World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP campaigns among rubber plantation workers

இலங்கை சோசலிச சமத்துவ கட்சி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம்

By our reporters
4 August 2012
Back to screen version

செப்டம்பர் 8 நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சாரக் குழு, இந்த வாரம் அம்பதெனிய ரப்பர் தோட்டத்திற்குச் சென்றிருந்தது. சோ.. தெற்கில் உள்ள சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில், சோ... அரசியல் குழு உறுப்பினர் ஆனந்த தவுலகல தலைமையில் 21 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

கேகாலை, நாட்டின் முக்கிய ரப்பர் தோட்ட மாவட்டங்களில் ஒன்றாகும். மாவட்டத்தின் 650,000 ஜனத்தொகையில் 20 சதவிகிதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் இங்கு சுமார் 30,000 தோட்ட தொழிலாளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

கேகாலை நகரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள,  58 ஹெக்டயர் கொண்ட அம்பதெனிய தோட்டத்தில் 350 குடும்பங்கள் வாழ்கின்றன. நாளொன்றுக்கு 415 ரூபாய் (3.20 அமெரிக்க டொலர்) மட்டும் பெறும் தோட்ட தொழிலாளர்கள் தீவில் உள்ள மிக குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர் தட்டினரைச் சேர்ந்தவர்களாவர்.

தேயிலை மற்றும் தென்னை தொழிலாளர்களோடு, ரப்பர் தொழிலாளர்களும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வுகள் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது. உழைக்கும் மக்கள் மீதான தாக்கத்தைக் குறைத்துக் காட்டும் உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் கூட,  9.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

சம்பளம் மிகக் குறைவாக இருப்பதனால், அம்பதெனிய தோட்டத்தின் பல பெண் தொழிலாளர்கள் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிய மத்திய கிழக்குக்கு செல்கின்றனர். ஆனால் மோசமடைந்துவரும் உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலைவாய்ப்பும் சுருங்கி வருகின்றது. பெருந்தோட்டத்தில் வேலை தேடிக்கொள்ள முடியாததால், பல இளைஞர்கள் அவ்வப்போது வேறு நாள் கூலி வேலைகளை நாட வேண்டியிருக்கிறது. சில பெண்கள் குறைந்த சம்பளத்துக்குச் சுரண்டும் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை தேடிக்கொள்கின்றனர்.

பிரச்சார குழுவினர் சந்தித்த அநேகமானவர்கள், தமக்கு இராஜபக்ஷ அரசாங்கத்திலோ அல்லது உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகள் மீதோ நம்பிக்கை இல்லை எனக் கூறினர். அவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக கோபத்தை வெளிப்படுத்தியதுடன் தாம் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் இருக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

சோ...யின் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை விளக்க நீண்ட கலந்துரையாடல் தேவைப்பட்டது. முழு அரசியல் ஸ்தாபனம் சம்பந்தமாகவும் பரந்த அதிருப்தி காணப்படுகின்றது. பிரச்சாரகர்கள், சோ... முதலாளித்துவ ஒழுங்கை சீர்திருத்துவதற்காக அன்றி, பொருளாதாரத்தை பொது உரிமையின் கீழ் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் மறு ஒழுங்கு செய்வதன் அடிப்படையில், முதலாளித்துவ சமுதாயத்தை ஒரு சோசலிச சமுதாயத்தால் மாற்றீடு செய்ய போராடுகின்றது என சுட்டிக்காட்டிய போது, அவர்கள் ஒரு சாதகமான பிரதிபலிப்பை காட்டினர்.

ஒரு பெண் தொழிலாளி தனது சூழ்நிலையை விளக்கினார்: இதற்கு முன், நான் இந்த தோட்டத்தில் பணியாற்றினேன். இங்கு கிடைக்கும் ஊதியத்தில் வாழ முடியாத நிலையில், நான் மத்திய கிழக்குக்கு சென்றேன். நான் வீட்டுப் பணிப்பெண்ணாக 14 ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். நான் எமது வாழ்க்கையில் சில முன்னேற்றங்களை எதிர்பார்த்தேன். ஆனால் என் வீட்டை மட்டுமே புதுப்பிக்க முடிந்தது. சில வீட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு சமாளித்துக்கொள்ள முடிந்தது. நான் வெளிநாட்டில் இருந்த போது, என் கணவர் மது பழக்கத்தின் காரணமாக மரணமடைந்தார். இப்போது சேமிப்பில் எதுவும் இல்லை.

