WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
Quebec student strike:
CLASSE manifesto promotes Quebec nationalism and protest politics
CLASSE
விஞ்ஞாபனம் கியூபெக் தேசியவாதம் மற்றும் எதிர்ப்பு அரசியலை ஊக்குவிக்கிறது
By Richard Dufour and Keith Jones
8 August 2012
use
this version to print | Send
feedback
இந்த வாரமும் அடுத்த வாரமும் பொது மன்றக் கூட்டங்களில்
(General assembly meetings)
கியூபெக்கின் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்,
மாகாணத்தின் இடைநிலைக் கல்வி நிலையங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குளிர்காலப்
பருவம் பொலிஸ் கட்டுப்பாட்டின்கீழ் இம்மாதப் பிற்பகுதியில் மீண்டும் தொடங்கும்போது
எப்படித் தொடரவேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பர்.
அரையாண்டு காலம் நீடித்துள்ள வேலைநிறுத்தத்தில், லிபரல்
அரசாங்கத்தின் பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணங்கள் வியத்தகு அளவில்
அதிகரிக்கப்படும் என்பதற்கு எதிரான மாணவர் போராட்டத்தில் கல்வி எப்படி ஒரு சமூக
உரிமை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு இரு எதிரெதிரான மூலோபாயங்கள்
அரசியல் சக்திகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே உலக சோசலிச வலைத் தளம் வேலை நிறுத்தம் கனடா
மற்றும் உலகெங்கிலும் ஆளும் வர்க்கம் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கை
வேலைத்திட்டத்திற்கு ஓர் உட்குறிப்பான சவால் என்று வலியுறுத்தி வந்துள்ளது.
முதலாளித்துவ நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்ற
உறுதிப்பாட்டுடன், பெருவணிகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் தொழிலாள வர்க்கம்
பெற்றுள்ள அனைத்து சமூக நலன்களையும் அழித்துவிட முற்பட்டுள்ளன; இந்நலன்களோ கடந்த
நூற்றாண்டில் கொந்தளிப்பு நிறைந்த போராட்டங்கள் மூலம் போராடி அடையப் பெற்றவை ஆகும்.
மாணவர்கள்,
தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை நாட வேண்டும், அது ஒன்றுதான் பெருவணிகம்
சமூகப்-பொருளாதார வாழ்வின் மீது செலுத்தும் இடுக்கிப்பிடியை முறிக்கும் வர்க்க
நலன்களையும் ஆற்றலையும் கொண்டுள்ளது என உலக சோசலிச வலைத் தளம் கூறிவந்துள்ளது.
வெற்றி பெற வேண்டுமானால், வேலைநிறுத்தம் கனடா முழுவதும் தொழிலாள வர்க்கம்
(பிரெஞ்சு, ஆங்கிலேயர் மற்றும் குடியேறியவர்கள்) தாக்குதல் தொடக்கப்படுவதற்கு ஒரு
வினையூக்கியாக வரவேண்டும், அனைத்து வேலைகளும், பொதுப் பணிகளும்
பாதுகாக்கப்படுவதற்கும், இலாப நோக்கிற்கு இல்லாமல் சமூகத் தேவைகளை நிறைவு
செய்வதற்கு பொருளாதாரத்தை சோசலிச வகையில் மறுசீரமைக்க தொழிலாளர் அரசாங்கம் தான்
உந்துதல் கோட்பாடாக இருக்கும் என்றும் கூறி வந்துள்ளது.
மாணவர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கியூபெக்
Solidaire
மற்றும் முழுப் போலி இடது அமைப்புக்களும் இதற்கிடையில்
வேலைநிறுத்தம் கியூபெக் உயரடுக்கிற்கு அழுத்தம் கொடுக்கும் வரம்போடு நின்றுவிட
வேண்டும் என வலியுறுத்துகின்றன.
