒன்றுசேர்ப்பு
ஆலையின்
ஒரு
மாத
கால
கதவடைப்பை
MSI
நன்கு
திட்டமிட்டு
செவ்வாயன்று
முடிவுக்குக்
கொண்டு
வந்தது.
ஆனால்
ஒரு
சில
நூறு
தொழிலாளர்கள்
மட்டுமே
ஆலைக்குள்
அனுமதிக்கப்பட்டனர்.
இந்த
கதவடைப்பை
“அகற்றுவதற்கு”
முந்தைய
நாட்களில்,
இந்தியாவின்
இந்த
மிகப்
பெரும்
கார்த்
தயாரிப்பு
நிறுவனம்
546 தொழிலாளர்களை
தன்னிச்சையாக
வேலையிலிருந்து
நீக்கியது.
இந்த
எண்ணிக்கை
நிறுவனத்தின்
1500 “நிரந்தர”த்
தொழிலாளர்
எண்ணிக்கையில்
மூன்றிலொரு
பங்கிற்கும்
அதிகமானதாகும்.
செப்டம்பர்
2 முதலாக
ஏறக்குறைய
1900 “ஒப்பந்த”த்
தொழிலாளர்களையுமே
தான்
ஆய்வுக்குட்படுத்தப்
போவதாகவும்
MSI
மேலும்
கூறியுள்ளது,
அவர்களில்
பெரும்பான்மையோரை
அது
வேலையிலிருந்து
அகற்றலாம்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின்
தூண்டுதலின்
பேரில்
அரசாங்கம்
134 தொழிலாளர்களை
சிறையில்
தள்ளியிருக்கிறது,
அத்துடன்
நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள்
கைதுக்கு
அஞ்சி
தங்களது
சொந்தக்
கிராமங்களுக்கு
தப்பித்து
ஓடியிருக்கின்றனர்.
சிறையிலடைக்கப்பட்டவர்களில்
சென்ற
ஆண்டில்
நிறுவனத்தின்
எடுபிடித்
தொழிற்சங்கத்திற்கு
எதிராக
தொழிலாளர்களால்
சுயாதீனமாக
உருவாக்கப்பட்டதான
மாருதி
சுசுகி
தொழிலாளர்கள்
சங்கத்தின்
(MSWU)ஒட்டுமொத்தத்
தலைமையும்
அடங்கும்.
MSI
இன்
“மறுதிறப்பு”
தடங்கலின்றி
நடைபெறுவதை
உறுதி
செய்வதற்கு,
காங்கிரஸ்
கட்சி
தலைமையிலான
மாநில
அரசாங்கம்
செவ்வாயன்று
1200 போலிசாரை
நிறுத்தியது,
ஆலையின்
பிரதான
வாயிலில்
மட்டும்
பல
நூறு
போலிசார்
நிறுத்தப்பட்டனர்.
நிறுவனமும்
தன்
பங்கிற்கு
100 பேர்
கொண்ட
ஒரு
புதிய
பாதுகாப்புப்
படையை
உருவாக்கியிருக்கிறது.
பிரபலமான
தேசியப்
பாதுகாப்புப்
படையின்
முன்னாள்
கமாண்டோக்களும்
இதில்
இடம்பெற்றிருக்கின்றனர்.
அத்துடன்
உள்ளூர்
பாதுகாப்பு
ஏற்பாட்டு
நிறுவனம்
ஒன்றிலிருந்து
ஆயுதமேந்திய
காவலர்களும்
கூட
வாடகைக்கு
அமர்த்தப்பட்டுள்ளனர்.
மானேசர்
ஆலையில்
நடந்த
தொழிலாளர்
மோதல்
முதலீட்டாளர்களை
அச்சுறுத்தக்
கூடும்
என்பதான
கவலையை
அரசாங்க
மற்றும்
வர்த்தகத்
தலைவர்கள்
வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அரசும்
நிறுவனமும்
ஒன்றுசேர்ந்து
மிகவும்
போர்க்குணம்
பெற்ற
தொழிலாளர்களை
வேட்டையாடுவதும்
MSI
இன்
பாதுகாப்பிற்கென
பெருந்திரளாய்
போலிஸ்
நிறுத்தப்பட்டுள்ளதும்,
ஒரேசமயத்தில்
தொழிலாள
வர்க்கத்திற்கும்
- இந்த
ஆலை
இந்தியாவின்
மிகப்பெரும்
தொழிற்துறைப்
பகுதியில்
அமைந்திருக்கிறது
- அத்துடன்
முதலீட்டாளர்களுக்கும்
ஒரு
செய்தியைச்
சொல்லும்
நோக்கம்
கொண்டதாகும்.
