WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
மற்றும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு மாணவர்களுக்கு அழுத்தம்
கொடுக்கின்றன
By
Keith Jones
4 August 2012
use
this version to print | Send
feedback
கியூபெக்
தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாம் நாளன்று,
Parti Quebecois
இன்
(PQ)
தலைவர் பௌலின் மாரோய்ஸ் மாநிலத்தின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களை
லிபரல் அரசாங்கத்தின் திட்டமான மிகப் பெரியளவில் பல்கலைக்கழக பயிற்சி கட்டணத்தை
உயர்த்துவதற்கு எதிரான தங்கள் ஆறுமாத கால பகிஸ்கரிப்பை முடித்துக் கொள்ளுமாறு
வலியுறுத்தினார்.
பகிஸ்கரிப்பினை ஒரு குற்றம் என ஆக்கியுள்ள லிபரல் அரசாங்கத்தின் கடுமையான சட்டம்
78ன் கீழ்
CEGEP
க்கள்
(முன்பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள்) நிறுத்தப்பட்டிருந்த 2012
குளிர்கால பாடக்காலத்தை ஆகஸ்ட் 17ல் இருந்து மீண்டும் தொடர வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்களும், லிபரல் அரசாங்கத்தின் பகிஸ்கரிப்பை
நசுக்குவதற்காக முன்னோடியில்லாத வகையில் பொலிஸ் அணிதிரட்டு, சட்டம் 78 இல் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ள அபராதம் கொடுக்கும் குற்றவியல் தடைகள் ஆகியவற்றை மீறி,
வகுப்புக்களைப் புறக்கணிப்பது என்று உறுதியாக உள்ளனர்.
பெருவணிக
PQ
ஒன்பது ஆண்டுக் கால ஜோன் சாரெஸ்ட்டின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள்
விரோதப்போக்கைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையில் மாணவர்களுக்கு ஆதரவு தருவது
போல் காட்டிக் கொள்ளுகிறது. ஆனால் லிபரல்களைப் போல் அதுவும் பகிஸ்கரிப்பில்
ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நேரடி மோதலின் அரசியல் பாதிப்புக்
குறித்து அச்சம் அடைந்துள்ளது.
“சமூகச்
சமாதானம்”
என்னும் பெயரில்,
PQ
விற்கு மிக நெருக்கமான அமைப்புக்களான தொழிற்சங்கங்களும் பல மாதமாக மாணவர்களைத்
தனிமைப்படுத்தி அவர்களை மீண்டும் வகுப்பிற்கு செல்லவைக்க முற்படுகிறது.
மாணவர்கள்
பகிஸ்கரிக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்தபோது மாரோய்ஸிற்கு அருகில் பதவிக்காலம்
ஜூன் தொடக்கத்தில் முடிவு அடைந்துவிட்ட
Leo Bureau-Blouin,
FECQ (கியூபெக்
கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர்) இருந்தார்.
Bureau-Blouin
சமீபத்தில்
PQ
வினால் மொன்ட்ரியால் புறநகர்த் தொகுதியான
Laval-des-Rapides
இல் அதன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார்.
மாரோய்ஸ்
மற்றும்
Bureau-Blouin
இருவருமே பகிஸ்கரிப்பு
“ஒரு
தேர்தல் சமாதான உடன்படிக்கைக்காக”
முடித்துக்
கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி, லிபரல் பிரதம மந்திரி
ஜோன் சாரெஸ்ட் வேண்டுமென்ற மாணவர்களுடன் மோதலைத் தூண்டுகின்றார்
என்றும் இது அவருடைய அரசாங்கத்தின் ஊழல், திறமையற்ற நிர்வாகம் இவற்றில் இருந்து
மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்குச் செய்யப்படுகிறது என்று கூறி
நியாயப்படுத்துகின்றனர்.
“நாம்
ஒரு அமைதியான சமூகச் சூழலை அடைய வேண்டும்”
என்று
Bureau-Blouin
அறிவித்தார்.
“எனவேதான்
நான் உடன்பாடு பற்றிய கருத்திற்கு ஆதரவு கொடுக்கிறேன். லிபரல்கள் கைகளில்
சிக்கிவிடாமல் நாம் அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கொள்ள வேண்டும்.”
