World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

A new policy is needed for Quebec student strike

கியூபெக் மாணவர் வேலைநிறுத்தத்திற்கு ஒரு புதிய கொள்கை தேவைப்படுகிறது

By the Socialist Equality Party (Canada)
10 August 2012
Back to screen version

செய்தி ஊடகத்தின்  அவதூறு பிரச்சாரம், பொலிஸ் வன்முறை மற்றும் கடுமையான ஜனநாயக விரோதச் சட்டம் (சட்டம் 78) இவற்றை முகங்கொடுக்கையில் கியூபெக் மாணவர்கள் ஆறு மாத காலமாக ஓர் உறுதியான, தைரியமான போராட்டத்தை மாகாண தாராளவாத அரசாங்கத்தின் திட்டமான பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணத்தை மிகவும் அதிகரிப்பது என்பதற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

ஆனால் அரசியல் முன்னோக்கு குறித்த முக்கியமான கேள்விகள் கடக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம் என்ற நிலை மாறிவிட்ட கட்டத்தைத்தான் இப்பொழுது மாணவர்கள் போராட்டம் எதிர்கொள்கிறது.

வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதென்பது Charest ன் தாராளவாத அரசாங்கத்திற்கும் முழு ஆளும் உயரடுக்கிற்கும் ஓர் அரசியல் வெற்றியை அளிப்பதாகும். அத்தகைய வெற்றியை Jean Charest, Stephen Harper வரவேற்பது போலவே பெருவணிக Parti Quebecois (PQ) ம் வரவேற்கும்; இது வேலைநிறுத்தம் முற்றுப்பெற வேண்டும், சட்டம் 78 க்கு கீழ்ப்படிய வேண்டும் என்று பல முறை PQ  தலைவர் Pauline Marois விடுத்துள்ள அழைப்புக்கள் மூலம் தெளிவாகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நடைமுறைத் தலைவர்களுடன் பிணைந்துள்ள மாணவர் சங்கங்களான FECQ. FEUQ ஆகியவற்றின் தலைவர்களிடம் இருந்து வேலை நிறுத்தம் முடிக்கப்படுவது செப்டம்பர் 4 மாகாணத் தேர்தலில் PQ விடம் Charest தோல்வியடைய உதவும் என்ற கூற்றுக்களுக்கு சான்றுகள் ஏதும் இல்லை. அப்படியே இது உண்மையாக இருந்தாலும், அதனால் என்ன? PQ  என்பது அரசாங்கம் நடத்துவதற்கு கியூபெக் முதலாளித்துவத்தின் மாற்றீட்டுக் கட்சி ஆகும். கடந்த முறை இது பதவி வகித்தபோது, கியூபெக் வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவிற்கு சமூகநலச் செலவுகளைக் குறைத்து, சட்டம் 78 போன்ற ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி செவிலியர் வேலைநிறுத்தத்தை (nurses’ strike) முறித்து, பெருவணிகர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிகளையும் குறைத்தது.

PQ என்பது, உலகெங்கிலும் உள்ள இடது கட்சிகள் அரசாங்கம் என்பதின் கியூபெக்கிய வடிவமாகும்; அத்தகைய கட்சிகள் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, பிரித்தானியாவில் தொழிற் கட்சி மற்றும் பிரான்ஸில் சோசலிஸ்ட் கட்சி போன்றவை ஆகும். அவற்றின் பணி எதிப்பு இயக்கங்களை அடக்கி அவற்றை ஒத்துழைக்கச் செய்வதுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து செயல்பட்டு ஆளும் வர்க்கத்தின் செயற்பட்டியலை சுமத்துவதாகும்.

