WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் : மத்திய
கிழக்கு :
சிரியா
சிரியாவில் அமெரிக்க பினாபிப் போர் லெபனானுக்கும் ஈராக்கிற்கும் பரவுகிறது
By
Eric London
18 August 2012
use
this version to print | Send
feedback
சிரியாவில் தீவிரமடையும் பினாமிப் போர் மத்திய கிழக்கு முழுவதும்
பெரும் அமைதியின்மையை தோற்றுவித்துள்ளது. இங்கு குறுங்குழுவாதப்போர் மற்றும் மேலை
இராணுவத் தலையீடுகள் குறித்த அபாயங்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. தொடர்ந்த பல
கடத்தல்கள் லெபனானை அண்டை நாடான சிரியாவில் 17 மாத காலமாக நடக்கும் போரினுள்
உள்ளிளுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் வியாழன் அன்று ஈராக்கில்
93 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க தலைமையில் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு
எதிராக நடத்தப்படும் சுன்னி குறுங்குழுவாதப் போரில் ஒரு பங்காளி என்னும் முறையில்
அல்குவைதா கொண்டுள்ள பங்கு, ஈராக்கில் அதன் செயற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது
என்பது வெளிப்படையாகியுள்ளது. கிட்டத்தட்ட 190பேர் அல் குவைதா தாக்குதல்களால்
ஈராக்கில் கடந்த இரண்டரை வாரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
“சிரியப்
போரின் மத நியாயப்படுத்தல் மற்றும் கூடுதலான நிதியளித்தில், போராளிகளைக் கொடுத்தல்
என்பது ஐயத்திற்கு இடமின்றி ஈராக்கில் அல் குவைதாவிற்கு நலன்களை அளித்துள்ளது”
என்றார் சேத் ஜோன்ஸ். இவர் ஒரு அல் குவைதா குறித்த வல்லுனரும், பயங்கரவாத எதிர்ப்பு
வல்லுனரும்
RAND
பெருநிறுவனத்தில் பணிபுரிபவருமாவார்.
“இவ்வமைப்பு
சிரியப் போரை மேற்பார்வையிடுவதில் பெரும் தொடர்பைக் கொண்டுள்ளது.”
இன்னும் நூற்றுக்கணக்கான ஈராக்கியர்கள் ஜூன் மற்றும் ஜூலையில்
கொல்லப்பட்டனர். இது ஓராண்டில் கடந்த மூன்று மாதங்களில் பெரும் எண்ணிக்கையிலான
இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, டஜனுக்கும் மேற்பட்ட
அப்பகுதி அதிகாரிகள் தங்கள் வேலைகளை பக்குபாவில் இராஜிநாமா செய்து, பிரதம மந்திரி
நௌரி அல்-மாலிகியினால் ஈராக்கில் அல் குவைதடாவின் எழுச்சியைத் தடுக்க முடியாது என்ற
அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் லெபனானிலும் பெருகியுள்ளது.
அங்கு ஆழ்ந்த குறுங்குழுவாத அழுத்தங்கள் தீர்க்கப்படாத அரசியல்
வேறுபாடுகள் நிரம்பிய நாட்டில் மேற்தளத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
செவ்வாய் இரவு பெரும்பாலும் ஷியா மக்டாட் பழங்குடியை சேர்ந்த
முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் பெய்ரூட்டில் சுதந்திர சிரிய இராணுவத்தின்
உறுப்பினர் எனக் கருதப்பட்ட 20 பேரைக் கடத்தினர். இக்கடத்தல் திங்கன்று சிரியாவில்
அசாத் எதிர்ப்புப் படைகள் மக்டாட் குடும்ப உறுப்பினர் ஒருவரை டமாஸ்கஸில்
கடத்தியதற்குப் பதிலடி ஆகும். அவர்கள் ஹாசன் சலிம் அல்-மக்டாட் ஒரு ஹெஸ்போல்லா
முகவர் என்றும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு ஆதரவு தருகிறார் என்றும்
குற்றம் சாட்டியுள்ளனர். இக்கூற்றை ஹெஸ்போல்லா மற்றும் மக்டாட் குடும்பத்தினர்
மறுத்துள்ளனர்.
