WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
European car industry prepares mass redundanci
ஐரோப்பிய கார்த்தயாரிப்புத் தொழில்துறை ஏராளமான பணிநீக்கங்களுக்கு தயாரிப்புக்களை
நடத்துகிறது
By Dietmar Henning
13 August 2012
இதுவரை,
முக்கியமாக பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்,
வேலையின்மையில் உள்ளவர்கள் மற்றும் பொதுநலச் செலவுகளை நம்பியிருப்பவர்கள் மட்டுமே
ஐரோப்பிய அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் யூரோ நெருக்கடியாலும் அதை ஒட்டி
உள்ள சிக்கன நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்பொழுது
தொடர்ந்திருக்கும் மந்தநிலை கார்த்தயாரிப்புத் துறையையும் பாதிக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பிய சந்தைகளுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கும்
உற்பத்தியளர்களை; அவர்கள் பெரும் இழப்புக்களைக் கூறியுள்ளதுடன், பெரும்
பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்குத் தயாரிப்புக்களை
நடத்துகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அதிக விற்பனைகளினால் இன்னும் இலாபங்களை
ஈட்டும் உற்பத்தியாளர்கள் சர்வதேச வளர்ச்சிகளை மனத்தளர்வுடன் காண்கின்றனர்.
இவர்களும் நெருக்கடியின் சுமையை தங்கள் ஊழியர்கள்மீது பணிநீக்கங்கள், ஊதியக்
குறைப்புக்கள் என்னும் முறையில் மாற்றும் நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
ஐரோப்பாவில் புதிய கார்கள் விற்பனை 1994ல் இருந்த அளவிற்குச்
சரிந்துவிட்டது. ஸ்பெயினில், ஜூலை மாத விற்பனை17%
சுருங்கியது; இதற்குக் காரணம் உயர்ந்த வேலையின்மை அளவு ஆகும்;
இத்தாலியில் விறபனை 21% குறைந்தது, பிரான்ஸில் 7% குறைந்தது.
விற்பனை சற்றே அதிகமாகியுள்ள ஜேர்மனியில்கூட, புதிய பதிவுகள் ஜூலை
மாதம் 5% கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்து விட்டன. சுமார் 1.9 மில்லியன்
புதிய பதிவுகளுடன் ஜனவரியில் இருந்து ஜூலை 2012 வரையிலான எண்ணிக்கை முந்தைய
ஆண்டைவிட சற்று குறைவாகும். உற்பத்தியாளர்கள் சங்கம்
VDA
உடைய தலைவர்
Mathias Wissmann
ஜேர்மனி ஐரோப்பிய உறுதிப்பாட்டிற்கு நங்கூரம் என்னும் தன் பங்கை
இழக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
அதிக ஆர்வத்துடன் வாங்கப்படும் முத்திரைக் கார்களான மெர்சிடெஸ்,
BMW
போன்றவற்றின் விற்பனைகூட சரிந்துள்ளது. ஜேர்மனியச் சந்தையில் மெர்சிடெஸ் 14.6%
சரிவுற்றது,
BMW
உடைய விற்பனை 17.9% சரிந்துவிட்டது. சந்தைத் தலைமை நிறுவனமான வோக்ஸ்வாகன்
விற்பனையில் 1.5% சரிவைக் காட்டியது.
எல்லாச் சந்தைகளிலும் ஒரே விதிவிலக்காக இருப்பது
VW
Subsidiary Porsche
தான். இந்த விளையாட்டுக் கார்த் தயாரிப்பாளர் எல்லா இடங்களிலும் இலாபங்களை ஈட்டிக்
கொண்டிருக்கிறது. வேலையின்மை மற்றும் வறுமை என்று பிற உற்பத்தியாளர்களை பாதிப்புடன்
தாக்குபவை இந்த ஆடம்பர விளையாட்டுக் கார்த் தயாரிப்பு நிறுவனத்தை பாதிக்கவில்லை.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு
Manager Magazine
கார்த்
தொழில் ஆலோசனை நிறுவனமான
Alix
Partners
உடையஆய்வு ஒன்றை மேற்கோளிட்டது; அது 2008/2009 மந்த நிலை மீள்வதை,
“ஓர்
இரட்டச் சரிவு”
வரும் என்று கணித்துள்ளது. இந்த அறிக்கையின்படி மேற்கு ஐரோப்பாவில்
இந்த ஆண்டு கார் விற்பனை 1980 களின் தரத்தை அடைவதோடு 1 மில்லியன் வாகனங்களும்
குறையும்.
