WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
சிரியாவிற்கு எதிரான போர்த்தயாரிப்புக்களில் ஜேர்மனி பங்கு பெறுகிறது
By
Christoph Dreier
31 July 2012
use
this version to print | Send
feedback
திரைமறைவில்,
ஜேர்மனிய அரசாங்கம் நீண்டகாலமாக சிரிய உள்நாட்டுப் போரிலும் மற்றும் இராணுவத்
தலையீட்டுத் தயாரிப்புக்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
FSA
எனப்படும் மேற்கு நாடுகளின்
ஆதரவுடைய சுதந்திர சிரிய இராணுவம் மற்றும்
SNC
எனப்படும்
சிரியத் தேசியக் குழு ஆகிவற்றிற்கு பேர்லின் முக்கிய மையமாகவும் உள்ளது.
இவ்வமைப்புகள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்துவதற்கான திட்டங்களில்
இரகசியமாக ஈடுபடுகின்றன.
அசாத்திற்கு
எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ஆதரவை கொடுக்கும்
“சிரிய
மக்களின் நண்பர்கள் குழு”
எனப்படும் அமைப்பில் உள்ள 70 நாடுகள், பேர்லினில் ஒரு செயலகத்தை
நிறுவி கடந்த மாதம் அங்கு கூடின.
இதுவரை,
இந்நடவடிக்கைகளில் பலவும் இரகசியமாக நடைபெற்றுள்ளன. வெளிப்படையாக பேர்லின்
ஒரு
சமாதானப்படுத்தும் நடுவர் என்று காட்டிக் கொள்வதுடன், ஐக்கிய
நாடுகள் பாதுகாப்பு சபையில் சிரியா பற்றிய தீர்மானத்திற்கு ரஷ்யாவினதும்,
சீனாவினதும் ஆதரவைப் பெற முற்படுகிறது. எவ்வாறாயினும், அந்த நிலைநோக்கும் இப்பொழுது
முடிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
கடந்த வாரத்
தொடக்கத்தில் ஜேர்மனிய
வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே
Süddeutsche
Zeitung
பத்திரிகையிடம் சிரியக் கொள்கையில்
“ஒரு
திருப்பு முனை”
அடையப்பட்டுவிட்டது
என்று கூறினார். ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் ஆதரவுடன் ஒன்றும் இவ்விடயம் பற்றி
ஜேர்மனி அணுகவில்லை, மாறாக
“சிரிய
நண்பர்கள் குழுவுடன்”
சேர்ந்து ரஷ்யா
மற்றும் சீனாவின் விருப்பங்களையும் மீறி”
செயல்பட உள்ளது.
பேர்லினின்
ஐரோப்பிய கூட்டாளிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட வெளியுறவு அமைச்சரக அறிக்கை ஒன்று
அசாத் ஆட்சி சிரியாவின் மீது இனி முழுக்கட்டுப்பாட்டையும் மீட்க முடியாது என்று
கூறுகிறது. ரஷ்யாவும் சீனாவும் இராணுவ தலையீட்டை நிராகரிப்பதால் ஐ.நா.
பாதுகாப்புக்குழுவின் ஆசியுடன் கூடிய இராணுவத் தலையீட்டை மேற்கு நாடுகள்
செய்யமுடியாத்தால், ஆட்சியின் முடிவின் பின்னர் மறுகட்டமைப்பிற்கு மற்ற ஏற்பாடுகள்
கண்டறியப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
இது
“விரும்புவோர்
கூட்டணி”
உடைய
இராணுவத் தலையீட்டிற்கான தலைமறைவான அழைப்பு ஆகும்.
சிரியாவில்
மோதல்கள் தொடங்கியதில் இருந்தே, ஜேர்மனிய இராணுவம் சிரிய
“எழுச்சியாளர்களுக்கு”
ஆயுதம் வழங்கியதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது. இவற்றில் பல
கடல் வழியே லெபனோனின் துறைமுகமான திரிப்போலிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சிரிய
எல்லைக்கு அனுப்பப்பட்டன.
ஜேர்மனிய
கடற்படை இப்பிராந்தியத்தில் 2006ல் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது; அது
UNIFIL பணியின்
சார்பில் அவ்வாறு உள்ளது. உத்தியோகபூர்வமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படும்
ஆயுதங்களை நிறுத்துதல் அதன் வேலையாகும். ஆனால்
“எழுச்சியாளர்களுக்கு”
அனுப்பப்பட்ட ஆயுதங்களில் ஒன்றுகூட தடுத்து நிறுத்தப்படவில்லை. ஜூனை
28ம் திகதி, சிரிய நிலைமையை அது மேற்கோளிட்டு மத்திய பாராளுமன்றம் ஜேர்மனியின்
பணிக்கு விரிவாக்கம் கொடுத்தது.