பல மாதங்களாக, வேலைநிறுத்தத்திற்கு தலைமைதாங்கும் அமைப்பான
CLASSE,
மாணவர்கள் போராட்டம் ஒரு ஒற்றை பிரச்சினையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
முன்னெடுக்க வேண்டும் என்று வாதாடி வருகிறது. லிபரல்களின் கட்டண உயர்வுகளுக்கு
எதிர்ப்பு, மாகாண அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு சவால் என்பதில் இருந்தும்,
அதேபோல் கூட்டாட்சி கன்சர்வேடிவ் அரசாங்கம், ஆளும் உயரடுக்கு முழுவதற்கும்
எதிர்ப்பு என்பதில் இருந்தும் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டது.
இத்தகைய முன்னோக்கு சம்பவங்களினால் முற்றிலும்
நிராகரிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் என்பதற்கு முற்றிலும் மாறாக, பெருநிறுவனச்
செய்தி ஊடகத்தால் ஊக்கம் பெறும் லிபரல் அரசாங்கம் முன்னோடியில்லாத பொலிஸ் வன்முறை
அதன்பின் சட்டம் 78 ஆகியவற்றை வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு பயன்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் பிடிவாதத்தை முகங்கொடுப்பதுடன், பெரும்பாலும் தொழிலாள
வர்க்கம் என்னும் வகையில் பரந்துபட்ட மக்களின் ஆதரவு அலையினால் ஊக்கம் பெற்று
(சட்டம் 78 இயற்றப்பட்டதை தொடர்ந்து எதிர்ப்பு வெடித்துள்ள நிலையில்),
CLASSE
சுருக்கமாக ஒரு
“சமூக
வேலைநிறுத்தம்”
என்னும் வடிவமைப்பில் பரந்த போராட்டத்திற்கு அழைப்பை முன்வைத்தது. ஆனால் இது
Jean
Charest
இன் லிபரல் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் கொண்ட ஒரு அரசியல் பொது
வேலைநிறுத்தம் அல்ல, அல்லது ஓட்டாவாவிலும் கியூபெக் நகரத்திலும் தொழிலாளர்
அரசாங்கத்தை இருத்துவதற்கான வெகுஜன இயக்கத்தை வளர்க்கும் திட்டத்தையும் கொண்டது
அல்ல. இது வெறுமனே ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கத்திற்கான திட்டத்தை முன்வைப்பதுதான்.
தொழிற்சங்கங்கள் தமது கடுமையான எதிர்ப்பை தெளிவாக்கியவுடன்
CLASSE
விரைவில் அதன்
“சமூக
வேலைநிறுத்த”
அழைப்பையும் கைவிட்டது. பெருகிய முறையில் அது தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின்
நட்பு அமைப்புக்களான
FECQ
(கியூபெக்
கல்லூரிகள் மாணவர்கள் கூட்டமைப்பு),
FEUQ
(கியூபெக்
பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு) ஆகியவற்றின் உந்துதலை ஏற்று மாணவர்களின்
வேலைநிறுத்தத்தை லிபரல்களுக்கு பதிலாக உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான
Parti Quebecois (PQ)
வைப் பதவிக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் பிரச்சாரத்தின் பின்னே
திசை திருப்பியது.
பலமுறையும்
PQ விடம்
சாரெஸ்ட் தோல்வியுற்றால்—PQ
வோ ஒரு பெருவணிக, கியூபெக் சுதந்திர சார்பு கட்சி, அது கடைசியாக பதவியில்
இருந்தபோது மிகப் பெரிய சமூகநலச் செலவு வெட்டுக்களை கியூபெக் வரலாற்றிலேயே இல்லாத
அளவிற்கு மேற்கொண்டது—அது
ஒரு சாதகமான விளைவாக இருக்கும், ஏன் மாணவர்களுக்கு ஒரு நேரடி வெற்றியாகக்கூட
இருக்கலாம் என்று
CLASSE
தலைவர்கள் கூறியுள்ளனர்.
வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கள் காட்டிக் கொடுப்பதற்கு
CLASSE
ம் துணை நிற்கிறது என்பது கடந்த மாதம் அது வெளியிட்டுள்ள
விஞ்ஞாபனத்தில், ஒரு பரந்த போராட்டத்திற்கான அதன் முன்னோக்கில், அடிக்கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ளது.
