செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
South African miners defiant in face of government, company threats
தென்னாபிரிக்க சுரங்கத்
தொழிலாளர்கள் அரசாங்கத்தினதும், நிறுவனத்தினதும் அச்சுறுத்தல்களை எதிர்க்கின்றனர்
By Bill Van Auken
21 August 2012
கடுமையான
ஆயுதமேந்திய பொலிசாரால் அவர்களின் 34 தோழர்கள் கொலைசெய்யப்பட்ட நான்கு
நாட்களுக்குப் பின், தென்னாபிரிக்க பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்கள் திங்களன்று
வேலைக்குத் திரும்பவேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற நிறுவனத்தின்
இறுதி எச்சரிக்கையை எதிர்த்து நிற்கின்றனர்.
திங்களன்று
மாரிக்கானா சுரங்கத்தில் தொழிலாளர் பிரிவில் 27%தான் மீண்டும் பணிக்கு வந்துள்ளனர்
என்பதைக் கூறிய லண்டனைத்தளமாகக் கொண்ட லோன்மின் நிறுவனத்தின் சுரங்க உரிமையாளர் தன்
அச்சறுத்தலில் இருந்து பின்வாங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. சுரங்கத்திற்குள்
செல்லாமல் இருப்பதற்காக எவரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் செவ்வாய்
காலை புதிய காலக்கெடு என்றும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
திங்களன்று
உற்பத்தியை சுரங்கம் மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லை. ஏனெனில் ஆகஸ்ட் 10 முதல்
வேலைநிறுத்தத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 3,000 மலையை குடையும் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தத்தை முடிக்க மறுத்துவிட்டனர். தென்னாபிரிக்காவில் மிக மிருகத்தனமாகச்
சுரண்டப்படும் தொழிலாளர்களான இவர்கள் நிலத்தில் இருந்து புதிய பிளாட்டினத்தை வெளியே
தோண்டி எடுக்கும் பணிக்கு மிகவும் முக்கியமானவர்களாவர்.
திங்களன்று
படுகொலைகள் நடந்த சுரங்கத்திற்கு எதிரே இருக்கும் ஒரு குன்றிற்கு ஆயிரக்கணக்கான
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் திரும்பி வந்தனர். இப்பகுதி
“குருதிக்
களமாகத்தான்”
இன்னமும் உள்ளது
என்று திங்களன்று
South African Mail &
Guardian
வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
“குருதிக்கறை
படிந்த துணிகள் தரையில் சிதறுண்டு கிடக்கின்றன, அருகே உள்ள புதர்களிலும்
காணப்படுகின்றன. அதே நேரத்தில் மஞ்சள் நிறத்தில் அடையாளமிடப்பட்ட பகுதிகளில்தான்
சடலங்கள் இருந்தன”
என்று செய்தித்தான்
கூறுகிறது. ஒரு மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட இடத்தின் அருகே கண்ணீர்ப்புகை செலுத்தும்
கருவி வெற்றாக உள்ளது. எரிந்துமுடிந்த தீப்பந்தத்தின் அருகே குழந்தைகள் கூட்டம்
ஒன்று விளையாடுகிறது.”
இங்குத்தான்
கடந்த வியாழன் அன்று பொலிசின் பெரும் பிரிவு ஒன்று, ஹெலிகாப்டர்கள் ஆதரவையும், கவச
வாகனங்களின் உதவியைக் கொண்டும் கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர்பீய்ச்சுதல் மற்றும்
கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
ஒருபுறத்தில் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளுடனும் வரிசையாகப் பொலிசார்
நின்றிருந்தனர். நீடித்த, அவ்வப்பொழுது வெடித்த துப்பாக்கி ஒலிகள் பல
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் இறந்து, காயமுற்ற பின்னரும் கூட நீடித்தன.
இக்காட்சிகள் ஷார்பிவில்லே மற்றும் சோவேட்டோவில்-Sharpeville.
Soweto
- நிறப்பாகுபாடு காட்சிய ஆட்சி நடத்திய வரலாற்றுத் தன்மை நிறைந்த படுகொலைகளைத்தான்
நினைவிற்குக் கொண்டுவந்தன.
