சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Hollande backs the destruction of auto jobs in the name of French competitiveness

பிரெஞ்சுப் போட்டித்தன்மை என்ற பெயரில் கார்த்துறை வேலைகளை அழிப்பதற்கு ஹாலண்ட் ஆதரவு கொடுக்கறார்

By Anthony Torres
1 August 2012

use this version to print | Send feedback

ஜூரை 25ம் திகதி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அறிவித்த பிரெஞ்சுக் கார்த்தொழில்துறைக்கான ஆதரவுத் திட்டம், உத்தியோகபூர்வமாக நாட்டின் புதிய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத தொழிற்துறைக் கொள்கையை உறுதிப்படுத்துகிறது.

பாதுகாப்புவாத நடவடிக்கைகள் பெரும்பாலும் கொண்டிருக்கிறது புதிய திட்டம், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் சேமிப்பு € 1.5 பில்லியன் உருவாக்க முயற்சிக்கிறது.

பாதுகாப்புவாத நடவடிக்கைகளை பெருமளவில் கொண்டுள்ள புதிய திட்டம் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் 1.5 பில்லியன் யூரோக்கள் சேமிப்புக்களை தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மின்சார, கலப்பின வாகனங்களுக்கு சுற்றுச்சூழல் போனஸையும் இத்திட்டம் அதிகரிக்கிறது; இதன் நோக்கம் மின்சாரக் கார்களை (Renault Fluence, Zoé மாதிரிகள், 2013ல் வெளிவர இருப்பவை) அல்லது கலப்பின மாதிரிகள் (Peugeot 3008)  போன்றவற்றைப் பிரெஞ்சு நிறுவனங்கள் தயாரிப்பதற்கு ஆதரவு கொடுத்தல் ஆகும். ஹாலண்ட் அரசாங்கம் பிரெஞ்சுக் கார் உற்பத்தித் துறையில் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் பாதுகாப்புவாதத்தை பயன்படுத்துகிறது.

மேலும், கார்த்தயாரிப்பு நிறுவனமான Peugeot-Citroen PSA இன் தற்போதைய தொழிலாளர்கள் மீதான தாக்குதலை தான் எதிர்க்கப் போவதில்லை என்றும் ஹாலண்ட் சுட்டிக் காட்டியுள்ளார். PSA, 2012 முதலாம் காலாண்டில் ஏற்பட்ட 819 மில்லியன் இழப்புக்களைக் காட்டி 8,000 வேலைகளை அகற்றுதல் மற்றும் அதன் Aulnay-sous-Bois ஆலையை மூடுதல் ஆகியவற்றை நியாயப்படுத்தியுள்ளது.

Peugot உடைய தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரன் இந்த ஆண்டு 600 மில்லியன் யூரோக்கள் சேமிப்புக்களில் அடையப்படலாம், இதைத்தவிர வளர்ச்சிச் செலவுகளில் 550 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்படலாம், மற்றும் 350 மில்லியன் யூரோக்கள் என்ற அளவிற்கு உற்பத்திச் செலவுகளை சமச்சீர் செய்யலாம் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது மாதம் ஒன்றிற்கு 200 மில்லியன் நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் PSA இவற்றை ஒட்டி இழப்புக்களை 2013ல் பாதியாக்கலாம், 2014ல் நஷ்டம் இல்லாமல் செய்துவிடலாம் என்று நம்புகிறது.

சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம், அதி இடது அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் PSA இன் நடவடிக்கைகளை குறைகூறியுள்ளன; அதில் முக்கிய ஆலைகள் மூடப்பட்டிருப்பதும் அடங்கும். ஆனால், கார்த்தொழில் குறித்த அரசாங்கத் திட்டம் வெளியிடப்பட்டபோது, ஹாலண்ட் PSA திட்டம்பற்றி மௌனம்தான் சாதித்திருந்தார். இது அரசாங்கத்தின் இழிந்த தன்மையை நிரூபிக்கிறது; அது வாரனுடைய ஆரம்ப அறிக்கைகள், PSA தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை ஏற்கத்தக்கது அல்ல என்று அறிவித்திருந்தது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் Najat Vallaud-Belkacem கருத்துப்படி ஜூலை 25 காபினெட் கூட்டத்தில் ஹாலண்ட் கார்த்துறை உதவித் திட்டத்தை வரவேற்று, அதை ஒரு உலகளாவிய, ஒத்திசைவான திட்டம் என்றும் நீண்டக்காலத் திட்டம்’ ” என்றும் பாராட்டினார். 8,000 வேலைகள் தகர்க்கப்படுதல், மற்றும் ஒல்நே ஆலை மூடப்படல் என்று புதிய திட்டத்தில் வந்துள்ளவை இப்பொழுது ஒத்திசைவானவை என்று ஹாலண்டால் கருதப்படுகின்றன.

