WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் மத்திய கிழக்குப் போர் அபாயத்தை உயர்த்துகின்றன
Peter Symonds
17 August 2012
use
this version to print | Send
feedback
ஈரானுக்கு எதிராக தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போரை
தொடக்குவோம்
என்னும் இஸ்ரேலியர்களின் சமீபத்திய அச்சுறுத்தல்கள்,
ஒபாமா நிர்வாகத்தின் மத்திய கிழக்கை மறு கட்டமைக்கும் உந்துதல்
மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்
பொறுப்பற்ற தன்மை மற்றும் குற்றத் தன்மையையும்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் இன்னும் வெளிப்படையாக தங்கள் விருப்பங்களை
வெளியிடுகையில், அவர்கள் ஒபாமாவின் பல முறை கூறப்படும் கருத்தான ஈரானை சந்திக்க
போர் உட்பட அனைத்து விருப்புரிமைகளும் மேசையில் உள்ளன என்பதைத்தான்
எதிரொலிக்கின்றனர்.
இஸ்ரேலின் துணை வெளியுறவு மந்திரி டானி அயலோன் கடந்த ஞாயிறன்று
அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும்
“[ஈரானுடனான]
பேச்சுக்கள் முடிந்துவிட்டன என்று இன்று அறிவிக்க”
அழைப்பு விடுத்துள்ளார்; அதேபோல் ஈரான் அதன் அணுச்சக்தி திட்டத்தை முடிக்க ஒரு
காலக்கெடு நிர்ணயிக்குமாறும் கூறியுள்ளார். எத்தனை காலம் ஈரானிய ஆட்சிக்கு
கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டதற்கு, அயலோன்,
“சில
வாரங்கள், அதற்கு மேல் இல்லை”
எனப் பதில் கூறினார்.
அயலோனுடைய கருத்துக்கள் இஸ்ரேலிய செய்தி ஊடகத்தில் பிரதம மந்திரி
நெத்தென்யாகு மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் ஈரான்
மீது தாக்குதலுக்கான முடிவை விரைவில் எடுப்பதாக வந்துள்ள ஊகத்தின் நடுவே
கூறப்பட்டுள்ளன. செவ்வாயன்று
Ma’ariv
செய்தித்தாள் நெத்தென்யாகுவும் பாதுகாப்பு மந்திரி எகுட் பரக்கும்
செப்டம்பர் 25 ஐ ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுக்க ஒபாமா உறுதி கொடுக்க
வைப்பதற்கு தேதியாக நிர்ணயித்துள்ளனர்.
புதன்கிழமை அன்று ஒரு கசியவிடப்பட்ட குறிப்பு இஸ்ரேலின்
போர்த்திட்டங்களை கோடிட்டுக் காட்டியது: அதில்
“முன்னோடியில்லாத
சைபர் தாக்குதல்”
ஒன்று ஈரானின் தொடர்புத்துறையை மூடிவிடுதல், கார்பன் இழை வெடிகள் நாட்டின் விசைக்
கட்டுமானத்தை சரியச் செய்வதற்கு பயன்படுத்துதல், மற்றும்
“பல
பாலிஸ்டிக் ஏவுகணைகள், நூற்றுக்கணக்கான க்ரூஸ் ஏவுகணைகள்”
அவற்றுடன் வான்வழித் தாங்குதல்கள் என்று ஈரானின் அணுசக்தி
நிலையங்கள், அதன் இராணுவக் கருவி, அதன் அரசியல் இராணுவத் தலைவர்களை தாக்குதல்
ஆகியவையும் அடங்கும்.
புதன் அன்றே, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஓரென்
ஒரு பொது அரங்கில் இஸ்ரேல் ஈரானின் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் அழிக்க
முடியவில்லை என்றாலும் தாக்க விருப்பம் உடையதாக இருக்கிறது என்றார்.
“இராஜதந்திர
முயற்சிகள் வெற்றி பெறவில்லை”
என்றார் அவர் அப்பட்டமாக.
“நாங்கள்
ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம், முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும்”
என்றார். இஸ்ரேலின் தாக்குதல் வாய்ப்புச் சன்னல் எப்பொழுது மூடப்படும் என
வினவப்பட்டதற்கு, அவர் கூறினார்:
“மிகத்
தொலைவில் அல்ல.”