ஐரோப்பிய சந்தையில் குவிப்புக் காட்டும் நிறுவனங்கள் ஏற்கனவே பெரும்
இழப்புக்களைத் தெரிவித்துள்ளன.
PSA
Peugeot Citroen
ஆண்டின் முதல் பாதியில் 819 மில்லியன் யூரோக்கள் இழப்பை
அறிவித்துள்ளது.
பிரான்ஸில்
PSA
விற்கு அடுத்தாற்போல் இரண்டாம் பெரிய கார் உற்பத்தி நிறுவனம்
Renault
இல்
இலாபங்களும் சரிந்து விட்டன. நிகர இலாபம் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல்
சரிந்துவிட்டது. ஜப்பானிய நிறுவனமான
Nissan,
ஸ்வீடிஷ் பங்காளி
Volvo trucks
ஆகியவைதான் இலாபங்களை காட்டியுள்ளன.
Deutsche Bank
பகுப்பாய்வாளர்கள் ஐரோப்பாவில்
Renault
இன் இழப்புக்கள் 160 முதல் 210 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கலாம்
என மதிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய கார்த் தயாரிப்பு நிறுவனம்
போர்ட் இன் தலைவர் அலன் முலாலி,
இந்த ஆண்டு ஐரோப்பாவில் 805 மில்லியன் யூரோக்கள் நஷ்டத்தை
எதிர்பார்க்கிறார். ஆண்டின் முதல் பாதியில், ஐரோப்பிய விற்பனை 20 ஆண்டுகளில் இல்லாத
குறைந்த அளவை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனமான ஜெனரல்
மோட்டார்ஸ் 2012 இரண்டாம் காலாண்டில் உலகெங்கிலும் 1.2 பில்லியன் யூரோக்கள் இலாபம்
என்று காட்டியுள்ளது; ஆனால் இது ஓராண்டிற்கு முன் இருந்ததைவிட 41 சதவிகிதம்
அதிகமாகும். ஆனால் ஐரோப்பாவில்,
ஓப்பல் மற்றும் வாக்ஸ்ஹால் துணை நிறுவனங்கள் இதே காலத்தில் 294
மில்லியன் யூரோக்களை இழந்துள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை13%
குறைந்துவிட்டது.
இதற்கிடையில்
Fiat, தன்னுடைய
இலாபங்கள் அதன் துணை நிறுவனம் கிறைஸ்லரால் அரிக்கப்பட்டு வருவதைக் காண்கிறது.
இரண்டாம் காலாண்டில் பெறப்பட்ட 358 மில்லியன் யூரோக்கள் இலாபம் என்பது கடந்த
ஆண்டில் இருந்த 1.2 பில்லியன் யூரோக்களில் இருந்து சரிவாகும். ஆனால் பியட்டின்
அடிப்படை வணிகம் மிக அதிக நஷ்டமான 500 மில்லியன் யூரோக்களை ஆண்டின் முதல் பாதியில்
கொண்டிருந்தது. விற்பனையும் கிட்டத்தட்ட 7% குறைந்து விட்டது.
ஐரோப்பாவில் இத்தகைய இழப்புக்களை முகங் கொடுக்கையில்
தயாரிப்பாளர்கள் அதிகம் பெருகும் கழிவுத் தொகையைக் கொடுக்கினறனர்; இதையொட்டி
சமீபத்தில்
VW
குழுவை,
பியட்டின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜியோ மார்ச்சியோன், நியூ யோர்க் டைம்ஸில்
விலையில்
“குருதிப்
பாதையைச் சுமத்துகிறது”
என்று குற்றம் சாட்டினார்.
