World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Growing signs of global slump

உலகப் பொருளாராதார வீழ்ச்சிக்கான அதிகரித்துவரும் அடையாளங்கள்

By Nick Beams
6 August 2012
Back to screen version

யூரோப் பகுதியின் தொடர்ந்த நெருக்கடியின் தாக்கம் உலகப் பொருளாதாரம் ஊடாக வெளியேயும் பரவி, ஓர் ஒருங்கிணைந்த உலக வீழ்ச்சிக்கான அடையாளங்களைக் காட்டியுள்ளது.

கடந்த மாதம் வேலைகள் 163,000 உருவாக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு அமெரிக்காவில் ஓர் ஏற்றத்திற்கான அடையாளம் என வரவேற்கப்பட்டது. ஆனால் தொழிலாளர் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 150,000 குறைந்துள்ளபோதிலும் வேலையின்மை விகிதம் 8.2ல் இருந்து 8.3% என அதிகரித்துள்ளது. நீண்ட கால அளவில், பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தாலும், இந்த விரிவாக்க விகிதம் வேலையின்மை அளவுகளைக் குறைப்பதற்குப் போதுமானதாக இருக்காது.

அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய அண்மைய தகவல்களை வெளிப்படுத்திய, சர்வதேச நாணய நிதியம் (IMF) அது ஒரு மந்தமான வேகமான 2% இனால் தான் வளர்ச்சி அடையும் எனக் கூறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா இரண்டாம் உலகப் போருக்குப் பின் எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு மோசமான மீட்பைத்தான் கொண்டுள்ளது, சர்வதேச நாணய நிதியத்தின் கருத்துப்படி, இது எதிர்கால நோக்கு கடினமாகத்தான் உள்ளது.

அமெரிக்கா யூரோப்பியக் கடன் நெருக்கடி இன்னும் மோசமாகப் போயிருப்பதில் இருந்து விளைந்துள்ள எதிர்மறை அபாயங்களை சந்திக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இது ஏற்றுமதிகளுக்கான தேவைகளைக் குறைக்கும், நிதியச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கக் கடன் வரம்பை மட்டுப்படுத்துவதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பொருளாதாரம் இன்னமும் பாதிப்பை அடையும்.

சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்கக் குழுவின் தலைவர் Gian Maria Milesi-Feretti, அரசாங்கச் செலவுகளில் வெட்டுக்கள், வீடுகளின் கடன்களில் சரிவுடன் இணைந்து அமெரிக்க மீட்பை அண்மைய எதிர்காலத்தில் தொடர்ந்து தாமதப்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் உலகத் தேவைக்கு அமெரிக்க பங்களிப்பு நிதிய நெருக்கடிக்கு  முன்பு நாம் பார்த்ததை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

சீனப் பொருளாதாரத்தின் தொடர்ந்த விரிவாக்கம் 2008-09ல் உலகப் பொருளாதாரத்தை மந்தநிலையில் இருந்து உயர்த்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் எதிர்காலத்தில் அதனால் அதே பங்கை வகிக்க இயலாது.

சமீபத்திய தகவல்கள் சீனப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 7.6% வளர்ச்சியுற்றது என்பதைக் காட்டுகின்றன. இது மூன்று ஆண்டுகளில் மிகக் குறைவான வேகம் ஆகும். இந்த விகிதம் இன்னும் குறையக்கூடும் என்ற பல குறிப்புக்களுக்கு இடையே வந்துள்ளது. 2008 நிதிய நெருக்கடிக்குப் பின் சீனப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று அரசாங்கம் வழங்கிய $500 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள நிதிய உந்துதல் ஆகும். இத்துடன் வங்கிகள் வழங்கிய கூடுதலான கடன்களும் சேர்ந்திருந்தன. ஆனால் இக்கொள்கைகள் மீண்டும் செயல்படுத்தப்பட முடியும் எனக் கூறுவதற்கு இல்லை.

