WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
மாருதி
சுசுகி
ஆலையில்
நடந்த
மோதலின்
பாதிப்பைக்
கண்டு
இந்திய
ஆளும்
உயரடுக்கு
அஞ்சுகிறது
By Arun Kumar
10 August 2012
use
this version to print | Send
feedback
புது
டெல்லிக்குத்
தெற்கே
40 கிலோ
மீட்டர்
தொலைவில்
மானேசரில்
இருக்கும்
மாருதி
சுசுகி
கார்
ஒன்றுசேர்ப்பு
ஆலையில்
ஜூலை
18 அன்று
தொழிலாளர்களுக்கும்
நிர்வாக
ஊழியர்களுக்கும்
இடையே
நடந்த
இரத்தக்களரியான
மோதல்
குறித்து
இந்திய
ஆளும்
உயரடுக்கின்
பிரிவுகள்
தங்களது
கவலையைக்
கூர்மையுடன்
வெளிப்படுத்தியிருக்கின்றன.
இந்தியாவின்
மிகப்பெரும்
கார்
தயாரிப்பு
நிறுவனமான
இந்நிறுவனம்
3,000 தொழிலாளர்கள்
வேலை
செய்கின்ற
தனது
மானேசர்
ஆலையில்
ஜூலை
21 முதல்
கதவடைப்பு
செய்திருக்கிறது.
நூற்றுக்கும்
அதிகமான
தொழிலாளர்கள்
கைது
செய்யப்பட்டிருக்கின்றனர்.
நிறுவனத்தின்
எடுபிடித்
தொழிற்சங்கத்திற்கு
எதிராக
சென்ற
ஆண்டில்
தொழிலாளர்களால்
சுயாதீனமாகத்
தொடங்கப்பட்ட
மாருதி
சுசுகி
தொழிலாளர்
சங்கத்தின்
(MSTU)மொத்த
தலைமையும்
இதில்
அடங்கும்.
ஜூலை
18 மோதல்
தொழிற்சங்கத்
தலைவர்களால்
திட்டமிட்டு
நடத்தப்பட்ட
ஒன்றாக
நிறுவனம்
குற்றம்
சாட்டியிருக்கிறது,
ஆனால்
உண்மையில்
இது
நிர்வாகத்தின்
திட்டமிட்ட
சீண்டலால்
ஏற்பட்டதே.
தொழிலாளி
ஒருவர்
தன்னை
ஒரு
சூபர்வைசர்
சாதிப்
பெயரால்
திட்டியதற்கு
எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து
அந்த
தொழிலாளி
நிறுவன
அதிகாரிகளால்
இடைநீக்கம்
செய்யப்பட்டதைத்
தொடர்ந்து
இந்த
சம்பவம்
நடந்தது;
பதிலாக
சூபர்வைசர்
மீது
தான்
ஒழுங்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்
என
ஆர்ப்பாட்டம்
செய்த
தொழிலாளர்கள்
கோரினர்.
MSTU தலைவர்கள்
இந்தப்
பிரச்சினையை
நிர்வாகப்
பிரதிநிதிகளுடன்
விவாதித்துக்
கொண்டிருந்த
நிலையில்
தான்,
நிறுவனம்
ஏற்பாடு
செய்திருந்த
நூற்றுக்கணக்கான
ஆயுதமேந்திய
அடியாட்கள்
தொழிலாளர்களை
மிருகத்தனமாகத்
தாக்கினர்.
பெரும்
மோதல்
சூழ்ந்த
இச்சமயத்தில்
ஆலைக்குள்
தீ
வைக்கப்பட்டு
அது
ஆலையின்
ஒரு
பகுதிக்கு
சேதம்
விளைவித்ததோடு
ஒரு
முதுநிலை
மேலாளரையும்
தீக்கிரையாக்கி
விட்டது.
இந்த
தீயிலும்
மோதலிலும்
தொழிலாளர்கள்
மற்றும்
நிர்வாக
ஆட்கள்
ஆகிய
இருதரப்பாரும்
உட்பட்ட
சுமார்
100 பேர்
காயமுற்றனர்.
(காணவும்
”இந்தியா:
தொழிலாளர்களுக்கு
எதிரான
வேட்டையை
மாருதி
சுஜூகி
ஆரம்பிக்கிறது”).
