WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
UK media lines up behind campaign to extradite Assange and silence WikiLeaks
இங்கிலாந்து செய்தி ஊடகங்கள் அசாஞ்சை திரும்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
ஒப்படைத்து விக்கிலீக்ஸை மௌனப்படுத்தும் பிரச்சாரத்திற்குப் பின்னால் உள்ளன
By Julie Hyland
22 August 2012
விக்கிலீக்ஸையும் ஜூலியான் அசாஞ்சையும் சூனிய வேட்டையாடி,
மௌனப்படுத்த நடக்கும் முயற்சிகள் முழுவதிலும் பிரித்தானியச் செய்தி ஊடகங்கள் தவறான
பங்கைத்தான் கொண்டுள்ளன. இது அவரது அரசியல் தஞ்ச வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளலாம்
என்ற ஈக்வடோர் முடிவை தொடர்ந்து இப்பொழுது அந்த இலக்கு மேலும் புதிய ஆழத்திற்குச்
சென்றுவிட்டது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் இது இங்கிலாந்து அதிகாரிகள் ஸ்வீடன் அவரை
புகலிடம் பெற்றவனை திரும்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படை
உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகியது போது ஜூன் 12,
லண்டன் ஈகடோரியாவின் தூதரகம் தஞ்சம்.
இது இங்கிலாந்தின் அதிகாரிகள் ஸ்வீடன் அதிகாரிகளிடம் அவரை
ஒப்படைப்பது வெளிப்படையான நிலைமையில்,
விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூன் 12ம் திகதி லண்டனிலுள்ள ஈக்வடோரின்
தூதரகத்தில் புகலிடம் நாடினார்.
ஞாயிறன்று தூதரகத்தின் மாடத்தில் இருந்து விடுத்த தன் அறிக்கையில்,
அசாஞ்ச் சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு பிரித்தானியா எடுத்த முயற்சிகள் குறித்துப்
புதிய சான்றுகளைக் கொடுத்தார்; அது தூதரகத்தின் அங்கீகாரத்தை இரத்து செய்து பொலிஸ்
அவரைக் கைது செய்ய அனுப்புவதாக அச்சுறுத்தியிருந்தது. வாரத்தின் ஆரம்பத்தில் எப்படி
பொலிசார் உள் தீ நேரத்தில் தப்புவதற்கான அவசர வழிகள் மூலம் நுழைய முற்பட்டனர் என்ற
ஒலிகளைக் கேட்டது குறித்து அவர் விளக்கினார்.
இரகசியத்
தகவல்
வழங்கியதாக
கருதப்படும்
அமெரிக்க இராணுவ சிப்பாய் பிராட்லி
மானிங்
சிறையில் சித்திரவதைக்குட்பட்டு இருப்பது குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்தார்;
அமெரிக்கத் தலைமையிலான விக்கிலீக்ஸைத் துன்புறுத்துதல் முற்றுப்பெற வேணடும்
என்றும், தடையற்ற பேச்சு உரிமை, அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு ஆகியவை காக்கப்பட
வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
அசாஞ்சின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த பிரித்தானிய
அரசாங்கத்தைப் போலவே, செய்தி ஊடகமும் அவருடைய கருத்துக்களில் இருந்த சாராம்சம்
குறித்து ஏதும் கூற மறுத்துவிட்டன. பிளீட் ஸ்ட்ரீட்டில் நல்ல ஊதியம் பெறும்
எழுத்தாளர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களைப் போலவே ஜனநாயக உரிமைகள் குறித்து
இகழ்வுணர்வுதான் கொண்டுள்ளனர். இது வெளிப்படையாக வலதுசாரி எனத் தோன்றும் டெய்லி
மெயில் போன்ற செய்தித்தாட்கள் முதல் பெயரளவு தாராளவாத வெளியீடுகளான
கார்டியன் உட்பட அனைத்திற்கும் பொருந்தும்.
ஒரு நேர்மையான முறையில் அசாஞ்ச் அறிக்கையை சமாளிக்க முடியாத
நிலையில்,
இங்கிலாந்தின் அச்சு ஊடகங்கள் எடுத்துள்ள அணுகுமுறை இருவகைகளைக்
கொண்டுள்ளது.
முதலில் அவை அசாஞ்சின் தோற்றத்தை எள்ளி நகையாடின—மற்றவற்றுடன்
Monty Python
உடைய
Life
of Brian
உடன்
காட்சிகளை ஒப்பிட்டனர். கார்டியனில் லூக் ஹார்டிங் அசாஞ்ச் தூதரக மாடத்தில்
பேசியது
“எவரேனும்
உரக்கக் கத்தும் தருணம் போல்”
இருந்தது
– “மெசையாவில்
E
இல்லை!”.
