சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Racist murder in Greece reflects rising neo-Nazi influence

கிரேக்கத்தில் இனவழிக் கொலை உயர்ந்து வரும் நவ நாஜிச செல்வாக்கைப் பிரதிபலிக்கிறது

By Christoph Dreier 
15 August 2012

use this version to print | Send feedback

ஞாயிறு அதிகாலையில், ஐந்து கருப்பு அங்கி அணிந்த நபர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஏறி மத்திய ஏதென்ஸில் ஓமோனிய சதுக்கத்திற்கு அருகே சவாரி செய்து குடியேறிவய்ரகளை வேட்டையாடத் தொடங்கினர். 19 வயது ஈராக்கியர் ஒருவரைக் கண்டபோது, அவர்கள் ஈராக்கியரை தங்கள் முஷ்டிகளாலும் கற்களாலும் தாக்கி, அவரை கத்தியால் பல முறை குத்தினர். ஒரு மருத்துவமனையில் அந்த இளைஞர் அன்றே இறந்து போனார்.

இந்த இனவெறி உந்துதல் கொலை சமீப வாரங்களில் அரசு ஏற்பாடு குடியேறியவர்கள் ஒரு முறையான மேன்ஹன்ட் ஒரு மிருகத்தனமான உச்சமாக உள்ளது.

இத்தகைய இனவழி உந்துதல் கொலை சமீபத்திய வாரங்களில் அரசு குடியேறுவோரை திட்ட்மிட்டு தேடுவதின் மிருகத்தனமான உச்சக்கட்டமாக உள்ளது. மோட்டார் சைக்கிள் கும்பல் ஏற்கனவே ஒரு ருமேனியரையும் மோரோக்கோக்காரரையும் இதே பகுதியில், பொலிசாரின் தலையீடு இல்லாமல், தாக்கியுள்ளது. முதல் இரு பாதிக்கப்பட்டவர்கள் தக்க நேரத்தில் பாதுகாப்பைப் பெற முடிந்தது.

ஏதென்ஸில் நடந்த கொலை, கிரேக்கம் முழுவதும் இருக்கும் அலை போன்ற இனவழி வன்முறையின் ஒரு பாகமாகும். சனிக்கிழமை அன்று ஒரு வன்முறைத் தாக்குதல் கிரேட்டில் உள்ள ஹெராக்லியனில் ஒரு பாக்கிஸ்தானிய குழுவினருக்கு எதிராகத் தொடங்கப்பட்டது. துறைமுக நகரான பைரேஸில் குடியேறுபவர்கள் நடத்தும் கடைகள் பலமுறை தாக்கப்பட்டுள்ளன. புகைக் குண்டுகள் ஒரு கடையின் மீது வீசப்பட்டது; அக்கடை ஒரு மசூதி போலவும் செயல்பட்டுவந்தது.

2012ன் முதல் பாதியில் இனவழித் தாக்குதல்களினால் 500 குடியேறுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தித்தாள் Ta Nea கொடுத்துள்ள தகவல்கள்படி, பல்வேறு அரசு சாரா அமைப்புக்களின் கருத்துக்களின்படி, இது கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த இதேபோன்ற தாக்குதல்களைப் போல் இரு மடங்கு ஆகும்.

இத்தாக்குதல்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு கொடுக்கும் அரசாங்கக் கொள்கையின் நேரடி விளைவாகும். கொலைக்கு ஒரு வாரம் முன்புதான் 4,500 பொலிசார் குடியேறுபவர்களைத் தேடி விரட்டும் பாரிய செயற்பபாட்டில் ஈடுபட்டிருந்னர். அவர்கள் 6,700 வெளிநாட்டினர் போல் தோற்றமளித்தவர்களை காவலில் வைத்து 1,555 நபர்களை சிறப்பு முகாம்களில் தள்ளினர்; அங்கு அவர்கள் நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு விட்டனர்.

கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சியின் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பு மந்திரி நிக்கோஸ் டென்டியஸ், இத்தகைய வேட்டையாடுதலை நியாயப்படுத்தும் வகையில் குடியேறியவர்களை  ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒப்பிட்டு, கிரேக்கம் இதுகாறும் அனுபவித்ததிராத மிகப் பெரிய ஆக்கிரமிப்பு என்றார். இத்தகைய இழிந்த கருத்தைக்களை வெளியிடுகையில் மந்திரி குடியேறுவோர் மீதான தாக்குதல்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்; குடியேறுவோர் மீதான தாக்குதல்களை நடத்தும் பாசிஸ்டுகளை இரண்டாம் உலகப்போரின்போது நாஜி ஆக்கிரமிப்பை எதிர்த்த போராளிகளுக்கு சமமாக வைக்கிறார்.

