World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

China slowdown deepens global crisis

சீனப் பொருளாதார வளர்ச்சிக்குறைவு உலக நெருக்கடியை தீவிரமாக்குகிறது

Nick Beams
16 August 2012
Back to screen version

சீனா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியுறுவது உலக முதலாளித்துவ பொருளாதார விரிவாகத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை கொடுக்கும் என பலமுறை வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கை இப்பொழுது சமீப வாரங்களில் பொருளாதார புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க குறைவினை காட்டுவதனால் கடுமையான தாக்குதலுக்குள்ளாகின்றது.

இப்புள்ளி விவரங்கள் உலகளாவிய முக்கியத்துவம் கொண்டவை. ஏனெனில் அவை லெஹ்மன் பிரதர்ஸ் சரிவின் நான்காம் ஆண்டு நிறைவை அணுகுகையில், அது தூண்டிவிட்ட பொருளாதார நிலைமுறிவு ஆழமடைந்துவிட்டதுடன், அது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிவிட்டது என்பதைத் தெளிவாக்குகின்றன.

உலக பொருளாதாரத்தில் சீனாவின் முக்கியத்துவம் என்பது 2008 உலக நிதிய நெருக்கடி தோன்றியதில் இருந்து இது உலகப் பொருளாதார வளர்ச்சியில் 35%க்கும் மேலானதை கொண்டுள்ளது என்ற உண்மையினால் எடுத்துக்காட்டப்பட்டது. இதே காலத்தில் முக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ பொருளாதாரங்கள் தேக்கமுற்றன. யூரோப்பகுதியின் பொருளாதாரம் உண்மையில் 2% சுருக்கம் அடைந்தது.

சீனப் பொருளாதாரம் உலகின் மற்ற பகுதிகளுடன் கொண்டுள்ள முக்கிய பிணைப்பு வணிகத்தின் ஊடாகவாகும். இங்குத்தான் அதன் சரிவு மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஜூலை மாதம் கிட்டத்தட்ட ஏற்றுமதி வளர்ச்சிகள் நின்றுவிட்டன, 1% மட்டுமே உயர்ந்தன. இது சந்தைக் கணிப்புக்களைவிட மிகவும் குறைவு ஆகும். ஜூன் மாத 11.3% ஐவிட மிகவும் குறைவாகும் எனக் காட்டுகின்றன. இறக்குமதிகள் 4.7%தான் உயர்ந்தன. இது உள்நாட்டுத் தேவை அரசாங்க அதிகாரிகள் நம்பிய அளவிற்கு விரைவில் விரிவாக்கம் அடையவில்லை என்பதைக்காட்டுகிறது. ஜூன் மாதம் ஒரு தளர்ச்சியான நிதியக் கொள்கையை அரசாங்கம் ஏற்றபோது அவ்வாறு நம்பியது.

ஏற்றுமதி பற்றிய புள்ளிவிவரங்களைப் பகுத்தாராய்ந்தால், உலகின் மற்ற பகுதிக்கு உந்துதலில் ஒரு மூலாதாரமாக இருப்பது என்பதற்கு முற்றிலும் மாறாக, சீனப் பொருளாதரம் முக்கிய முதலாளித்துவ மையங்களில் இருக்கும் மந்தநிலை வெள்ளத்தால் இழுக்கப்படுகிறது என்பது நன்கு புலனாகும். சீனாவில் இருந்து யூரோப்பகுதிக்கு ஏற்றுமதிகள் என்பது கடந்த ஆண்டு 16% குறைந்துவிட்டது. மிகப் பெரிய நாடுகள் சிலவுடன் மிகப் பெரிய சரிவுகளைத்தான் கொடுத்துள்ளன. உதாரணமாக இத்தாலியுடனான ஏற்றுமதிகள் 36% சரிந்துவிட்டது.

உத்தியோகப்பூர்வ சீனச் செய்தி நிறுவனமான Xinhua நிலைமையை கடினமாக உள்ளது என விவரித்த்து. இந்த ஆண்டு ஏற்றுமதிகளில் 10% அதிகம் இருக்கும் என்னும் கணிப்புக்கள் நிறைவேறாமல் போகும் என்பதற்கான அடையாளங்கள்தான் உள்ளன. இதுவும் லெஹ்மன் பிரதர்ஸ் திவாலானவுடனான காலத்தை 2012 மிகவும் ஒத்து இருக்குமென்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நிகழ்கின்றது. அப்போது ஏற்றுமதிகள் பல மாத காலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் முற்றிலும் சரிந்தது.