இந்த வேலைநிறுத்தம் தொடரப்பட வேண்டும். ஆனால் இது முற்றிலும் ஒரு புதிய முன்னோக்கில் ஆயுதபாணியாக வேண்டும்; அப்பொழுதுதான் இது அரச அடக்குமுறை மற்றும் தொழிற்சங்கங்களின் உத்தியான இதைத் தனிமைப்படுத்தி, எதிர்ப்பை வெறுக்கப்படும் Charest இன் தாராளவாத அரசாங்கத்திடம் இருந்து PQ விற்கு ஆதரவாக மாற்றுவது என்பதற்கு இணங்காமல் சுயாதீனமாக நிற்க இயலும்.

இந்த புதிய முன்னோக்கானது, மாணவர்களுடைய வேலைநிறுத்தமானது பெரு வணிகத்தினதும் அதன் அரசியல் பிரதிநிதிகளினதும், தொழிலாளர்கள், இளைஞர்களை பெருமந்த நிலைக்குப் பின் உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்னும் உந்துதலுக்கு, உலகம் முழுவதும்  உள்ள தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்பின் ஒரு பாகம் என அறியப்படுவதில் நிறுவப்பட வேண்டும்.

கனடா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம்தான் மாணவர்கள் உறுதியாக ஆதரவை நாட இப்பொழுது திரும்பவேண்டும். வேலைநிறுத்தம் பெரு வணிகம் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் பெருநிறுவனப் போட்டித்தன்மை, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் செயல்படுத்தும் தாக்குதலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலுக்கு ஒரு கிரியா ஊக்கியாக செயல்பட வேண்டும்.

வேலைநிறுத்தத்திற்கு எதிராகக் குவிக்கப்பட்டுள்ள சக்திகளை எவரும் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடக் கூடாது.

தாராளவாதிகள், பெருநிறுவன நடைமுறையின் தூண்டுதலை ஒட்டி பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் சட்டம் 78ன் கடுமையான விதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்குத் தயாரிப்புக்களை நடத்துகின்றனர்.

மாணவர்களின் நண்பர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள், மிகவும் முக்கியமாக தொழிற்சங்கங்கள் போன்றவை பெரும் கெட்ட பங்கைத்தான் இதில் கொண்டுள்ளன. கியூபெக்கில் உள்ள தொழிற்சங்கங்கள், உலகெங்கிலும் இருப்பதைப் போலவே, தொழிலாளர்களுடைய அமைப்புக்கள் அல்ல, மாறாக பெரு வணிகம் மற்றும் அரசின் பின்னிணைப்பு போன்றவை; தொழிலாள வர்க்கத்தின் மீது இவை கண்காணிப்பு பணியைத்தான் செய்கின்றன. சமூக அமைதியை காத்தல் என்ற பெயரில் தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக வேலைநிறுத்தத்தை நெரிக்க உழைக்கின்றன. இவை சாரெஸ்ட்டுடன் சேர்ந்து மே மாதத் தொடக்கத்தில் ஒரு விற்றுவிடும் உடன்பாட்டை ஏற்குமாறு மாணவர்களை மிரட்டின. சட்டம் 78 இயற்றப்பட்டவுடன், தொழிற்சங்கங்கள் அது செயல்படுத்தப்பட இயன்றதை செய்வதாக உறுதியளித்தன; வேலைநிறுத்தத்தை முறிக்க ஆசிரியர்களும் உதவ ஏற்பாடு செய்வதாகக் கூறின. CLASSE உடைய சமூக வேலைநிறுத்தம் ஒன்றிற்கான அழைப்பை இவை கடுமையாக எதிர்த்தன.