இந்தச்
சம்பவத்தை
ஒரு
சாக்காய்
வைத்துக்
கொண்டு
இந்தியாவின்
அரசியல்
உயரடுக்கு
இப்போது,
நிறுவனமும்,
மானேசர்
அமைந்திருக்கக்
கூடிய
ஹரியானா
மாநில
அரசாங்கத்தில்
இருக்கும்
காங்கிரஸ்
தலைமையிலான
அரசாங்கமும்,
மற்றும்
அதன்
போலிசும்
MSI
தொழிலாளர்களுக்கு
எதிராக
ஏவி
விட்டிருக்கும்
வேட்டை
நடவடிக்கையின்
பின்னால்
தங்களை
அணிவகுத்துக்
கொண்டுள்ளனர்.
அதே
சமயத்தில்
உலக
மூலதனத்துக்கான
ஒரு
மலிவு
உழைப்புக்
களமாக
பொதுவாக
இந்தியாவின்,
மற்றும்
குறிப்பாக
ஹரியானாவின்
பிம்பத்திற்கு
இந்த
மோதல்
ஏற்படுத்தியிருக்கக்
கூடிய
பாதிப்பைக்
குறித்து
அவர்கள்
தங்களது
கவலைகளை
வெளிப்படுத்தியுள்ளனர்.
MSI
மானேசர்
ஆலையில்
நடந்த
சம்பவம்
இந்தியாவின்
முதலீட்டாளர்
ஆதரவுப்
பிம்பத்தை
பலவீனப்படுத்தவும்
அதன்மூலம்
ஏற்கனவே
சரிந்து
கொண்டிருக்கும்
இந்தியாவின்
பொருளாதார
வளர்ச்சி
விகிதத்தை
மேலும்
பாதிப்புக்குள்ளாக்கவும்
அச்சுறுத்துவதாக
அரசியல்
ஸ்தாபனம்
அஞ்சுகிறது.
இதனையடுத்து,
கொத்தடிமையான
வேலை
நிலைமைகள்
விடயத்தில்
தொழிலாளர்களிடம்
இருந்து
வருகின்ற
எந்த
எதிர்ப்பையும்
ஒடுக்குவதற்கு
கடுமையான
நடவடிக்கைகளை
அவர்கள்
கோருகின்றனர்.
இந்தியாவின்
ஒரு
முக்கியமான
பெரு-வணிக
கூடுவாயிலான
இந்திய
வணிகம்
மற்றும்
தொழிற்துறைக்
கூட்டமைப்பின்
(FICCI)தலைவர்
ஆர்.வி.கனோரியா
கூறுகையில்,
மானேசரில்
ஜூலை
18 அன்று
நடந்த
சம்பவமானது
தாயகத்திலும்
அயல்நாட்டிலும்
பெருநிறுவன
இயக்குநர்
அறைகளுக்குள்
அதிர்ச்சி
அலைகளைப்
பரவ
விட்டிருப்பதாகக்
குறிப்பிட்டார்.
கனோரியா
வலியுறுத்தினார்:
“இந்தியக்
குடிமக்களின்
உயிரும்
உடமைகளும்
பாதுகாப்பாய்
இருப்பதையும்
அத்துடன்
சட்டம்
ஒழுங்கு
மற்றும்
தொழிற்துறை
உறவுகள்
சூழலிலான
எந்த
மீறல்களும்
உறுதிப்படக்
கையாளப்படும்
என்பதையும்
உரக்கவும்
தெளிவாகவும்
சொல்கின்ற
செய்தி
இந்தியாவில்
இருந்து
எழுப்பப்பட
வேண்டும்.”
பெங்களூரில்
பேசிய
விப்ரோ
நிறுவனத்
தலைவரான
ஆசிஸ்
பிரேம்ஜி,
இந்தச்
சம்பவம்
“பல்வேறு
பிரச்சினைகளால்
இந்த
மண்டலத்தில்
நிலவுகின்ற
சமூக
அமைதியின்மையை
பிரதிநிதித்துவப்படுத்துகிறது”
என்று
கருதுவதாகக்
கூறியதுடன்,
“மிகத்
தீவிரமான,
மிக
முரட்டுத்தனமான,
அத்துடன்
மிக
துரதிர்ஷ்டவசமான”சம்பவமாகவும்
அதைக்
குறிப்பிட்டார்.
“சமூக
அமைதியின்மை”க்கு
இட்டுச்
சென்ற
“பல்வேறு
பிரச்சினைகள்”
குறித்து
பிரேம்ஜி
விரிவாகக்
கூறவில்லை.
