WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
UK threatens to storm Ecuadorean embassy to seize Assange
அசாஞ்சை கைப்பற்றுவதற்கு ஈக்வடோர் தூதரகம் தாக்கப்படலாம் என்று இங்கிலாந்து
அச்சுறுத்துகிறது
By Robert Stevens
17 August 2012
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கம்
விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை கைப்பற்றுவதற்கு ஈக்வடோரின்
தூதரகத்தின்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்னும் அச்சுறுத்தல் சர்வதேச
சட்டத்திற்கு இகழ்வுணர்வையும், ஈக்வடோரின் இறைமையைக் குறித்து காலனித்துவ வகை
அவமதிப்பு தன்மையும்தான் காட்டுகிறது.
இது பிரித்தானியாவின் ஆளும் வர்க்கத்தின் மரபுவழியான
குற்றத்தன்மையில் ஒரு புதிய கட்டத்தை குறித்துநிற்கிறது; அமெரிக்கா, இன்னும் பிற
ஏகாதிபத்திய சக்திகளின் கணக்கிலடங்கா குற்றங்களை அம்பலப்படுத்த உதவிய ஒரு மனிதனை
மௌனமாக்க வேண்டும் என்னும் நோக்கத்தைத்தான் இது கொண்டுள்ளது.
அசாஞ்க்கு தான் புகலிடம் கொடுக்க உள்ளது என்று பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை வியாழன் கண்டது; அவர் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால்,
அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது தொடரும், அங்கு தேசக்குற்றத்திற்கான விசாரணையை
எதிர்கொள்ள நேரிடும் என்ற நிலை உள்ளது. அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர்,
ஸ்வீடனில் இருந்து அசாஞ்ச் அமெரிக்காவிற்கு அனுப்பப்படமாட்டார் என்ற
உத்தரவாதத்தை ஈக்வடோர் கோரியது என்றும் ஸ்வீடன் அதிகாரிகள் அவ்வாறு உத்தரவாதம்
அளிக்க மறுத்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
அசாஞ்க்கு எதிரான வழக்கு அரசியல் உந்துதலில் தயாரிக்கப்பட்ட ஒன்று
என்பது வெளிப்படை; தயாரிக்கப்பட்ட பாலியல் தாக்குதலை அவர் ஸ்வீடனில் நடத்தினார்
என்பது இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்வீடன் நாட்டு வக்கீல்கள் அசாஞ்சை
தூதரகத்தில் கேள்விகள் கேட்கும் வாய்ப்பை ஈக்வடோர் அளித்தது; நேரடியாகவோ அல்லது
வீடியோமாநாடு மூலமோ இவ்வாறு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது
நிராகரிக்கப்பட்டுவிட்டது.
புதன்கிழமை இரவு, ஈக்வடோரின் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பிற்குக்
காத்திருக்கும் வகையில் அந்நாட்டு தூதரகத்தின்முன் பொலிஸ் அதிகாரிகள் குழுமினர்.
ஜூன் 19ம் திகதி ஐக்கிய நாடுகள் மன்ற மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில்
தூதரகப் பாதுகாப்பும் அரசியல் புகலிடமும்கோரி அசாஞ்ச் தூதரகத்தில் நுழைந்தார்.
இங்கிலாந்தின் தலைமை நீதிமன்றம் ஸ்வீடனுக்கு அனுப்புதல் என்பதற்கு எதிரான அசாஞ்சின்
இறுதி முறையீட்டை நிராகரித்ததை அடுத்து இது நடந்தது.
அன்று ஈக்வடோர் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் பிரித்தானிய
அரசாங்கம் தூதரகம் அது புகலிடம் கொடுத்தால் தூதரகத்தில் சோதனை ஒரு வார காலத்தில்
நடத்தப்படும் முன்னறிவிப்பை பெறும் எனக் கூறப்பட்டது. வியாழன் காலையில், பொலிஸ்
வாகனங்கள் கட்டிடத்திற்கு அடுத்த சாலைகளில் நிறுத்தப்பட்டன. அசாஞ்ச் சுதந்திரமாக
இருக்க வேண்டும் என ஆர்ப்பரித்த பலரும் தூதரகத்தின் முன்பு இருந்து கட்டாயமாக
அகற்றப்பட்டு சாலைக்கு மறுபுறத்தே ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டனர்.
எதிர்ப்பாளர்களின் கைதுகளும் நடைபெற்றன; இதில் ஒருவர்
Occupy News Network
க்கு நேரடி ஒளிபரப்பிற்கு உதவி செய்து வந்தார்.
“அசாஞ்ச்
மீது கைவைக்காதே”,
“ஈக்வடோர்
மீது கைவைக்காதே”,
“ஒரே
ஒரு முடிவுதான் உள்ளது—அனுப்பதுல்
கிடையாது”
போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.
