WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
மின் கட்டமைப்புச் சரிவு 650 மில்லியன் மக்களை மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டது
By
Kranti Kumara
1 August 2012
use
this version to print | Send
feedback
செவ்வாயன்று
பெரும்பாலான இந்தியத் தொடர் மின்சாரக் கட்டமைப்பு சரிந்து, இந்திய மக்களில்
பாதிப்பேருக்கும் மேலான கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களை மின்சாரம் இன்றியும், பல
இடங்களில் நீர் இல்லாமலும் பல மணி நேரத்தைக் கழிக்கச் செய்துவிட்டது.
இந்த
இருட்டடிப்பு இதுகாறும் உலக வரலாற்றிலேயே மிகப் பெரியதாகும். உலகின் மக்கள்
தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினருக்கு மின்விசை துண்டிக்கப்பட்ட நிலை
ஏற்பட்டது. இது அமெரிக்காவின் மொத்த மக்கட்தொகையைப் போல் இரு மடங்காகும். 21 வட, வட
கிழக்கு இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இதில் பஞ்சாப்,
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் தேசியத்
தலைநகரான டெல்லி ஆகியவை அடங்கும்.
போக்குவரத்து முடக்கப்பட்டது, மருத்துவமனைகள் பழையகால காப்பு மின்னூக்கிகளை -back-up
generator-
பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டன இந்தியாவின் மின்விசை வலைப்பின்னலின்
துண்டிப்பு இறுதியில் பல இறப்புக்களை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க
முடியாததாகிவிட்டது.
மூன்று
மாநிலங்களுக்கு இடையே உள்ள மின்சாரத் தொடர்க் கட்டமைப்புச் சரிவுடன் தொடர்பு கொண்ட
செவ்வாயன்று நிகழ்ந்த மின்விசை இருட்டடிப்பு வடக்குப் பகுதியில் உள்ள கட்டமைப்பு
அதன் தன்மையில் தோல்வியைச் சந்தித்த 24 மணிநேரத்திற்குள் வந்துள்ளது. அதுவோ 350
மில்லியன் மக்களுக்கு மின்சார வசதி இல்லாமல் செய்துவிட்டது. சில இடங்களில் 15 மணி
நேரம் நீடித்த திங்கள் நடந்த இருட்டடிப்பு முழு வட இந்திய மின்கட்டமைப்புப்
பகுதியையும் பாதித்தது. அதுதான் இந்தியாவின் மிக அதிக மக்கள் வசிக்கும் இடங்களான
டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்றவற்றை அடக்கியுள்ளது.
21
மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும், கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவை, செவ்வாய்
நடந்த மிகப் பெரிய இருட்டடிப்பினால் பாதிக்கப்பட்டன.
செவ்வாயன்று
ஏற்பட்ட மின் சரிவு கிட்டத்தட்ட 300 இரயில் வாகனங்களையும் பாதித்தது. இது பயணிகளை
எந்த ஊரிலும் நிற்காமல், அதுவும் கடும் கோடை வெய்யிலில், நிறுத்திவிட்டது.
டெல்லியில் நிலத்தடி இரயில் முறை பல மணி நேரத்திற்கு முடங்கிப் போயிற்று.
தெருக்களில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் எரியாத நிலையில், வட இந்திய
நகரங்களில் பல மணி நேரம் பெரும் போக்குவரத்த்தில் பெரும் குழப்பங்கள் நிலவின.
மேற்கு
வங்காளத்தில்
Eastern Coalfields Ltd.
என்னும் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைபார்க்கும் நூற்றுக்கணக்கான
சுரங்கத் தொழிலாளர்கள், நிலத்தடியில் ஸ்தம்பித்து நின்றனர். அண்டை மாநிலமான
ஜார்க்கண்டில் மற்றும் ஒரு 65 சுரங்கத் தொழிலாளர்கள் இன்னமும் மீட்கப்பட வேண்டும்.
