சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Defend immigrants in Greece

கிரேக்கத்தில் குடியேறியிருப்பவர்களைப் பாதுகாக்கவும்

Christoph Dreier
11 August 2012

use this version to print | Send feedback

கடந்த வாரம் ஏதென்ஸ், 1967-74 கிரேக்கத்தின் இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பின் நடந்திராத நிகழ்வுகளைக் கண்டது. தோலின் நிறம், பொதுவான தோற்றம் இவற்றை வைத்து அவர்கள் குடியேறியவர்களாக இருக்கலாமோ என்ற அனுமானத்தின் பேரில் ஆயிரக்கணக்கான மக்களை சுற்றி வளைக்க கிட்டத்தட்ட 4,500 பொலிஸ் அதிகாரிகள் திரட்டப்பட்டனர்.

1,400 க்கும் மேற்பட்டோர் முகாம்களில் காவலில் வைக்கப்பட்டு இப்பொழுது நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் பலரும் தாக்குதலுக்குளானனர்.

முந்தைய வாரங்களில் ஆவணமற்ற குடியேறியவர்கள் மீது இலக்குக் கொண்டு ஏராளமான பேர் சோதனைக்கு உட்பட்டு, கைது செய்யப்பட்டதின் உச்சக்கட்டம்தான் இது. நாஜிக்களுடன் தங்களை வெளிப்படையாக அடையாளம் காணும் Chrysi Avgi (பொற்காலம்)  அமைப்பின் உறுப்பினர்களுடன் பொலிசார் ஒத்துழைத்தனர். பாசிசக் கும்பல்கள் குடியேறுவோரை பயமுறுத்த, துஷ்பிரயோகம் செய்ய மற்றும் தாக்க பொலிசாரால் ஊக்குவிக்கப்ப்படுகின்றனர்.

ஏதென்ஸில் நடக்கும் இந்நிகழ்வுகள் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். தொழிலாளர் பிரிவில் மிகவும் அடக்கப்பட்ட பிரிவினர் மீது தாக்குதல் என்று தொடங்குவது, விரைவில் முழுத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் இயக்கப்படும். ஆளும்உயரடுக்குகள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டும் அனைவரையும் மிருகத்தனமாக ஒடுக்குவதற்குத் தயாரிப்புக்கள் செய்யும் வகையில், மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளைத் அணுதிரட்டுகின்றன.

சமூக எதிர்ப் புரட்சி என்பது மற்ற ஐரோப்பிய நாடுகள் எதிலும் இல்லாத அளவிற்கு கிரேக்கத்தில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையான ஊதியங்கள் கிட்டத்தட்ட 60% குறைந்துவிட்டன; நூறாயிரக்கணக்கான மக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், சமூக நலன்புரி அமைப்பு முறை அழிக்கப்பட்டுவிட்டது. உத்தியோகபூர்வ வேலையின்மை ஒராண்டில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக அதிகரித்து, இப்பொழுது மிக உயர்ந்த அளவான 23.1 சதவிகிதம் என்று உள்ளது. இளைஞரிடையே வேலையின்மை என்பது இப்பொழுது 55% ஆக உள்ளது.

சிக்கன நடவடிக்கைகள் பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்திய வகையில், வரிகள் மூலம் கிடைக்கும் வருமானங்களில் சரிந்துவிட்டபடியால், புதிய புதிய வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் வந்துள்ளன; இவற்றை பூர்த்தி செய்ய மேலும் ஆழ்ந்த தாக்குதல்கள் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், இளைஞர்கள்மீது சுமத்தப்படும். மற்றும் ஒரு 40,000 பணிநீக்கங்கள் பொதுத்துறையில் சுமத்தப்படும்; அதையொட்டி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் உடன்பாடுகளின் விதிகள் நிறைவேற்றப்படும்.

மக்களில் தொகையில் பெரும்பான்மையினர்க்கு நிலைமை வாழமுடியாத அளவிற்கு வந்துவிட்டது. மக்கள் சீற்றமும், வெறுப்புணர்வும் கொதித்துப் பொங்குவது என்பது குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டுவிடும். தொழிற்சங்க அதிகாரிகள் ஏற்கனவே ஒரு சமூக வெடிப்பு குறித்து எச்சரித்துள்ளனர். இச்சூழ்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் ஆதரவைக் கொண்டுள்ள குடியேறுவோர் மீதான சூனிய வேட்டை, இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது.

இது, தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு எதிராக அரச எந்திரத்தை பலப்படுத்துவதோடு பாசிசக் குழுக்களும் ஒருங்கிணைக்கப்படுவர். உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், நிக்கோஸ் டென்டியாஸ் ஹாலிவோர்ஜியா எல்லடோஸ் எஃகு ஆலையில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக, ஏதென்ஸ் பொலிஸ் படையில் 1,500 அதிகாரிகளை நியமித்ததின் மூலம் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டாண்டுகளாக சமூகநல உரிமைகளின் அழிப்பிற்குச் சோதனைக் களம் போல விளங்கிய கிரேக்கம் இப்பொழுது சர்வாதிகார ஆட்சி வடிவங்களின் வளர்ச்சிக்கும் பரிசோதனைக்களமாகிவிட்டது. வங்கிகள் கட்டளையிட்டுள்ள வெட்டுக்கள் ஆட்சியின் ஜனநாயக வகையுடன் சற்றும் இணக்கமற்றதாக உள்ளன.