இவ் விஞ்ஞாபனம், கியூபெக்கின் போலி இடதுகள்,
PQவின்
வருங்கால தேர்தல் நட்பு அமைப்புக்களான
Québec Solidaire
இல் இருந்து அனார்க்கிசவாதிகள் வரை கொண்டுள்ள, எதிர்ப்பு மற்றும்
தேசியவாத அரசியலின் பெரும் தாக்கத்தைத்தான் கொண்டுள்ளது.
CLASSE
இன்
விஞ்ஞாபனம்,
சமூக வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்புக் காட்டும் தொழிற்சங்கங்கள் மீது குற்றம்
சாட்டுவது என்பது ஒருபுறம் இருக்க, அவர்கள் முன்னதாக மாணவர்கள் போராட்டத்தை
விற்றுவிடும் முயற்சிகள் குறித்துக் கூட குறைகளைக் கூறவில்லை. இந்த அமைப்பு
PQ
ஒருபெருவணிகக் கட்சி, லிபரல்கள் மற்றும் ஹார்ப்பரின்
கன்சர்வேடிவ்கள் போலவே முதலாளித்துவத்தின் நலன்களை நிலைநிறுத்துவதில்தான் பேரார்வம்
கொண்டுள்ளது என்று தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை கூடக்
கொடுக்கவில்லை.
இது கனடாவின் எஞ்சிய பகுதிகளில் இருக்கும் மாணவர்கள்,
தொழிலாளர்களுக்கு ஆதரவு கேட்டு அழைப்புக் கொடுக்கவில்லை. உண்மையில் கியூபெக்கிற்கு
வெளியே நடக்கும் பிரச்சினை, நிகழ்வு, வளர்ச்சி என்று எதைப்பற்றியும்
குறிப்பிடவில்லை. உலகத்திலேயே மிகப் பெரிய நெருக்கடியை உலக முதலாளித்துதுவம்
பெருமந்தநிலைக்குப்பின் கொண்டிருப்பது குறித்தும் ஏதும் கூறவில்லை—அதுதான்
மாணவர்களுக்கும் கனேடிய உயரடுக்கிற்கும் இடையே நடக்கும் மோதுதலின் உண்மையான
உந்துசக்தி ஆகும். அதேபோல் கிரேக்கம், ஸ்பெயின், மற்றும் ஐரோப்பா முழுவதும்
சுமத்தப்படும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் குறித்தும் அவை எப்படி தொழிலாள
வர்க்கத்திடம் இருந்து பெருகிய எதிர்ப்பைக் கொண்டுள்ளன என்பது பற்றியும் எதுவும்
கூறவில்லை.
உலக முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிராக கனேடிய மற்றும்
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புடன் தங்கள் போராட்டத்தை இணைத்துக் கொள்ளும்
ஒரு சோசலிச முன்னோக்கிற்கு முற்றிலும் மாறாக,
CLASSE
இன்
விஞ்ஞாபனம்,
மாணவர் வேலைநிறுத்தம் என்பது, வெளிநாட்டு நலன்களை பேசும் கியூபெக் அரசாங்கம்,
மற்றும் உயரடுக்கு எதிராக
"பொதுவில்
நல்லதை"
வலியுறுத்தும் ஒரு
“மக்கள்
போராட்டமாக”
வளர்ந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும்தான் வாதிடுகிறது.
“மாணவர்கள்
வேலைநிறுத்தம் என்று தொடங்கியது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது”
என்று
CLASSE
இன்
விஞ்ஞாபனம் அறிவிக்கிறது: பயிற்சிக் கட்டணப் பிரச்சினை.... எங்களை இன்னும் பரந்த
அரசியல் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதித்துள்ளது.”