2008-09 நெருக்கடியின்போது, பல ஐரோப்பிய அரசாங்கங்கள் கார்த்
தொழில்துறையில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டும் வ்கையில்
“கழிவுத்
திட்டம்”
ஒன்றை அறிமுகப்படுத்துவதின் மூலம் முயன்றனர்—அதாவது
ஒரு பழைய கார் பயனற்றது எனத் தள்ளுபடி செய்யப்டுகையில் புதிய கார்கள் வாங்குவதற்கு
உதவித் தொகைகள் அளிப்பதின் மூலம். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இப்பொழுது நிதி
கிடைப்பதில்லை. எனவே கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் ஆலைகள் மூடல்கள், வேலைகள்,
ஊதியங்கள்மீது பாரிய தாக்குதலுக்கு தயாரிப்பை மேற்கொள்கின்றன.
Alix Partners
உடைய கருத்தின்படி, ஐரோப்பாவில் ஒவ்வொரு இதர ஆலையும் அதன் முக்கிய
திறனைவிடக் குறைவாகத்தான் அடுத்த ஆண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் 2008/2009
மந்தநிலைக்காலத்தில் இருந்து 100 கார்த்தயாரிப்பு ஆலைகளில் 3க்கும் மேலாக
மூடப்பட்டுவிட்டன; இப்பொழுது இத்துறை ஒரு படுகொலையை எதிர்நோக்கியுள்ளது.
PSA Peugeot Citroën
ஏற்கனவே
கடந்த மாதம் அது 8,000 வேலைகளை அகற்ற இருப்பதாகவும்,
Aulnay-sous-Bois
இல்
உள்ள அதன் ஆலையை மூட இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 2015க்குள்
PSA
1.5 பில்லியன் யூரோக்களை சேமிக்க முடியும் என நம்புகிறது. ரேனால்ட்டின்
மேலாளர்களும் மிகவும் மோசமான விற்பனை என அறிவித்துள்ளதன் பொருள்,
மேற்கு ஐரோப்பாவில் உற்பத்தித் திறனைக் குறைக்க வேண்டும்
என்பதாகும்.
ஏற்கனவே சிசிலியில் ஓர் ஆலையை மூடி, மற்ற ஆலைகளிலும் ஊதியங்களைக்
கணிசமாகக் குறைந்துவிட்ட பியட் இப்பொழுது ஆலை விடுமுறைக் காலத்தை அதன்
Pomigliano
ஆலை என நேபிள்ஸுக்கு அருகே இருப்பதில் விரிவாக்கியிருப்பதுடன்,
இன்னும் அதிகமாக குறைந்த நேரப் பணியைத்தான் பயன்படுத்த இருக்கிறது. மற்றொரு பியட்
ஆலை முடப்படுவதும் அநேகமாக நடக்கும்.
GM
ன் துணை நிறுவனங்களான ஓப்பல்/வாக்ஸ்ஹால், இதன் தலைமை முற்றிலும் மறு
கட்டமைக்கப்பட்டுள்ளது, மிகப் பெரிய வெட்டுக்களுக்கான தயாரிப்புக்களை நடத்துகிறது.
Daimler,
BMW,
VW
ஆகியவற்றில் உள்ள தொழிலாளர்களுக்கும் மனநிறைவிற்கான ஆதாரம் ஏதும் இல்லை. இதுவரை
ஆசியா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் வலுவான வணிகம் ஆகியவற்றால் மூன்று
நிறுவனங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன. இதற்கிடையில் ஜேர்மனியில் தயாரிக்கப்படும்
நான்கு கார்களில் மூன்று வெளிநாடுகளுக்கு செல்லுகின்றன. ஆண்டின் தொடக்கத்தில்
இருந்து
VW
மற்றும் அதன் துணை பிராண்டுகள் குறிப்பாக ஆடி ஆகியவை 11.3 மில்லியன்
மாதிரிகளை சீனாவிற்கு அளித்துள்ளன (கிட்டத்தட்ட 17.5%). இவை அது தயாரிக்கும்
அனைத்து கார்களிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆகும். வட அமெரிக்காவில் அவை
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 22.1% அதிக விற்பனையை கண்டன.