சமீபத்திய ஆண்டுகளில் குடியேறுவோர்மீது நடத்தப்படும் தாக்குதலில் முக்கிய பங்கைக் கொண்டுள்ள பாசிசக் கட்சியான Chrysi Avhi (பொற்காலம்), முறையாக பல கிரேக்க அரசாங்கங்களால் கட்டமைக்கப்பட்டது. 2004ம் ஆண்டு Ta Nea ஏற்கனவே பாஸிஸ்ட்டுகளுக்கும் அரசாங்கக் கருவிகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான தகவல்களைப் பற்றி தகவல் கொடுத்தது.

பாசிசக் கட்சி பொலிசுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. இடது அல்லது அனார்க்கிச குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகையில், பொலிஸ் அதிகாரிகள் கைத்தடிகளையும், ரேடியோக்களையும் பாஸிஸ்ட்டுக்களிடம் கொடுக்கின்றனர்; அதையொட்டி அவர்கள் வன்முறையைத் தூண்டுகின்றனர். இதைத்தவிர பொலிஸார் பொற்காலம் உறுப்பினர்களை பலவகையான ஆயுதங்களை எடுத்து வரவும் அனுமதிக்கின்றனர்.

பொற்காலம் உறுப்பினரான Antonios Androutsopoulos —1998ல் ஒரு இடதுசாரி மாணவர் செயலரைக் கொன்றவர்ஏழு ஆண்டுகள் பிடிபடுவதில் இருந்து தப்ப முடிந்தது; இதற்கு முக்கியமாக பொலிஸாரே உதவியிருக்க வேண்டும். பின்னர் இவர் 2005ல் கைது செய்யப்பட்டார். கொலையில் இன்னும் பலர் தொடர்பு கொண்டிருந்தாலும், Androutsopoulos மீது மட்டுமே குற்றச்சாட்டு போடப்பட்டது.

1998ல் Eleftherotypia செய்தித்தாள் தெசலோனிகியில் இனவழிக் கலவரங்கள் பொலிஸுக்குள் இருக்கும் இனவாதப் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன எனக் கூறியது. கலகங்கள் முடிந்தபின் எவரும் கைது செய்யப்படவில்லை. பாசிஸ்ட்டுக்களுடன் பொலிசார் ஒத்துழைப்பது குறித்த பட்டியல் இக்காலம் வரை விரிவாக்கப்படமுடியும். கடந்த தேர்தல்களில் To Vima நாளேடு பொலிஸ் அதிகாரிகளில் 50% பொற்காலம் கட்சிக்கு வாக்களித்தனர் என்று கூறியுள்ளது.

கிரேக்கத்தில் குடியேறுவோர் உரிமைகள் அமைப்பான Expel Racism குடியேறுவோர் மீதான தாக்குதல்களின்போது பொலிசார் வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான நிகழ்வுகளைக் கொடுத்துள்ளது. வெளிநாட்டினர் பொலிஸ் நிலையங்களில் தாக்கப்படுவது குறித்த தகவல்களும் வந்துள்ளன; குடியிருப்பாளர்கள் குடியேறுவோர் பற்றி பொலிசில் புகார் கூறுகையில், அதிகாரிகள் பொற்காலம் அமைப்பிற்கு அவர்களுடைய தொலைப்பேசி எண்களையும் கொடுத்துள்ளனர்.

தெருக்களுக்கு செல்லவே நாங்கள் அச்சப்படுகிறோம் என்று குடியேறியவர் ஒருவர் நாளேடு Kathimerini  இடம் கூறினார். இப்பொழுது ரம்ழான் மாதம், விருந்திற்கு எங்களை அழைத்திருந்தனர், ஆனால் நாங்கள் செல்ல மாட்டோம். வெளியே சென்றால், நாங்கள் பொலிசாராலோ பொற்காலம் அமைப்பாலோ நிறுத்தப்படுவோம்.

