WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Political lessons of the Quebec student strike
கியூபெக் மாணவர்கள் வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்
Keith Jones
21 August 2012
ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் கியூபெக்கின் மாணவர் பகிஸ்கரிப்பு
கனேடிய ஆளும் உயரடுக்கை அதிர வைத்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வெடிப்பை
துரிதப்படுத்தும் அச்சறுத்தலை கொண்டிருந்தது. இப்பொழுது இது மாணவர்கள் அவர்களுடைய
பெரிய இலக்கான கல்வி என்பது ஒரு சமூக உரிமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது
ஒருபுறம் இருக்க, தங்கள் உடனடிக் கோரிக்கையான பல்கலைக்கழக கட்டணம்
உயர்த்தப்படக்கூடாது என்பதையும் பாதுகாக்க முடியாத நிலையில்
பலமிழந்துபோய்க்கொண்டிருக்கிறது.
மாணவர்கள் போதுமான போர்க்குணமிக்க அல்லது உறுதியைக்
கொண்டிருக்கவில்லை என்று எவரும் கடிந்துரைக்க முடியாது. பல மாதங்கள் அவர்கள்
முன்னோடியில்லாத பொலிஸ் அடக்குமுறையை எதிர்கொண்டனர். அதில் கண்ணீர்ப்புகை குண்டு
வீசப்படல், மிளகுப் பொடி தூவப்படுதல், இரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படல் ஆகியவை
இருந்தன. ஆறுமாத காலம் நீண்டிருந்த பகிஸ்கரிப்பின் போது, 3,000க்கும் மேலான
மாணவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல்
“ஆர்ப்பாட்டம்”
நடத்தியதுதான் இவர்களில் பெரும்பாலானோரின்
“குற்றம்”
ஆகும். மாநில லிபரல் அரசாங்கம் மற்றும் பெருநிறுவனச் செய்தி
ஊடகத்தின் பெரும் கலக்கத்திற்கு மத்தியில், மாணவர்கள் கடந்த மே மாதம் அப்பட்டமான
ஜனநாயக விரோதச் சட்டவரைவு 78 (சட்டம் 12)ன் மூலம் தங்கள் பகிஸ்கரிப்பு குற்றம்
ஆக்கப்பட்டதனால் அச்சம் கொள்ளமால் இருந்தனர்.
அப்படியானால் பகிஸ்கரிப்பு தோல்வியுற்றதற்குக் காரணம் என்ன?
தொழிற்சங்கங்களும்
Parti Quebecois
உடன்
பிணைப்பு கொண்ட மாணவர் சங்கங்களும் (FECQ,
FEUQ)
அநேகமாக வெளிப்படையாக பல மாதங்களாக வேலைநிறுத்தம் முடிக்கப்பட
வேண்டும் என்றுதான் பிரச்சாரம் செய்து வருகின்றன. சட்டவரைவு 78 இயற்றப்பட்டவுடன்,
தொழிற்சங்கங்கள் தாங்கள் அதன் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு நடப்பதாக அறிவித்தன.
இதில் வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்
என்று சட்டபூர்வமான கட்டாயப்படுத்துதலும் அடங்கி இருந்தது.
வேலைநிறுத்தம் முறிக்கப்பட வேண்டும் என்னும் முயற்சியில்
தொழிற்சங்கங்கள்
FECQ, FEUQ
உடன்சேர்ந்து மாணவர்களையும், சட்டவரைவு 78ஐ எதிர்த்து வெடித்த பரந்த எதிர்ப்பு
இயக்கத்தையும்
Parti Quebecoisக்கு
ஆதரவாக நிலைநிறுத்த முற்பட்டன. இது கியூபெக்கின் பெருவணிகத்தின் மாற்றீட்டு
அரசாங்கம் அமைக்கும் கட்சியாகும். அது கடைசியாகப் பதவியில் இருந்தபோது மாகாணத்தின்
வரலாற்றிலேயே மிக உயர்ந்த சமூகநலச் செலவு வெட்டுக்களைத்தான் சுமத்தியது.
ஆனால் தொழிற்சங்கங்களும் அவற்றின் மாணவர் சங்க அமைப்புக்களும்
மட்டும் குறைகூறத்தக்கவை எனக் கூறுவதற்கில்லை.