இத்தகைய சமீபத்திய அச்சுறுத்தல்கள் இஸ்ரேலுக்குள் இருக்கும்
குறைகூறுவோரை ஓரளவிற்கு மிரட்டும் நோக்கத்தை கொண்டவை; ஈரான் மீதான போருக்கு அங்கு
பரந்த எதிர்ப்பு உள்ளது; அதைத்தவிர ஒபாமா நிர்வாகம் தன் சொந்த அச்சுறுத்தல்களை
ஈரானுக்கு எதிராக விரிவாக்க வேண்டும் என்ற அழுத்தமும் உள்ளது. இத்தகைய அறிக்கைகளை
வெளியிடும் இஸ்ரேலிய அதிகாரிகளின் முழு
நனவான
நோக்கம் ஒருபுறம் இருக்க, அவர்களுடைய போர்வெறி பிராந்தியம் முழுவதும்
அழுத்தங்களைத்தான் அதிகரிக்கின்றது, போர் வருவதற்கான ஆபத்துக்களையும்
பெருக்குகின்றது.
மேலும், ஈரான் மட்டும் இலக்கு அல்ல. இஸ்ரேலியத் தூதர் ஓரென்,
சிரியாவில் மோசமாகிக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போருக்கு இடையே அவ்வரசாங்கம்
கொண்டுள்ள இராசயன ஆயுத குவிப்பைப் பற்றியும் கவலை தெரிவித்துள்ளார். நிலைமை
“மிகவும்
கொந்தளிப்புத்தன்மை உடையது”
என்று கூறிய அவர், ஈரானுக்கும் முன்னதாக சிரியா
“முதலில்
கவனிக்கப்பட வேண்டும்”
என்று குறிப்புக் காட்டினார். ஏற்கனவே இஸ்ரேல் சிரியாவின் இரசாயன
ஆயுதங்களை தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானுக்கு எதிராகப் போரை
நியாயப்படுத்தப் பயன்படுத்தும் போலிக் காரணங்கள் முற்றிலும் இழிந்தவை. ஈரான்
அணுவாயுதத்திறனை வளர்க்கிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கூறி அமெரிக்கா
ஈரான்மீது தாக்குதல் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது; அதே நேரத்தில் இஸ்ரேலின் பெரும்
அணுவாயுதக் குவிப்பு மற்றும் அவற்றை இயக்கும் முறைகளைப் பற்றிச் சிறிதும்
பொருட்படுத்தவில்லை. அதேபோல் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரியாவின் இரசாயன
ஆயுதங்களைப் பற்றிய மிகையான கூற்றுக்களைக் கூறுகின்றனர்; இது இராணுவ
ஆக்கிரமிப்பிற்கு ஒரு போலிக்காரணமாகும்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மூலோபாயம் இயற்றுபவர்களுக்கு, சிரியாவில்
நடக்கும் உள்நாட்டுப்போர், ஈரானை தாக்குவதற்கான தயாரிப்புக்கள் ஆகியவை நெருக்கமாக
பிணைந்துள்ளன. ஈரான்,
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் நட்பு மிகுந்த சிரிய ஆட்சிக்கு ஆதரவைக்
கொடுப்பதின் மூலமும், லெபனியப் போராளிக்குழு ஹெஸ்போல்லாவிற்கும், பாலஸ்தீனிய
அமைப்பான ஹமஸிற்கும் ஆதரவு கொடுப்பதின் மூலமும் மத்திய கிழக்கில் அமெரிக்க
மேலாதிக்கம் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முக்கிய தடையாகக் கருதப்படுகிறது. சிரியாவில்
அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவத் தலையீடு விரிவாக்கம் பெறுகையில், அமெரிக்கா மற்றும்
அதன் பேர்சிய வளைகுடா நட்பு நாடுகள் ஈரானுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புக்களையும்
விரிவாக்குகின்றன.
இஸ்ரேல்,
அமெரிக்க ஆதரவுடன்,
ஏற்கனவே ஈரானிற்குள் நாசவேலை மற்றும் ஒரு மிகவும் ஆத்திரமூட்டும்
படுகொலை என ஒரு இரகசியப் போரில் ஈடுபட்டுள்ளது.
