சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande meets US-backed Syrian “opposition”

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்த்தரப்பை சந்திக்கிறார்

By Antoine Lerougetel
24 August 2012
use this version to print | Send feedback

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) ஐச் சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், சிரியாவிற்கான புதிய ஐ.நா. மத்தியஸ்தர், கோபி அன்னனுக்கு பதிலாக வந்துள்ள லக்டர் பிராஹ்மியை, சிரிய தேசியக் குழு SNC என சுதந்திர சிரிய இராணுவத்தின் FSA அரசியல் பிரிவின் அதிகாரிகளை செவ்வாயன்று சந்தித்துப் பேசுமுன்,  திங்களன்று சந்தித்தார்.

லக்டர் பிராஹ்மியைப் பேட்டி கண்டபின், ஹாலண்ட், “பஷர் அல்-அசாத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றினால் ஒழிய [சிரியாவில்] எத்தகைய அரசியில் தீர்வும் வரமுடியாது என்றார்.

கட்டார் சிற்றரசரான ஷேக் ஹமத் பென் கலிபா அல்-தனியையும் ஹாலண்ட் சிரியா பற்றி விவாதிக்கச் சந்தித்தார். கடந்த ஆண்டு நேட்டோப் போரில் லிபிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு சிற்றரசர் ஏராளமான நிதியங்களும் ஆயுதங்களையும் கொடுத்திருந்தார்; கட்டார் மீண்டும் அமெரிக்க ஆதரவுடைய  சிரியச் சக்திகளுக்கும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசத்தை அகற்றும் நோக்கத்தில் நிதியமும் ஆயுதங்களையும் கொடுக்கிறது.

பிரெஞ்சு வலதுசாரிக் கட்சிகளால் அசாத்-எதிர்ப்பு சக்திகளுக்கு போதுமான ஆதரவைக் கொடுக்கவில்லை என்று குறைகூறப்பட்டுள்ள நிலையில், ஹாலண்ட் தான் அமெரிக்காவின் டமாஸ்கஸில் ஆட்சிமாற்றக் கொள்கைக்கு ஊக்கத்துடன் ஆதரவு தருவதைக் காட்ட ஆர்வத்துடன் உள்ளார்; அதபோல் தனக்கு முன் பதவியில் இருந்த கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் அடிச்சுவட்டைத் தொடர்வதாகக் காட்டிக் கொள்ளவும் விரும்புகிறார். பிரெஞ்சு மற்றும் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் நோக்கம் சிரியாவில் ஒரு கைப்பாவை அசாங்கத்தை நிறுவதல் ஆகும், அது ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு ஒரு தப்படியாகும். இந்நிலைப்பாடு வாஷிங்டனின் புதிய காலனித்துவ முறையில் எண்ணெய்ச்செழிப்பு மிகுந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் நலன்களை மாற்றி அமைப்பதற்கு உள்ள தடைகளை முறிக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

சிரியாவில் தன் நோக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக CIA அல்-குவேடாவுடன் இணைந்து செயல்படுவது குறித்துப் பெருகிய சான்றுகள் உள்ளன. (See also: Washington’s proxy in Syria: Al Qaeda)

தன்னுடைய வெளியறவு மந்திரியும், முன்னாள் பிரதம மந்திரியுமான லோரன்ட் ஃபாபியுஸ் பங்கு பெற்றிருந்த இந்த விவாதங்களுக்கு பின்னர், ஹாலண்ட் SNC க்கு அனைத்து எதிர்த்தரப்புச் சக்திகளையும் பரந்த முறையில் ஒன்றுபடுத்துவதற்கு, குறிப்பாக உள்ளூர் ஒருங்கிணைப்பு இணையங்கள், புரட்சிகரக் குழுக்கள் மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் ஆகியவற்றை ஒன்றுபடுத்த ஊக்கம் அளித்தார். புதிய சிரியாவின் நெறியான பிரதிநிதிகள் இதையொட்டி மிகச் சிறந்த சூழ்நிலையில் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கான மாறுதலுக்குத் தயாரிப்புக்கள் நடத்த முடியும் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

SNC பிரதிநிதிக்குழு வன்முறையைத் தவிர்க்க உழைக்க வேண்டும் என்று அவர் இடக்கரடக்கலாக அழைப்பு விடுத்தார்; உண்மையில் இது இராணுவம் சிரிய அரசாங்கத்தை அமெரிக்க சார்பு பினாமி சக்திகளால் நசுக்க வேண்டும் என்பதாகும். மேலும், ஹாலண்ட் FSA அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முதல்நாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா சிரியாமீது அமெரிக்கப் படையெடுப்பு குறித்த திட்டங்களை அறிவித்தார். (See also: “Obama threatens to invade Syria”)

SNC பிரதிநிதிக்குழு உறுப்பினர் Burhan Ghalioun —முன்னாள் SNC தலைவர், தற்பொழுது நியூ சோர்போன் பல்கலைக்கழகம் பாரிஸ் 3ல் அரபு ஆய்வுக்கூட மையத்தில் தலைமை பேராசிரயாராக இருப்பவர் அவருடைய இறுதி நோக்கம் அசாத் ஆட்சியை இராணுவரீதியாக அழித்தல் என்பது என்று அறிவித்தார். அக்கூட்டம், இன்று சிரியாவை ஆளும் கும்பல் சிதறிச் சிதைந்து அதிகாரத்தை விட்டு நீங்க வேண்டும், முற்றுப்புள்ளி. என்று அவர் கூறினார்.