அதிகாரத்திற்கு வந்து முதல் 100 நாட்களுக்குள் அது சட்டம் 78 ஐ இரத்து
செய்துவிடும், லிபரல் அரசாங்கத்தின் கட்டணப் பயிற்சியை அடுத்த ஏழு ஆண்டுகளில் 82%
உயர்த்துவது என்பதைப் பின்வாங்கும் என்றும், ஒரு பல்கலைக்கழகங்கள், பயிற்சிக்
கட்டணங்கள், மாணவர்களுக்கு உதவி, கடன் அளித்தல், அவர்களின் வீட்டுவசதிகள் ஆகியவை
குறித்து
“தேசிய”
உச்சமாநாட்டுக்
கூட்டம் ஒன்றை நடத்தும் என்றும்
PQ
உறுதியளித்துள்ளது.
அத்தகைய
உச்சிமாநாட்டில்
PQ
பணவீக்கத்திற்கு ஏற்ப பயிற்சிக் கட்டண உயர்வு என்பதற்காக வாதிடும் என்றும் மரோய்ஸ்
கூறினார். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் பெருவணிகம், அரசாங்கத்தின்
பிரதிநிதிகள் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் அத்தகைய கூட்டம் கட்டணப்
பயிற்சி குறித்து அது விரும்பும் திட்டத்தை முன்வைக்கும் என்றும் கூறினார்.
தன்னை ஒரு
“இடது”
என்று
PQ
கூறிக்கொள்ளுகிறது. ஆனால் பல தசாப்தங்கள் தொழிலாளர் விரோத சிக்கன நடவடிக்கைகள்
மற்றும் மிருகத்தனமான வேலைநிறுத்த முறிப்புச் சட்டங்களை இயற்றிய நீண்டகால
வரலாற்றைக் கொண்டுள்ளது. பயிற்சிக் கட்ண உயர்வு, புதிய தனிநபர் சுகாதார வரி உட்பட
சில வலதுசாரி லிபரல் நடவடிக்கைகளைக் குறைகூறினாலும், அது அரசாங்கத்தை செலவுகளைக்
குறைக்காததற்கும் இன்னும் வரிகளை விரைவாக விதிக்காதற்கும் குறைகூறியுள்ளது.
சமீபத்திய
வாரங்களில் மாரோய்ஸ்
Lucien Bouchard,
Bernard Landry
ஆகியோரின் PQ
அரசாங்கம் மாநிலத்தின் ஆண்டுப் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறையை அகற்றுவது அதன் முதல் முன்னுரிமை எனக் கூறியபோதும்கூட, அது
பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்று பெருமை
பேசிக்கொள்கின்றார்.
ஆனால்
மாணவர்கள் அதிக கட்டணங்களைக் கொடுப்பதில் இருந்து
“விலக்கு
பெற்றனர்”
என்றால், அது பிற முக்கிய
சமூகத் தேவைகளின் இழப்பில்தான் நடைபெற்றது. 1996ல் இருந்து 1998 வரை,
PQ
கியூபெக்கின் வரலாற்றிலேயே மிக அதிக சமூகநலச் செலவுக் குறைப்புக்களைத்தான்
செயல்படுத்தியது.
முக்கூட்டு
“தேசிய”
உச்சிமாநாடுகளை
அமைப்பதில் PQ
நீண்ட வரலாற்றைக்
கொண்டுள்ளது. இது பெருவணிகத்தின் செயற்பட்டியலை தொழிற்சங்கங்களுடைய ஒத்துழைப்புடன்
அடையும் நோக்கத்தில் நடைபெறுகிறது.
PQ
உடைய
“பூஜ்யப்
பற்றாக்குறை”
உந்துதல் என்பது அத்தகைய உச்சிமாநாட்டில்தான் துல்லியமாக,
அரசியல்ரீதியாக தயாரிக்கப்பட்டது.
சட்டம் 78
க்கு
PQ
வின் எதிர்ப்பு கல்வியை அது பாதுகாக்கிறது என்னும் கூற்று எந்த அளவிற்கு உண்மையோ,
அந்த அளவிற்குத்தான் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டம் 78 ஐ அகற்றவிடுவேன்
என்று அது உறுதியளித்தாலும், அதுவரை சட்டம் 78 உடைய ஜனநாயக விரோதப் பிரிவுகள்
கீழ்ப்படியப்படவேஏண்டும் என்று தாராளவாதிகளுடன் இணைந்து அது கோருகிறது.