இந்தியா
மின்விசையை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அதன் மின்விசைக் கட்டமைப்பு ஆகியவை 1.1
பில்லியன் மக்கள் இருக்கும் நாட்டிற்கு முற்றிலும் போதாதவை என்பதை இது
அம்பலப்படுத்தியுள்ளது. அதிகாரிகள் மொத்த விசை உற்பத்தி, அனைத்து எரிபொருள்
ஆதாரங்களில் இருந்தும் கிடைப்பது, கிட்டத்தட்ட 200,000 மெகாவாட்டுக்கள்
என்றுகூறுகின்றனர். ஆனால் இதில் பெரும்பகுதி பரமாரிப்பை ஒட்டி எல்லா நேரமும்
கிடைப்பதில்லை. அதேபோல் மின்கட்டமைப்புத் தொடரின் மின்சாரத்தை எடுத்துச் செல்லும்
திறன் குறைவு, ஆங்காங்கே நடக்கும் மின்சரிவு ஆகியவற்றாலும் முழுத்திறனும்
கிடைப்பதில்லை.
இன்றும்கூட,
இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் குறைந்தப்பட்சம் 300 மில்லியன்
மக்கள் இந்தியாவில் மின்விசை பாவனை இல்லாமல் உள்ளனர். நூற்றுக்கணக்கான மில்லியன்
மக்கள் அவ்வப்பொழுதுதான் மின்விசையைப் பெறுகின்றனர்.
2009ல்
1,1119,673
MW
மின்
உற்பத்தி இருந்த நிலையில், அந்நாட்டு மக்கள்தொகை இந்தியாவில் இருப்பதில் கால்
பங்குதான் என இருந்தாலும்கூட அமெரிக்கா இந்தியாவை விட 6 மடங்கு அதிக மின்
உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.
உலக
வங்கியின் கருத்துப்படி, இந்தியாவில் 2009 ஆண்டு தலா நபர் நுகர்வு மின்விசையைப்
பொறுத்தவரை 571Kwh
தான். இது கனடாவில்
15,471 Kwh,
அமெரிக்காவில்
12,914 Kwh
என்பதுடன் ஒப்பிடத்தக்கது. சீனாவில் தலா நபர் நுகர்வு 2,631
Kwh
ஆகும். இது
இந்தியாவைப் போல் நான்கு மடங்கு ஆகும்.
இந்த வார
இருட்டடிப்பைத் தூண்டிய நிகழ்வுகள் எவையாயினும், அவை இந்தியாவின் மின் தேவைக்கும்
விநியோகத்திற்கும் இடையே உள்ள நீண்டக்கால இடைவெளியைத்தான்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒரு மதிப்பீட்டின்படி மார்ச் மாத மின்சாரத் தேவை
10.2% இனால் பாரியளவு அதிகரித்தது.
இப்பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அடிக்கடி மின்வெட்டுக்கள், இருட்டடிப்புக்கள்
ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. தவிர வசதியுடையவர்கள் காப்பு மின்னாக்கியை நிறுவி
தம்மை சமாளித்துக் கொள்கின்றனர்.
நெருக்கடியை
மேலும் அதிகரிக்கும் தன்மையில் இந்தியாவின் மின்விசைக் கட்டமைப்பு ஒரு ஒட்டுப்போட்ட
தன்மையில் -patchwork
character-
உள்ளது. ஒரு ஒருங்கிணைந்த இணையமாக இது வடிவமைக்கப்படவில்லை. மாறாக மாநிலக்
கட்டமைப்புக்களை ஒரு மைய செலுத்தும் இணையமாகத் தற்காலிகத் தொகுப்பு போல்
செய்யப்பட்டுள்ளது. பல மின்கட்டமைப்புக்களும் மாநில மின்சாரக் குழுக்களின்
கட்டுப்பாட்டில் இருப்பதால், விரிவான ஒருங்கிணைப்பு நிறைந்த கட்டுப்பாடு இயலாமல்
உள்ளது.
திங்கள்
மற்றும் செவ்வாய் நடந்த இருட்டடிப்புக்கள் குறித்து அதிகாரிகள் சில மாநிலங்களை,
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியான என- குற்றம் சாட்டியுள்ளதை தவிர
விளக்கம் ஏதும் தரவில்லை. அம்மாநிலங்கள் மின் கட்டமைப்பில் இருந்து அவற்றின் பங்கை
விட அதிகம் பயன்படுத்தப்படுத்தின எனக் கூறப்படுகிறது.