நிதிய நெருக்கடிக்கு முன்னதாக, சீனப் பொருளாதாரத்தின் முக்கிய சமச்சீரற்ற நிலை அதன் வணிக உபரியாகும். இன்று, தற்போதைய கணக்கில் உள்ள உபரி 2007ல் இருந்ததில் மூன்றில் ஒரு பங்குதான் உள்ளது. ஆனால் ஒரு புதிய சமச்சீரற்ற நிலை உருவாகியுள்ளது; பொருளாதாரம் முதலீட்டை மிக அதிகமாக நம்பியுள்ளது. இப்பொழுது அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50% என உள்ளதுபோது, நுகர்வுச் செலவுகள் 35%தான் உள்ளன.

சீனப் பொருளாதாரமும் ஆசியப் பொருளாதாரங்களும் அமெரிக்காவின் மெதுவான வளர்ச்சியினால் மட்டும் இல்லாமல் இன்னும் பரந்த முறையில் ஐரோப்பிய நெருக்கடியினாலும் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. ஆசியப் பிரச்சினைகள் பிராந்தியத்திற்கு வெளியே இருந்து முக்கியமாக வந்து அதைத் தாமதப்படுத்துகின்றன என்று ஹாங் கொங்கில் உள்ள Asia at Nomura  வின் தலைமைப் பொருளாதார வல்லுனர் றொப் சுப்பராமன் கூறியுள்ளார். பெரும்பாலான ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி சந்தை என்றவகையில் ஐரோப்பா அமெரிக்காவை விட பெரியது, மேலும் அது இப்பிராந்தியத்தில் மிகப் பெரிய முதலீட்டாளரும் கூட. என அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக உற்பத்தித் துறையில் இருக்கும் குறைந்த இலாபத்தில் செயல்படும் சீன நிறுவனங்கள்,  வளர்ச்சி மெதுவாக இருப்பதனால் பெரும் பாதிப்பில் உள்ளன. சீன எஃகு நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் தங்கள் இலாபங்களில் 96% சரிவைக் கண்டுள்ளன. இத்துறையை இது ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது போல் பேரழிவுப் பகுதியாக  ஆக்கிவிட்டது. China Iron and Steel Association உடைய தலைவர் ஜு ஜிமின் ஆண்டின் முதல் பாதியில் சொத்துக்கள் மற்றும் இரயில்வேக்கள், கார்கள், கப்பல்கள் ஆகியவற்றில் முதலீடுகள் பெருமளவு குறைந்துவிட்டதால் எஃகுவிற்கான தேவைச் சரிவு வந்துள்ளது. என்றார்.

இத்தகைய கீழ்நோக்குச் சரிவு உற்பத்தித் துறை முழுவதும் பரவியுள்ளதுடன், சீனப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய கூறுபாடாக உள்ள அரசாங்க நிறுவனங்களில் இலாபங்கள் ஆண்டின் முதல் பாதியில் 11.6% சரிந்துவிட்டது. 2008 ல் உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்தபின் இது மோசமான நிலையைக் காட்டுகிறது.

உத்தியோகபூர்வ ஆலைகளின் மேலாளர்களின் வாங்கும் குறியீடு (factory purchasing manages’ index PMI) ஜூன் மாதம் இருந்த 50.2 புள்ளிகளில் இருந்து ஜூலை மாதம் 50.1 புள்ளிகள் குறைந்துவிட்டது. எட்டு மாதக் காலத்தில் இது மிகக் குறைந்த அளவாகும். இந்தப் புள்ளிவிவரங்கள், 50 புள்ளிகளுக்கு மேற்பட்டது வளர்ச்சி எனப்பட்ட ஆலையில் உற்பத்தி சற்றே அதிகமாக விரிவடைந்திருந்தபோதிலும், புதிய தேவைகளுக்கான கேள்வியும் ஏற்றமதிகளும் சரிவைத்தான் கண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.

