WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
கிரேக்கத்தில் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தத்தை
அதிகரிக்கிறது
By Christoph Dreier
23 August 2012
use this version to print | Send
feedback
திங்களன்று
கிரேக்க வெளியுறவு மந்திரி டிமிட்ரிஸ் அவ்ரமோபௌலோஸ்
(Dimitris Avramopoulos)
ஜேர்மனிய வெளியுறவு
மந்திரி கைடோ வெஸ்டர்வெலேயை பேச்சு வார்த்தகளுக்காக சந்தித்தார். கிரேக்கப் பிரதம
மந்திரி அன்டோனிஸ் சமரஸ் ஜேர்மனிக்குப் பயணித்து அங்கு சான்ஸ்லர் அங்கேலா
மேர்க்கலுடன் விவாதங்களை நடத்திய பின்,
Avramopoulos
இந்த
வாரம் வெள்ளியன்று அவரைச் சந்திப்பார்.
இப்பேச்சுக்கள்,
கிரேக்கம் ஏற்கனவே
உடன்பட்டிருக்கும் வெட்டுக்களை இரக்கமின்றிச் செயல்படுத்துவதற்கு அழுத்தம்
கொடுப்பதோடு இன்னும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு உறுதியளிப்பதற்கு அழுத்தம்
கொடுக்கும் நோக்கத்தையும் கொண்டவை.
இந்த ஆண்டு முன்னதாக
கிரேக்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே
கொண்டிருந்த கடன் உடன்படிக்கையுடன் இயைந்த வகையில், ஏதென்ஸ் அடுத்த இரண்டு
ஆண்டுகளில் அதன் வரவு-செலவுத்
திட்டத்தில் இருந்து குறைந்தப்பட்சம் 11.5 பில்லியன் யூரோக்களைக் குறைக்க வேண்டும்.
அவ்ரமோபௌலோஸை சந்தித்தபின், வெஸ்டர்வெலே
“உடன்பாடுகள்
கணிசமான முறையில் குறைக்கப்பட்டுவிடுவதையும்”
பேர்லின்
எதிர்க்கும், மிகக் குறைந்த சலுகைகள் கொடுக்கப்படலாம் அல்லது சிறிதும்
கொடுக்கப்படாமலும் போகலாம் என்பதைத் தெளிவு படுத்தினார். கிரேக்கத்தின் வருங்காலம்
முக்கூட்டு எனப்படும்
—IMF, ஐரோப்பிய
ஒன்றிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி—
அமைப்புகளின் கைகளில்தான் உள்ளது; இவை எந்த அளவிற்குக் கடுமையான
சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் உறுதிமொழிகளை ஏதென்ஸ் கடைப்படித்துள்ளது
என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளன.
நிகோசியாவில் செப்டம்பர் 14ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள யூரோப்பகுதி நிதி
மந்திரிகள் மாநாட்டில் உரிய நேரத்தில் வெளியிடும் வகையில் இந்த அறிக்கை
தயாரிக்கப்பட உள்ளது. இக்கூட்டம் மொத்தம் உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ள 31.5
பில்லியன் யூரோக்களின் அடுத்த தவணை எப்பொழுது கொடுக்கப்படலாம் என்பதைப் பற்றி
முடிவெடுக்கும். முதலில் இந்த ஆண்டு ஜூன் மாதம் இது கொடுக்கப்படுவதாக இருந்தது; இது
கிடைக்காவிட்டால் கிரேக்கம் ஒரு சில வாரங்களுக்குள் திவாலாகிவிடும், யூரோப் பகுதியை
விட்டு நீங்கும் கட்டாயத்திற்கு உட்படும்.
இரண்டு
நாட்களுக்கு முன்பு ஜேர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் கூடியதை தொடர்ந்து இத்தேதி
நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அந்நீதிமன்றம்
ESM
எனப்படும் ஐரோப்பிய
உறுதிப்பாட்டுக் கருவி (ESM)
யின்
சட்டபூர்வத்தன்மை குறித்து தீர்ப்பு அளிக்க உள்ளது. நலிவுற்றிருக்கும்
பொருளாதாரங்களுக்குப் புதிய கடன்களைக் கொடுப்பதற்கும் ஒருவேளை கிரேக்கம் யூரோப்
பகுதியில் இருந்து வெளியேறினால் வரக்கூடிய நிதியக் கொந்தளிப்பைத் தடுப்பதற்குமாக
ESM
நிறுவப்பட்டது.