NDP
எனப்படும் சமூக ஜனநாயக புதிய ஜனநாயகக் கட்சி,
கியூபெக் சாலிடெர் மற்றும் முழு கியூபெக் போலி இடதுகளும்
வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தி, அரசியல்ரீதியாக நெரிப்பதில் சேர்ந்து கொண்டன.
சாரெஸ்ட் அரசாங்கம் மற்றும் கியூபெக் உயரடுக்கின்மீது அழுத்தம்
கொண்டு வரும் நோக்கத்தை மட்டுமே மாணவர் எதிர்ப்பு கொண்டிருக்கவேண்டும் என்பதில் இவை
அனைத்துமே பிடிவாதமாக இருந்தன. மாணவர்களுடைய போராட்டத்தை கனேடிய மற்றும் சர்வதேச
தொழிலாள வர்க்கம் பெருவணிகம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக
நடத்தும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கான விலையை தொழிலாளர்கள் கொடுக்க வேண்டும்
என்னும் உந்துதலினால் பெருகும் மக்கள் இயக்கத்துடன் இணைத்தல் கூடாது என்பதில் இவை
அனைத்தும் இணைந்து நின்றன.
பல மாதங்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்த மாணவர் குழுவான
CLASSE
பயிற்சிக் கட்டண அதிகரிப்பு பிரச்சினையை கியூபெக்கின் லிபரல் மற்றும் கூட்டாட்சி
கன்சர்வேடிவ் அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு சவால் என்பதில் இருந்து
தனிமைப்படுத்திவிட வேண்டும் என வலியுறுத்தியது. சட்டவரைவு 78 இயற்றப்பட்ட உடன்,
CLASSE “ஒரு
சமூக வேலைநிறுத்தம்”
தேவை என்று, ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கம் தேவை என்று கூறியது. ஆனால்
தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேலை நிறுத்த நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுவிடும் என
உறுதியாக இருந்தபோது, அவை எத்தகைய குறைந்தபட்சத் தன்மை என்றாலும் சரி என உறுதியாக
இருந்த நிலையில்,
CLASSSE
சூடான உருளைக்கிழங்கைக் கீழேபோடுவது போல் திட்டத்தைக் கைவிட்டது.
எனைய முக்கிய சமூகப் போராட்டத்தை போலவும், கியூபெக் மாணவர்
வேலைநிறுத்தம் படிப்பினைகளை நிறையக் கொடுக்கிறது—இவை
கியூபெக், மற்றும் கனடா என்று இல்லாமல் உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்களுக்கும்
தொழிலாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது ஆகும்.
முதலில், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் இருப்பதைப் போலவே
கனேடிய ஆளும் வர்க்கமும் பெருமந்த நிலைக்குப் பின் மிகப் பெரிய முதலாளித்துவ
நெருக்கடி வெடித்துள்ளதற்கு ஒரு சமூக எதிர்ப்புரட்சியை ஆரம்பித்த்தன் மூலம்
எதிர்கொண்டுள்ளது.
மாணவர்கள் நீண்டகாலம் உரக்க எதிர்ப்பைக் காட்டினால் அரசாங்கம்
பேச்சுக்களுக்கு வரும் என்று
CLASSE
வலியுறுத்தியது. ஆனால் மக்களின் அழுத்தத்திற்கு விட்டுக் கொடுப்பது
என்பதற்கு முற்றிலும் மாறாக, பெருநிறுவனச் செய்தி ஊடகம் மற்றும் முழு கனேடிய ஆளும்
வர்கத்தின் உந்துதலைப் பெற்ற சாரெஸ்ட் அரசாங்கம் அடக்குமுறையை விரிவாக்கி எதிர்ப்பை
எதிர்கொண்டது.
கல்வி, வேலை, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சமூக உரிமைகள்
முதலாளித்துவ முறை, அதன் அரசியல் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு
எதிரான ஓர் அரசியல் போராட்டம் மூலம்தான் அடையப்பட முடியும்.