ஹாலண்டின் கருத்துக்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் நேரடியான ஆயுதத் தலையீட்டிற்கான தயாரிப்புக்களை ஒரு தன்னாட்சித் தேசிய ஜனநாயகப் புரட்சி இயக்கமாக அளிக்கும் வடிவமைப்புக் கொண்டவை ஆகும். உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்கள், புரட்சிக்குழுக்கள் பற்றிய அவருடைய குறிப்பு கவனமான சொல்லாட்சியைக் கொண்டது; SNC  மற்றும் FSA க்குஜனநாயக, ஏன் இடது நெறிகூடக் கொடுக்கும் தன்மையை உடையவை. ஆயினும்கூட, இந்த அமைப்புக்கள் முக்கியமாக இஸ்லாமியவாத அரசியல் வாதிகளை, முஸ்லிம் பிரதர்ஹுட், முன்னாள் பாத்திஸ்ட்டுக்கள் மற்றும் பல மேலை உளவுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள், சுற்றியுள்ளவர்கள் ஆகியோரைத்தான் கொண்டுள்ளன.

 

Le Monde ஆகஸ்ட் 8ல் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், EHESS எனப்படும் சமூக அறிவியல்களின் முன்னேற்ற ஆய்வுகள்கூடம் என்பதில் டாக்டர் பட்டத்திற்குப் படிக்கும் மாணவரான Nora Benkorich LCC உள்ளூர்ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற பல அமைப்புக்களையும் ஆராய்ந்தார்; இவை பலநேரமும் சிரிய எதிர்த்தரப்பின்” “புரட்சிகரப் பிரிவு அல்லது சமயச்சார்பற்ற பிரிவு எனக் கூறப்படுகின்றன.

பென்கோரிச்சின் அறிக்கை, பிரெஞ்சு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ இடதுகள், LCC அமெரிக்க கூட்டில் இருந்து சுயாதீனமானவை, வெளிப்படையான இஸ்லாமியக் குழுக்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை சிதைக்கின்றது. இவர் LCC, SNC  யில்10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்று எழுதியுள்ளார். அவர்கள் FSA உடன் ஒத்துழைக்கின்றனர், ஒரு குறைந்தப்பட்ச சர்வதேச தலையீட்டைத்தான் விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஹமா நகர LCC யின் முசப் அல்-ஹமதீயை இவர் மேற்கோளிடுகிறார்: சர்வதேச சமூகம் பஷர் அல்-அசாத் ஆட்சி வன்முறை, கொலை, குண்டுகள் என்ற சொல்லாட்சியைத்தான் புரிந்து கொள்கிறது  என்பதை அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.... சர்வதேச சமூகம் சிரிய மக்களுக்கு இந்த ஆட்சியை அகற்றுவதற்கு ஆயுதங்களும் இராணுவ ஆதரவையும் FSA  க்கு கொடுக்க வேண்டும், இராணுவ அளவில் பறக்கக்கூடாத பகுதியை நிறுவவும், இலக்கு வைக்கப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு உதவவும் வேண்டும் என்று விரும்புகிறோம்.

 “புரட்சிக் குழுக்கள் என்று ஹாலண்ட் குறிப்பிடுவது GCSR எனப்படும்  சிரியப் புரட்சிப் பொது ஆணையமாக இருக்கலாம். ஆகஸ்ட் 2011ல் அமைக்கப்பட்ட இப்பிரிவு, பென்கோரிச்சின் கருத்துப்படி கிட்டத்தட்ட 150 உள்ளூர் குழுக்களைக் கொண்டுள்ளது. இது இஸ்லாமிய ஆன்மீக, பண்பாட்டு, அறநெறி மரபியத்தைப் பெற்றுள்ளதாக கூறுகிறது. முஸ்லிம் பிரதர்ஹுட் மற்றும் SNC  யில் முணுமுணுப்புக்கள் இருந்தாலும், “SNC யில் இதன் பிரதிநிதிகள் சேருவது குறித்த பேச்சுக்களில் முன்னேற்றம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்டானில் ஒரு CGRS தொண்டர் கூறியதாக அவர் மேற்கோளிடுவது: அவரும் அவருடைய குழு உறுப்பினர்களும் ஒரு மறைமுக வெளித் தலையீட்டிற்கு ஆதரவு கொடுக்கின்றனர்; அதில் பறக்கக் கூடாத பகுதி மற்றும் FSA க்கு பொருட்கள் உதவி மட்டும்தான், லிபியாவில் இருந்தது போல் இருக்க வேண்டும்.