ஆனால்
CLASSE
இன்
“பரந்த
அரசியல் பிரச்சினை”
முதலாளித்துவம் அல்ல; அச்சொல் அதன் எட்டு பக்க அறிக்கையில் ஓரிடத்தில்கூடக்
குறிக்கப்படவில்லை. அது
“பிரதிநிதித்துவ
ஜனநாயகம்”,
மற்றும்
“புதிய
தாராளவாதம்”
ஆகும்.
உயரடுக்கின் பாசாங்குத்தனத்தைப் விஞ்ஞாபனம் சுட்டிக்காட்டுகிறது;
அது
“அவசரகாலச்
சட்டங்கள்”,
“கலகத்தை
அடக்கும் தடிகள், மிளகுப் பொடி தூவுதல், கண்ணீர்ப்புகைக் குண்டு போடுதல்”
ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது—மக்களோ
தங்கள் அதிருப்தியை வெளியிடும்போது; அதற்கு அச்சுறுத்தல் என்று வரும்போது அது
“தான்
காப்பதாகக் கூறும் கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கிறது.”
உயரடுக்கின்
“பார்வைக்கு
எதிராக”,
தான் பிரதிநிதித்துவம் செய்வது என்று அழைக்கும் பார்வையை
CLASSE
வாதிடுகிறது,
அதாவது
“நேரடி
ஜனநாயகம்”
என்பதை அனார்க்கிச சொல்லாட்சியான இதை
CLASSE “ஜனநாயக
முடிவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து, ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும்
அனுபவம் பெறப்படுவதில் இருந்து, எங்கு ஆடவரும் பெண்டிரும் மதிக்கப்படுகின்றனரோ,
அந்த இடத்தில் இருந்து..... சேர்ந்து, ஒன்றாக உழைத்து பொது நலனுக்கு அர்ப்பணிக்கும்
ஒரு சமூகத்தை கட்டமைப்போம்.”
என்று அது கூறுகிறது.
இது ஒரு வெற்றுத்தன, பக்தி போன்ற விருப்பம்தான். ஏன் வெற்றுத்தனம்
என்றால் இது தற்கால சமூகம் பற்றிய விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வு எதையும், அடிப்படைத்
தேவை எதையும் நிராகரிப்பது என்பதை அடித்தளமாகக் கொண்டுள்ளது; அதேபோல் சமூகப்
போராட்டத்திற்கான முற்போக்கான வேலைத்திட்டத்தை, அதாவது சமுதாயம், விரோதப் போக்குடைய
சமூக வர்க்கங்களால் பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அங்கீகரிக்கவில்லை. அரசியல்
வடிவமைப்புக்கள் எப்படி இருந்தாலும், உண்மையான ஜனநாயகம் என்பது ஒரு மிகச் சிறிய
சிறுபான்மையினர் சொத்துக்கள் மீது ஏகபோக உரிமை கொண்டுள்ள ஒரு சமூகப் பொருளாதார
ஒழுங்கின் வரம்பிற்குள் அடைவது சாத்தியமற்றததாகும்.
முதலாளித்துவத்தை என்று இல்லாமல்,
“நவ
தாராளவாதத்தை”
CLASSE
கண்டிக்கையில் அது குட்டி முதலாளித்துவ சக்திகள் அனைத்தையும்தான் எதிரொலிக்கிறது;
அவை தோற்றுவிட்ட வேலைத்திட்டமான முதலாளித்துவத்தை சீர்திருத்துதல்,
“மனிதத்தன்மை
உடையதாக ஆக்குதல்”
என்பதைத்தான் உயிர்மூச்சாகக் கொண்டுள்ளன. அது, ஆளும் உயரடுக்கினால்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த செழுமையின் போது தொடரப்பட்ட நலன்புரி அரசுக்
கொள்கைகளை, முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து வெளிப்பட்டுள்ள
எழுச்சிக்கு முழு நனவுடனான எதிர்கொள்ளலாக அல்லாமல், பேராசை வேரூன்றிய ஒரு கெட்ட
கொள்கைத் தேர்வாக காட்ட முனைகின்றது--இந்த முரண்பாடுகள்தான் 20ம் நூற்றாண்டின்
முதல் பாதியில் இரண்டு உலகப் போர்கள், பெருமந்த நிலை, பாசிசம் ஆகியவற்றைத்
தோற்றுவித்தன.