குடியேறியிருப்பவர்களை அடித்துத் துரத்துவது என்பது பழமையானதும், தீமையானதுமான தந்திரோபாயம் ஆகும், இது தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கே உதவுகிறது. பொருளாதார, சமூக நெருக்கடியில் இருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆளும் வர்க்கம் வேண்டுமென்றே இனவெறி, தீவிர நாட்டுப் பெற்று ஆகியவைத் தூண்டிவிட்டு குடியேறுவோரை பலிக்கடாக்களாக ஆக்குகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டென்டியஸ், குடியேறுவோர் பிரச்சினை என்பது நிதியப் பிரச்சினையைவிடக் கூடுதலானது என்று கூறியுள்ளார்இது அவருடைய அரசாங்கத்தின் வெட்டுக்களுக்கான பொறுப்பில் இருந்து கவனத்தைத் திருப்பும் வெளிப்படையான முயற்சியாகும்.

கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் இருக்கும் தொழிலாளர்கள் குடியறுவோர் எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும். எந்த தோற்றத்தை கொண்டிருந்தாலும், எந்த இனவழிப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான நலன்கள்தான் உள்ளன, அவர்கள் உலகில் ஒரேவகையான விரோதியைத்தான் எதிர்கொள்கின்றனர்: அதாவது இரக்கமற்ற நிதியப் பிரபுத்துவம் தன் சலுகைகளையும் செல்வத்தையும் பாதுகாக்க எதையும் செய்யும் என்பதை.

கிரேக்கத்தில் உள்ள பல அகதிகள் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என்னும் பல நாடுகளில் இருந்து, இராணுவத் தாக்குதல்கள் அல்லது உள்நாட்டுப் போரினால் சேதப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருகின்றனர்; அந்நாடுகளிலுள்ள நிலைமைக்கு காரணம் கிரேக்கத்தில் சிக்கன நடவடிகைகளுக்கு பொறுப்புக்கொண்டுள்ள அரசாங்கங்கள்தான். போர் என்னும் நரகத்தில் இருந்து தப்பிய மக்கள் இப்பொழுது ஏதென்ஸ் நகரங்களில் வேட்டையாடப்படுகின்றனர்.

பல ஐரோப்பிய நாடுகளில் அரச ஆதரவு பிரச்சாரங்கள் குடியேறுவோர் மற்றும் இனவழிச் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படுகின்றன. இவை அரச இயந்திரத்தை வலுவாக்கவும், பாசிச சக்திகளை ஒருங்கிணைக்கவும் ஒரு தொடக்க புள்ளியாக சேவை செய்வதோடு முழுத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இயக்கப்படுகின்றன. ஐரோப்பிய தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் வலதுசாரி சக்திகள் அகதிகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களை எதிர்க்கும்போது மட்டுந்தான் தங்கள் ஜனநாயக உரிமைகளையும், சமூக நலன்களையும் அவர்கள் பாதுகாக்க முடியும்.

சிரிசா போன்ற போலி இடது குழுக்கள் இதற்குத் தடையாகும். தன்னுடைய கோழைத்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் சிரிசா மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. பாராளுமன்றத்தில் இரண்டாம் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் அது, போலீஸ் தாக்குதல்களுக்கு எதிராக குடியேறியவர்களை பாதுகாக்க ஒரு விரலைக்கூட உயர்த்தவில்லை. ஒரு சில பொருளற்ற எதிர்ப்புச் சொற்களை வெளியிட்டுள்ளது, அதைத்தொடர்ந்து அரசுக்கு அதன் விசுவாசங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது.

பொலிசார் ஏதென்ஸ் தெருக்களின் வழியே குடியேறிய தொழிலாளர்ளை துரத்தியதற்கு மறு நாள், சிரிசா பொலிஸார் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அவர்களுக்குக் கூடுதலான சிறந்த ஆயுதங்களைக் கொடுக்கும் விவாதம் பாராளுமன்றத்தில் தேவை எனக் கோரியது. இக்கட்சிமத்தியதர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளை அடித்தளமாகக் கொண்டதுஇதையொட்டி பாதுகாப்புப் படைகளுக்கு தன் பரிவுணர்வைக் குறிப்பிட்டுள்ளதுடன் அதன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இயல்பான விரோத போக்கு மற்றும் பயத்தையும் குறிப்புக் காட்டியுள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க --குடியேறியவர்களாயினும் சரி, உள்நாட்டில் பிறந்தவர்களாயினும் சரி-- நிதிய உயரடுக்கின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்துத் தேசிய எல்லைகளையும் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு சோசலிச முன்னோக்கு தேவைப்படுகிறது. ஒரு புதிய புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமை கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதும் கட்டமைக்கப்பட வேண்டும்.