வேலைவாய்ப்பு தேடி மத்திய கிழக்கு பயணம் செய்யும் பெண் தொழிலாளர்களை முகவர்களும் வேலை கொடுப்பவர்களும் எவ்வாறு சுரண்டுகின்றனர் என்பதை அவர் விவரித்தார். தொழில் முகவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளம் கிடைக்காமையால் பல முறை அவர் வேலையை விட்டு வேறு வேலை தேட வேண்டிய கட்டாயத்திற்கு முகங்கொடுத்தார். சவுதி அரேபியாவில் எனக்கு ஓய்வோ நல்ல உணவோ அல்லது தேவையான மருந்துகளோ கிடைக்கவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.

அவரது இளைய மகள் சாதாரண தர பரீட்சை எழுதி தற்போதுதான் பாடசாலை கல்வியை முடித்தார். நாளை அவள் ஒரு ஆடை தொழிற்சாலையில் நேர்முகப் பரீட்சைக்கு செல்ல வேண்டும். அடிப்படை சம்பளம் மாதம் 11,000 ரூபா மற்றும் எல்லாமாக அவளுக்கு 15,000 ரூபாய் கிடைக்கும். இந்த தொழிற்சாலைகளில் வேலை மிகவும் கடினமாக இருக்கும். எமது பிள்ளைகளின் வாழ்க்கை எமது வாழ்கையை விட மோசமாக இருக்கின்றது. ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் நமது வாழ்வை மேம்படுத்திவிட்டதாக கூறிக்கொள்கின்றனர். மாறாக, எந்த வளர்ச்சியும் இன்றி எங்கள் வாழ்க்கை சீரழிந்து வருகின்றது.

அந்த பெண்ணின் மருமகனும் உரையாடலில் சேர்ந்து, சுகாதார முறைமையின் பயங்கரமான நிலைமைகளை சுட்டிக் காட்டினார். நிதி வெட்டுக்கள் காரணமாக, அருகில் உள்ள அரசு வைத்தியசாலையில் தேவையான மருந்து மற்றும் வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போது என் மகன் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இந்த மருந்தகத்தில் சரியான மருந்துகள் மற்றும் தகுதியான மருத்துவர்கள் இல்லாததால் அவருக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற 1,200 ரூபாய் செலவிட வேண்டியிருந்தது.

வாழ்க்கை மிகவும் சிரமமாகி வருகின்றது ஏன அவரது மருமகன் கூறினார். பால் மா ஒரு பக்கெட் வாங்க 300 ரூபாவுக்கும் மேல் செலவாகும். அரிசி ஒரு கிலோ 60 ரூபா. இந்த மாதிரியான வாழ்க்கை செலவில் எப்படி நம் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியும்? நாடு அபிவிருத்தியடைவதாக அரசாங்கம் கூறுகிறது, ஆனால் நான் அப்படி உணரவில்லை.

பல தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சர்வதேச ரீதியில் போட்டியை எதிர்கொள்ள வறிய மட்ட சம்பளத்தையும் வெட்டித் தள்ளி, முதுகெலும்பை உடைக்கும் வேலைச் சுமைகளை தொடர்ந்தும் அதிகரிக்கக் கோரும் தோட்டக் கம்பனிகளின் சார்பிலும் அரசாங்கத்தின் சார்பிலும் இந்த தொழிற்சங்க அமைப்புக்கள் தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்பட்டு வருகின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), லங்கா ஜாதிக தோட்ட தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் போராட்டங்களை எதிர்த்தன அல்லது விற்றுவிட்டன.