CLASSE
இன்
விஞ்ஞாபனம்,
தொழிலாள வர்க்கம் என்னும் சொல்லையே கையாள்வதில்லை; அதன்
பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றிக் கிட்டத்தட்ட எதையும் கூறவில்லை. சமூக
சமத்துவமின்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையில் வளர்ச்சி, தொழிலாளர்கள்
போராட்டங்களை குற்றமாக்குதல், முதலாளிகளின் முடிவிலா உந்துதலான ஊதியங்ளைக் குறைத்து
உற்பத்தியை அதிகரிப்பது என்பவை குறித்து குறிப்பு ஏதும் இல்லை.
விவாதத்திற்குரிய பொருளாக
CLASSE
இன்
விஞ்ஞாபனத்தில் உள்ள மிகவும் ஈர்க்கும் அம்சம் அதன் குறுகிய பிராந்தியப் பற்றும்
வெட்கமற்ற அதன் கியூபெக் தேசியவாத கண்ணோட்டமுமாகும்.
தொழிற்சங்கங்கள் மற்றும்
Québec Solidaire
போல,
CLASSE
ஒரு
முதலாளித்துவ, கியூபெக் குடியரசை தோற்றுவிக்கும் வெளிப்படையான அழைப்பை
வெளியிடவில்லை; மாறாக அதன் ஆதரவு உட்குறிப்பாக உள்ளது—குறுகிய
பார்வையில் கியூபெக் மீது குவிப்புக்காட்டும் உட்குறிப்பு, அதன் தேசிய வாத
வனப்புரை,
PQ
வை எதிர்ப்பதில் அதன் தோல்வி என்னும் உட்குறிப்பு,
“முழுச்சமுதாயத்தையும்
சுதந்திரம் அடையச் செய்யும் பாதை என கல்விமுறைக்கு அழைப்பு விடாது”
ஆகியவைதான் உள்ளது; அதே போல் மாணவர் வேலைநிறுத்தத்தை கியூபெக்
மக்களின் ஜனநாயகப் போராட்டம் என்று அழைப்பு விடுவதும்தான் உள்ளது.
இவ் விஞ்ஞாபனம் தனியார்மயத்தையும்
Charest
அரசாங்கத்தின் திட்டமான கியூபெக்கின் தாதுப்பொருள் செல்வத்தை (le
Plan Nord)
சுரண்டும் திட்டத்தை 1970களில்
PQ
பயன்படுத்திய, ஒரு தசாப்தத்திற்கு முன் கியூபெக் லிபரல் கட்சி
“நம்
வீட்டிலேயே எஜமானர்கள்”
என்ற பெயரில் பயன்படுத்திய சொல்லாட்சியில் எதிர்க்கிறது; கியூபெக்
லிபரல் கட்சியோ கியூபெக்கின் நீர்வழி மின்சாரத் துறையைத் தேசியமயமாக்கியது.
மரபார்ந்த கியூபெக் தேசியவாத முறையில்
CLASSE, “பேராசை
பிடித்த நபர்கள்”,
“குடியேற்ற
முறையில்”
“எங்கோ
இருக்கும் பங்குதாரர்களின்”
“விருப்பத்திற்கு
ஏற்ப நடந்து கொண்டு”,
“நம்
நிலத்தடிச் செல்வத்தை விற்கின்றனர், பொதுநலன்களைத் தியாகம் செய்கின்றனர் என்று
சாடியுள்ளது.
கியூபெக்கில் உள்ள உழைக்கும் மக்களுக்கு, கியூபெக் உயரடுக்கு
தனக்கெனச் சொந்த தேசிய அரசை உருவாக்கிக் கொள்ளும் விருப்பத்திற்கு, எங்கு அது
எஜமானராக இருக்க முடியுமோ, அதற்கு ஆதரவு கொடுப்பதில் அக்கறை ஏதும் கிடையாது. மாறாக
தங்கள் வர்க்க நலன்களை உறுதிப்படுத்துவதற்கு கியூபெக் கனடா மற்றும் அமெரிக்கா,
உலகெங்கிலும் இருக்கும் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்த பலம் வேண்டும்.
