WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
Afghan police chief kills three US special forces troops
ஆப்கானியப் பொலிஸ் தலைவர் மூன்று அமெரிக்கச் சிறப்புப் படையினர்களைக் கொன்றார்
By
Bill Van Auken
11 August 2012
வியாழக்கிழமை இரவு அமெரிக்க மரைன்கள் சிறப்புச் செயற்பிரிவின் மூன்று உறுப்பினர்களை
அமெரிக்க ஆதரவுடைய பாதுகாப்புப் படைகளின் சீருடை அணிந்த தளபதி ஒருவர்
கொன்றுவிட்டார்.
இது ஆப்கானிஸ்தானத்தில் இந்த வாரம் கொல்லப்பட்ட அமெரிக்கர்களுடைய
எண்ணிக்கையை 8 க்கு உயர்த்தியுள்ளது.
வெள்ளியன்று
நடைபெற்ற கொலைகள் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளின் மீது அவர்களுடைய
ஆப்கானிய கூட்டாளிகளாய் கருதப்படுபவர்கள் ஒரு வாரத்திற்குள் நடத்திய மூன்றாவது
தாக்குதலைக் குறிக்கின்றன.
“நீலத்தின்
மீதான பச்சைத்”
தாக்குதல்கள் என்று
பென்டகனாலும் நேட்டோவினாலும் குறிப்பிடப்படும் இவை,
2014 ஆம் ஆண்டு முடிந்த பின்னும்
(அப்போது அமெரிக்கப்
“போரிடும் படைகள்”
அனைத்தும்
இந்நாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டும்”)
ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க மேலாதிக்கத்தைத் தொடர்வதற்கான தனது மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு
அமெரிக்கா முயற்சி செய்து வருகின்ற நிலையில்,
மிகக் கூர்மையாய்
அதிகரிப்பு கண்டுள்ளன.
ஆப்கானிய
கைப்பாவை இராணுவத்திற்கும் பொலிஸ் பிரிவுகளுக்கும் கலகத் தடுப்பு நடவடிக்கைகளை
நடத்துவதற்கு பயிற்சியளிப்பதையே இது பிரதான அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதன்பொருட்டு
பல்லாயிரக்கணக்கான அமெரிக்கப்
“பயிற்சியாளர்களும்”
மற்றும் சிறப்புப்
படைப் பிரிவினரும் 2014 கெடுவிற்கு வெகுகாலம் பின்னரும் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில்
நிறுத்தப்பட்டு இருப்பார்கள்.
வெள்ளிக்கிழமைத் தாக்குதல் தென் மாகாணமான ஹெல்மாண்டில் நடைபெற்றது; இது டிசம்பர்
2009ல் ஒபாமா உத்தரவிட்ட
“விரிவாக்க”த்தின்படி
30,000 கூடுதல் துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்குள் வந்த நாள் முதல் அமெரிக்கச்
செயற்பாடுகளின் கவனமையமாக விளங்கும் பகுதியாகும்.
இத்தகைய
எல்லாத் தாக்குதல்களின் சமயத்தில் போலவே இம்முறையும், அமெரிக்க இராணுவம்,
இத்துப்பாக்கித்
தாக்குதல் “ஆப்கானிய
சீருடையை அணிந்து கொண்ட ஒரு தனிநபர்”
நடத்திய செயல் என்று
தகவல் கொடுத்துள்ளது; அதாவது ஒரு ஆப்கானியர்,
இராணுவத்தினர் அல்லது போலிஸ்காரரைப் போல் வேடமிட்டுச் செய்த வேலையாக
இது இருக்கக் கூடும் என்பதாக அது கூறுகிறது.
ஆனால்
சுட்டவர் ஆப்கானிய உள்ளூர்ப் பொலிஸ்
(ALP)
பிரிவைச் சேர்ந்த அசாதுல்லா என்ற தளபதி என்பதை ஆப்கானிய அதிகாரிகள்
அடையாளம் கண்டுள்ளனர். ஹெல்மாண்டின் சாங்கின் மாவட்டத்திலுள்ள சர்வான் காலா
அருகாமைப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டுமெனச் சொல்லி அவர் மரைன்
வீரர்களை விருந்துக்கு அழைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. அவர்கள் வந்தவுடன்
அவரும், சில தகவல்கள்படி பொலிஸ் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இன்னும்
பலரும், எழுந்து நின்று அவர்களைச் சுட்டுக் கொன்றனர்.