இது 23 மில்லியன் சீனத் தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு வகை செய்துவிட்டது. இதை அரசாங்கம் ஒரு பெரிய ஊக்கப் பொதியை வழங்கியதன் மூலம் எதிர்கொண்டது. கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர் மதிப்புப் பொதியாகும் அது. வங்கிகள் கடன் கொடுக்கும் விதிகளைத் தளர்த்த வேண்டும் என்ற இயக்கநெறி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள், பொருளாதாரத்திற்கு ஏற்றம் தருகையில், பெரும் சமச்சீரற்ற நிலையை ஏற்படுத்தின. முதலீடு இப்பொழுது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% என்று உள்ளது. இது எந்த அளவிற்குப் பொருளாதாரம் அரசாங்க உள்கட்டுமானத் திட்டங்களையும் நிலச்சொத்து வளர்ச்சியையும் பொறுத்துள்ளது என்பதைத்தான் அடையாளம் காட்டுகிறது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப்போன்று இல்லை என்பதற்கான அடையாளங்கள்தான் உள்ளன. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட ஜூன் முடிந்த காலாண்டில் 7.6% வளர்ச்சியுற்றது. இது மூன்று ஆண்டுகளில் மிகவும் குறைவான விரிவாக்கம் ஆகும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 9.5 சதவிகிதத்தில் இருந்து, 9.2 என்று குறைந்தது.  சில்லறை விற்பனை வளர்ச்சி 13.7%ல் இருந்து 13.1% என்று குறைந்தது. முதலீட்டு வளர்ச்சி நிலையாக 20.4% என விளங்கியது.

இந்த வளர்ச்சி விகிதங்கள் முன்னேறியுள்ள முதலாளித்துவப் பொருளாதாரங்களோடு ஒப்பிடுகையில் உயர்ந்தவை என்றாலும், சீனப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியில் மிகவும் குறைவான இலாபங்கள் என்பது வளர்ச்சி விகிதத்தில் சிறிய சரிவு ஒப்புமையில் என்பது கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும். உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த அறிக்கை ஒன்று ஆண்டின் முதல் பாதியில் சீன எஃகுத் தயாரிப்பாளர்களின் இலாபங்கள் ஓராண்டிற்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் 96% சரிந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. ஒரு அதிகாரி இத்தொழில்துறையை பேரழிவுப் பகுதி என்று விவரித்தார்.

பொருளாதாரத்தில் கணிசமான விகிதத்தைக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் இலாபங்கள் ஆண்டின் முதல் பாதியில் 11.6% சரிந்தன.  2008 உறுதியில் உலக நிதிய நெருக்கடி ஆரம்பித்தபின் இது மிக மோசமான விளைவு ஆகும்.

சீனப் பொருளாதாரத்தின் மந்தத்தன்மை பல நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். 1997-98 ஆசிய நெருக்கடியின் முக்கிய விளைவுகளில் ஒன்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றின் பொருளாதார நோக்குநிலையின் கணிசமான மாற்றம் ஏற்பட்டது ஆகும். பெருகியமுறையில், அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளுக்கு நேரடியாகச் செல்லும் நுகர்பொருட்கள் உற்பத்திக்குப் பதிலாக, அவை சீனாவில் இறுதியில் ஒருங்கிணைத்து பொருத்தப்படும்  பொருட்களுக்கான பகுதிப்பாகங்களை தயாரிப்பதில் ஈடுபட்டன.

இப்பொருளாதாரங்கள் அனைத்திலும், சீனா மெதுவாக வளர்ச்சியுறுவது என்பது கவலையளிக்கும் அடையாளம் ஆகும். இந்த வாரம் தாய்லாந்து மத்திய வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டு, ஏற்றுமதி வளர்ச்சியில் குறைவு என்பது தாய்லாந்து தொழில்துறையைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது; ஏனெனில் அது பல துணைக் கருவிகளை வழங்குவதில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் யூரோ நெருக்கடி நம் வணிகப் பங்காளிகள் மீது கொண்டுள்ள எதிர்மறை பாதிப்புக்கள் ஆண்டின் இரண்டாம் பகுதியில் அதிகமாகும் என்று கூறினார். இந்த வங்கி ஏற்கனவே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய முற்கணிப்பை திருத்திவிட்டது.