மேலும்
பேர்லின் ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்து
அவற்றை முறையாகச் சுமத்த வேண்டும் என்றும் வலுவாகக் கூறிவருகிறது.
மே மாதக்
கடைசியில் இருந்து, ஜேர்மனி
“சிரிய
மக்களின் நண்பர்கள் குழுவின்”
ஒரு பகுதியாக உள்ளது. இதில் சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஆதரவு
கொடுத்து, அசாத்தை வீழ்த்த விழையும் நாடுகள் உள்ளன.
சிரிய
எழுச்சியாளர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கும் இக்குழுவின் ஒருங்கிணைக்கும் அலுவலகம்
பேர்லினில் உள்ளது. மறுகட்டமைப்பிற்கான நிதியுதவி அமைப்பின்
(Kreditanstalt fur Wiederaufbau-KfW),
ஆப்கானிய
அலுவலகங்களின் முன்னாள் தலைவர் குன்னர் வெல்ஸ்கோல்ஷ் இதை வழிநடத்துகிறார்.
வெளியுறவு அமைச்சரகம் இதற்கு 600,000 யூரோக்கள் நிதியளித்துள்ளது.
சிரியத்
தேசியக் குழுவின் ஒத்துழைப்புடன் இக்குழு அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியா
மறுகட்டமைப்பிற்கு உட்படுத்தப்படுவதைச் செயல்படுத்தும். இதன் பொருள் அரசாங்க
நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படுதலும், தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தை
வளர்ப்பதும் ஆகும்.
Die Zeit
என்னும் வாராந்திர ஏடு,
இந்த ஆண்டு ஜனவரி முதல் வெளியுறவு அமைச்சரகம்
“Day After”
எனப்படும் ஒரு இரகசியத் திட்டத்தையும் கொண்டிருக்கிறது. இது அறிவியல், அரசியல்
அறக்கட்டளை (Stiftung
Wissenschaft und Politk
-SWP-)
என்பதை சமாதானத்திற்கான அமெரிக்க அமைப்பின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகிறது.
சிரிய
எதிர்ப்பாளர்களில் 50 பிரதிநிதிகள் வரை அசாத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் உள்ள
திட்டமிடும் நிறுவனங்களுக்கு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுள் முன்னாள்
தளபதிகள் மற்றும் சுதந்திர சிரிய இராணுவத்தின் பிரதிநிதிகள், முஸ்லிம்
சகோதரத்துவத்தின் உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற தேசியவாதிகள் ஆகியோர்
அடங்குவர்.
SWP
1962ல் நிறுவப்பட்டது. கூட்டாட்சி நிதிகள் கிட்டத்தட்ட 10 மில்லியன் யூரோக்களை
ஒவ்வொரு ஆண்டும் பெறுகிறது. இத்தகைய அமைப்பில் ஐரோப்பாவில் மிகப் பெரியது என்னும்
முறையில், இது கூட்டாட்சி அரசாங்கத்திற்கு வெளியுறவுக் கொள்கைகள், பாதுகாப்புக்
கொள்கைப் பிரச்சினைகள் ஆகியவற்றில் ஆலோசனைகளைக் கூறுகிறது.
“Day After” உடன்
சேர்ந்து அது சிரியாவைப் பொருத்தவரை முக்கிய வெளியறவுக் கொள்கையை நிர்ணயிக்கும்
அமைப்பபாக உள்ளது.
SWP
இன் தலைவர் வொல்க்கர்
பெர்த்தெஸ் இன் கருத்துப்படி,
“எவராலும்
கவனிக்கப்படாமல், அழுத்தம் ஏதும் இன்றி உரையாடும் சமூகத்தைத் தோற்றுவிக்கும்
வாய்ப்பை”
இது கொண்டுள்ளது. ஆகஸ்ட்
மாதம் சிரிய அரசியலமைப்பு, இராணுவம், பாதுகாப்புத் துறைகள் மற்றும் பொருளாதாரத்தில்
“தேவையான”
சீர்திருத்தங்களை கோடிட்டுக் காட்டப்படும் ஒரு ஆவணம்
முன்வைக்கப்படவுள்ளது.