2006ப் போர்
ஒன்றில் இஸ்ரேலியத் தாக்குதலுக்கு பதிலடிகொடுத்த
ஒரு
லெபனிய ஷியைட்
அமைப்பான
ஹெஸ்போல்லாவிற்கு சிரிய ஆட்சியின் அரசியல் மற்றும் இராணுவ ஆதரவு
கிடைத்திருப்பது வாஷிங்டன் அசாத் அகற்றப்பட வேண்டும் என்னும் மூலோபாயத்தின்
பின்னணியில் இருக்கும் ஒரு முக்கிய காரணம் ஆகும். தன் பங்கிற்கு ஹெஸ்போல்லா
சுன்னிப் போராளிகளால் அசாத் அகற்றப்பட்டால், அது விரைவில் தனிமைப்படுத்தப்படும்,
ஆயுதம், நிதி பெறுவதற்கான ஆதாரங்களை இழக்க நேரிடும் மற்றும் அழிவு என்னும்
அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படுகிறது.
ஹெஸ்போல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று பேசுகையில், இஸ்ரேலை
எச்சரித்தார்:
“லெபனோனுடனான
போர் மிக மிக மிக இழப்புக்களை ஏற்படுத்தும்.... எங்கள் நாடு தாக்கப்பட்டால்,
நாங்கள் எவரிடம் இருந்தும் அனுமதிக்குக் காத்திருக்க மாட்டோம்.”
துல்லியமாக இயக்கப்படும் ஏவுகணைகள் ஹெஸ்போல்லாவால் இஸ்ரேல் மீது செலுத்தப்படும்
என்று அவர் எச்சரித்தார்; இவை
“நூறாயிரக்கணக்கான
ஜியோனிஸ்ட்டுக்களின் வாழ்க்கைகளை நரகமாக்கிவிடும்”.
“என்ன
நடந்தது என்றால்...... லெபனானில் நாங்கள் ஒரு பெரும் குழப்பத்தில் விளிம்பில்
இருந்தோம் என்பதின் தெளிவான அடையாளம் ஆகும்.”
என்று ஒரு மூத்த லெபனிய அரசாங்க அதிகாரி லெபனானின் டெய்லி ஸ்டாரிடம் வியாழன் அன்று
தெரிவித்தார்.
“சிரியாவில்
உள்ள புயல் இப்பொழுது லெபனோனையும் அடைந்துள்ளது, இது பின்வாங்காது.”
என்றார் அவர்.
கிழக்கு லெபனானில் இருக்கும் மற்ற ஷியா பழங்குடியினர்,
இதைத்தொடர்ந்து பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தப்பட்சம் 8 அசாத்
எதிர்ப்பு சுதந்திர சிரிய இராணுவத்தினரை
(FSA)
கிளர்ச்சியாளர்கள் எனப்படுவோரைக் கடத்தியுள்ளனர். ஒரு சிரிய வணிகர்
மற்றும் அசாத்தின் ஆதரவாளரும் வியாழன் அன்று சோட்டூராவில் உள்ள பீக்காப்
பள்ளத்தாக்கு நகரத்தில் படையினரால் கடத்தப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ்
கூறுகிறது.
இம்மாதம் முன்னதாக சுதந்திர சிரிய இராணுவத்தின் கிளர்ச்சியாளர்கள்
டமாஸ்கஸில் 48 ஈரானியர்களை கைப்பற்றினர். சுதந்திர சிரிய இராணுவத்தினர் 11 ஈரானிய
புனிதயாத்திரை பயணிகளை பெப்ருவரி மாதம் கடத்தியதுடன், ஐந்து ஈரானிய தொழில்நுட்ப
வல்லுனர்கள் ஹோம்ஸில் கடந்த டிசம்பர் மாதம் கடத்தப்பட்டனர்.
இக்கடத்தல்கள் அசாத்தின் பெரும்பாலான ஷியா அல்லது கிறிஸ்துவ
ஆதரவாளர்களுக்கும் சிரிய எதிர்ப்பின் முக்கிய சுன்னி ஆதரவாளர்களுக்கும் இடையே உள்ள
குறுங்குழுவாத பிரிவினை பிரதிபலிக்கின்றன. மே மற்றும் ஜூன் மாதங்களில் சுன்னி
மற்றும் ஷியாக்களுக்கு இடையே திரிப்போலி, பெய்ரூட்டில் ஆயுதமேந்திய மோதல்கள்
நடந்தவை காணப்பட்டன. பல மாதங்களாக ஆயுத வணிகம் சிறு எல்லை கடந்த தாக்குதல்கள்
ஆகியவற்றின் மூலம் லெபனான் சிரிய மோதல்களில் தொடர்பு கொண்டிருந்தாலும், சிரியப்
போர் இப்பொழுது லெபனானிலும் ஒரு முழு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக்
கொண்டுள்ளது.