சீனாவிற்கு ஏற்றுமதிப் பொருட்களின் முக்கிய இறக்குமதிகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகியவற்றில் இருந்து வருபவையும் பாதிப்பிற்கு உட்படும். இந்த வாரம், பிரேசிலின் இரும்புத் தாதுப் பொருள் ஏற்றுமதி நிறுவனம் Vale உடைய அதிகாரி ஒருவர் சீனாவில் குறைவு ஏற்படுதல் என்பதற்கு பொற்காலத்திற்கு போய்விட்டன என்ற பொருள் ஆகும் என்றார். இந்த நிறுவனம் அதன் 44% இருப்புத் தாதுப் பொருள் மற்றும் சிற்றுறுண்டைகளை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வழங்கியுள்ளதுடன், அதன் இலாபங்களில் 59% குறைவு என்று அறிவித்துள்ளது. அதற்கு காரணம் டிசம்பர் 2009ல் இருந்து இரும்புத் தாதுப்பொருட்களின் விலைகள் மிகக் குறைந்த அளவை அடைந்துவிட்டன. பிரேசிலின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் குறைப்பை அனுபவிக்கையில், அரசாங்கம் தொடர்ச்சியான பல தனியார்மயமாக்கல்களை அறிவித்துள்ளது. இன்னும் அதிகமானவை வரவிருக்கும் வாரங்களில் வரவுள்ளன.

சீனப் பொருளாதாத்தின் தாமதப் போக்கு ஆஸ்திரேலியப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தும்ந அந்நாடு அதன் நிலக்கரி, இரும்புத் தாது மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் ஏற்றுமதிகளுக்குச் சீனச் சந்தையைத்தான் அதிகம் நம்பியுள்ளது. சுரங்கத் தொழில் மற்றும் பல இடங்களில் இருந்தும் தொழிற்கட்சி அரசாங்கம் அமெரிக்கா ஆசியாவில் முன்னிலையிலிருப்பதற்கு கொடுக்கும் ஆதரவு குறித்து எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளன. அதேபோல் அரசாங்கத்தின் பெருகிய சீன விரோதப் போக்கிற்கும் எதிர்ப்பு வந்துள்ளது. இந்த ஆளும் வட்டங்களுக்குள் இருக்கும் முணுமுணுப்புக்கள் சீனப் பொருளாதாரத்தில் தாமதமான நிலை என்பது சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் சந்தைகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்ற பொருளைத்தரும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள அழுத்தங்களும் அதிகரிக்கும். ஏற்றுமதி வளர்ச்சியல் குறைவு என்பதின் பொருள் சீன அதிகாரிகள் தங்கள் ரென்மிபியுடைய மதிப்பை உயர்த்துவதில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள் என்பதாகும். இம்மாதம் முன்னதாக அரசாங்க ஆதரவு பெற்ற China Securities Journal  நாணயத்தின் மதிப்பைக் குறைத்தல் என்பது ஏற்றுமதிகள் விரிவாக்குவதற்கு நலன்களை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அது உரியளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் எத்தகைய கணிசமான சரிவும் அமெரிக்காவில் இருந்து விரைவான விடையிறுப்பைக் கொள்ளும். ஏற்கனவே அது ஏற்றுமதிச் சந்தைகளுக்கான போட்டிகளில் டாலரின் மதிப்பை குறைத்து வைக்க முற்பட்டுள்ளது.

சீனாவில் வளர்ச்சிக்குறைவு என்பதனால் வெளிப்படும் மற்றும், அதற்கு தன்பங்கிற்கு சீனாவே பங்களிக்கும் உலகப் பொருளாதாரத்திற்குள் இத்தகைய முரண்பாடுடைய போக்குகள் தீவிரமடைதல் என்பது கூடுதலான அரசியல் அழுத்தங்கள் ஒரு மோசமான பொருளாதார நிலைமையுடன் இணைந்து வரும் என்பதையே அர்த்தப்படுத்துகின்றது.