இந்தியாவின்
தேசிய
அரசாங்கத்திற்கு
தலைமை
கொடுக்கின்ற
காங்கிரஸ்
கட்சியும்,
இந்திய
அரசு
எந்திரமும்
வேலையிடங்களின்
வியர்வைக்கூட
நிலைமைகளை
பலவந்தமாக
உறுதி
செய்ய
தீர்மானத்துடன்
இருக்கின்றன
என்பதோடு
தொழிலாளர்களது
எதிர்ப்பைக்
களைந்தெறிவதில்
அவை
முதலாளிகளின்
அமலாக்கப்
பிரிவாகச்
செயல்படும்
என்பதுமே
அந்தச்
செய்தியாகும்.
ஜூலை
18 அன்று
தொழிலாளர்களுக்கும்
நிர்வாகத்திற்கும்
இடையிலான
ஒரு
ஆவேசமான
கைகலப்பு
தீவைப்பில்
முடிந்து,
ஒரு
முதுநிலை
மேலாளர்
உயிரிழப்பிலும்
மற்றும்
ஏராளமான
தொழிலாளர்களுக்குக்
காயத்திலும்
முடிந்த
அந்தச்
சம்பவத்தையே
மானேசர்
MSI
தொழிலாளர்களுக்கு
எதிரான
தமது
தாக்குதலுக்கான
சாக்காக
நிறுவனமும்
அரசாங்கமும்
காட்டி
வருகின்றன.
தொழிற்சங்க
தலைவர்களே
இந்த
கைகலப்பை
திட்டமிட்டு
நடத்தியதாகக்
குற்றம்
சாட்டும்
நிறுவனம்
அவர்கள்
மீது
தீவிரமான
கிரிமினல்
குற்றச்சாட்டுகளைப்
பதிவதற்கு
முனைந்து
வருகிறது.
அத்துடன்,
ஜூலை
18 சம்பவத்தில்
சம்பந்தப்பட்டதாக
அது
கூறும்
எந்த
ஒரு
தொழிலாளியையும்
நிறுவனத்தில்
இருந்து
அகற்றுவதற்கும்
அது
உறுதி
பூண்டிருக்கிறது.
உண்மையில்,
உலக
சோசலிச
வலைத்
தளம்
முன்னதாக
தெரிவித்திருந்ததைப்
போல,
ஜூலை
18 கைகலப்பு
என்பது
நிர்வாகத்தின்
திட்டமிட்ட
சீண்டல்
நடவடிக்கையாகும்.
ஒரு
தொழிலாளி
தன்னை
ஒரு
சூபர்வைசர்
சாதியைக்
குறிப்பிட்டு
முறையற்று
திட்டியதற்கு
எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து
அத்தொழிலாளியை
நிறுவன
அதிகாரிகள்
பணியிடைநீக்கம்
செய்தனர்.
இந்த
சஸ்பென்சன்
நடவடிக்கையில்
கோபமடைந்த
தொழிலாளர்கள்
எதிர்ப்பினைத்
தொடங்கினர்,
பதிலாக
அந்த
சூபர்வைசர்
மீது
தான்
ஒழுங்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டுமென
அவர்கள்
கோரினர்.
இந்தப்
பிரச்சினை
குறித்து
MSWU
தலைவர்கள்
நிர்வாகத்தின்
பிரதிநிதிகளுடன்
விவாதித்துக்
கொண்டிருந்த
சமயத்தில்,
நூற்றுக்கணக்கிலான
நிறுவன-ஏற்பாட்டிலான
அடியாட்கள்
கையில்
ஆயுதங்களுடன்
தொழிலாளர்களை
மிருகத்தனமான
தாக்கி,
ஒரு
பெரும்
மோதலுக்குச்
சீண்டினர்.
(காணவும்:
“இந்தியா:
மாருதி
சுசுகி
தொழிலாளர்களுக்கு
எதிரான
வேட்டையைத்
தொடக்குகிறது”)
மாருதி
சுசுகி
நிறுவனம்
அதன்
தொழிலாளர்களை
வேலையிலிருந்து
அகற்றுவதை
ஆணவத்துடன்
நியாயப்படுத்திய
அதன்
தலைவர்
ஆர்.சி.பார்கவா
கூறினார்:
“
எங்களுக்கு
அவர்கள்
மேல்
நம்பிக்கை
போய்
விட்டது.