யூரோக்
கூட்டம் நடப்பதற்கு முன்பு முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் கிரேக்கத்தின் திவால்தன்மை
வரக்கூடியது பற்றி விவாதிக்கின்றனர்; முன்னணி வலதுசாரித் தலைவர்கள் அத்தகைய
நடவடிக்கை முற்றிலும் தேவை என அறிவிக்கின்றனர். பவேரியாவின் நிதி மந்திரி
Markus Söder (CSU,
கிறிஸ்துவ சமூக
ஒன்றியம்), “யூரோப்
பகுதியும் தன் பற்களைக் காட்டக்கூடும் என்பதற்கு உதாரணமாக ஏதென்ஸ் விளங்க வேண்டும்”
என்றார். இத்தகைய கருத்துக்கள் ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற
நாடுகளுக்கு இன்னும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களை மேற்கொள்ள அழுத்தம்
கொடுக்கின்றன.
முதல்
தடவையாக ஜேர்மனியத் தொழில்துறைக் கூட்டமைப்பின்
(Federation of German
Industry -BDI)
தலைவரான ஹான்ஸ்-பீட்டர் ஹைட்டில், கிரேக்கம் வெளியேறுவதற்கு ஆதரவைத்
தெரிவித்துள்ளார்.
Business Week
க்குக் கொடுத்துள்ள பேட்டி
ஒன்றில் அவர் கடன் உடன்பாட்டு விதிகளை செயல்படுத்தாவிட்டால்,
“கிரேக்கத்திற்கு
யூரோப்பகுதியில் இடம் இனி இல்லை”
என்று
வலியுறுத்தியுள்ளார். இத்தகைய வெளியேற்றம் ஜேர்மனிய பொருளாதாராத்திற்கு
அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் தொடர்ந்து கூறினார். இது
BDI
உடைய
நிலைப்பாட்டில் கணிசமான மாற்றம் ஆகும்; முன்னதாக இது கிரேக்கம் ஜேர்மனியின்
ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாக்க நிதிய ஒன்றியத்தில் வைக்கப்பட வேண்டும் என்று
அறிவித்திருந்தது.
ஹைட்டிலுக்கு கன்சர்வேடிவ் ஆளும் கட்சிகளின் பாராளுமன்றக் குழுக்களின் ஆதரவு
கிடைத்துள்ளது.
“நமக்குத்
தேவையானது உடன்பாடுகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்”
என்று
CDU
கிறிஸ்துவ ஜனநாயக
ஒன்றியத்தின்
Michael Fuchs
தெரிவித்தார். செயல்படுத்துவதில் தவறு என்ற முடிவிற்கு முக்கூட்டு வந்தால்,
ஏதென்ஸிற்கு இன்னமும் உதவி மறுக்கப்பட வேண்டும்;
“அதன்
பின் கிரேக்கத்திடம் பணமும் இராது, வேறு எதுவும் இராது”
என்று அவர் விளக்கினார்.
பின்லாந்து
நாட்டின் வெளியுறவு மந்திரி எரிக்கி துவோமியோஜாவும் சமிபத்தில் தன்னுடைய நாடு
கிரேக்கம் வெளியறுவதற்கு தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்பது மட்டுமின்றி, யூரோ
சரிவிற்கும் தயாரிப்பை நடத்துவதாகக் கூறினார்.
“இது
பற்றி ஒவ்வொருவரும் சோதனை நடத்துகின்றனர், ஆனால் பகிரங்கமாக விவாதிக்கப்பட
முடியாது, கூடாது”
என்று அவர்
BBC
இடம் கூறினார். ஆஸ்திரிய
வெளியுறவு மந்திரி மைக்கேல் ஸ்பின்டிலெக்கரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து
கிரேக்கம் போன்ற நாடுகள்
“தூக்கி
எறியப்படுவதற்கான”
வாய்ப்புக்களைக் காண்பதாகக் கூறினார்.
ECB
யின் நிர்வாகக்குழு
உறுப்பினர் Jörg
Asmussen, இதுவரை
கிரேக்கம் யூரோப்பகுதிக்குள் இருக்க வேண்டும் என்று கூறியவர்
Frankfurter Rundschau
இடம் கிரேக்கத்தின் விதி இறுதியில் அதன் அரசாங்கத்தின் கைகளில்தான் உள்ளது என்றார்.