இரண்டாவதாக, தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் வங்கிகள் மற்றும்
பெருவணிகம் சமூகப், பொருளாதார வாழ்வின் மீது கொண்ட இடுக்கிப்பிடியை முறிக்கும் சமூக
சக்தியாகும். இதற்கு பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்
என்ற உறுதியுடைய தொழிலாளர்களின் அரசாங்கங்கள் நிறுவப்பட வேண்டும். இதனால் ஒரு
குறுகிய உயரடுக்கு மட்டும் செல்வக் கொழிப்பிற்கு உட்படுத்தப்படாமல் சமூகத் தேவைகள்
பூர்த்தி செய்யப்பட முடியும். ஆனால் தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை வர்க்க நலன்களை
உறுதிப்படுத்துவதற்கு தன் வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும் என்றால், அதற்கு
போராட்டத்திற்கான புதிய அமைப்புக்கள் கட்டமைத்தல் என்பது தேவை. அவை தற்பொழுதுள்ள
தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றை எதிர்த்தும் இருக்க
வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் தம்மை பெருநிறுவன நிர்வாகம்,
அரசாங்கம் ஆகியவற்றுடன் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டுவிட்டன.
தொழிற்சங்கத்தின் நம்பிக்கைத் துரோக பங்கிற்கு மாணவர் வேலைநிறுத்தம்
மற்றும் ஒரு நிரூபணத்தைக் கொடுத்துள்ளது.
கனடாவின் ஆளும் உயரடுக்கு மாணவர்கள் சட்டவரைவு 78 ஐ மீறி நின்றது
குறித்தும் தொழிலாள வர்க்கத்திடையே அது பெற்ற ஆதரவு குறித்தும் அதிர்ச்சியுற்றது.
சட்டவரைவு 78 ஏற்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக 250,000 மக்கள்
மொன்ட்ரீயலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்த நாட்களில் இன்னும்
ஆயிரக்கணக்கானவர்கள் கியூபெக் முழுவதும் தன்னெழுச்சியான அரசாங்க எதிர்ப்புப்
போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சட்டவரைவு 78 ன் முழு விதிகள் செயல்படுத்தப்படுவது 1968 மே ஜூன்
மாதங்களில் பிரான்ஸில் வெடித்த நிலைமைக்கு ஒப்பான வெடிப்பைத் தூண்டிவிடும் என்பதை
உணர்ந்து, ஆளும் வர்க்கம் ஒரு தந்திரோபாய மாறுதலைச் செய்தது. சட்டவரைவு 78ன்
காட்டுமிராண்டித்தன பிரிவுகளை தற்பொழுது செயல்படுத்தாமல், அது தொழிற்சங்கங்கள்
மற்றும் அரசியல் நட்பு அமைப்புக்களை வேலைநிறுத்தம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட
முதலிலும் முக்கியமானதுமாக நம்பியது.
இந்த நம்பிக்கை வீண்போகவில்லை. கியூபெக்கின் தொழிலாளர் கூட்டமைப்பு
சட்டவரைவு 78க்குத் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெடிப்பை எதிர்கொள்ளும் வகையில்
கனேடிய லேபர் காங்கிரசிற்கு எந்த ஆதரவும் பகிஸ்கரிப்பு செய்யும் மாணவர்களுக்கு
கொடுக்கப்படக்கூடாது என்று எழுதியது. சில நாட்களுக்கு பின்னர், கியூபெக்கின் மிகப்
பெரிய தொழிலாளர் கூட்டமைப்பு
“தெருக்களுக்குப்
பின், வாக்குச் சாவடிக்கு”
என்ற கோஷத்தை ஏற்றது—இது
அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பை வலதுசாரி லிபரல் அரசாங்கத்திடம் இருந்து
PQ
விற்கு மாற்றும் நடவடிக்கை ஆயிற்று.
மூன்றாவதாக, மாணவர் வேலைநிறுத்தம் பல மத்தியதர, போலி இடது
அமைப்புக்கள் என்று முற்போக்குத்தன சொற்றொடர்களைக் கூறி, அதே நேரத்தில்
தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ
“இடது”
அரசாங்கக் கட்சிகளுக்கு ஆதரவைக் கொடுத்து, தேசிய வாதத்தை வளர்த்து
முதலாளித்தவ ஒழுங்கு மீறப்பட முடியாது என்பதையும் வலியுறுத்துதல் என்பதற்கு எதிரான
ஒரு சோசலிச-சர்வதேச முன்னோக்கை கட்டமைத்து, புரட்சிகரத் தலைமையையும் கட்டமைக்க
வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பல மாணவர்களும் அரசியல் நடைமுறையுடன் பிணைந்துள்ள
FECQ, FEUQ
க்கு
எதிராக
CLASSE
ஒரு
போராடும் அமைப்பாக இருக்கும் என்று சேர்ந்திருந்தனர். ஆனால்
CLASSE
உடைய
தேசியவாத மற்றும் எதிர்ப்புச் சார்பு என்பது அடிப்படையில் மாறுபாடு எதையும்
கொண்டிருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்திடம் ஆதரவைக் கேட்பதை அது எதிர்த்தது;
அரசாங்கத்தை எதிர்க்க மாணவர்களை தனியே விட்டுவிட்டதற்காக தொழிற்சங்கங்களைக் குறைகூற
மறுத்துவிட்டது;
PQ
வின் பின்னே மாணவர்களை இழுக்கும் பிரச்சாரத்தை ஏற்றது.