உள்ளூர்
பாதுகாப்புப் படையாகச் செயல்படுவதற்கென ஆக்கிரமிப்புப் படைகளால் உருவாக்கப்பட்டு
நிதியளிக்கப்பட்டிருப்பதான
ALP அமெரிக்க
மூலோபாயத்தின் முக்கிய அம்சமாய் பார்க்கப்படுகிறது. இது தீவிர சர்ச்சைக்குரிய
விடயமாக இருந்து வந்திருக்கிறது; அமெரிக்க ஆதரவுடனான ஜனாதிபதி ஹமித் கர்சாயின்
அரசாங்கம் முதலில் இதை தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்றப்பட்ட இராணுவப் பிரிவு என்று
கூறி எதிர்த்தது. நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், சித்திரவதை, கற்பழிப்பு,
பணம் பறித்தல் மற்றும் பிற மனித உரிமைகள் மீறல் ஆகியவற்றை
ALP
நடத்துவதாக
ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன; பல நேரமும் அது ஊழல் மிகுந்த உள்ளூர்
போர்ப்பிரபுக்களின் போராளிகளாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
கொலைகளுக்கு
தாலிபன் பொறுப்பேற்றது—கொலைகள்
நடந்த இடத்தில் இருந்து ஓடிவந்த பொலிஸ் தளபதி தங்கள் போராளிகளுடன்
சேர்ந்துவிட்டதாகவும் அது தகவல் கொடுத்துள்ளது.
இரண்டு
நாட்கள் முன்னதாக கிழக்கு லக்மன் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து
ஹெல்மண்ட்டில் மூன்று மரைன்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவம்
(இந்த வாரம்
ஆப்கானிஸ்தானத்தில் ஆப்கானியக் கைப்பாவைப் படைகளால் அமெரிக்க மற்றும் நேட்டோப்
படைகள் மீதான மூன்றாம் தாக்குதல்)
நடந்துள்ளது.
அந்த முந்தைய சம்பவத்தில்
ஆப்கன்
தேசிய இராணுவ வீரர் ஒருவர் தன் துப்பாக்கியைக் கொண்டு நேட்டோத் துருப்புக்கள்மீது
சுட்டார்; இதில் பலரும் காயமுற்றனர்; நேட்டோத் துருப்புக்கள் திருப்பிச் சுட்டதில்
அந்த உள்ளூர் வீரர் இறந்து போனார்.
ஆகஸ்ட் 7ம்
திகதி அன்றும், கிழக்கு பாக்டியா மாநிலத்தில், இரு ஆப்கானிய இராணுவத்தினர்கள்
அமெரிக்க சிப்பாய் ஒருவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரைக் கொன்றதுடன்
மற்றும் நான்கு சிப்பாய்களைக் காயப்படுத்தினர்; இதைத்தொடர்ந்து அவர்கள் கைது
செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு
இதுவரை இதுபோன்ற குறைந்தபட்சம் 25 தாக்குதல்களில் 34 அமெரிக்க மற்றும் பிற
ஆக்கிரமிப்புத் துருப்பினர் கொல்லப்பட்டனர். 2011ல் குறைந்தபட்சம் 21
தாக்குதல்களில் மொத்தமாய் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 பேராக இருந்தது.
இத்தாக்குதல்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென்பதில்
சந்தேகத்திற்கு இடமில்லை; ஏனெனில் அமெரிக்க அல்லது நேட்டோ இறப்புக்கள் தவிர
மற்றவற்றை பென்டகன் அபூர்வமாகத்தான் தகவல் கொடுக்கிறது.
இப்படி
அமெரிக்க வீரர்கள் அவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டியவர்களாகக் கருதப்படும்
கருதப்படும் ஆப்கானியப் படை உறுப்பினர்களால் கொல்லப்படுவது
(இந்நிகழ்வைப் போல்
அமெரிக்க இராணுவம் வரலாற்றில் ஒருபோதும் சந்தித்ததில்லை)
அதிகரித்திருப்பதின்
முக்கியத்துவத்தை வாஷிங்டன் உதறித்தள்ள முயல்கிறது.
பென்டகன்
ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்று
“பச்சை
நீலத்தின்மீது”
நடத்தும்
தாக்குதல்கள் ஆப்கானியப் படைகளில் தாலிபன் ஊடுருவியுள்ளதின் விளைவும் அல்ல, அல்லது
தங்கள் நாட்டை அமெரிக்கா ஒரு தசாப்தமாக ஆக்கிரமித்துள்ளது குறித்த ஆப்கானியரின்
விரோதவுணர்வினாலும் அல்ல, மாறாக
“கூட்டணி
துருப்புக்களுக்கு எதிரான ஆங்காங்கே தனிப்பட்ட வருத்தங்களால் தான்”
என்று கூறுகிறது.