மறுபடியும்
இன்னும்
நிறைய
பேர்
அடையாளம்
காணப்பட்டு
அவர்களுக்கும்
(வேலைநீக்க)
அறிவிக்கை
அனுப்பப்படும்
சாத்தியமும்
உள்ளது.”
நிறுவனம்
அது
ஆண்டாண்டு
காலமாய்
ஒப்பந்தத்
தொழிலாளர்களை
பயன்படுத்தும்
முறையை
- அதாவது
அங்கீகாரமற்ற
நிரந்தர
உற்பத்தித்
தொழிலாளர்களாக
இருப்பார்கள்
ஆனால்
அவர்களுக்கு
மிகக்
குறைந்த
அளவே
ஊதியம்
கிட்டும்
- கைவிட
முடிவு
செய்திருந்ததாக
ஊடகச்
செய்திகள்
கூறின.
இனிமேல்
MSI
தனது
தொழிலாளர்
படையின்
ஐந்தில்
ஒரு
பகுதியை
குறுகிய
கால
ஒப்பந்தப்
பணிகளில்
ஆனால்
“மையமாயில்லாத”
வேலைகளுக்கு
மட்டும்
பணியிலமர்த்தும்.
இடைப்பட்ட
காலத்தில்
அது
நடப்பு
நிரந்தர
மற்றும்
ஒப்பந்தத்
தொழிலாளர்களில்
இருந்தும்
மற்றும்
புதிதாக
நியமிக்கப்பட்டவர்களிலும்
சிறப்பாக
சோதிக்கப்பட்டவர்களில்
இருந்தும்
மிகவும்
கீழ்ப்படிகின்ற
தன்மை
கொண்ட
தொழிலாளர்களைக்
கொண்ட
ஒரு
புதிய
“நிரந்தர”த்
தொழிலாளர்
படையை
உருவாக்கும்.
இப்போதிருக்கும்
1,869 ஒப்பந்தத்
தொழிலாளர்களில்
1,200க்கும்
அதிகமான
பேருக்கு
வேலையளிப்பு
நிறுத்தப்பட
எதிர்பார்ப்பதாய்
MSI
அதிகாரிகள்
தெரிவித்ததாகக்
கூறப்படுகிறது.
546
நிரந்தரத்
தொழிலாளர்களை
தன்னிச்சையாக
நீக்கிய
செயலுக்கு
ஒரு
சட்டப்பூர்வ
போர்வையை
அளிப்பதற்கான
ஒரு
முயற்சியில்,
நிறுவனம்
இந்தத்
தொழிலாளர்கள்
ஒவ்வொருவரது
வங்கிக்
கணக்கிலும்
50,000 ரூபாய்
முதல்
70,000 ரூபாய்
வரை
(சுமார்
900
அமெரிக்க
டாலர்கள்
முதல்
1,275
அமெரிக்க
டாலர்கள்
வரை)வைப்பு
செய்திருக்கிறது.
தொழிலாளர்களின்
ஜூலை
மாத
சம்பளம்,
அத்துடன்
மூன்று
மாத
கால
ஊதியம்,
அத்துடன்
பணிக்காலத்தின்
ஒவ்வொரு
ஆண்டுக்கும்
15 நாட்களுக்கான
சம்பளம்
ஆகியவற்றின்
மொத்தத்
தொகை
இது
என
MSI
கூறுகிறது.
இத்தனை தொகையும்
சேர்த்தே
சுமார்
$1000
அளவுக்குத்
தான்
வருகிறது
என்பது
MSI
யிலும்
மற்றும்
ஒட்டுமொத்தமாக
இந்தியாவின்
வாகனத்
துறையிலும்
நிலவுகின்ற
வியர்வைக்கூட
நிலைமைகளை
அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது.
MSI
அதன்
தொழிலாளர்
படையை
தன்னிச்சையாக
வெளியேற்றச்
செய்யும்
முயற்சிக்கு
ஒட்டுமொத்த
மானேசர்-குர்கான்
தொழிற்துறைப்
பகுதியிலும்
தொழிலாளர்கள்
இடையே
எதிர்ப்பு
பெருகிக்
கொண்டிருக்கிறது.