CLASSE பெருகிய முறையில் ஆளும் வர்க்கம், அதன் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிக்கப்பட வேண்டும் என்பதற்கான உந்துதலைச் சற்று மாற்றி எடுத்துக் கொண்டுள்ளது. சமூக வேலைநிறுத்தத்தை எதிர்ப்பதற்காக தொழிற்சங்கங்களை குறைகூற அது மறுத்துவிட்டது; அவர்களுக்கு மரியாதை காட்டும் வகையில் ஒரு பரந்த திரட்டு என்பதற்கான அழைப்பை முற்றிலும் கைவிட்டுவிட்டது. மாணவர்களை PQ வின் பின்னே அணிதிரண்டு நிற்பதற்கான முயற்சிக்கு அது ஆதரவைக் கொடுத்துள்ளது; சாரெஸ்ட்டின் தோல்வி ஓர் ஆதாயம், ஏன் அப்பட்டமான வெற்றிகூடத்தான் என்று மாணவர்களுக்கு இதையொட்டிக் கூறியுள்ளது. மேலும் உத்தியோகபூர்வமாக வேலைநிறுத்தம் தொடர வேண்டும் என்று போராடவும் மறுத்துள்ளது.

வேலைநிறுத்தத்தின் மிகப் பெரிய பலவீனமான தன்மை அதனுடைய எதிர்ப்பு மற்றும் தேசியவாத நோக்குநிலை ஆகும்எதிர்ப்பு இயக்கத்தை இருக்கும் சமூகப்பொருளாதார ஒழுங்குடன் ஏற்றுக்கொள்ளுதல் என்னும் நிலைப்பாடு, சாரெஸ்ட் அரசாங்கம் மற்றும் கியூபெக்கின் உயரடுக்கிற்கு அழுத்தம் கொடுப்பதுடன் வரம்பு கட்டிக் கொள்ளுதல், இயக்கத்தை கியூபெக்குடன் வரையறுத்துக் கொள்ளுதல் ஆகியவைதான் அவை.

 

மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தால், ஆர்ப்பாட்டங்களை அதிகரித்தால், அவர்கள் அதிகார சமச்சீர்நிலையை தோற்றுவிப்பர், இதில் அரசாங்கம் பேச்சுக்கள் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லாமல் நிற்கும் என்று CLASSE கூறுகிறது.

மாறாக மாணவர்கள், அரச வன்முறையை சந்திப்பது, கியூபெக்கின் தாராளவாத அரசாங்கத்துடன் நேரடி மோதல் என்று மட்டும் இல்லாமல் முழு கனேடிய ஆளும் வர்க்கம், அதன் நீதிமன்றங்கள், பொலிஸ் ஆகியவற்றுடன் நேரடி மோதல் என்ற நிலையைக் கொண்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு இந்த அனுபவம் பொதுவானதுதான். முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பின்கீழ் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக உரிமைகளையும் அழிக்க முற்படுகிறது; பொதுப் பணிகளில் இருந்து, கூட்டுப் பேச்சுக்கள் நடத்துவது வரை: மேலும் தொழிலாள வர்க்கத்தின் தவிர்க்க முடியாத எதிர்ப்பிற்கு அரசாங்க அடக்குமுறை என்னும் விடையைக் கொடுக்கிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் என்பது சமூகப் பொருளாதார வாழ்வின்மீது பெருவணிகம் கொண்டுள்ள இடுக்கிப்பிடியை முறிக்கும் ஒரே சமூக சக்தி ஆகும்; இது ஒன்றால்தான் உழைக்கும் மக்களின் அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்அதில் கௌரவமான கல்வி, வேலை, ஓய்வூதியம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். ஆனால் இத்தகைய சமூக மாற்றத்தை செயல்படுத்த உழைக்கும் மக்கள் தன்னை முதலில் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அமைத்துக் கொண்டு, தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவுவதற்கு போராட வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதாரம் தனியார் இலாபம் என்று இல்லாமல் சமூகத் தேவை என்பது ஊக்குவிக்கும் கொள்கையாக உண்மையிலேயே முற்போக்குத்தனமாக மறு சீரமைக்கப்படும்.

மாணவர்கள் தங்கள் போராட்டத்தை, கனேடிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உலக முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்புடன் இணைத்துக் கொள்ளும் சோசலிச முன்னோக்கிற்குப் பதிலாக, CLASSE கடந்த மாதம் தேசியவாதம் ததும்பிய பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இப்பிரகடனம் மாணவர் வேலைநிறுத்தம் கியூபெக் மக்களுடைய ஒரு ஜனநாயகப் போராட்டம் என்று போற்றுவதுடன் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவம் பற்றிய குறிப்புக்கள் எதையும் தவிர்த்துக்கொண்டது.