PQ
வின்
“சமாதான
உடன்பாட்டு அழைப்பு”
என்பது ஆளும்வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் மாணவர்கள்
வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கும், அது எழுப்பியுள்ள பரந்த சமூக எதிர்ப்புக்களை
நசுக்குவதற்கும் ஒன்படுத்தும் முயற்சிதான்.
பெருநிறுவன
செய்தி ஊடகங்களின் பெரும்பகுதியால் தூண்டப்படும் லிபரல்கள் மாணவர்களை
“வன்முறையில்”
ஈடுபடுபவர் என்று
கண்டித்து, பகிஸ்கரிப்பை முறிக்க நீதிமன்றங்களையும் பொலிசையும் பயன்படுத்தத் தயாராக
உள்ளனர். PQ
வும்,
எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் அவர்களுடைய
“நண்பர்கள்”,
உற்றவர்கள் எனக் காட்டிக் கொண்டு மாணவர்களை வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு
அழுத்தம்தான் கொடுக்கின்றனர்.
பகிஸ்கரிப்பிற்கு தலைமை தாங்கி வழிநடத்தும்
CLASSE
உடைய ஒரு பரந்த எதிர்ப்பு
இயக்கமாக தொழிலாளர்களின் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கையைக் கொண்ட ஒரு
“சமூக
வேலைநிறுத்தம் தேவை”
என்னும் அழைப்பைத்
தொழிற்சங்கங்கள் தீவிரமாக எதிர்த்துள்ளன. தொழிற்சங்கங்கள் பலமுறையும் சட்டம்
78க்குக் கீழ்ப்படிவதாக உறுதிமொழி கொடுத்துள்ளனர். அதில் உள்ள பிரிவுகள்
தொழிற்சங்கங்கள் முடிந்த அளவிற்கு
CEGEP
மற்றும்
பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவ
வேண்டும் என்று கூறியுள்ளபோதிலும்.
மே மாதக்
கடைசியில், நூறாயிரக்கணக்கான மாணவர்கள் தெருக்களுக்கு வந்து சட்டம் 78 ஐ எதிர்த்து,
போராட்டம் பரந்த தொழிலாளர் வர்க்கத் தலைமை இயக்கமாக மாறலாம் என்ற அச்சுறுத்தலைக்
கொடுத்தபோது கியூபெக்கின் மிகப் பெரிய தொழிற்சங்க அமைப்பான
Quebec
Federation of Labour
உடைய தலைவர்
கனடிய தொழிற்சங்க காங்கிரஸிற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு எந்த
ஆதரவும் கொடுக்கப்படக்கூடாது என்று கூறினார்.
இதன்பின்,
QFL (Quebec Federation
of Labour) தன்
சுவடுகளை மறைக்க முற்பட்டு
QFL
தலைவர் மைக்கேல் ஆர்செனால்ட்டின் கடிதம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று
கூறியது. ஆனால் இந்த
“தெளிவாக்கும்”
விவகாரம் கடந்த
மாதக் கடைசியில்தான் வந்தது.
QFL
சட்டம் 78 ஐ
மீறுதல், ஒத்துழையாமை இயக்க நடவடிக்கைகள் அனைத்தையும் தான் எதிர்ப்பதாக
வலியுறுத்தியது.
அரசாங்கம்
வேலைநிறுத்தத்தை முறிப்பதற்குத் தீவிரமாக சட்டம் 78க்குக் கீழ்ப்படிதல் மூலமாக
உதவத் தயாராக இருந்தாலும், தொழிற்சங்கங்கள் மாணவர்களையும் பரந்த எதிர்ப்பையும்
சாரெஸ்ட்டின் லிபரல்களுக்குப் பதிலாக
PQ
பதவிக்குக்
கொண்டுவரப்பட வேண்டும் என்னும் பிரச்சாரத்தின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர். இதுவோ
கியூபெக் உயரடுக்கின் அரசாங்கம் அமைக்கும் மாற்றீட்டுக் கட்சி ஆகும்.