CLASSE
உடைய
செய்தித் தொடர்பாளர்கள் பலமுறையும்
PQ
விடம் லிபரல்கள் தோற்பது என்பது மாணவர்களுக்கு ஆதாயம், ஏன் ஒரு
நேரடி வெற்றி என்றுகூடக் கூறலாம் என்று அறிவித்தனர்.
CLASSE
உடைய
அரசியல்
QS
எனப்படும் கியூபெக் சாலிடெர் மற்றும் பல அனார்க்கிச குழுக்களின் அதிகச்
செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது. ஆளும் உயரடுக்கு மாணவர் வேலைநிறுத்தத்தை திசைதிருப்ப
அதை
PQ
க்குப் பின்னால் நிறுத்த முயல்கையில்,
QS
இப்பெருவணிகக் கட்சியுடன் உடன்பாட்டைக் காண முற்படுகிறது; முதலில் ஒரு தேர்தல்
நட்பு அமைப்பு என்றும் இப்பொழுது ஒருவேளை
PQ
சிறுபான்மை அரசாங்கத்தை செப்டம்பர் 4 தேர்தலுக்குப் பின் அமைத்தால்
அதில் இளைய பங்காளியாக வரலாம் என்ற கருத்திலும்.
தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்குத் திரட்டுவதற்கு எதிர்ப்பு, அதை
அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களின் அமைப்புமுறை ஆதிக்கத்தில் இருந்து விடுவித்தல்
என்பதற்கு மாறாக, அனார்க்கிஸ்டுகள்
“நேரடி
நடவடிக்கை”
என்பதின் முக்கிய பிரச்சாரகர்களாக உள்ளனர்—அதாவது
பொலிஸுடன் தனிப்பட்ட மோதல்கள் மற்றும் அடையாள முறை ஆக்கிரமிப்புக்கள், தடுப்புக்களை
ஏற்படுத்துதல் என்று. அனைத்து அரசியல் மற்றும் கட்சிகளை மொத்தமாக அவர்கள்
கண்டிப்பது, தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளிடம் இருந்து தன்னைப்
பிரித்துக் கொள்ளும் போராட்டத்தைத் தடுப்பது என்றுதான் ஆகிவிட்டது. இதையொட்டி
தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமூகத்தை மறு கட்டமைக்கும் திட்டம் வெளிப்பட
முடியாமல் உள்ளது.
2011இல் இருந்து உலகை அதிர்விற்கு உட்படுத்தும் தொழிலாளர்களின்
போராட்ட அலைகள் எதிர்கொள்ளும் அதே அடிப்படை அரசியல் பிரச்சனைகளைத்தான் மாணவர்
பகிஸ்கரிப்பும் முகங்கொடுக்கிறது—எகிப்தில்
இருந்து கிரேக்கம் வரை, ஸ்பெயினில் இருந்து விஸ்கான்சின் வரை இதை அடிப்படைகள்தான்
எதிர்க்கப்பட்டன. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தொழிற்சங்கங்கள், இடது
அமைப்புக்கள் எனக் கூறிக்கொள்ளும் அமைப்புக்கள், மற்றும் போலி முற்போக்கு
அமைப்புக்கள் என்று அவற்றிற்கு வக்காலத்து வாங்கி, அவற்றை முட்டுக் கொடுத்து
நிற்கும் அமைப்புக்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அடக்கப்படுகின்றன. சோசலிச சமத்துவக்
கட்சியும் அதன் இளைஞர் பிரிவான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் என்னும்
அமைப்பும் தொழிலாள வர்க்கத் தலைமையின் நெருக்கடியை கடக்க போராடுவதுடன், தொழிலாளர்
அரசாங்கம் மற்றும் சோசலிசத்திற்குப் போராடும் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்
தயாரிப்பு கொடுக்கவும், அது தலைமை தாங்குவதற்கும் வளர்ச்சியைக் கொடுக்க
முற்படுகின்றன. |