ஒரு இளம் மேற்பார்வையாளர், தொழிற்சங்கங்கள் தோட்ட தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த போராட்டத்தை காட்டிக்கொடுத்தது எப்படி என விவரித்தார். 550 ரூபா நாள் சம்பளம் கோரி, கடந்த ஆண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, நாம் அதை ஆதரித்தோம். அது மிகவும் நியாயமான கோரிக்கையாக இருந்தது. ஆனால் தொழிற்சங்கங்கள், முக்கியமாக .தொ.கா., கம்பனிகள் சர்வதேச சந்தையில் லாபத்தை இழந்து வருவதால் அந்தளவு சம்பளம் அதிகரிக்க முடியாது என்று தொழிலாளர்களிடம் கூறின. இது ஒரு முழு பொய். அவை பில்லியன் கணக்கில் இலாபமடைகின்றன. இந்த துரோகங்களுக்கு பிரதியுபகாரமாக, தொழிற்சங்க தலைவர்கள் நிறுவனங்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் சலுகைகளை பெறுகின்றனர். இப்போது தொழிலாளர்கள் ஆத்திரமடைந்த மனநிலையில் இருக்கிறார்கள்.

கடந்த இரு தசாப்தங்களாக தொழிலாளர்களை தளமாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் செல்வாக்கிழந்துவிட்டதாக அந்த இளம் மேற்பார்வையாளர் கூறினார். முன்பு இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் ஒரு பங்காளியாக இருக்கும் .தொ.கா.வில் கிட்டத்தட்ட அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும்  .தொ.கா. தொழிலாளர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களுக்குப் பொறுப்பாளியாகும் என பல தொழிலாளர்கள் இப்போது சிந்திக்கின்றனர்.

தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் தொழில் செய்யும் நல்லு அருகர், வயது 36,  2009 இல் முடிவுக்கு வந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தின் போது, தொழிலாளர்கள் சந்தித்த சிக்கல்களை விளக்கினார். போர் நடந்து கொண்டிருந்த போது, நாம் பொலிஸ் அல்லது இராணுவத்தால் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக, தோட்டத்தை விட்டு வெளியேறப் பயமாக இருந்தது. ஒருவருக்கு அடையாள அட்டை இல்லாவிட்டால், அது அவர் கடுமையான தொல்லைக்கு உள்ளாவதை சாத்தியமாக்கியது, என்று அவர் கூறினார். இந்த நிலையில், அவர் கொழும்பில் வேலை செய்வது பெரும் சிக்கலாக இருந்தது. இப்போது யுத்தம் முடிந்துவிட்டது, நாம் அந்த பயம் இல்லாமல் நகருக்கு போக முடியும். ஆனால், நாம் மற்றொரு போரை எதிர்கொள்ள வேண்டும். அது வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவாகும். நான் இந்த எதிரியை தோற்கடிக்க ஒரு வழி தெரியாமல் இருக்கிறேன்.

தொடர்ந்து நடந்த அந்த கலந்துரையாடலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட, உலகம் முழுவதும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்களின் மூலவேர், உலக ரீதியில் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியே என சோ.ச.க. குழுவினர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் எரியும் தேவைகளை இட்டு நிரப்ப தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி பிரச்சாரகர்கள் வாதிட்டனர். மேலும் விளக்கம் பெற, கேகாலை நகரில் ஆகஸ்ட் 5 அன்று நடைபெறுகிற சோ.ச.க.யின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அவர் கூறினார்.

பிரச்சாரத்தின் போது, சோ.ச.க. மே மாதம் கூட்டிய  தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டின் அனுபவங்கள் மற்றும் முக்கியத்துவத்தை குழுவினர் மீளாய்வு செய்தனர். காங்கிரஸில் தோட்ட தொழிலாளர்கள் ஒரு எதிர் தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய தேவையையும் அது வழிநடத்தப்பட வேண்டிய அரசியல் முன்னோக்கையும் பற்றி கலந்துரையாடப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கிளர்ச்சியை மேற்கொள்வதும், மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான இயக்கத்தை அமைப்பதற்கான அடித்தளமாக நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதும் முதற் படியாகும்.