வேலைநீக்கம்
செய்யப்பட்ட
மானேசர்
தொழிலாளர்களை
மீண்டும்
வேலையில்
சேர்க்கக்
கோரி,
ஆகஸ்டு
17 அன்று,
ஹோண்டா
மோட்டார்சைக்கிள்
மற்றும்
ஸ்கூட்டர்
இண்டியா,
சோனா
ஸ்டியரிங்,
சத்யம்
ஆட்டோ,
முஞ்சால்
ஷோவா,
ரிகோ
மற்றும்
ஹீரோ
மோட்டோகார்ப்
போன்ற
நிறுவனங்களில்
இருந்தான
சுமார்
7,000 தொழிலாளர்கள்
குர்கானில்
ஒரு
அரசாங்க
அலுவலகத்திற்கு
வெளியே
பேரணி
நடத்தினர்.
முக்கியமாய்,
சுயாதீனமான
MSWU விற்கு
எதிராக
18 மாத
காலமாய்
யுத்தம்
செய்து
வருகின்ற
MSI
இப்போது,
தான்
ஒரு
ஸ்தாபகமான
தொழிற்சங்கக்
கூட்டமைப்பிடம்,
அதாவது
இந்தியாவின்
அரசியல்
கட்சிகளில்
ஒன்றுடன்
இணைந்த
ஒரு
அதிகாரத்துவ
எந்திரத்திடம்,
மானேசர்
தொழிலாளர்களை
“பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு”
கேட்கலாம்
என்பதாய்
யோசனை
தெரிவித்துள்ளது.
MSI
இன்
தலைமை
செயல்பாட்டு
அதிகாரி(நிர்வாகம்)எஸ்.ஒய்.சித்திக்
அறிவித்தார்:
“ஜூலை
18 சம்பவத்தின்
வெளிச்சத்தில்,
ஒரு
வளர்ச்சி-நோக்கிலான
வர்த்தக-ஆதரவு
வெளிப்புற
சங்கம்
நிறுவனத்
தொழிலாளர்களுக்கு
உதவிகரமாக
இருக்குமா
என்றும்
நாங்கள்
ஆராயலாம்.
இது
எங்களுக்கு
சுயபரிசோதனைக்கு
அவசியமான
ஒன்றாக
இருக்கும்.
முதிர்ச்சி
வாய்ந்த
சரியாக
சிந்திக்கக்
கூடிய
ஒரு
தொழிற்சங்கம்
வளர்ச்சி
நோக்கிலமையும்.
அத்தகையோர்
வன்முறையில்
ஈடுபட்டிருக்க
முடியும்
என
நான்
கருதவில்லை.”
அனைத்திந்திய
தொழிற்சங்கப்
பேரவை(AITUC)மற்றும்
இந்திய
தொழிற்சங்கங்களின்
மையம்(CITU)ஆகிய
ஸ்ராலினிச
நாடாளுமன்றக்
கட்சிகளுடன்
இணைந்த
சங்கங்கள்
உள்பட
உத்தியோகபூர்வ
தொழிற்சங்கங்கள்
எல்லாம்
எவ்வாறு
மானேசர்
தொழிலாளர்களைத்
திட்டமிட்டு
தனிமைப்படுத்தியிருக்கின்றன
என்பதையும்
தொழிலாளர்களை
எவ்வாறு
போராட்டங்களை
விலைபேசிய
ஒப்பந்தங்களை
ஏற்றுக்
கொள்ள
நெருக்குதலளித்திருக்கின்றன
என்பதையும்
MSI
தெளிவாய்க்
குறித்துக்
கொண்டிருக்கிறது.
வேலையிழந்த
MSI
தொழிலாளர்கள்
தங்களின்
சார்பாகத்
தலையீடு
செய்வதற்கு,
நிறுவனத்துடன்
எந்த
அரசாங்கம்
கைகோர்த்து
வேலை
செய்து
கொண்டிருக்கிறதோ
அதே
காங்கிரஸ்
கட்சி
தலைமையிலான
மாநில
அரசாங்கத்திற்கு,
அழுத்தமளிப்பதற்கு
தங்கள்
சக்தியைச்
செலவிட
வேண்டும்
என்று
தான்
இப்போதும்
கூட
AITUC
வும்
CITU வும்
ஆலோசனையளித்துக்
கொண்டிருக்கின்றன. |