மேலும் சௌதி அரேபியா மற்றும் கட்டார் ஆகியவற்றின் பிற்போக்குத்தன
சுன்னி முடியாட்சிகளின் ஆதரவைத் திரட்டும் வகையிலும், துருக்கிய அரசாங்கத்தின்
ஆதரவைப் பெறும் வகையிலும், அமெரிக்கா வேண்டுமென்றே சுன்னி-ஷியைட் பிரிவினரிடையே
பிராந்தியத்தில் குறுங்குழுவாத போருக்கு எரியூட்ட முயல்கிறது.
சிரிய எதிர்ப்புப் போராளிகள் குழுவிற்கு அமெரிக்கா மற்றும் அதன்
நட்பு நாடுகள் கொடுக்கும் ஆயுதங்கள் சுன்னித் தீவிரப் போராளிகள் உட்பட
பலவற்றிற்கும் செல்கின்றன; இவை இயல்பாகவே ஈரான் மற்றும் சிரியாவில் இருக்கும்
“ஷியைட்”
ஆட்சிகளுக்கு விரோதப் போக்கைக் காட்டுபவை. அரசியல் வெப்பத்தை கொதிநிலைக்கு
உயர்த்தியபின், ஒரு சிறு நிகழ்வுகூட—பேர்சிய
வளைகுடாவில் கடற்படைப் பிரிவினரிடையே மோதல் அல்லது சிரியாவிற்கும் துருக்கிக்கும்
இடையே ஒரு எல்லை நிகழ்வோ கூட—
ஒரு பிராந்தியப் போரைத் தூண்டுக்கூடும்; இதில் பெரும் சக்திகள்
ஈர்க்கப்பட்டுவிடும்.
மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன்
கூட்டாளிகளின் அதிகரித்து வரும் தலையீடு,
எகிப்து மற்றும் துனிசியாவில் கடந்த ஆண்டு வெடித்த தொழிலாள
வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களுக்கு விடையிறுப்பு ஆகும்.போலித்தன மனிதாபிமான
அடிப்படையில் லிபியாவில் முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்ற நேட்டோ மேற்கொண்ட போர்
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசத்தை அகற்றுவதற்கான அமெரிக்கத் தலைமையிலான
முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரி ஆகிவிட்டது.
சுன்னி இஸ்லாமிய மற்றும் பிற இடங்களில் மத்திய கிழக்கில் லிபியா,
சிரியா மற்றும் தீவிரவாதிகளின் விளம்பரம் அமெரிக்க ஏகாதிபத்தியம்
மற்றும் மத்திய கிழக்கில் நாட்டின் தவறான வழியில் பணம் ஈட்டுகிற ஆளும் மேல்தட்டினர்
தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் ஆழமான தேவைகளை தொடர்ந்து பூர்த்தி.
லிபியா, சிரியா இன்னும் மத்திய கிழக்கில் பிற இடங்களிலும் சுன்னி
இஸ்லாமிய வாதிகள், தீவிரவாதிகளின் வளர்ச்சி என்பது அமெரிக்க ஏகாதிபத்தியித்தின்
ஆழ்ந்த மத்திய கிழக்கு தேவைகளுடன் இயைந்துள்ளது; அதேபோல் மத்திய கிழக்கின்
வெற்றுத்தன ஆட்சி உயரடுக்குகள் தொழிலாள வர்க்கத்தைப் பிரிக்கும் முயற்சிகளுடனும்
இயைந்துள்ளது.
மத்திய கிழக்கிலும், சர்வதேச அளவிலும் ஒரு பேரழிவு தரும் போரை
தடுக்கும் திறனுடைய ஒரே ஒரு சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். இப்பகுதி முழுவதும்
தொழிலாளர்கள்,
அவர்களின் மொழி,
மதம் அல்லது இனவழி இவற்றைப் பொருட்படுத்தாமல் ஏகாதிபத்திய தலையீடு,
இராணுவவாதம் மற்றும் போர்,
அத்துடன் தங்கள் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான
இடைவிடாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கு பொதுவான வர்க்க நலனை பகிர்ந்துகொள்ள
வேண்டும். இதற்குத் தேவைப்படுவது போரின் மூலகாரணமான இலாபநோக்கு அமைப்புமுறைக்கு
எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான
ஐக்கியப்பட்ட போராட்டமாகும். |