கிரேக்கம் திரும்பிச் செல்லுதல் என்பது
“நிர்வகிக்கப்பட்டுவிடலாம்”
என்றார் அவர். அதே நேரத்தில் அவர்
ECB
கடன்பட்டுள்ள ஐரோப்பியப் பகுதி நாடுகளின் அரசாங்கப் பத்திரங்களை
வாங்குவதற்குத் தயார், இதையொட்டி அவற்றின் வட்டிப் பணங்கள் குறையும் என்றார்.
இத்தகைய கருத்து யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம் வெளியேறுவதனால் ஏற்படும்
பாதிப்பை ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் மீது சுமத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களும் கிரேக்கம்
கட்டமுடியாமல் போகும், அதையொட்டி வெளியேறும் மூலோபாயம் என்பதை தயாரிக்கின்றன. ஆனால்
முதலில் கிரேக்கத்தை திவால்தன்மைக்குத் தள்ளும் உந்துதலின் அச்சுறுத்தல்,
சமரஸ் அரசாங்கத்தை மேலும் சிக்கன நடவடிக்கைகள் எடுக்குமாறு அழுத்தம் கொடுப்பதுதான்;
இதையொட்டி கிரேக்கம் வெளியேற்றப்படுவதற்கு முன் எலுமிச்சம் பழம் போல் பிழியப்பட்டு
விடும். கிரேக்கத் தொழிலாளர்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்; இது கிரேக்க,
ஐரோபிய வங்கிகள் தங்கள் கடன்களை மிக அதிகளவு வட்டியுடன் திரும்பப் பெறுவதற்கு
உறுதியளிக்கும்.
கடந்த திங்கள்தான் ஏதென்ஸ்
ECB
க்கு 3.2 பில்லியன் யூரோக்களை எஞ்சியுள்ள அரசாங்க பத்திரங்களுக்காக அளித்தது.
வெளிச்சந்தையில் பத்திரங்களின் பெயரளவு மதிப்பில் இருந்து 70% த்தான்
ECB
வாங்கியது என்று
Suddeutsche Zeitung
தெரிவிக்கிறது. இப்பொழுது கிரேக்கம்,
மதிப்பின் 100% யும் கொடுப்பது மட்டும் இல்லாமல், கூடிவிட்ட வட்டியையும் கொடுக்க
வேண்டும். 50 பில்லியன் யூரோக்களுக்கும் மேலான கிரேக்க அரசாங்க பத்திரங்களை
ECB
கொண்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே
நேரத்தில் கிரேக்கத்தின் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் இப்பொழுது கடும் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளன. 2012ன் முதல் ஏழு மாதங்களில் ஏதென்ஸ் அதன்
வரவு-செலவு
திட்ட
பற்றாக்குறையைக 3.07 பில்லியன் யூரோக்களுக்குக் குறைத்துள்ளது-- கடனுக்குத்
திருப்பப்படும் பணம் இதில் சேர்க்கப்படவில்லை. இது முக்கூட்டுடன் கடன்
உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 4.53 ஐவிடக் கணிசமாகக் குறைவு. ஆயினும்கூட,
கிரேக்கத்தின் கடன் தரங்கள் தொடர்கின்றன; எழுச்சியும் பெறுகின்றன. ஏனெனில்
வட்டிவிகிதங்கள் அவற்றிற்கு அதிகம். மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும்
கிரேக்க அரசாங்கக் கடன் 23.2 பில்லியன் உயர்ந்து 300 பில்லியனுக்கும் அதிகமாயிற்று.
சிக்கன
நடவடிக்கைகள் கிரேக்கத்தை மந்த நிலையில் தள்ளுவதால் உயரும் வட்டி விகிதங்களினாலும்,
சரியும் வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினாலும், ஏதென்ஸ் அதன் வரவு-செலவுத்
திட்டத்தை குறைந்தப்பட்சம் இன்னும் 11.5 பில்லியன் யூரோக்களை அடுத்த இரண்டு
ஆண்டுகளில் குறைத்து, முக்கூட்டுடன் கொண்டுள்ள முதல் உடன்பாட்டை பூர்த்தி செய்ய
வேண்டும். Der
Spiegel
தெரிவித்துள்ளபடி இந்த நிதி இப்பொழுது 14 பில்லியன்
யூரோக்களாகிவிட்டது என முக்கூட்டு கருதுகிறது. வெட்டுக்களில் இருந்து
சேகரிக்கப்படும் ஒவ்வொரு சென்ட்டும் நேரடியாக கிரேக்க, ஐரோப்பிய வங்கிகளுக்கு
செல்லுகிறது.