ஜேர்மனிய செய்தித்தாளான Die Welt, ஜோர்ஜியாவில் இருந்து வந்த பெண் ஒருவர் பொற்காலம் உறுப்பினர் ஒருவரால் ஏதென்ஸில் பாலியலில் ரீதியாக அச்சுறுத்தப்பட்டது குறித்துத் தகவலை கொடுத்துள்ளது. அவர்கள் பொலிஸிடம் சென்றபின், மாலையில் அந்நபர் உள்ளுர் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் திரும்பியதோடு, என்னுடைய நண்பர்கள் யார் என்று தெரிகிறதா? என பெருமையுடன் கூறிக்கொண்டார்.

கிரேக்க அரசாங்கம் புதிய ஜனநாயகம் (ND), மற்றும் PASOK எனப்படும் சமூக ஜனநாயகம் மற்றும் DIMAR எனப்படும் ஜனநாயக இடது கட்சிகள் எத்தகைய வெகுஜன எதிர்ப்பும் வன்முறை மூலம் தாக்கப்படும் என்ற அரசியல் சூழலை உருவாக்குவதற்காக பாசிச சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கின்றது. இக்கட்சிகளின் முக்கிய இலக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரும் மதிப்பிழந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்த இயக்கமும் மிருகத்தனமாக அடக்கப்படுவதற்கு தயாரிப்பு செய்யவேண்டும் என்பதாகும்; அந்தச் சிக்கன நடவடிக்கைகளோ கிரேக்க பொருளாதாரத்தை நாசப்படுத்திவிட்டது.

ஏற்கனவே அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் சமூகத் தாக்குதல்கள், ஏற்கனவே பரந்த துன்பம், வறுமை ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளவை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுளது; அவை பெருகிய முறையில் ஜனநாயக ஆட்சியின் வடிவமைப்புக்களுடன் இணக்கமற்றதாக உள்ளன.

சிரிசா போன்ற முதலாளித்துவ இடது கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க முதலாளித்துவ, சக்திகளுக்கு எதிரான பரந்த தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெளிப்படுவதை தடுத்து விட்ட நிலையில், பாசிச சக்திகள்தான் இருக்கும் அரசியல் அமைப்பு முறைக்கு ஒரே மாற்றீடாகக் காட்டிக் கொள்கின்றன. சமூக அழுத்தங்கள் அதிகரிக்கையில், ஆளும் உயரடுக்கு இன்னும் கூடுதலான வலதுசாரிச் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கிறது; முதலாளித்துவ ஆட்சி இன்னும் கூடுதலான சர்வாதிகாரத் தன்மையை எடுக்கிறது.

இப்பின்னணியில், குறிப்பாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஆணையக் குழுவின் Nils Muiznieks இடருந்து பொற்காலம் கட்சி மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. பொற்காலம் கட்சி வெளிப்படையாக மிகத் தீவிரமாகவும், ஐரோப்பாவின் நாஜிசக் கட்சியாகவும் உள்ளது என்று குறிப்பிட்ட Nils Muiznieks கிரேக்க அரசாங்கம் கட்சியின் சட்டபூர்வத்தன்மை குறித்து ஆராய வேண்டும் என்று கோரினார் என Kathimerini  தகவல் கொடுத்துள்ளது.

ஆனால், அத்தகைய தடை குடியேறியிருப்பவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பையும் வழங்கப்போவதில்லை என்பதோடு தீவிர வலது சாரி சக்திகளின் செல்வாக்கிற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்போவதில்லை. உண்மையில் அவை கிரேக்க முதலாளித்துவ அரசின் பாதுகாப்பு சக்திகளுடனேயே பிணைந்து, பாதுகாக்கப்படுகின்றன.

மாறாக இது அரச கருவியை வலுப்படுத்தி, அரசியல் எதிரிகளைக் குற்றவாளிகள் என்று கூறக் காரணம் அளித்து, எதிர்த்தரப்பு, இடதுசாரி அரசியல் அமைப்புக்களை கலைக்க வகை செய்யும். இது அடக்குமுறைக் கருவியை வலுப்படுத்தி சர்வதாதிகார ஆட்சி முறைக்குத்தான் விரைவில் இட்டுச் செல்லும்.

குடியேறுவோர் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகள் மற்றும் எழுச்சி பெறும் பாசிச சக்திகளின் செல்வாக்கு ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவது அவசியமாகிறது. முதலாளித்துவம் பெருகிய முறையில் மிகவும் வலதுசாரிக் கூறுகளை நோக்கி நகர்கையில் அத்தகைய போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச போராட்டத்தை அடித்தளமாக கொள்வதின் மூலம்தான் வெற்றிகாண முடியும்.