பல
மாதங்களாக
SWP
சிரியாவில் மேலை இராணுவத்
தலையீட்டிற்காக பல பகுப்பாய்வுகளை வெளியிட்டு ஜேர்மனி பங்கு பெற வேண்டும் என்று
கோரிவந்துள்ளது. ஜூன் 3ம் திகதிக் கட்டுரை ஒன்றில்,
“Day After”
தலைவர் மூரியல் அஸ்ஸபேர்க்ஸ் சிரியாவில் சமரசத்திற்கான காலம் முடிந்துவிட்டது என்று
எழுதினார்.
“சிரியாவில்
வன்முறை என்பது பேச்சுவார்த்தைகளின் மூலம் நிறுத்தப்பட முடியாது. ஒரு பக்கம் வெற்றி
அல்லது முழுத் தோல்வியை அடைந்த நிலையில்தான் முடியும்”
என்று அவர் எழுதினார்: இது கூட்டாட்சி அரசாங்கத்தின் புதிய
நிலைப்பாட்டைச் சுருக்கமாகக் கூறுகிறது.
மே மாதம்
அறக்கட்டளையின் பாதுகாப்புக் கொள்கைப் பிரிவின் ஆராய்ச்சிக்குழுத் தலைவர்
மார்க்கூஸ் கைம் சிரியாவிற்கு எதிரான ஒரு நேட்டோ நடவடிக்கை எடுக்கப்படலாம் என
அறிவித்த ஒரு கட்டுரையை வெளியிட்டார். இராணுவத் தாக்குதல் எப்படி நடத்தலாம் என்பது
குறிந்த ஐந்து வழிவகைகளையும் அதில் குறிப்பிட்டிருந்தார். அவருடைய முதல் திட்டமான
எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுத்துப் பயிற்சியளித்தல், மற்றும் அசாத் ஆட்சியைச்
சேதத்திற்கு உட்படுத்துதல் என்பதே ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனி ஒரு
இராணுவத் தலையீட்டில் வெறும் அடையாளப் பங்கைக் கொள்வது போதாது என்று கைம்
கூறுகிறார். யூரோ நெருக்கடியில் ஜேர்மனியின் பங்கு
“ஐரோப்பாவிற்குத்
தலைமை தாங்கும் அதன் விருப்பம் குறித்த வினாவை மீண்டும் எழுப்பியுள்ளது, அதன்
திறன்களைப் பற்றியும் வினா எழுந்துள்ளது; இது பரவலாகவே உள்ளது.”
“அசாத் ஆட்சி
எதிர்த்தரப்பிற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்டனம் இப்பொழுது செய்ய
வேண்டும், இறுதியில் அதை ஏற்பது என்பது ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்கு இழிவைத்
தரும்.”
என்றும் எழுதியுள்ளார்.
சிரிய
ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு பேர்லினின் ஆதரவு மற்றும் அசாத்திற்குப் பிந்தைய
காலத்திற்கான அதன் தயாரிப்புக்கள் ஆகியவை இக்கருத்திற்கு அரசாங்கத்தில் நல்ல ஆதரவு
கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. ஜேர்மனி ஆயுத வலிமையுடன் சிரியா மீது
பொருளாதார, மூலோபாயத் தடைகளைச் சுமத்தத் தயாராக உள்ளது.
இது
ஜேர்மனியின் மத்திய கிழக்குக் கொள்கையில் கணிசமான திருப்புமுனையைக் குறிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க
ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளுடன் வலுவான பொருளாதாரப் பிணைப்புக்களை நிறுவியது;
அதைத்தவிர பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனும் பிணைப்புக்களைக் கொண்டுள்ளது.
2009ல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, அமெரிக்காவிற்கு அடுத்து மத்திய கிழக்குப்
பகுதிதான் இரண்டாம் பெரிய ஜேர்மனியப் பொருள்களை இறக்குமதி செய்யும் பகுதியாக
இருந்தது.
இந்த
நலன்கள் பெருகிய முறையில் இப்பிராந்தியத்தில் தலையீடுகள், போர்கள் என்று
இராணுவத்தின் மூலம் அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளால் தடைக்கு உட்படுகின்றன.
ஈராக் போர் மற்றும் லிபியா மீதான தாக்குதல் ஆகியவற்றை பேர்லின் எதிர்த்தது.