இக்கருத்துத்தான் வெள்ளியன்று அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளின்
செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பிரிகேடியர் ஜேனரல் குண்டெர் காட்ஸினால்
எதிரொலிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளை
“அங்கொன்றும்
இங்கொன்றுமான நிகழ்வு”
என்று அழைத்த தளபதி,
தாக்குதல்
“சோகம்
நிறைந்தது, ஆனால் இது பாதுகாப்பு நிலைமையைப் பிரதிபலிக்கவில்லை”
என்றார்.
இதே போல்
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னியும் இத்தாக்குதல்களின்
“செயற்பாட்டுப்
பாதிப்பு மிக மிகக் குறைவு”
என்று கூறி அவற்றை உதாசீனம் செய்தார்.
மார்ச்
மாதத்தில் உயர்மட்ட அமெரிக்க தளபதியான தளபதி ஜோன் ஆலென் இன்னும் சற்று கூடுதலாகவே
வெளிப்படையாகப் பேசினார்.
இத்தாக்குதல்கள்
“நம்பிக்கையில்
ஓர் அரிப்பிற்கு”
இட்டுச் சென்றதை
அவர் ஒப்புக் கொண்டார். அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு ஆக்கிரமிப்புத்
துருப்புகள் அவர்கள் யாருக்குப் பயிற்சியளிப்பதாக கருதப்படுகிறதோ அவர்களாலேயே
கொல்லப்படும் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து முகம் கொடுக்கும் நிலையில்
அத்துருப்புகளின் மனோதைரியத்தில் ஏற்படக் கூடிய ஆழமான அரிப்பு விளைவைச் சொல்வதற்கு
இந்த வார்த்தைகள் போதாது.
இத்தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்—ஆப்கானிய
வீரர்களின் தேர்வுப் பரிசீலனையில் கூடுதல் கவனம் மற்றும் பயிற்சியளிப்பவர்களுக்கான
“பாதுகாப்புத்
தேவதைகள்”
போல் செயல்பட அமெரிக்க
வீரர்களை நிறுத்தி அவர்களை அவர்களிடம் பயிற்சி பெறுபவர்களிடம் இருந்து பாதுகாப்பது
ஆகியவை -
அதிக
தாக்கத்தை ஏற்படுத்தியதாய் தெரியவில்லை.
பயிற்சியின்
விளைவுகள் களத்தில் ஒரு திறைமையான கைப்பாவைப் படைகளை இருத்துவதற்கு வாஷிங்டனுக்கு
அவசியமாயிருக்கும் அளவை விட மிகவும் பின் தங்கியுள்ளன; அப்கான் தேசிய இராணுவப்
பிரிவுகளில் வெறும்
7 சதவீதமும், பொலிஸ்
பிரிவுகளில் வெறும் 9 சதவீதமும் மட்டுமே உயர் மட்டத் திறமை கொண்டதாக
மதிப்பிடப்பட்டன.
இப்பிரிவுகளும் கூட
வான்சக்தி, பொருள் போக்குவரத்து மற்றும் ஆலோசகர்கள் விடயத்தில் விரிவான அமெரிக்க
ஆதரவு இன்றிச் செயல்பட முடியாது. ஆப்கானிய படைகள் மிகவும் ஊழல் மலிந்தும், இனவழிப்
பிளவுகளைக் கொண்டும் விளங்குகிறது என்பதை அமெரிக்க இராணுவமே ஒப்புக்கொள்ளுகிறது.
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய இனவழிப் பிரிவினரான பஸ்தூன்கள்
(இவர்கள்
மக்கள் தொகையில் 40%க்கும் மேலாக இருப்பவர்கள் என்பதோடு தாலிபனுடைய ஆதரவுத்
தளத்தில் பிரதானமானவர்கள்)
ஆப்கானிய பாதுகாப்புப் படைகளில் நியமனம் பெற்றோர் எண்ணிக்கையில்
வெறும் 6 சதவீதம் மட்டும் தான் உள்ளனர்.
ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆயுதமேந்திய குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்து
அதிகரித்து வருகின்றன; ஜூன் மாதத்துடன் முடிந்த மூன்று மாத காலத்தில் நாள்
ஒன்றிற்கு 110 ஆக இது அதிகரிப்பு கண்டிருந்தது. ஜனாதிபதி ஒபாமா அவருடைய இராணுவ
விரிவாக்க நடவடிக்கை தாலிபனுடைய உத்வேகத்தை முறிப்பதில் வெற்றி பெற்றதாகக் கூறிக்
கொண்ட போதிலும், அந்த உத்வேகம் நன்கு வளர்ந்து செல்வதுபோல்தான் தோன்றுகிறது.