‘E
ஒரு விஷமக்காரச் சிறுவன்”.
தன்னுடைய பங்கிற்கு டெய்லி மெயிலில்
Melanie Philips “நீதிக்கும்
மனித உரிமைகளுக்கும் போராடும் வீரர் எனக்காட்டிக் கொள்ளுவதற்காக”
அசாஞ்சையைக் கண்டித்தார். இவருடைய
“மாடத்தில்
இருந்து நாடகப்பாணியில் வந்த அறிக்கை இவரை வெட்டவெளியின் ஈவா பரோன் போல் செய்தது.”
இப்படி எள்ளி நகையாடும் இந்த வெற்று நபர்கள் யார்? விக்கிலீக்ஸும்
அசாஞ்சையும் உலக மக்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், கொலை, அசாதாரணக்
கடத்தல், சித்திரவதை, அடிப்படை உரிமைகளை மறைக்கச் சதி செய்தல் ஆகிய மகத்தான
குற்றங்கள் நடத்தியது குறித்துத் தகவல் கொடுத்தமைக்கு பொறுப்பு ஆவார்கள் என்பதை
அனைவரும் அறிவர்.
விக்கிலீக்ஸ் கசியவிட்ட
Collateral Murder video,
ஒட்டி
நேர்த்த கொலை பற்றிய வீடியோவை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்; இதில்
சிரிக்கும் அமெரிக்க அபாஷே ஹெலிகாப்டர் இயக்குபவர்கள் ஈராக்கிய குடிமக்களை
இயந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டு இரு குழந்தைகள் உட்பட டஜன் நபர்களைக் கொன்றனர்;
இத்தகைய கொடூரம் இரண்டு தொடர்புடைய அமெரிக்கர்களே ஒப்புக் கொண்டபடி,
“அன்றாட
நிகழ்வுகளாக”
அந்நாட்டை ஆக்கிரமித்த காலத்தில் இருந்தன. ஆனால் இதைப் பார்த்த
மில்லியன் கணக்கான மக்கள் அத்தகைய தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
இழிந்த ஒப்புமைகளும் கேலி உரையாடல்களும் அசாஞ்சே சூனிய வேட்டையில்
தொடர்புடைய உண்மையான பிரச்சினைகளை மறைக்க போதுமானவை அல்ல; எனவேதான் ஊடகங்களின்
முக்கிய தகவலளிப்பது தவறான தகவல்களைக் கொடுத்தல், அறநெறியில் உயர்ந்த தன்மையில்
பிறரைச் சாடல் என்று உள்ளன.
அசாஞ்சேயின் உரை
“தன்னைத்தானே
பாராட்டிக் கைதட்டிக் கொள்ளுவதில் நீண்டதாக இருந்தது, ஆனால் இந்த அனுப்புதல் வழக்கு
உண்மையில் எதைப் பற்றி என்பதைக் கூறவில்லை—ஒரு
பெண் கற்பழிக்கப்பட்டது, மற்றொரு பெண் பாலியலில் தாக்கப்பட்டது என்பதை.”
என்று
Sun
கூறியுள்ளது.
அசாஞ்ச்
“ஒரு
சுதந்திரப் போராளி என்பதால் ஈக்வடோரிய தூதரகத்தில் கிட்டத்தட்ட கைதியாக அவர் இல்லை,
ஸ்வீடனில் முற்றிலும் தொடர்பற்ற பாலியல் தாக்குதலுக்கு அவர் தேடப்படுவதால்தான்”
என்று இண்டிபெண்டென்ட் தலையங்கம் எழுதியுள்ளது.
இவற்றுள் மிகத் தீவிரமாக இருந்தது கார்டியன் ஆகும்.
“பிணையில்
இருந்து தப்பி ஓடியவர்”
என்று அசாஞ்ச் மீது குற்றம் சாட்டிய அது,
“கற்பழிப்பு,
பாலியத் தால்குதல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் இருந்து தப்ப முயலும் திரு
அசாஞ்ச் இப்பொழுது ஈக்வடோரிய தூதரகத்தில் பதுங்கியிருக்கிறார்”
என்று கூறியுள்ளது.