உண்மையில்
குர்கான்-மானேசர்
தொழிற்துறைப்
பகுதியில்
MSIம்
மற்ற
நிறுவனங்களும்
கடைப்பிடிக்கின்ற
சர்வாதிகார
வேலை
நிலைமைகள்
தான்
அந்தப்
பிரச்சினைகள்.
ஆனால்
அவரோ
மானேசர்
ஆலையில்
நடந்ததைப்
போன்ற
கைகலப்புகள்
மீண்டும்
நிகழக்
கூடும்
என்பதான
எச்சரிக்கையின்
பேரில்,
அந்த
வேலை
நிலைமைகளுக்கு
தொழிலாளர்களை
ஆட்படுத்த
“அரசாங்கம்
உறுதிப்பட்ட
நடவடிக்கைகளை
எடுக்க
வேண்டும்”
என்று
கோரினார்.
மாருதி
சுசுகி
தொழிலாளர்களின்
எதிர்ப்பும்,
அத்துடன்
தொழிலாளர்களின்
பரந்த
பிரிவுகளுக்கு
முன்மாதிரியாகத்
திகழத்தக்க
அதன்
சாத்தியமும்,
ஆழமடைந்து
செல்லும்
உலகளாவிய
மந்தநிலை
நிலைமைகளின்
கீழ்
இந்திய
உயரடுக்கு
தனது
மலிவு-உழைப்பு
ஆட்சிமுறையை
மிருகத்தனமாய்
திணிப்பதற்குச்
செய்கின்ற
முயற்சிகளைக்
கீழறுக்க
சேவை
செய்யும்
என்பதே
எல்லாவற்றுக்கும்
முதலாய்
இந்திய
உயரடுக்கின்
அச்சமாக
இருக்கிறது.
MSI
தனது
வேட்டையை
நியாயப்படுத்துவதற்காக
இந்த
கைகலப்புக்கு
தொழிலாளர்களே
காரணம்
என்று
கூறுவதை
அப்படியே
திருப்பிக்
கூறும்
பெருநிறுவன
ஊடகங்கள்
அத்துடன்
தொழிலாளர்களுக்கு
எதிரான
ஒடுக்குமுறை
நடவடிக்கைகளை
தீவிரப்படுத்துவதற்கும்
வலியுறுத்தியிருக்கின்றன.
உத்தியோகபூர்வ
விசாரணை
அறிக்கை
வெளியிடப்படுவதற்கும்
முன்பாகவே
“இந்த
வன்முறை
திட்டமிட்டு
நடத்தப்பட்ட
ஒன்று
என்பதற்கான
ஆதாரம்”
உள்ளதாக
அறிவித்த
டைம்ஸ்
ஆஃப்
இந்தியா
தலையங்கம்
கோரியது:
“இந்த
கொடுஞ்செயலை
செய்தவர்கள்
மீது
சட்டத்தின்
முழு
சக்தியும்
பாய
வேண்டும்”.
அந்த
தலையங்கம்
தொடர்ந்து
சொல்கிறது:
“எப்படியிருந்தபோதிலும்,
தொழிற்துறை
உறவுகளின்
இந்த
பரிதாப
நிலை
ஒரு
முதலீட்டு
இலக்கிடமாக
ஹரியனாவின்
இடத்தை,
இன்னும்
சொன்னால்
இந்தியாவின்
இடத்தையும்
கூட
பாதிக்கக்
கூடும்.
நிறுவனங்களுக்கு
(அவை
ஒட்டுமொத்தமாக
நாட்டை
விட்டே
வேறு
நாட்டிற்குத்
தொழிற்சாலையைக்
கொண்டு
செல்லாத
பட்சத்தில்)தொழிற்துறைக்குக்
கூடுதல்
சாதகமான
மாநிலங்களுக்கு
இடம்பெயரும்
வாய்ப்பு
இருக்கிறது.”
இந்த
செய்தித்தாள்
புகாரிடுகிறது:
“இறுக்கமான
தொழிலாளர்
சட்டங்களால்
ஒரு
ஈரடுக்கு
அமைப்புமுறை
உருவாகிறது,
சலுகை
படைத்த
தொழிலாளர்
பிரபுத்துவம்
ஒரு
பக்கத்திலும்
வெகு
சில
உரிமைகளை
மட்டுமே
கொண்ட
ஒழுங்குசாரா
தொழிலாளர்களின்
பரந்த
எண்ணிக்கை
இன்னொரு
பக்கத்திலும்
என
உருவாகிறது.