புதன்கிழமை அன்று ஈக்வடோரின் வெளியுறவு மந்திரி ரிக்கார்டோ பாடினோ
பிரித்தானியத் தூதரகத்தின் மூலம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் இருந்து ஒரு கடிதம்
வந்துள்ளது என்பதை செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
“பிரித்தானிய
உத்தியோகபூர்வ தகவலில் உள்ள வெளிப்படையான அச்சுறுத்தலை மிகவும் உறுதியான வகையில்
ஈக்வடோர் நிராகரிக்கிரது”
என்றார் அவர்; இந்த அச்சுறுத்தல்
“ஒரு
ஜனநாயக, நாகரிக, சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நாட்டிற்கு”
ஒவ்வாதது என்று கண்டித்தார்.
“பிரித்தானிய
உத்தியோகபூர்வ தகவலில் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், அது
ஈக்வடோரால் ஏற்கத்தக்கது அல்ல, நட்புணர்வு கொண்டது அல்ல, விரோதச் செயல், எங்கள்
இறைமையை எதிர்க்கும் முயற்சி எனக் கருதப்படும்”
“நாங்களும்
விடையிறுக்கும் கட்டாயத்திற்கு உட்படுவோம். நாங்கள் ஒன்றும் பிரித்தானிய காலனித்துவ
நாடு அல்ல.”
என்று அவர் எச்சரித்தார்.
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரக அலுவலகக் கடிதம்,
ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர் என்ற முறையில் பிரித்தானியவிற்கு பொருத்தமாக
இருந்தது. இராஜதந்திர மற்றும் தூதரக வளாகங்கள் சட்டம் 1987
(Diplomatic and Consular Premises Act 1987)
படி
“தூதரகத்தின்
தற்போதைய இடத்திலுள்ள திரு அசாஞ்சை கைது செய்ய”
நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும் எனக் கூறப்பட்டது. அது மேலும் கூறியது:
“இவ்வகையில்
தூதரகம் பயன்படுத்தப்படுவது வியன்னா மரபுகளுடன் இயைந்திருக்கவில்லை என்பதை நாங்கள்
கருதுகிறோம் என்பதை வலியுறுத்துகிறோம்; நம் தூதரக உறவுகளுக்கு இது ஏற்படுத்தக்கூடிய
தீவிர உட்குறிப்புக்களையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.”
வியாழனன்று இங்கிலாந்தின் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஒருவர்
அறிக்கை ஒன்றை வெளியிட்டார்; அதில் அசாஞ்சுக்கு அரசியல் புகலிடம் கொடுக்கும்
ஈக்வடோர் அரசாங்கத்தின் முடிவு ஏற்கப்படமாட்டாது எனக் கூறப்பட்டது.
“புகலிடம்
கொடுத்தல் என்பது அடிப்படையில் எதையும் மாற்றிவிடாது.”
என்றார் செய்தித் தொடர்பாளர்.
ஈக்வடோர் அரசாங்கம் வியன்னா மரபை மீறிச் செயல்படுகிறது என்னும்
பிரித்தானிய அரசாங்கத்தின் கூற்று வரம்பற்றவகையில் பாசாங்குத்தனம் மற்றும் இழிந்த
தன்மை கொண்டது.
இவர்கள்தான் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை நெறிகளை அகற்றுகின்றனர்;
அதில் வியன்னா மரபும் அடங்கும்; இந்த முயற்சி அசாஞ்ச் குற்ற விசாரணையை சந்திக்க
வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேசச் சட்டம் குறிப்பாக
வெளிநாட்டுத் தூதரகங்களை இறைமை பெற்ற இடம் என வரையறுத்துள்ளது; அத்தகைய தூதரகப்
பகுதிகள் வெளிநாட்டின் பகுதிகள் என்றுதான் கருதப்பட வேண்டும்.
அசாஞ்ச் கைப்பற்றப்படுவார் என்னும் அச்சுறுத்தலின் தீவிர
விளைவுகளைப் பற்றிக் கருத்து தெரிவிக்கையில், அசாஞ்சுக்கு வக்கீலாக இருந்த சர்வதேச
அளவில் நன்கு அறியப்பட்டுள்ள மனித உரிமைகள் வக்கீலான ஜெப்ரி ரோபர்ட்சன் கூறியது:
“வியன்னா
மரபு, மற்றும் நம் தூதரகச் சிறப்புச் சலுகைகளை சட்டம் ஆகியவற்றில் இருந்து 1964
தொடங்கி தூதரகப் பகுதிகள், துணைத்தூதரகப் பகுதிகள் ஆகியவை மீறப்பட முடியாதவை என்று
நாம் கூறும் பகுதிகள் என்பது மிகத் தெளிவு.”