“இது
... நம்மிடையை வேதனை தந்த போர்க்கால நாட்களை மீண்டும் கொண்டுவருகிறது, அப்பக்கத்தை
லெபனிய மக்கள் திருப்ப முயல்கின்றனர்”
என்று லெபனோனின் பிரதம மந்திரி நஜிப் மிகடி 1975-1990 உள்நாட்டுப்
போர் பற்றிக் குறிப்பிடுகிறார். அது மூன்று தசாப்தக்காலம் சிரிய ஆக்கிரமிப்பிற்கு
வழிவகுத்தது.
மிகடி மார்ச் 8 கூட்டணியின்
(March 8th Alliance)
உறுப்பினர் ஆவார். இப்பாராளுமன்ற கூட்டணியில் ஹெஸ்போல்லாவும்
அடங்கியுள்ளது. இது தற்போது லெபனானில் ஆட்சியிலுள்ளது. இக்கூட்டணியும் லெபனிய
அரசாங்கமும் பொதுவாக நாட்டின் சுன்னி, ஷியா, அலவைட், ட்ரூஸ், மரோனைட் மற்றும்
மரபார்ந்த பிரிவுகள் அனைத்தும் கொண்டிருக்கும் ஒரு பலமற்ற சமநிலைமையில் உள்ளன.
அரசாங்கம் ஏற்கனவே நடைமுறையில் கிழக்கு லெபனோனில் பல பகுதிகளின் மீதான
முழுக்கட்டுப்பாட்டையும் மக்டாட் போன்ற ஷியா பழங்குடியினரிடம் ஒப்படைத்துவிட்டது.
பெய்ரூட்டின் அரசியல் விமர்சகர் ரமி கௌரி உள்நாட்டு மோதலைக்
கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட தகமை குறித்து விளக்கினார்:
“லெபனானின்
அரசாங்கம் சக்திவாய்ந்த மத்திய அரசு அல்ல. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே
மக்கள் உள்ளனர், அவர்கள் ஹெஸ்போல்லாவினராக இருக்கலாம், அல்லது குடும்ப அளவுடைய
சிறிய குழுக்களாக இருக்கலாம்... இதில் கவலை என்ன என்றால் இந்நிகழ்வுகள் பெரிய
அளவிற்கு விரிவடைந்து கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும். அதன் பின் தெருக்களில்
ஆயுதமேந்திய மோதலைத்தான் நீங்கள் காண்பீர்கள்.”
லெபனானின் பாதுகாப்புப் படைகள் முன்னாள் தவகல்துறை மந்திரி மைக்கேல்
சமஹாவை ஆகஸ்ட் 9ம் திகதி உயர்மட்ட சிரிய இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு
சுன்னிக்களுக்கு எதிராக
“பயங்கரவாத
தாக்குதல்கள் மூலம் குறுங்குழுவாத வன்முறையைத் தூண்டிவிடுவதாக தீட்டம் தீட்டுகிறார்
எனக் கூறப்பட்டு கைது செய்தனர்.
மத்திய கிழக்கில்
Independent
உடைய நிருபரான ரோபர்ட் பிஸ்க் சமஹாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
“சிறிதளவு
சான்றுகள்கூட பகிரங்கமாக வெளிப்படுத்தப்படாத நிலையில்”
முன்வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மோதல் விரிவடைந்துள்ளது என்பதற்கு மற்றொரு அடையாளமாக, லெபனிய
படைகளின் தலைவரான சமீர் கியாகியா ஒரு அவசரகாலநிலை அறிவிக்கப்பட வேண்டும் என்று
அழைப்புவிட்டுள்ளார். மார்ச் 14 கூட்டணி எதிர்ப்பில் இரண்டாம் பெரும் சக்திவாய்ந்த
கட்சியான ஒரு வலதுசாரி கிறிஸ்துவக் குழுவான லெபனிய பிரிவு சிரிய செல்வாக்கை
எதிர்ப்பதுடன், சிரியாவில் அசாத் எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவையும் கொடுக்கிறது.