ஒப்பந்தத்
தொழிலாளர்
பயன்பாடு
அதிகரித்துச்
செல்வது
வேலையிடத்தில்
தொழிலாளர்களை
இருபெரும்
பிளவாகப்
பிளந்து
விடுவதால்
அசமத்துவத்திற்கும்
தொழிற்துறைச்
சண்டைகளுக்கும்
இது
வித்திடுகிறது.
மாருதி
விடயத்திலும்
இது
வெளிப்படையாகத்
தெரிகிறது.”மானேசர்
ஆலையில்
ஒப்பந்தத்
தொழிலாளர்களின்
பயன்பாட்டைக்
குறித்தே
இங்கு
குறிப்பிடப்படுகிறது.
இங்கு
மொத்த
தொழிலாளர்
எண்ணிக்கையில்
40 சதவீதம்
பேர்
ஒப்பந்த
தொழிலாளர்கள்
ஆவர்.
இவர்களுக்கு
நிரந்தரத்
தொழிலாளர்களுக்கு
வழங்கப்படுவதில்
பாதிச்
சம்பளம்
மட்டுமே
வழங்கப்படுகிறது.
அதன்பின்
டைம்ஸ்
கோருகிறது:
“தொழிற்துறை,
வேலைகளை
தனது
தேவைக்கேற்றவாறு
சுதந்திரமாக
சீர்
செய்து
கொள்ள
முடிய
வேண்டும்,
அதே
சமயத்தில்
இந்த
சீரமைப்புக்குரிய
வகையில்
தொழிலாளர்களுக்கு
இழப்பீடு
அளிக்கப்பட்டிருக்க
வேண்டும்.
அதற்கு
தொழிற்துறையை
அனுமதிக்கிற
ஷரத்துகளைக்
கொண்ட
தொழிலாளர்
சட்டங்களுக்கு
அரசாங்கம்
மீண்டும்
புத்துயிரளிக்க
வேண்டும்.”
டைம்ஸ்
“ஈரடுக்கு
அமைப்புமுறை”யை
மாற்றுவதற்கு
ஆலோசனை
கூறுவது
ஒழுங்குசாராத்
தொழிலாளர்களின்
பரந்த
பெரும்பான்மையினருக்கான
கண்ணியமான
வேலைநிலைமைகளை
வழங்கும்
பொருட்டு
அல்ல,
மாறாக
முதலீட்டாளர்களுக்கு,
அவர்கள்
தங்களின்
இலாபங்களை
உறுதிப்படுத்திக்
கொள்வதற்கு
அவசியமான
எத்தகைய
கடினமான
நிலைமைகளையும்
மொத்த
தொழிலாளர்
படையின்
மீதும்
சுமத்துவதற்கு
சுதந்திரம்
அளிப்பதற்காகவே.
இதுதான்
பிரதமர்
மன்மோகன்
சிங்
தொடர்ந்து
கோரி
வருவதாகும்:
இந்தியாவை
கூடுதல்
போட்டித்திறனுடன்
திகழச்
செய்வதற்கு
“நெகிழ்வுத்தன்மையுடனான
ஒரு
தொழிலாளர்
படை”யை
உருவாக்குவது.
சர்வதேச
நிதி
மூலதனத்தினால்
உத்தரவிடப்பட்ட
பொருளாதாரச்
சீர்திருத்தங்கள்
தொடங்கப்பட்ட
நாள்
முதலாகவே,
ஒவ்வொரு
கூர்மையான
சமூக
மற்றும்
பொருளாதார
நெருக்கடியையும்,
இந்திய
உயரடுக்கும்
பெருநிறுவன
ஊடகங்களும்,
நிலவும்
சட்டங்களில்
இலாபம்
மற்றும்
செல்வத்துக்கான
பெருநிறுவன
செலுத்தத்திற்கு
விரும்பத்தகாத
தடைகளாக
அவை
காணுகின்றவற்றில்
துரிதமான
மற்றும்
பெரும்
மாற்றங்களைக்
கோருவதற்கான
ஒரு
சாக்காக
சுரண்டி
வந்திருக்கின்றன.
தொழிலாளர்களின்
அமைதியின்மையைக்
கண்காணிப்பதில்
தொழிற்சங்கங்கள்
ஆற்றிய
அதிமுக்கியமான
பாத்திரத்தை
The Hindu
பத்திரிகையில்
வந்த
ஒரு
தலையங்கம்
சுட்டிக்
காட்டுகிறது.