“உள்ளூர்
பொலிசார்,
தூதரகத் தலைவரின் இசைவு பெற்றுத்தான் அதற்குள் நுழைய முடியும்.”
பிரித்தானிய அரசாங்கம்,
இராஜதந்திர மற்றும் தூதரக வளாகங்கள் சட்டம்
1987
ஐ
ஈக்வடோர் தூதரக அங்கீகராத்தைத் திரும்பிப் பெறுவதற்கு ஆதாரமாக மேற்கோளிட்டுள்ளது.
ஆனால் இந்தச் சட்டம்,
“அரச
செயலர் சர்வதேச சட்டப்படி அவ்வாறு செய்ய இயலும் என்பதில் திருப்தி அடைந்தால்தான்
தூதரகத்திற்கான அங்கீகாரத்தை கொடுக்க அல்லது திரும்பப் பெற முடியும்”
என்று குறிப்பாக தெரிவிக்கிறது.
பிரித்தானிய பொலிசார் அசாஞ்சை கைது செய்ய தூதரகத்திற்குள் அனுமதி
இல்லாமல் அனுப்பப்பட்டால், அது சர்வதேசச் சட்டத்தை, விஷேடமாக 1961 வியன்னா மரபுகள்
தூதரக உறவுகள் விதி 22 ஐ மீறுவதாகும்.
பிரித்தானியாவை விட்டு நீங்குவதற்கு அசாஞ்ச் அனுமதிக்கப்பட வேண்டும்
என்னும் ஈக்வடோரின் வேண்டுகோளை எதிர்க்கையில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி
வில்லியம் ஹேக் அப்பட்டமாக அறிவித்தார்:
“இங்கிலாந்தில்
இருந்து திரு.
அசாஞ்ச் பாதுகாப்பாக வெளியேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அவ்வாறு
செய்வதற்கு சட்டப்பூர்வ தளமும் இல்லை. இராஜதந்திர புகலிடம் என்னும் கொள்கையை
இங்கிலாந்து அங்கீகரிக்கவில்லை.”
ஓர் அறிக்கையில் அசாஞ்ச் ஈக்வடோரின் அரசாங்கத்திற்கு புகலிடம்
கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்;
“இன்று
இது ஒரு வரலாற்று ரீதியான வெற்றி என்றாலும் நம் போராட்டங்கள் இப்பொழுதுதான்
தொடங்குகின்றன. விக்கிலீக்ஸிற்கு எதிரான முன்னோடியில்லாத வகையிலான அமெரிக்காவின்
விசாரணை நிறுத்தப்பட வேண்டும்.
“இன்று
குவிப்பு ஈக்வடோரிய அரசாங்கத்தின் முடிவு மீது இருக்கும்; அதேநேத்தில் நாம்
பிராட்லி மானிங் [விக்கிலீக்ஸிற்கு தகவலை கசியவிட்டவர் என்று குற்றம்
சாட்டப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர்] விசாரணை ஏதும் இன்றி 800 நாட்களுக்கும்
மேலாகக் காவலில் உள்ளார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
“விக்கிலீக்ஸ்,
அதன் ஊழியர்கள், ஆதரவாளர்கள் அதன் ஆதாரங்கள் எனக் கூறப்படுபவை ஆகியவற்றை
பாதுகாக்கும் பணி தொடரும்.”
மற்றொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிரான பிரிட்டிஷ் இராஜதந்திர
அச்சுறுத்தல்கள் மற்றும் பொலிஸ் அட்டூழியம் இது பிரித்தானிய பாதுகாக்கும்
அப்பட்டமான குற்றம் சார்ந்த தன்மையுடன் இயைந்துள்ளது. ஆளும் வர்க்கமும் அதன்
அரசியல் பிரதிநிதிகளும், முன்னாள் தொழிற் கட்சி அரசாங்கங்களான டோனி பிளேயருடையது,
கோர்டன் பிரௌனுடையது உட்பட, கடந்த தசாப்தத்தில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு
எதிரான சட்ட விரோத ஆக்கிரமிப்புப் போர்களைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இப்பொழுது
அவர்கள் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து சிரியாவிற்கு எதிரான இரகசியப் போரை
நடத்துகின்றனர்; இதன் நோக்கம் பஷார் அல்-அசாத்தின் அரசாங்கத்தை அகற்றி அத்துடன்
ஈரானுடனான போருக்கு வழிவகுப்பதாகும்.
அசாஞ்ச் மீது இலக்குக் கொள்ளுதல் என்பது பிரித்தானியாவின்
குற்றப்பங்காளியான அமெரிக்காவிலுள்ள ஒபாமா நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்தான்
நடத்தப்படுகிறது. |