FECQ
மற்றும் அதன் சகோதர
அமைப்பான FEUQ
(the Quebec University Students Federation)
இரண்டும்
PQ
மற்றும்
தொழிற்சங்கங்களுடன் உடன் முழுமையாக இணைந்து, போராட்டத்தை முடிக்க பாடுபடுகின்றன.
இரண்டுமே சட்டம் 78 மீறப்படுவதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து,
CLASSE
பொலிஸ் அனுமதி தராமல்
நடத்தும் ஆர்ப்பாட்டங்களை புறக்கணித்தும் உள்ளன. மேலும் பல வாரங்களாக அவை மாணவர்கள்
தேர்தல் வாக்குப் பதிவில் லிபரல்களைத் தோற்கடிப்பதில் மாணவர்கள் தங்கள்
முயற்சிகளைக் குவிப்புக் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இது அநேகமாக
PQ
விற்கு ஒரு வெளிப்படையான இசைவு என்னும் பொருளைத்தான் தரும்.
FEUQ
இன் தலைவர்
Martine Desjardins
வியாழன் அன்று
தன்னுடைய அமைப்பு
PQ
விடுத்துள்ள “சமாதான
உடன்படிக்கை குறித்து”
“நடுநிலை”
வகிப்பதாகக்
கூறினார். ஆனால் பகிஸ்கரிப்பு தொடர்ந்தால் அது
“லிபரல்களுக்குத்தான்
ஆயுதங்களைக்”
கொடுக்கும் என அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார்.
PQ
மாணவர்கள் வேலைநிறுத்தத்தை
முடித்துக் கொள்ள வேண்டும் என்று விடுத்துள்ள அழைப்பை
CLASSE
உறுதியாக நிராகரித்துள்ளது.
“எங்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் எங்கள் அணிதிரள்வை முடிக்க மாட்டோம்”
என்று
CLASSE
செய்தித் தொடர்பாளர் ஒருவர்
வியாழன் அன்று கூறினார். ஆனால் மாணவர் இயக்கம் ஆளும் உயரடுக்கின் சிக்கன
நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பு என்னும் பரந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்க
தொழிற்சங்கங்கள் காட்டும் கடுமையான எதிர்ப்பையும் ஏற்றுள்ளது. ஒரு சமூக
வேலைநிறுத்தத்திற்கான அழைப்பையும் அது முற்றிலும் கைவிட்டுவிட்டது. அதே நேரத்தில்
தொழிற்சங்கங்கள் குறித்துக் கணிசமான குறைபாடுகளையும் கூறுவதில்லை. உண்மையில்
CLASSE
பிரதிநிதிகளும்
QFL
தலைவர் ஆர்செனால்ட்டிற்கும்
இடையே பேச்சுக்களுக்குப்பின்,
CLASSE
செய்தித் தொடர்பாளர் தாங்கள்
QFL
தலைமை உடைய நல்லெண்ணத்தைப் பற்றி நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
FECQ,
FEUQ
ஆகியவை கொண்டுள்ள தேர்தல் சார்பு குறித்துக் குறைகூறினாலும்,
CLASSE
அவற்றுடன் சேர்ந்து
லிபரல்கள் தேர்தல்களில் தோல்வி அடைவது மாணவர்களுக்கு ஒரு வெற்றி என்றுதான்
கூறுகிறது; இதையொட்டி பெருவணிக
PQ
பற்றிய
நப்பாசைகளை வளர்க்கிறது.
அரசாங்க
வன்முறை மூலம் மாணவர் போராட்டம் நசுக்கப்படவில்லை என்றால், அல்லது அதை ஆளும்
வர்க்கத்தின் கட்சிகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வைக்கவில்லை என்றாலும், இரண்டுமே
இணைந்து நடக்கலாம் என்ற நிலையில், மாணவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கியூபெக்
மற்றும் கனடா முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின்பால் தான் உறுதியாக ஆதரவைத்
தேட வேண்டும். முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அமைப்புகளுக்கு எதிராக, நடைமுறையில்
இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தொடரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக
இப்போராட்டம் தொழிலாள வர்க்கம் எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு ஒரு ஊக்கியாக இருக்க
வேண்டும். அதேபோல் சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள
வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை வளர்க்கவும் முன்னிற்க வேண்டும். |