“ஒவ்வொரு
குடிமகனின் மனதிலும் இப்பொழுதுள்ள தோற்றம் லெபனான் கட்டுப்பாட்டிற்கு அடங்காத நாடு,
அங்கு அதிகாரம், அரசியலமைப்பு அல்லது விதிகள் என்று ஏதும் இல்லை என்பதுதான்”
என்று கியாகியா வெள்ளியன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“அவர்களுடைய
பாதை எவ்வளவு நியாயமாகவும் கௌரவமாகவும் இருந்தாலும், நடந்ததை எதுவும் நியாயப்படுத்த
முடியாது. ஏனெனில் அது நாட்டை முடக்கி அரசாங்கத்தின் பங்கையும் இல்லாமல்
செய்துவிட்டது.”
அதிகப்பட்டுவிட்ட அபாயங்களுக்கு பிரதிபலிப்பாக, சவுதி அரேபியா,
குவைத், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் கட்டார் ஆகியவை தங்கள் குடிமக்களை
விரைவில் லெபனானில் இருந்து வெளியேறுமாறு ஆலோசனை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும் துருக்கியும் வெள்ளியன்று லெபனான் குறித்த பயண
எச்சரிக்கைகளை வெளியிட்டன. இது ஒரு துருக்கிய வணிகர் புதன் அன்று மக்டாட்
பழங்குடியினர் கைப்பற்றிய 20 பேரில் இருந்தார் என்பதற்கான விடையிறுப்பு ஆகும்.
“அமெரிக்க
தூதரகம் லெபனானில் இருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு
வாய்ப்பு அதிகம் என்னும் அறிக்கைகளை பெற்றுள்ளது”
என்று தூதரக அறிக்கை தெரிவிக்கிறது.
“ஏற்படக்கூடிய
அச்சுறுத்தல்களில் கடத்தல்கள், எழுச்சி, வன்முறை, குடும்ப அல்லது
அயலவர்களுக்கிடையிலான மோதல்கள் விரிவடைதல் மற்றும் அமெரிக்க குடிமக்கள் லெபனிய
பயங்கரவாதத் தாக்குதல்களின் இலக்காக இருத்தல் ஆகியவை உள்ளடங்கியுள்ளன”
என அது மேலும் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரென் ஃபாபியுஸ் லெபனானுக்கு வருகை
புரிந்தார். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகத்தின் கருத்துப்படி அவர்
“மிக
உயர்ந்த லெபனிய அதிகாரிகளான ஜனாதிபதி, பிரதம மந்திரி, பாராளுமன்றத் தலைவர்,
வெளியுறவு மந்திரி ஆகியோரை சந்தித்தார். அவர் மனிதாபிமான உதவியாளர்களையும்
சந்திப்பார். அவர் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.”
ஒபாமா நிர்வாகமும் லெபனானில் அதன் தலையீட்டை அதிகரித்து
“சிரிய
அரசாங்கம் தன் மக்கள் மீதான வன்முறை அடக்குதலுக்கு ஹெஸ்போல்லா விரிவான ஆதரவைக்
கொடுக்கிறது”
என்று, பயங்கரவாதத்திற்கும் நிதிய உளவுத்துறைக்குமான பிரிவின் துணை மந்திரி டேவிட்
கோஹன் கூறியுள்ளார்.
“இது
இந்தப் பயங்கரவாத அமைப்பின் உண்மையான தன்மையையும் மற்றும் இப்பிராந்தியத்தில் இதன்
உறுதிகுலைக்கும் பிரசன்னத்தையும் அம்பலப்படுத்துகிறது.”
என்றார்.
இக்கூற்றுக்கள் பாசாங்குத்தனமானவை. அமெரிக்காவும் அதன் நட்பு
நாடுகளும் மிகப் பெரிய நிதியங்களை ரொக்கமாகவும், ஆயுதங்களாகவும்
CIA
இன்னும் பிற உளவுத்துறை அமைப்புக்கள் மூலம் சிரியாவில் போரில்
ஈடுபட்டுள்ள குறுங்குழுவாத குழுக்களுக்கு கொடுத்து வருகின்றன. இப்போர் இப்பொழுது
சிரிய எல்லைகளுக்கு அப்பாலும் பரவுகிறது, முழுப் பிராந்தியத்தையும்
குருதிக்களறியில் ஆழ்த்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. |