தாராள
முதலாளித்துவ
செய்தித்தாளான
இது
வெகு
காலமாகவே,
தொழிலாள
வர்க்கத்தைக்
கண்காணிப்பதற்கும்
“தேசிய
நலனை”
உறுதிசெய்வதற்கும்
ஆளும்
உயரடுக்கிற்கு
நம்பகமான
கூட்டாளிகளாக
ஸ்ராலினிச
இந்தியக்
கம்யூனிஸ்டுக்
கட்சி
மற்றும்
இந்திய
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
(அல்லது
CPM) கட்சி
ஆகிய
இரு
கட்சிகளையே
ஊக்குவித்து
வந்திருக்கிறது.
The Hindu
எழுதுகிறது:
“தொழிற்சங்கமயமாக்கத்தை
ஊக்கம்குன்றச்
செய்வதற்கு
சில
நிறுவனங்கள்,
குறிப்பாக
பன்னாட்டு
நிறுவனங்கள்
செய்கின்ற
முயற்சியானது
தொழிலக
உறவுகளின்
ஸ்திரமற்ற
நிலைக்கு
மேலும்
வலுக்கூட்டியிருக்கிறது.
தொழிலாளர்களை
ஒப்பந்த
வேலையில்
பணியமர்த்தினால்
தான்
அவர்கள்
மீது
ஒரு
பிடி
கொண்டிருக்க
முடியும்
என்பது
தான்
அவர்களின்
விருப்பமான
தந்திரோபாயமாக
இருக்கிறது.
வர்த்தக
சாம்பர்கள்
போன்ற
தொழிற்துறை
உயர்
அமைப்புகளும்,
தொழிற்சங்கங்களும்
அத்துடன்
அரசாங்கமும்
ஒன்றாய்
அமர்ந்து,
சந்தேகத்திற்கிடமின்றி
ஒரு
வருந்தத்தக்க
போக்காக
உருவாகியிருக்கும்
ஒன்றை
மதிப்பிடுவதோடு
அந்தப்
போக்கினை
மீண்டும்
தலைகீழாக்கிக்
கொண்டுவருவதற்கான
வழிகளை
ஆராய்வதற்கும்
தங்கள்
சிந்தனையைச்
செலுத்த
வேண்டும்.”
தொழிற்சங்கங்களின்
பாத்திரம்
குறித்த
இத்தலையங்கத்தின்
வலியுறுத்தல்
MSI மற்றும்
இந்தியாவெங்கிலுமான
பிற
ஆலைகளில்
தொழிலாளர்களின்
அனுபவத்தில்
மிக
முக்கியமானதாகும்.
CPI
உடன்
இணைந்த
அகில
இந்திய
தொழிற்சங்க
காங்கிரசும்
(AITUC) மற்றும்
CPM உடன்
இணைந்த
தொழிற்சங்கக்
கூட்டமைப்பான
இந்திய
தொழிற்சங்கங்களின்
மையமும்
(CITU)பல
தசாப்தங்களாக
இந்தியாவெங்கிலும்
ஒப்பந்தத்
தொழிலாளர்
முறை
பரவுவதற்கு
அனுமதித்திருப்பதோடு,
தொழிலாளர்களின்
எதிர்ப்பை
அடக்கியும்
இந்தியாவை
உலக
முதலாளித்துவத்திற்கான
மலிவு
உழைப்பு
உற்பத்தியாளராக
ஆக்குவதற்கான
முதலாளித்துவ
வர்க்கத்தின்
“சீர்திருத்த”திட்டநிரலைப்
பின்பற்றி
வருகின்ற
மத்திய
மற்றும்
மாநில
அரசாங்கங்களை
CPI மற்றும்
CPM ஆதரவளித்தமைக்கு
ஆதரவளித்தும்
வந்திருக்கின்றன.
ஒப்பந்தத்
தொழிலாளர்
அமைப்புமுறைக்கு
எதிரான
அவற்றின்
உணர்ச்சிகரமான
பேச்சுகளெல்லாம்
ஒரு
பக்கம்
இருப்பினும்,
AITUC
வும்
CITU வும்,
மாருதி
சுசுகி
தொழிலாளர்கள்
தங்களுக்கு
எதிரான
ஒரு
ஆவேசமான
தாக்குதலுக்கு
முகம்
கொடுக்கும்
நிலையில்
அவர்களைத்
தனிமைப்படுத்துவதற்கே
முனைந்து
வந்திருக்கின்றன.