முதலில்
சமரஸ்,
மேர்க்கெல் மற்றும்
ஹாலண்டை வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களை செயல்படுத்தும் கால அளவை இரண்டில் இருந்து நான்கு ஆண்டுகள்
அதிகரிக்க வேண்டும் எனக் கோருவதாகத் திட்டமிட்டிருந்தார். பல அச்சுறுத்தல்கள்
அலைகளுக்குப் பின், அவர் இத்திட்டத்தை கைவிட்டுவிட்டார். மாறாக, அவருடைய மந்திரிசபை
இன்னும் பல சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முயல்கிறது. கிரேக்க நாளேடு
Kathimerini
கூற்றுப்படி
மந்திரிசபை ஏற்கனவே அறிவித்திருந்த 11.5 பில்லியன் யூரோ வெட்டுக்களையும் விட
இன்னும் 2 பில்லியன் வெட்டுக்களைச் சுமத்த திட்டமிட்டுள்ளது. இப்பணத்தில் மூன்றில்
ஒரு பகுதி,
ஓய்வுதியங்கள், ஊதியங்கள் இவற்றில் இருந்து சேமிக்கப்படும்;
வெட்டுக்கள் ஏற்கனவே அழிவிற்கு உட்பட்டுள்ள சுகாதார, கல்விப் பிரிவுளிலும்
மேற்கொள்ளப்படும்.
இந்த
நடவடிக்கைகள் வறியநிலையை பெருக்கி மந்தநிலையையும் ஆழ்மைப்படுத்தும். மூன்று
ஆண்டுகளுக்கு முன் சிக்கன நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தத் தொடங்கியதில் இருந்து,
கிரேக்கப் பொருளாதாரம் 20% சுருங்கிவிட்டது. ஒரு கிரேக்கத் திவாலைத் தடுப்பது
என்பதைவிட இந்த வெட்டுக்கள் அது வந்துவிடும் என்பதைத்தான் காட்டுகின்றன.
திவால்தன்மை
மற்றும் யூரோப்பகுதியில் இருந்து வெளியேற்றம் என்பது வெறும் வெற்று அச்சுறுத்தல்கள்
அல்ல. இது செப்டம்பரில் நடக்குமா என்பது இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.
இத்தாலிய, ஸ்பெயின் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் கிரேக்கம் யூரோப்பகுதியில்
இருந்து வெளியேறுவது என்பது தங்களுடைய அரசாங்க பத்திரங்களுக்கும் கணக்கிலடங்கா
விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றன. இதைத்தவிர, பல ஐரோப்பிய வங்கிகளும்,
குறிப்பாக ஐரோப்பிய மத்திய வங்கி,
ஏராளமான கிரேக்க அரசாங்க பத்திரங்களை கொண்டுள்ளன; திவால் என்றால்
அவை இவற்றை நஷ்டக் கணக்கில்தான் எழுத முடியும்.
இந்த
பொருளாதார
விவாதங்கள்,
அவை தொழிலாள
வர்க்கத்தின் மீது மிருகத்தனத் தாக்குதல்களை அடிப்படையாக கொண்ட யூரோவை
வைத்திருந்தாலும் சரி, கிரேக்கத்தை திவால்தன்மைக்கு தள்ளி அதன் தேசிய நாணயமான
டிராஷ்மாவை மீட்டாலும் சரி ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் திவால்
தன்மையைத்தான்
பிரதிபலிக்கின்றன. கிரேக்கம் ஆழ்ந்த கடனில் மூழ்கி, கடனை ஒட்டி
அழிவைச் சந்தித்து, திருப்பிக் கொடுப்பதில் தவறு ஏற்பட்டு டிராஷ்மாவிற்கு
திரும்புவது என்பது கிரேக்க நாணயச் சரிவு உலக நிதியச் சந்தைகளில் பெரும் பாதிப்பு,
பெரும் பணவீக்கத்தை ஏற்படுத்துவதுடன், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநலச்
செலவுகளை சிதறடித்துவிடும். |