சமீபத்திய
பேரழிவுத் தாக்குதலில், கிளர்ச்சியாளர்கள் பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள குனார்
மாநிலத்தின் தலைநகரான அசதாபாத்தில்
(இந்த
இடம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்தும் போரில் மிகத் தீவிரமான
சண்டைகளைக் கண்டதாகும்)
நான்காம் பிரிகேட், போர்க்குழு 4வது தரைப்படைப் பிரிவினரின் கட்டளை
அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இரண்டு
கிளர்ச்சியாளர்கள் புதனன்று அதிகாரிகள் குழு ஒன்று அவர்கள் வளாகத்தில் நுழைந்து
வந்துகொண்டிருக்கையில் அவர்களை நோக்கி நடந்து வெடிகுண்டுகளை வெடித்தனர்.
இத்தற்கொலைத் தாக்குதலில் இரண்டு மேஜர்களும், ஒரு இராணுவக் கட்டுப்பாட்டு
சார்ஜேன்ட் மேஜரும் (பிரிவிலேயே முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) கொல்லப்பட்டனர்.
மேலும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமையின் அப்பகுதிக்கான பிரதிநிதியும்
அத்துடன் ஒரு ஆப்கானிய மொழிபெயர்ப்பாளரும் கூட கொலையுண்டனர். ஏராளமான பலரும் தீவிர
காயம் அடைந்தனர். ஆரம்ப அறிக்கைகள் பிரிவின் கட்டளையிடும் கேர்னலும் அதில் உள்ளார்
எனக் கூறின, ஆனால் ஆக்கிரமிப்புப் படையின் ஒரு செய்தித் தொடர்பாளர் பின்னர் இதை
மறுத்தார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் உதவிப் பணி அலுவலகம் இந்த
வாரம் வெளியிட்டதொரு அறிக்கையில்,
2012ன் முதல் ஆறு மாதங்களில் 1,145 ஆப்கானிய குடிமக்கள்
கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் கிட்டத்தட்ட 2,000 பேர் காயமுற்றனர் என்றும்
கூறியுள்ளது. இது சிவிலிய இறப்புக்களில் கடந்த ஆண்டு உதவிக் குழு அளித்த
எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 15% குறைந்துள்ளது என்றாலும் இது எந்தவகையிலும் சண்டை
குறைந்ததைப் பிரதிபலிக்கவில்லை என்று ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“ஆப்கானியக்
குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர் கொலையாகும் எண்ணிக்கை எச்சரிக்கையளிக்கும்
அதிகமான மட்டங்களில் தான் தொடர்ந்து இருக்கிறது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்”
என்று ஆப்கானிஸ்தானத்திற்கான ஐ.நா.வின் சிறப்புத் துணைத் தூதரான
நிக்கோலஸ் ஹேசம் கூறினார்.
இறந்தோர்
எண்ணிக்கையிலான வீழ்ச்சிக்கு இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் கடுமையான குளிர்காலம்
நிலவியதும் அது சண்டைப் பருவத்தின் தொடக்கத்தை தாமதப்படுத்தியதும் தான் அநேகமாய்
காரணமாய் இருக்க வேண்டும்.
ஜூலை மாதம் சிவிலிய
இறப்புக்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே மாதத்தில் இருந்ததைவிட
5
சதவீதம்
அதிகம் ஆகும்.
செவ்வாயன்று
ஆப்கானிஸ்தானின் மேற்கு நிம்ரோஸ் மாநிலத்தில் உள்ளூரதிகாரிகள் அளித்திருக்கும் ஒரு
செய்தியில்,
முந்தைய இரவில்
அமெரிக்கச் சிறப்புப் படையினரின் இரவுத் தாக்குதலில் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர்
என்ற தகவலை கொடுத்துள்ளனர்.
PAN
எனப்படும் Pajwok
Afghan News
கூறியுள்ளதன்படி, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு தனித்தனிக்
குடும்பங்களை சேர்ந்த இரு சகோதரர்களும் ஒரு தம்பதியும் இருந்ததாக கஸ்ரோட் மாவட்டத்
தலைவர் மகம்மது ஹசிம் கூறியுள்ளார். தாக்குதலில் பல குழந்தைகளும் காயமுற்றன. |