ஜேர்மனிய நிறுவனங்கள் இன்னமும் ஈரானுக்கு எதிரான தடைகளைச் செயல்படுத்த மறுக்கின்றன;
இதற்குப் பேர்லின் ஆதரவு உள்ளது; ஏனெனில் அவற்றின் ஈரானியத் தொடர்புகள் பெரும்
இலாபங்களைக் கொடுப்பவை.
ஆனால் இந்த
நிலைமை அதன் வரம்புகளை அடைந்துவிட்டது. அமெரிக்காவை இராணுவரீதியாக பேர்லினால்
மோதமுடியாது. இவ்வகையில் லிபியா ஒரு முக்கிய அனுபவம் ஆகும்.
கடந்த ஆண்டு
பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவை லிபிய கர்னல் முயம்மர்
அல்-கடாபிக்கு எதிரான ஆட்சி மாற்றத்தைக் கட்டாயமாகக் கொண்டுவரப் போரிட்டபோது,
ஜேர்மனியும்,
BRIC
என
அழைக்கப்படும் நாடுகளும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் வாக்களிக்கில்லை,
இராணுவரீதியாகப் பங்கும் கொள்ளவில்லை. லிபியாவில் பேர்லினின் பொருளாதார நலன்களைத்
தவிர, அரசாங்கம் ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஜேர்மனியுடைய பொருளாதார, மூலோபாய
ஒத்துழைப்பையும் கருத்திற் கொண்டு இருந்தது.
ஜேர்மனியத்
தொழில்துறை கடாபியுடன் இலாபகரமான வணிகத்தைக் கொண்டிருந்தது; எழுச்சியாளர்கள்
வெற்றிக்குப்பின், கைப்பாவை அரசாங்கம் நிறுவப்பட்டபின், லிபியாவில் ஜேர்மனிய
நலன்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2011ல் முந்தைய ஆண்டைவிட, லிபியாவிற்கு
ஜேர்மனிய ஏற்றுமதிகள் 67% சரிந்தன, லிபியாவில் இருந்து ஜேர்மனிய இறக்குமதிகள் 36%
குறைந்துவிட்டன.
ஜேர்மனிய
ஏகாதிபத்திய முன்னோக்கின்படி, இத்தகைய காட்சி மீண்டும் நேரக்கூடாது. எனவே ஜேர்மனி
போர்த்தயாரிப்புக்களில் தீவிரமாகப் பங்கு பெற்று வருகிறது. அதற்கு இங்கு மூலோபாயப்
பொருளாதார நலன்கள் உள்ளன. 2009ல் ஜேர்மனிதான் சிரியாவிற்கு மிகப் பெரிய
வாடிக்கையாளராக எண்ணெய்த் துறையில் இருந்தது; மேலும் சிரியாதான் ஜேர்மனிக்கு
எட்டாவது இடத்தில் இருக்கும் எண்ணெய் வழங்கும் நாடாகும்.
ஜேர்மனிய
ஏற்றுமதிச் சந்தைகளில் இரு முக்கியமானவை மற்றும் மூலப்பொருட்களுக்கும் ஆதாரமான
சீனா, ரஷ்யா இரண்டையும் பற்றி அக்கறை கொண்டிருக்கையில், ஜேர்மனி சிரிய
எதிர்த்தரப்பிற்கான அதன் ஆதரவுதரும் முயற்சியை ஓரளவு இரகசியமாகத்தான் வைத்துள்ளது;
உத்தியோகப்பூர்வமாக ஐ.நா. உத்தரவின் கீழ்த்தான் இராணுவத் தலையீட்டை ஏற்க இயலும்
என்று அறிவித்துள்ளது.
இந்த
இரகசியத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு: ஜேர்மனிய மக்கள் போருக்குத் தீவிர
எதிர்ப்பைக் காட்டுவதுதான் அது. சமீபத்தியக் கருத்துக் கணிப்பின்படி
ஜேர்மனியர்களில் 12 சதவிகிதத்தினர்தான் சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவைக்
கொடுக்கின்றனர்; 13% தினர் எதிர்த்தரப்பிற்கு இராணுவ நிதிய உதவிக்கு ஆதரவைக்
கொடுக்கின்றனர். பரந்த பெரும்பான்மையிலான மக்கள் இரு நிலைப்பாடும் கூடாது என
நிராகரிக்கின்றனர்.
தன்னுடைய
ஆக்கிரோயமான வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு, ஜேர்மனிய ஏகாதிபத்தியம்
சிரியாவிற்கு எதிராகவும், ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இரு
முனைகளில் போராட வேண்டும். |