தென்னாபிரிக்கச் செய்தி ஊடகத்திடம் பேசிய தொழிலாளர்கள் இத்தகைய குருதி
கொட்டுதலுக்கு ஏற்பாடு செய்த ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் மற்றும் லோமின்
நிறுவனத்தின் மீது சீற்றமும் கசப்புணர்வும் கொண்டிருந்தனர் என்பது தெளிவு. ஏனெனில்
அவர்களுடைய கோரிக்கைகள் இழிவுடன் புறக்கணிக்கப்பட்டன, அதுவும் அவர்களுடைய
இறந்துபட்ட சகோதரத் தொழிலாளர்களின் இரத்தம் காய்வதற்கு முன்பே வேலைநிறுத்தத்தை
முடித்துக் கொள்ளவும் அல்லது வேலைகளை இழக்கவும் என்று கூறப்பட்டது.
“வேலைக்கு
நாங்கள் மீண்டும் செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது ஓர் அவமதிப்பு ஆகும். எங்கள்
நண்பர்களும் சகத் தொழிலாளிகளும் இறந்துவிட்டனர், இவர்கள் நாங்கள் மீண்டும்
பணிக்குத் திரும்புவோம் என எதிர்பார்க்கின்றனர். ஒருபோதும் முடியாது.”
என்றார்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான ஷக்காரியா மெபூவூ
SAPA
என்னும் தென்னாபிரிக்கச்
செய்தியாளர் சங்கத்திடம்.
“சிலர்
சிறையிலும் மருத்துவமனைகளிலும் உள்ளனர். என்று கூறிய தொழிலாளி, நாங்கள் விரும்புவதை
நிர்வாகம் எங்களுக்குக் கொடுத்காவிட்டால் நாங்கள் தலைமறைவாகச் செல்லவில்லை,
மலைக்குத்தான் செல்கிறோம்..”
“மருத்துவமனைகளில்
இருப்பவர்கள், சவக்கிடங்குகளில் இருப்பவர்கள்மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு
நடத்தப் போகின்றனரா?”
என்று மற்றொரு
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளியான தாபிலோ மொடிமா கேட்டார்.
“நாங்கள்
கஷ்டப்படுகிறோம், எங்கள் வாழ்க்கை மாறப்போவதில்லை, சுடப்படுவதே மேல். எங்கள் நலன்
பற்றி லோன்மின் அக்கறை கொள்ளவில்லை. இதுவரை நாங்கள் பேசுவதைக் கேட்க மறுத்துள்ளது,
எங்களைக் கொல்லப் பொலிசைத்தான் அனுப்பியது.”
அருகில்
இருக்கும் சுரங்கங்களில் தற்காலிகத் தொழிலாளராக இருக்கும் யாண்டிசா மடோமெலா, ரோக்
டிரில் தொழிலாளர்களின் போராட்டத்தில் சேர்ந்தவர்
Mail & Guardian பத்திரிகையிடம்
கூறினார்: “அரசாங்கம்
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது, எனவே ஆபிரிக்க தேசிய
காங்கிரஸ்தான் இத்தொழிலாளர்களைக் கொன்றுள்ளது. அவர்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை
கிடையாது. அரசாங்கம் சுரங்கத்தைக் கவனித்துக் கொள்ளுகிறது, எனவேதான் பொலிசார் இங்கு
உள்ளனர். இன்னும் பலர் இறப்பர், ஆனால் ஏதும் நடக்காது.”
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகோப் சூமா ஒருவாரக் கால தேசியத் துக்கம்
கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளபோது, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
அரசாங்கத்தின் செயல்கள் அதுவும் அதன் முக்கிய நட்பு அமைப்புக்களான
COSATU
தென்னாபிரிக்கத் தொழிற்சங்கங்களின் காங்கிரஸ், கூட்டமைப்புக்கள்,
NUM
எனப்படும்சுரங்கத் தொழிலாளர்களின் தேசியத் தொழிற்சங்கம் மற்றும் தென்னாபிரிக்க
கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஆகியோர் படுகொலைக்கு ஆதரவாக உள்ளனர்
என்பதைத்தான் தெளிவுபடுத்தியுள்ளது.
துக்க
காலத்தைப் பற்றி அறிவிக்கையில், ஜமா பின்வருமாறு கூறினார்:
“ஒருவரை
ஒருவர் குற்றம் சாட்டும் வகையில் விரலைக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
எத்திசையில் இருந்து வன்முறை வந்தாலும் அதற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க
வேண்டும். சமாதானம், உறுதித்தன்மை மற்றும் ஒழுங்கில் நாம் நம்பிக்கையை
உறுதிப்படுத்த வேண்டும், வன்முறை, குற்றம் அறவே இல்லாத ஒரு அக்கறை கொண்டுள்ள
சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும்.”