கியூபெக்கில் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும்
இப்பிரச்சினைகள்—
வேலையின்மை மற்றும் சரியும் வாழ்க்கைத் தரங்கள், பொதுப் பணிகளைத்
தகர்த்தல், பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணங்களை அதிகரித்தல், ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதல்களை அதிகரித்தல், ஏகாதிபத்தியப் போர் என்னும் அச்சுறுத்தல் உலகம்
முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளாகும்; இவை
தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச தொழில்துறை, அரசியல் தாக்குதலை சோசலிசத்தை நிறுவ
தாக்குதலை அபிவிருத்தி செய்வதன் மூலம்தான் தோற்கடிக்க முடியும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்
தாக்குதலின் ஒரு பாகமாக தொழிற்சங்க அதிகாரத்துவம் வெற்றிகரமான கியூபெக் தொழிலாள
வர்க்கத்தின் சக்திவாய்ந்த இயக்கத்தைக் கொண்டுவந்தது.
PQ
பெருவணிகத்திற்கு ஆதரவாக திரட்டப்பட்டது; இதையொட்டி வட அமெரிக்கா
முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கு பேரழிவு விளைவுகள் ஏற்பட்டன.
இப்பொழுது முதலாளித்துவ அமைப்பின் முறையான நெருக்கடி நிலைமைகளின்
கீழ், எகிப்து, கிரேக்கம், ஸ்பெயினில் இருந்து விஸ்கான்சின் வரை, பெருகிய மக்கள்
அலைப் போராட்ட சூழலில்,
Quebec
தொழிற்சங்கங்கள்,
Québec Solidaire,
பிற
போலி இடது, மற்றும் இப்பொழுது
CLASSE
ஆகியவை
மீண்டும் கியூபெக் தொழிலாளர்கள் இளைஞர்கள் போராட்டங்களை தனிமைப்படுத்தி,
தேசியவாதத்தை வளர்க்கின்றன,
PQ
தலைமையிலான கியூபெக் சுதந்திர இயக்கத்தை வளர்க்கின்றன.
மாணவர்களும் தொழிலாளர்களும்
CLASSE
உடைய
தேசியவாத-எதிர்ப்பு முன்னோக்கை புறக்கணிக்க வேண்டும். அந்தப்பாதை, அரசாங்கம்,
PQ,
தொழிற்சங்கங்கள்,
FECQ, FEUQ
இவற்றின் இணைந்த எதிர்ப்பின் முன் வேலைநிறுத்தம்
தனிமைப்படுத்தப்பட்டு மாணவர் இயக்கத்தை கியூபெக்கின் சுதந்திர முதலாளித்துவ
இயக்கத்தின் ஒரு பிரிவாக மாற்றிவிடும்.
கல்விக்கான உரிமை, உழைக்கும் மக்களின் அனைத்து அடிப்படை சமூக உரிமை—ஒரு
வேலை, கௌரவமான ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு போன்றவை—தொழிலாள
வர்க்கத்தின் இயக்க வளர்ச்சியின் மூலம்தான் அடையப்பட முடியும்; அது ஒரு சர்வதேச
சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும், முதலாளித்துவ சமூக ஒழுங்கை
எதிர்க்க வேண்டும். அத்தகைய இயக்கத்தின் வளர்ச்சியில்தான் மாணவர்கள் ஒரு முக்கிய
பங்கைக் கொள்ள முடியும்; அது புரட்சிகரத் தலைமையை வளர்க்கவும் அதையொட்டி
அரசியலளவில் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து
முறித்துக் கொள்ளவும் உதவும்; தொழிலாள வர்க்கம் தன் வர்க்க நலன்களை ஒரு பரந்த
புரட்சிகர சோசலிசக் கட்சியின் வளர்ச்சியின் மூலம் வெளிப்படுத்த இயலும்.
|