இத்தகைய உறுதிப்பாடுகள் தவறானவை ஆகும். அவருக்கு எதிரான
“குற்றச்சாட்டுக்களை”
அசாஞ்ச் தவிர்க்க இயலாது; ஏனெனில் ஸ்வீடனின் அரசாங்க வக்கீல் அலுவலகத்தில் இருந்து
பரபரப்புச் செய்தித்தாளான
Exmpressen
க்கு ஆகஸ்ட் 2010 கசியவிடப்பட்டதில் இருந்து பல முறை திரும்பக்
கூறப்பட்டது; அவற்றைப் பற்றி அசாஞ்சேக்குக் கூறப்படுவதற்கு முன்பே இது நடந்தது.
அசாஞ்சின் புகழை அழித்து விக்கிலீக்ஸை மௌனப்படுத்தும் நோக்கம் கொண்ட
பிரச்சாரம் கையாண்ட இழிந்த தந்திரங்கள் பற்றிய முதல் குறிப்பு இதுதான்.
ஆனால் இக்குற்றச்சாட்டுக்களைப் பற்றிய உண்மை, அவை வெறும்
குற்றச்சாட்டுக்கள் என்பதுதான். அதுவும் அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொண்ட,
இருதரப்பினரும் விரும்பி ஈடுபட்ட பாலியல் உறவு; பல நாட்களுக்குப் பின்தான் மாற்றுக்
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றும் கூட எக்குற்றச்சாட்டும் அசாஞ்ச் மீது
வைக்கப்படவில்லை.
அசாஞ்சை அழைத்துக் கொள்ளுவதற்காக ஸ்வீடன் அதிகப்படியாகவே நடந்து
கொண்டுள்ளது; குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்க வேண்டும் என்பதற்காக—ஒரு
ஐரோப்பிய கைதுப் பிடி ஆணையை வெளியிடுவதில் இருந்து, பல நீதிமன்ற வழக்குகளைத்
தொடர்ந்த அளவிற்கு—இவை
அனைத்துமே சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. தன்னுடைய தூதரகத்தில் விசாரிக்கப்படலாம்
என்று ஈக்வடோர் கூடக் கூறியிருந்தும் கூட ஸ்வீடனின் வக்கீல்கள் இங்கிலாந்தில்
அசாஞ்சை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
மிகவும் வினாவிற்கு உட்படுவதும், பூசலுக்குட்பட்ட பாலியல் தவறான
செயல் பற்றிய குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் அசாஞ்சே ஈக்வடோர் தூதரகத்தில் புகலிடம்
நாட வைக்கவில்லை. மாறாக ஈக்வடோர் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளபடி,
“விண்ணப்பதாரர்
ஒரு மூன்றாம் நாடு இறுதியில் அரசியல் குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்ற
அச்சத்தின்பேரில் புகலிட வேண்டுகோளை முன்வைத்துள்ளார்; அந்த நாடு ஸ்வீடனுக்கு
அனுப்பப்படுவதைப் பயன்படுத்தி அவரை மீண்டும் தன்னாட்டிற்கு அழைத்துச் சென்றுவிட
முடியும்.”
ஈராக் போர் செய்திகளை அக்டோபர் 22 வெளியிட அசாஞ்ச் தயார் செய்து
கொண்டிருக்கையில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கள் வெளிப்பட்டன; அவருடைய தயாரிப்பு
2004ல் இருந்து 2009 வரை அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பில் ஈராக்கிய பொலிஸ்
மற்றும் இராணுவத்தினர்கள் நடத்திய போர்க்குற்றங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்க
இருந்தது. இதே காலத்தில் ஒபாமா நிர்வாகம் விக்கிலீக்ஸிற்கு எதிராக ஒரு விசாரணையைத்
தொடங்கியது, அவருடைய வலைத் தளத்தை மூடுவதற்கான நிதிய முற்றுகையையும் தொடங்கியது
என்பது வரலாறு ஆகும்.
அவர் அனுப்பப்படுதல் குறித்து ஈக்வடோரின் அறிக்கை
“அமெரிக்காவிடம்
பிரித்தானிய, ஸ்வீடன் அல்லது ஆஸ்திரேலிய அதிகாரிகளால் தான் ஒப்படைக்கப்படக்கூடும்
என்று அசாஞ்ச் அஞ்சுகிறார்”
என்று குறிப்பாகத் தெரிவிக்கிறது; அந்நாட்டில் அவர்
“ஒற்று,
தேசத்துரோகம்”
தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளக்கூடும்.