ஆம், அவர்
பேசும்
“வன்முறை”
என்பது அவருடைய
சொந்தப் பாதுகாப்புப் படையினர் செயல்படுத்திய குருதி கொட்டிய அடக்குமுறை அல்ல,
தொழிலாளர்களுடைய நடவடிக்கைகள் பற்றியதாகும். பிளாட்டினச் சுரங்கத் தொழிலாளர்கள்
மட்டும் அல்ல, வறிய சிறுநகர் வாசிகள், தங்கள் இழிந்த வாழ்க்கை நிலைமைக்கு எதிராகப்
போராளித்தன எதிர்ப்புக்கள் நடத்துபவர்கள் குறித்து.
“விரலைச்
சுட்டிக்காட்டுவது”
குறித்துக் கூறவேண்டும் என்றால், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
அரசாங்கம் கொலை நடத்தியவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து படுகொலைகளால்
பாதிக்கப்பட்டவர்களை பலிகடாக்களாக ஆக்குவது, துன்புறுத்துவது ஆகியவற்றின் மூலம்
அதையும்விட அதிகமாகத்தான் செல்லுகிறது.
சோவேட்டான்
செய்தித்தாள் திங்களன்று பொலிஸ் ஆணையர் ரியா பியேகாவே மேற்கோளிட்டுள்ளது; இவர் ஒரு
முன்னாள் வங்கியாளர் தற்பொழுதைய பதவியில் இரண்டு மாதங்களாகத்தான் இருக்கிறார்.
இவர் பொலிசாரிடம் மாரிக்கான படுகொலைகளைக் குறித்து அவர்கள் கவலை கொள்ளத்
தேவையில்லை என்று கூறியுள்ளார்.
“பொதுமக்களைக்
காப்பது என்பது பேச்சுவார்த்தைக்கு உரியது அல்ல.”
என்றார் இந்த
அம்மையார். “நடந்தது
குறித்துக் கவலைப்பட வேண்டாம்.”
இதற்கிடையில், அரசாங்கம் படுகொலைகள் செய்யப்பட்ட தினத்தன்று கைது செய்யப்பட்ட 260
தொழிலாளர்கள்மீது அது இரக்கம் காட்டப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அவர்கள் பொலிஸ் பஸ்களில் அழைத்துவரப்பட்டனர்; காவலுக்குக் கவச வாகனங்கள் உடன்
வந்தன. பிரிட்டோரியா நகரத்தில் திங்களன்று கா ரனுகாவாவில் உள்ள நீதிமன்றத்திற்குத்
திங்கள் காலையில் ஏதோ முற்றுகையிடப்பட்ட மக்களைக் கொண்டுவருவது போன்ற சூழலில்
அழைத்துவரப்பட்டனர்.
சுரங்கத்
தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்த 100 பேருக்கும் மேற்பட்டவர்களை பொலிசார்
நீதிமன்றத்திற்கும் தெருக்களுக்கும், பஸ்களில் தொழிலாளர்களைக் கொண்டுவரவதற்குமுன்
அழைத்து வந்தனர். பஸ்ஸில் இவர்கள் பாடிக் கொண்டிருந்தது கேட்டது. ஆதரவாளர்களில்
பலரும் பெண்கள் என்ற நிலையில் அவர்கள் காணாமற் போயிருந்த கணவர்கள், மகன்களைத்
தேடிக் கொண்டிருந்தனர்;
“நிரபராதியான
தொழிலாளர்களை விடுவிக்கவும்”
என்ற கோஷம் கொண்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர். கைதிகளை ஏற்றிவந்த
வண்டிகள் செல்லுகையில், சிலர் தெருக்களில் அழுது புரண்டனர்;
“தடுப்புகேடயம்
வைத்திருக்கும் பொலிஸ் அதிகாரிகள், நீதிமன்ற நுழைவாயிலில் தடுப்பரணைப் போல்
நின்றனர்”
என்று
SAPA
செய்தி நிறுவனம் எழுதுகிறது.
“சுரங்கத்
தொழிலாளர்களில் முதல் பிரிவினர், ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்தவர்கள் இடது புறம்
நீதிமன்ற பெஞ்சுகளில் உட்கார்ந்தனர். அவர்களுக்காக இந்த இடங்கள்
ஒதுக்கப்பட்டிருந்தன. சிலர் கைகளை உயர்த்திக் காண்பித்தனர். பலருடைய உடைகளில்
இரத்தக் கறைகள் காணப்பட்டன.”
குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல்கள் கொலையில் இருந்து பொது வன்முறை, கொள்ளை
வரையிலான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் தென்னாபிரிக்கச்
சட்டம் வலியுறுத்துவது போல், கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஒரு
நீதிபதிக்கு முன் நிறுத்தப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளனர். அரசாங்க
வக்கீல்கள் அண்டை ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்துள்ள சில குடியேறியவர்கள் உட்பட
சுரங்கத் தொழிலாளர்களைச் சுதந்திரமாக பிணை எடுப்பில் விடுவது இயலாது, ஏனெனில்
பலரும் விலாசம் இல்லாமல் உள்ளனர் என்று வாதாடினர். குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய
வக்கீல்கள் தங்கள் முறைப்பணிக்கு இடையே தொழிலாளர்கள் உறங்கும் மட்டமான இடங்கள்தான்
அவர்களுடைய விலாசங்கள், அவர்களுக்கு பிணை உரிமை உண்டு என வாதிட்டனர். தொழிலாளர்கள்
சிறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர்; நீதிபதி விசாரணைக்காக இன்னும் 7 நாட்கள்
அவகாசம் கொடுத்தார்; இன்னும் சில குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட உள்ளன.
“பணிப்பிரிவு”
ஒன்றை அமைக்க இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது; இது
படுகொலைக்கு வழிவகுத்த பிரச்சினைகள் பற்றி ஆராயும். இதில் தாதுப்பொருட்கள் இருப்பு
மந்திரி சூசன் ஷாபங்கு, தொழிலாளர் துறை மந்திரி மில்ட்ரெட் ஒலிபென்ட், சுரங்க
உரிமையாளர் சங்கத்தினர், பெருவணிகப்பிரதிநிதிகள், தேசிய சுரங்கத் தொழிலாளர்களின்
சங்கம் ஆகியவை இருப்பர். தேசிய சுரங்கத் தொழிலாளர்களின் சங்க தலைமை ஆரம்பத்தில்
இருந்தே வேலைநிறுத்தத்தை முறிக்க முயன்றது.
இப்பேச்சுக்களில் இருந்து ஒதுக்கப்பட்ட அமைப்பு
Association of
Mineworkers and Construction Union (AMCU)
ஆகும். இச்சங்கம்
வேலைநிறுத்தம் செய்யும் மலையை குடையும் தொழிலாளர்களைப் பிரதிபலிக்கிறது. இதைத்தான்
NUM சுரங்க
முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறும் ஆபிரிக்க
தேசிய காங்கிரஸ் உடன் பிணைந்துள்ளவற்றைத் தாக்குகிறது.
வேலைநிறுத்தம் செய்பவர்கள்
“குற்றவாளிகள்”
என்று பகிரங்கமாக
NUM
கண்டித்துள்ளது;
AMCU “அனார்க்கிஸ்டுகள்
“குண்டர்கள்
தலைவர்கள்”
சிறைக்கு அனுப்பப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று
கூறுகிறது.
SACP
என்னும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன்—ஆபிரிக்க
தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு அரசியல் தளத்தைக் கொடுக்கும் இது
COSATU
உடன் ஒரு முத்தரப்புக் கூட்டின் ஒரு பகுதியாகும். தொழிற்சங்க அதிகாரிகள் படுகொலைகளை
நியாயப்படுத்துவது, அதில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டிப்பது என்னும் பெரும் குற்றம்
சார்ந்த பங்கைக் கொண்டுள்ளது.
NUM
உடைய பொதுச் செயலாளர் பிரான்ஸ் பலேனி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றை
திங்களன்று சங்கத்தின் வலைத்தளத்தில் வெளியிட்டு,
“நம்
உறுப்பிர்களைத் தவறாக வழிநடத்தும் இருண்ட சக்திகள், வாழ்க்கையை ஓரிரவில்
மாற்றிவிடும் சக்தியை கொண்டுள்ளனர் என நம்ப வைக்கும் சக்திகளை”
எச்சரித்தார். இது
AMCU
இன்னும் பல போர்க்குணமிக்க சங்கங்களைப் பற்றிய குறிப்பு ஆகும்.
“தொழிலாளர்கள்
மிக அதிகக் கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமையை அவர்கள் பிளவுறச் செய்து
பலவீனப்படுத்தும் இரக்கமற்ற முயற்சியை எதிர்கொள்ளுகையில் கடைப்படிக்க வேண்டும்”
என்று
COSASTU
கூறியுள்ளது.