பணிநீக்கத் திட்டங்கள் உடனடியாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை என்ற நிலையில் இருக்கும்போது, பிரதம மந்திரி Jean-Marc Ayrault, வெறுமனே “PSA  க்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இயன்றளவு சிறந்த முறையில் முன்னேற்றம் காண்பதற்கு  பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முக்கிய பாதுகாவலர்களுள் ஒன்றாக இருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் வர்க்கத் தன்மையைத்தான் தொழிலாளர்களை தாக்குதலில் முன்னணியில் இருக்கும் PSA திட்டத்தை அரசாங்கமும் ஹாலண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது பிரதிபலிக்கிறது. ஹாலண்ட் அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை குறைக்க முயல்கிறது; இதையொட்டி பிரெஞ்சு வணிகம், உலகப் போட்டி நிறுவனங்களுடன் போட்டியிட முடியும்.

புதிய திட்டத்தை எதிர்த்து பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடன் ஆர்ப்பரித்தனர்; ஆனால் பணிநீக்கங்களை நிறுத்தவோ, ஒல்நே ஆலை மூடப்படுதலைத் தடுக்கவோ அவை ஏதும் செய்யவில்லை. தொழிற்சங்க அதிகாரிகள் செப்டம்பர் மாதம் அணிதிரள்வுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவர்களின் முக்கிய கவலை தொழிலாளர்களின் எதிர்ப்பு இயக்கத்தை தடுத்தலாகும். தொழிலாளர்களை வீணான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல், திகைப்படையச் செய்தல் என்பது பணிநீக்கங்கள், ஆலை மூடல்களை சுமத்துவதற்கு ஒரு வழிவகையாகும்; இதில் தேசியவாத பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அனைத்தும் அடிப்படையில் உடன்பட்டுள்ளன.

அரசியல் வலது PSA திட்டத்தை எதிர்த்துள்ளது; இது போட்டித்திறன் மற்றும் தொழிலாளர் செலவுகள் குறித்து போதுமானதைச் செய்யவில்லை என்று கூறுகிறது. இத்திட்டம் உண்மையான பிரச்சினையை கையாளவில்லை என்றால் அது ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும்; அதாவது தொழிலாளர் பிரிவுச் செலவுகளைக் குறைக்கவில்லை என்றால். என முன்னாள் வரவு-செலவுத் திட்ட மந்திரியும் Yvelines உடைய பிரதிநிதியுமான UMP  கட்சியின் Valerie Pecresse, RTL வானொலிக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் எச்சரித்துள்ளார்.

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கில் நடக்கும் விவாதத்தின் தன்மையை இக்கருத்துக்கள் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது. செப்டம்பர்மாதம்தான் அதன் கணக்கீடுகள் வெளிவரும்; அப்பொழுது மாபெரும் EADS NV  உடைய (ஏயர்பஸ் நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனம்) முன்னாள் தலைமை நிர்வாகி Louis Gallois பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை முன்னேற்றுவிக்க ஏற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அவர் அறிக்கையை வெளியிட உள்ளார். சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், அதன்பின் தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடைய சங்கங்கள் ஆகியவற்றிற்கு இடையே விவாதிக்கப்படும்.

பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள Aix-en-Provence இல் சமீபத்திய பொருளாதாரக் கருத்தரங்கம் ஒன்றில் Gallois வணிக ஏடான Les Echos  இடம் விளக்கினார்: போட்டித்தன்மையில் ஒரு தேசியச் சரிவு என்னும் நிகழ்வு குறித்து ஒரு பரந்த ஒருமித்த உணர்வு உள்ளது; இது தவிர்க்க முடியாததுபோல் தோன்றுகிறது; இச்சரிவின் விளைவுகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகத்தில் காண்கிறோம்அதாவது பணிநீக்கத் திட்டங்கள் மற்றும் நம் சர்வதேச வணிகப் பற்றாக்குறை மிகப் பெரிய அளவிற்கு இருப்பதை. நாம் போட்டித்தன்மையை அதிர்ச்சி கொடுத்து கொண்டுவரவிருக்கிறோம்; அப்பொழுது அது வெளிப்பட்டு நிற்கும் துறையைப் பாதிக்கும்

அவர் மேலும் கூறினார்: வெளிப்பட்டு நிற்கும் துறையைப் பாதிப்பதற்கு, அதிர்ச்சி மிகவும் பாரிய அளவில் இருக்க வேண்டும், அதில் சமூக பங்களிப்பு மற்றும் ஒப்பீட்டளவில் உயர்ந்த ஊதியங்களையும் உள்ளடக்கியது. இதில் 30 முதல் 50 பில்லியன் நிதி மாற்றப்பட வேண்டும்; அப்பொழுதுதான் கணிசமான விளைவு இருக்கும்.” Aix-en-Provence  கூட்டத்தில் வணிக நிர்வாகிகள் பிரெஞ்சு தொழிற்துறை சட்டங்கள் மிகுந்த கட்டுப்பாடானவை, ஊதிய செலவுகள் மற்றும் சமூக கட்டணங்கள் மிக அதிகமானவை, பெருநிறுவன வரிகள் மிக அதிகம் என்றும் புகார் கூறுகின்றனர்.

Gallois  உடைய வரவிருக்கும் திட்டத்தைத் தளமாகக் கொண்டு அரசாங்கமும் Peugeot  உம் ஆலை மூடல்கள், PSA இல் பணிநீக்கங்கள் ஆகியவற்றை நியாயப்படுத்த முற்படுவதுடன், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் மீதான தாக்குதல்களை கார்த் தொழிலாளர்களுக்கும் பிற தொழில்களுக்கும் தீவிரப்படுத்தும். பிரெஞ்சு முதலாளித்துவம் போட்டித்திறன் உடையதாக விரும்புகிறது: வேறுவிதமாகக் கூறினால், உலகின் ஒவ்வொரு மற்ற ஆளும் உயரடுக்கை போலவே, இது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் நடக்க வேண்டும் என விழைகிறது.

ஜூலை 25ம் திகதி, தொழிற்சாலைகள் மீட்பு மந்திரி Arnaud Montebourg தென் கொரியக் கார் உற்பத்தியாளர்களின் நியாயமற்ற போட்டிச் செயல்களை கண்டித்தார். பிந்தையவர்கள் ஐரோப்பாவில் தங்கள் சந்தைப் பங்கை அதிகரித்துள்ளனர்; இது அக்டோபர் 2010ல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கொண்டுள்ள சுதந்திர வணிக உடன்பாடு கையெழுத்திட்டபின் நடந்துள்ளது.

செய்தி ஊடகத்திடம் Montebourg கூறினார்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கொரியாவிற்கும் இடையே உள்ள தடையற்ற வணிக உடன்பாடு, கடந்த ஆண்டு கபடமற்ற முறையில் இயற்றப்பட்டது; இன்று நாம் தென் கொரியாவின் சந்தைப் பங்கு சிறு திறன் டீசல் வாகனங்களில் 1000 சதவிகிதம் அதிகரித்துள்ளதைக் காண்கிறோம்.

இப்படி மக்களைத் திருப்தி செய்வதற்காகக் கூறப்படும் அறிக்கை பிரெஞ்சுத் தொழிலாளர்கள் அவர்களுடைய தென் கொரிய, ஆசிய வர்க்க சகோதர, சகோதரிகளுக்கு எதிராக பிரிக்கும் முயற்சியாகும். "போட்டித்திறன்" மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதுகாத்தல் என்னும் பிற்போக்குத்தனத்தின் பெயரால், பிரெஞ்சு தொழிலாளர்கள் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களால் தமது சமூக தேட்டங்களையெல்லாம் தியாகம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்படுவர்.