கியூபெக் முதலாளித்துவத்தின் கருத்தியலான, கியூபெக் தேசியவாதம் மற்றும் அதன் இரட்டைப் பிரிவான கனேடிய தேசியவாதம் போல், உயரடுக்கினரால் தொழிலாள வர்க்கத்தை அதன் ஆட்சிக்கு ஆதரவாக திரட்டி கியூபெக் தொழிலாளர்கள் அவர்களுடைய உண்மையான நண்பர்களான ஆங்கிலம் பேசும் கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து பிரிக்கிறது.

Quebec Solidaire QS என்னும் அமைப்பபு மற்றும் பல அனார்க்கிச குழுக்களின் செல்வாக்கின் பெரும் காலடிச் சுவட்டைத்தான் CLASSE  விஞ்ஞாபனம் கொண்டுள்ளது.

PQ தலைமையிலான மற்றும் வருங்காலத்தில் PQ வின் தேர்தல் நட்பு அமைப்பாக வரவிருக்கும் Conseil de la souveraineté du Québec ன் உறுப்பினராக QS உள்ளது. இது அழுத்தம் கொடுக்கும் கட்சி என்பதோடு, அவ்வகையில் அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படும் கட்சி என தன்னை தெருக்களிலும், வாக்குப் பெட்டியிலும் உள்ள கட்சி என்று வளர்த்துக் கொள்கிறது.

தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டி அதை அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களின் அமைப்புமுறை ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கும் போராட்டத்திற்கு எதிரிடையான முறையில், அனார்க்கிஸ்டுகள் நேரடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தும் முக்கிய பிரிவனராக உள்ளனர்அதாவது பொலிஸுடன் தனிநபர் மோதல்கள் மற்றும் அடையாள ஆக்கிரமிப்புக்கள், தடுப்புக்கள் என. அனைத்து அரசியல், மற்றும் கட்சிகளை அவர்கள் மொத்தமாகக் கண்டிப்பது என்பது தொழிலாள வர்க்கத்தின் போராட்டமான அதை ஆளும் உயரடுக்குக் கட்சிகளிடம் இருந்து பிரித்துக் கொண்டு சமூகத்தை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு மறுஒழுங்கமைக்கும் திட்டத்தை வெளிப்படுத்தும் போராட்டத்தைத் தடுப்பதற்குத்தான் உதவும்.

உலகெங்கிலும் தொழிலாளர் போராட்டங்களின் ஆரம்ப அலை வந்தபோது இருந்ததுபோல் மாணவர் வேலைநிறுத்தமும் இதே பிரச்சினையை எதிர்கொண்டது. இப்போராட்டங்கள் அடக்கப்பட்டு, தொழிற்சங்கங்களால் நசுக்கப்படுகின்றன; அதேபோல் இடது எனக் கூறிக்கொள்ளும் கட்சிகள், தேசியவாதம் மற்றும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவங்களை வளர்க்க விரும்பும் போலி முற்போக்கு அமைப்புக்கள் மற்றும் இடது கட்சிகளால் நசுக்கப்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி, அதனுடைய இளைஞர் பிரிவு சர்வதேச சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள், மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் தலைமைக்கு வந்துள்ள நெருக்கடியைக் கடப்பதற்கு உழைக்கின்றன; அதேபோல் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிடம் இருந்து முறிக்கும் முயற்சியிலும், தொழிலாளர்கள் அரசாங்கங்கம், சோசலிசம் ஆகியவற்றிற்காக போராடும் பிரிவிற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்க வைக்கும் புரட்சிகரத் தலைமைய வளர்க்கவும் போராடுகின்றன.