சென்ற
ஆண்டில்
MSI தொழிலாளர்களின்
நான்கு-மாத-கால
போராட்டத்தின்
போது,
AITUC
மற்றும்
CITU, அவர்களுக்கு
தங்களது
வர்க்க
சகோதரர்களை
நோக்கித்
திரும்புவதற்கு
ஆலோசனையளிக்காமல்,
அதற்கு
மாறாக,
ஹரியானா
மாநில
அரசாங்கத்தின்
மீதும்,
அதன்
தொழிலாளர்
துறை
அதிகாரிகள்
மீதும்
மற்றும்
நீதிமன்றங்கள்
மீதும்
(அச்சமயத்தில்
இந்த
சக்திகள்
நிறுவனத்துடன்
கைகோர்த்து
வேலை
செய்து
கொண்டிருந்தன
)விசுவாசம்
வைக்க
அறிவுறுத்தின.
எவ்வாறாயினும்
இந்தியப்
பெரு
வணிகத்தின்
மிகுந்த
சக்திவாய்ந்த
பிரிவுகளுக்கு
நரேந்திர
மோடி
(குஜராத்
மாநிலத்தில்
ஆட்சியதிகாரத்தில்
இருக்கும்
இந்து
மேலாதிக்கவாத
பாரதிய
ஜனதாக்
கட்சியின்
முதலமைச்சர்)மற்றும்
மம்தா
பானர்ஜி
(மேற்கு
வங்காள
மாநிலத்தில்
ஆட்சியில்
இருக்கும்
திரிணாமூல்
காங்கிரஸ்
முதலமைச்சர்)போன்றவர்களின்
வலுவான
ஆதரவு
இருக்கிறது.
எழுகின்ற
வர்க்கப்
போராட்டங்களை
இரக்கமற்று
ஒடுக்குவதற்கு
இவர்கள்
ஆதரவாய்
நிற்கிறார்கள்
என்பதோடு
நிர்வாகத்தின்
சிறப்புரிமைகளில்
சாத்தியமான
எந்தத்
தலையீட்டையும்
நிராகரிக்கின்றனர்.
இவ்வாறாக,
தொழிற்துறை
ஆலைகளில்
“தொழிற்சங்கமயமாக்கத்தை
ஊக்கம்குறைக்கும்”
இவர்கள்
“வெளியிலிருந்தான”
தொழிற்சங்கங்கள்
“அரசியல்ரீதியான
உள்நோக்கம்
கொண்டவை”
என்று
கூறி
அவற்றுடன்
பேசுவதற்கு
மறுக்கின்றனர்.
சென்ற
மாதத்தில்
மாருதி
சுசுகியின்
மானேசர்
ஆலையில்
கதவடைப்பு
செய்யப்பட்டதை
ஒட்டி,
மோடி
மற்றும்
மம்தா
பானர்ஜி
இருவருமே
MSI ஐ
தங்கள்
மாநிலத்தில்
முதலீடு
செய்யச்
செய்வதற்கு
போட்டி
போட்டனர்.
இந்தப்
போட்டியில்
அடித்துச்
செல்லப்பட
விரும்பாத
ஹரியானா
காங்கிரஸ்
முதலமைச்சரான
பூபிந்தர்
ஹூடா
கருத்து
தெரிவித்தார்:
“ஹரியானாவில்
ஒட்டுமொத்த
குற்ற
விகிதமும்
மனித
நாட்கள்
இழப்பு
விகிதமும்
மாநிலங்களுக்குள்
மிகக்
குறைந்த
அளவில்
இருக்கின்றது.
மாருதி
சம்பவம்
ஒரு
’விரும்பத்தகாத’
சம்பவம்.”
அத்துடன்
இந்தியாவில்
தயாராகும்
ஒவ்வொரு
இரண்டாவது
காரும்,
இரண்டாவது
மோட்டார்
சைக்கிளும்
இம்மாநிலத்தில்
இருந்து
தான்
தயாரிக்கப்படுகின்ற
அளவுக்கு
ஒரு
வாகனத்
தயாரிப்பு
மையமாக
ஹரியானா
ஆகியிருக்கிறது
என்றும்
ஹூடா
பெருமையடித்துக்
கொண்டார். |