ஆனால்,
VW
உடைய ஊழியர் தொகுப்பு இயக்குனர்
Horst Neumann,
ஒரு
நிரந்தர மகிழ்ச்சிக்கு எதிராக எச்சரித்துள்ளார். அவர்
VW
உடைய வணிகம் நன்றாக உள்ளது, ஆனால் ஐரோப்பாவில் சூழ்நிலை இன்னும் கடினமாக இருக்கும்
என்றார்.
“நாங்கள்
இதைச் செய்துவிட்டோம் என்பதை நம்ப முடியவில்லை”
என்று அவர் நிதிய நாளேடான
Handelsblatt
இடம்
கூறினார்.
VW
உடைய பிராண்ட் மாதிரியான
Seat
அல்லது ஜேர்மனிய ஆலை ஒன்றின் மாதிரி ஏதேனும் அழுத்தத்திற்கு உட்படக்கூடும் என்று
Manager Magazine
எழுதியுள்ளது.
இந்த நெருக்கடி ஐரோப்பிய எல்லைகளுடன் நின்றுவிடவில்லை. ஆழ்ந்த உலக
நெருக்கடியின் அடையாளங்கள் பெருகியுகள்ளன. ஜூலை மாதம்
Daimler
ஏற்கனவே சீனாவில் 0.8 சதவிகித சரிவை பதிவு செய்துள்ளது.
Daimler
கார்
பிராண்டுகளான மேர்சிடெஸ் பென்ஸ், ஸ்மார்ட்,
AMG,
Maybach
ஆகிவற்றை பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பாதான் முக்கிய விற்பனைப் பகுதியாக உள்ளது. ஜூலை
மாதம் விற்பனை 3.2% குறைந்தது.
“Swabian
கார்ப்
பெருநிறுவனம் தன்னுடைய சொந்தக் கண்டத்தில் யூரோ நெருக்கடியின் உச்சியில்
இழுக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியாது என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது.”
என
Handelsblatt
எழுதியுள்ளது.
ஐரோப்பிய கார்த் தொழிலாளர்கள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை
எதிர்கொள்கின்றனர். அமெரிக்க நிதி நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் சமீபத்தில் நிதியச்
செய்தி அமைப்பான ப்ளூம்பேர்க்கிடம்,
போர்ட்
“அமெரிக்காவில்
சிறப்பாக பணி புரிந்துள்ளது”,
ஆனால் முழு வெற்றியையும் ஐரோப்பா அழித்து வருகிறது. இது மற்ற அமெரிக்க தயாரிப்பு
நிறுவனங்களான
GM,
Chrysler
க்கும்
உண்மையில் பொருந்தும்”
என்றார் அவர்.
“இச்சிறந்த
பணி”
என்பது அமெரிக்க கார்த்தயாரிப்பு தொழிலாளர்களின் ஊதியங்களையும்
நலன்களையும் அழிப்பதாகும். 2008 நெருக்கடிக்குப் பின், ஒபாமா நிர்வாகம் மற்றும்
தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அமெரிக்க கார் நிறுவனங்கள் பல ஆலைகளை மூடின, புதிய
தொழிலாளர்ளுக்கு ஊதியங்களை பாதியாகக் குறைத்தன மற்றும் ஓய்வூதியங்களையும் சுகாதாரக்
காப்பீட்டு அளிப்புக்களையும் வெட்டிவிட்டன.
இந்த "அமெரிக்க நிலைமைகள்" இப்போது ஐரோப்பா வரை கொண்டு
செல்லப்படுகிறது. கார் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி தொழிலாளர்களின்
முதுகுகளின்மீது நடத்தப்படுகிறது.
2008
இறுதியில்,
ஃபியட்டின் முதலாளி மார்ச்சியோன் ஏற்கனவே ஆறு கார் நிறுவனங்கள்
மட்டுமே உலகெங்கிலும் நீடிக்கும் என்று கணித்தார். அப்பொழுது ஃபியட்டை கிறைஸ்லரை
எடுத்துக் கொள்வது என்பது இந்த ஆறில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதன்
விளைவு இப்பொழுது வெளிப்படையான பிரச்சினை ஆகும். |