ஐரோப்பாவில் உற்பத்தித்துறையில் சரிவு மிக அதிகம் ஆகும். அங்கு Markit ஆலைகளின் மேலாளர்களின் வாங்கும் குறியீடு ஜூலை மாதம் 44 என்று ஜூன் 45.1ல் இருந்து குறைந்துவிட்டது. இது ஜூன் 2009ல் இருந்து மிகவும் குறைந்த அளவு ஆகும். இச்சரிவு கடனில் உள்ள நாடுகளோடு நின்றுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Markit  உடைய தலைமைப் பொருளாதார வல்லுனர் கிறிஸ் வில்லியாம்சன் ஜேர்மனி மற்றும் பிரான்ஸிற்கான சரிவு விகிதங்கள் மூன்று ஆண்டுகளில் மிக வேகமாக வந்துள்ளவை என்றார்.

பிரித்தானியா இப்பொழுது நான்கு ஆண்டுகளில் இரண்டாம் மந்தநிலையை அடைந்துள்ளது. பொருளாதாரம் ஜூன் முடிந்த காலாண்டில் 0.7% சுருங்கியது. இதற்கு முக்கிய காரணம் அரசாங்கச் செலவுக் குறைப்புக்களும், யூரோப்பகுதியில் உள்ள கொந்தளிப்பும்தான். பிரித்தானியாவின் Markit PMI வீழ்ச்சி ஜூலை மாதம் 45.4 ஆக இருந்தமை இன்னும் சரிவைத்தான் காட்டுகிறது.

சந்தைப் பொருளாதார வல்லுனர் றொப் டோப்சன் கூறிய கருத்தாவது: உள்நாட்டுச் சந்தை ஒரு புத்துயிர்ப்பின் உண்மையான அடையாளங்களைக் காட்டவில்லை; நிதானமான வேகத்திற்கு ஏற்றுமதிகள் சென்றடையும் என்ற நம்பிக்கைகள் நம் முக்கிய வணிகப் பங்காளி யூரோப்பகுதி இன்னமும் அதன் நீண்டகால அரசியல், கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பெரிதும் தாக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் தங்கள் செயற்பாட்டு அளவீடுகளை மார்ச் 2009ல் உலக நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்த அளவிற்குத் திரும்பக் கொண்டு சென்றுள்ளனர்.

உலக நிலைமை பொதுவாக இருக்கும் தன்மை JP Morgan Global Manufacturing PMI ஆல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை மாதம் 47.4 என்று ஜூன் மாதம் இருந்த 49.1 ஐவிடக் குறைந்துவிட்டது. இன்னும் வேலை இழப்புக்கள் வரும் என்று JP Morgan கூறியுள்ளது. சமீபத்திய செலவுக் குறைப்புக்கள் சற்று நிதானத்தைகை கொடுக்கின்றன, ஆனால் அடிப்படைத் தேவைகள் வரவு அதிகரிக்கவில்லை என்றால் நீண்டக்கால இலாபம் என்பது மிகவும் கடினமாகிவிடும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்.

பொருளாதார நடவடிக்கைளில் சரிவு என்பது 2008ல் நிதிய நெருக்கடி வெடித்தபின் தொடர்ந்த மந்தநிலையின் அளவுகளிலேயே நிற்கிறது என்பதே ஒரு கணிசமான பிரச்சினை ஆகும். ஆனால் பொருளாதார உந்துதல்களுக்காக டிரில்லியன் கணக்கான டாலர்கள் வங்கிகளுக்குக் கொடுத்தவை உட்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், ஒரு நீடித்த தீர்வைக் கொடுக்கவில்லை என்னும் உண்மை, நிலைமையை தீவிரமாகத்தான் காட்டுகிறது. எந்த நாட்டிலும் ஆளும் நிதிய மற்றும் உயரடுக்கினர் ஒரு பொருளாதார ஏற்றத்தைக் கொண்டுவரக்கூடிய கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவதில்தான் கவனத்தை காட்டுகின்றனர்.