“அமெரிக்க
அதிகாரிகள் அசாஞ்சுடன் பேச விரும்புவார்கள் என்பது பரந்து நினைக்கப்படுகிறது”
என்பதை பிலிப்ஸ் ஒப்புக் கொள்ளவேனும் செய்கிறார். ஏனெனில் அவரும் விக்கிலீக்ஸும்
“மேலை
நலன்கள்மீது உண்மையான சேதங்களைச் சுமத்தியுள்ளன”
என்று அவர் விளக்கம் தருகிறார்.
கார்டியனுடைய
தலையங்கம் இன்னும் தாழ்ந்து செல்கிறது. நாணமற்ற நேர்மையற்ற தன்மையில், இது
“பலமுறையும்
திரு அசாஞ்சின் ஆதரவாளர்கள் அவர் ஸ்வீடனுக்குச் சென்றால் தேசத்துரோகத்திற்கான
குற்றச்சாட்டை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார் என்ற புகாரைக்
கூறுகின்றனர்”
எனக்கூறியுள்ளது.
“ஆயினும்கூட
அத்தகைய நடவடிக்கைகளைத் துவக்கும் திட்டங்களை வாஷிங்டன் கொண்டிருப்பதாகத் தீவிரச்
சான்றுகள் இல்லை.”என
அது உறுதியாகக் கூறுகிறது.
ஒருவேளை இதை எழுதியவர்கள் ஆகஸ்ட் 2 பதிப்பில் தங்கள் செய்தித்தாளில்
கூறப்பட்டதைப் படிக்க வேண்டும்; அதில் அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸிற்கு
அமெரிக்காவில் வக்கீலாக இருக்கும் மைக்கேல் ரட்னர் தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க
கட்டுரையை வெளியிட்டு விளக்கியுள்ளார்:
“ஜூலியன்
அசாஞ்ச் அமெரிக்கா குற்றச்சாட்டைக் கொண்டுவருமோ என அச்சப்படுவது சரிதான்.”
“குழப்பமற்ற
அடையாளங்களில்”
இது தவிர்க்க முடியாதது என்கிறார் ரட்னர்.
“
வேர்ஜினிய மாநிலத்தில் அலெக்சாந்திரியாவில் ஒரு பெரு நடுவர் மன்றம்,
ஒற்று பற்றிய சட்டத்தின் மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டது; இச்சட்டம்
பேச்சுரிமையை இலக்கு கொள்கிறது. அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸ் குறித்து வந்துள்ள
ட்விட்டர் செய்திகள் அனைத்தையும் தருவித்தது. ஒரு
FBI
முகவர், இரகசியத்
தகவல்
வழங்கியதாக
கருதப்படும்
பிராட்லி
மானிங்
விசாரணையின் போது சாட்சியம் அளித்தவர்,
“விக்கிலீக்ஸை
நிறுவியவர்கள், சொந்தக்காரர்கள், மற்றும் நிர்வாகிகள் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். அதன்பின் அசாஞ்ச் 42, 135 பக்க
FBI
கோப்பு உள்ளது—இது
அரசாங்கம் அதன் இலக்கு குறித்த விசாரணையில்
“அக்கறை
கொண்டிருக்கவில்லை”
என்றால் விந்தையான கோப்புக்கள் கொண்ட தொகுப்புத்தான்”
என்ன.
கார்டியனிடம்
கடுகளவேனும் நேர்மை இருந்தால், ரட்னர் கூறியிருப்பதை உண்மையைக்
கொண்டு மறுக்க வேண்டுமே ஒழிய, வெறுமே அவருடைய அறிக்கைகளை உதறித்தள்ளக்கூடாது. ஆனால்
அவர் எழுதியிருப்பது உண்மை என்பதை அது நன்கு அறியும்.
அசாஞ்சுக்கு அரசியல் புகலிடம் அளித்த அறிக்கையில் ஈக்வடோர்,
இங்கிலாந்து மற்றும் ஸ்வீடனிடம் இருந்து அசாஞ்ச் ஒரு மூன்றாம் நாட்டிற்கு
அனுப்பப்படமாட்டார் என்ற உறுதிமொழியை நாடியது, ஆனால் இந்த வேண்டுகோள்
நிராகரிக்கப்பட்டது என்று விளக்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கம்
“உத்தியோகபூர்வமாக
அசாஞ்ச் குறித்துத் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு,
“அமெரிக்க
விடையிறுப்பு அசாஞ்ச் வழக்கு குறித்த தகவலை அளிப்பதற்கு இல்லை என்றும், இது
ஈக்வடோர் மற்றும் இங்கிலாந்திற்கு இடையாயன இருதரப்பு விவகாரம் என்றும் கூறியது.” |