“நிலைமையைத்
தீர்ப்பதற்கு NUM
கொண்டுள்ள முயற்சிகளுக்கு முழு ஆதரவையும்”
அறிவித்துள்ளது.
இந்த முயற்சிகள் படுகொலைகளை முன்கூட்டியே நியாயப்படுத்துதல், அதன் பின்
NUM
தலைவரை
அவர்கள் கலைந்து செல்ல வேண்டும் எனக்கூறுவதற்கு பொலிஸ் கவச வண்டியின் உட்புறத்தில்
இருந்து வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு உரை நிகழ்த்த அனுப்பியது. இவரைத்
தொழிலாளர்கள் துரத்தியடித்து விட்டனர்.
மிகத் தவறான
பிரதிபலிப்பு
SCAP
உடைய ஸ்ராலினிஸ்ட்டுக்களுடையது ஆகும். இவர்கள் வெளிப்படையாகப் படுகொலைகளுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர். படுகொலை நிகழ்ந்த வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிசாரை அல்ல
SCAP
வேலைநிறுத்தத்தின்
தலைவர்களை “காட்டுமிராண்டித்தனச்
செயல்களுக்காகக் குற்றம் சாட்டி, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும்
கோரியுள்ளது.
SACP
அதிகாரி டொமினிக் ட்வீடி,
“இது
ஒன்றும் படுகொலை அல்ல, இது ஒரு போர். அவர்கள் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்து
பொலிசார் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இதற்காகத்தான் அவர்கள் உள்ளனர்.
அவர்களை கொலை செய்த மக்கள் தொழிலாளர்கள்போல் எனக்குத் தோன்றவில்லை. நாம் மகிழ்ச்சி
அடையவேண்டும். போலிசார் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.”
என்றார்.
ஆகஸ்ட் 19
வெளியிட்ட அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கையில்
SACP
ஜனாதிபதி ஜுமா விசாரணை
ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும், அதன் கவனம் பொலிஸ் நடத்திய ஆபத்தான வன்முறை
இல்லை, ஆனால் “போலித்தனத்
தொழிற்சங்கமான
AMCU உடன்
தொடர்புடைய வன்முறை வடிவமைப்பு பற்றியதாக இருக்க வேண்டும்”
என்று கூறியுள்ளது.
மேலும் அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் மதுன்ஜ்வா குறித்து சிறப்பான விசாரணை தேவை என்று
வலியுறுத்தியுள்ளது.
NUM
ன் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களை
“வெகுஜனத்
திருப்தி செய்யும் அமைப்பு”,
“குழப்பவாத
அமைப்பு”
என்று கூறி, போட்டிச் சங்கம் சுரங்க நிறுவனங்கால் தோற்றுவிக்கப்பட்டது என்றும்
கூறுகிறது.
இத்தகைய
தீமை நிறைந்த தாக்குதல்கள் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும்
NUM-COSATU
என்று அத்துடன் இணைந்து செயல்படும் அமைப்புக்களுள் இருக்கும்
நெருக்கடியின் அடையாளங்கள் ஆகும். இந்த நெருக்கடி தொழிலாளர் வர்க்கத்தின் பெருகும்
போர்க்குணத்திற்கு உந்துதலைக் கொண்டுள்ளது. அதேபோல் இச்சக்திகள் தங்கள் நலன்களை
அரசாங்கம் மற்றும் சர்வதேசப் பெறுநிறுவனங்கள், அவை பிரதிபலிக்கும் உள்நாட்டு
முதலாளித்துவத்தினருடைய நலன்களைத் தாழ்த்த முற்படும் சக்திகளுக்குக் காட்டும்
எதிர்ப்பினாலும் உந்துதல் பெறுகிறது.
மாரிக்கான
படுகொலைகள் தென்னாபிரிக்காவின் வெகுஜன உணர்மைக்கு அதிர்ச்சியாக இருப்பதுடன்,
பிற்போக்குத்தன அரசியல் கூட்டைக் கடுமையாக தாக்குதலுக்கு உட்படுத்துவதுடன்,
அத்துடன் முன்னாள் தொழிற்சங்க அதிகாரிகளைக் கொண்ட ஊழல் மிகுந்த அடுக்கு மற்றும்
ஆபிரிக்க தேடிய காங்கிஸின் அரசியல்வாதிகளாக இருந்து மில்லியனர்களாக அது தோற்றுவித்த
அடுக்கையும் கடுமையாக மதிப்பிழக்க செய்துள்ளது. |