இத்தகைய
விளக்கங்கள் அதிகாரிகளின் இயலாமையைத்தான் எல்லாவற்றிற்கும் மேலாகப்
புலப்படுத்துகின்றன. மாநிலக்குழுக்கள் அதிக மின்விசையை எடுத்துக் கொண்டன என்பது
உண்மை என்றாலும், அது ஒன்றும் தொடர் விளைவு கொடுத்த சரிவை ஏற்படுத்தியிருக்கக்
கூடாது. ஏனெனில் இதில் மூன்று பிராந்திய கட்டமைப்புக்கள் முற்றிலும் சரிந்துபோகும்
அளவிற்கு மோசமடைந்துவிட்டன.
பொதுவாக
மின்சாரக் கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் விரிவாக வடிவமைக்கப்பட்ட தொடர் முறைகள்,
சுற்றுமுறிப்பான்களால் பாதுகாக்கப்பட வேண்டும். அவை இணையக் கம்பிகள் மற்றும்
மின்மாற்றிகள் கூடுதல் சுமையைக் கொண்டால் அல்லது முழுமுறையிலும் அடிக்கடி சரிவு
ஏற்பட்டால், சற்றே குறைந்து மின்வெட்டின் பரப்பைக் குறைக்கும் அளவிற்குத்
திட்டமிட்டிருக்கப்பட வேண்டும்.
Hindu
பத்திரிக்கையின் தகவல் ஒன்றின்படி, பாதுகாப்பு முறை போதுமானதாக இல்லாமல்
இருந்திருக்கலாம். ஏனெனில் பல மாநிலங்களும் குறைந்த வீச்சு தடைகளை நிறுவவில்லை. அவை
மின் வெட்டுக்களை தனிமைப்படுத்தியிருக்கும்.
ஏன்
பாதுகாப்பு முறை அதிகச் சுமைப் பகுதிகளை தொடரில் இருந்து தனிமைப்படுத்துவதில்
தோல்வியுற்றது என்பதை இது ஓரளவு விளக்குகிறது. இதனால் இருட்டடிப்பு மிகப் பரந்த
பகுதியில் பரவிவிட்டது. மேலும் இந்திய உள்கட்டுமானத்தின் பொதுவான நிலையில், எத்தகைய
காப்பு முறைகள் இருந்தாலும் போதிய நிதிவசதி வழங்காததால் அவை தக்க முறையில்
பராமரிக்கப்படுவதில்லை.
திங்கள்
மற்றும் செவ்வாய்கிழமை இருட்டடிப்புக்கள் இந்திய முதலாளித்துவ முறையில்
பெருங்குழப்ப, ஒட்டுண்ணித் தன்மையின் அடையாளம் ஆகும். இந்திய பிரித்தானியாவில்
இருந்து
“சுதந்திரம்”
அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், மக்களில் பெரும்பாலனவர்கள்
பட்டினியிலும் வறிய நிலையிலும் வாழ்கின்றனர். சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி,
குடிநீர் அல்லது மின் விசை என்று எந்த அடிப்படைக் உள்கட்டுமானம் முற்றிலும்
போதுமானது அல்ல என்ற நிலைதான் உள்ளது.
தலைநகரான
புது டெல்லியில்கூட, மத்தியதர வகுப்பு அண்டைப் பகுதிகள் தனியார் குடிநீர்
விநியோகத்தைத்தான் பெறவேண்டியுள்ளதுடன், வாடிக்கையாக மின்சாரத் தடைகளை
எதிர்கொள்கின்றன.
இந்தியா ஒரு
உலகச் சக்தியாக
“வெளிப்பட்டுவிட்டது”
என்ற ஆடம்பரமான கூற்றுக்கள் இந்திய உயரடுக்கிடம் இருந்தும் அதற்கு
உந்துதல் கொடுக்கும் மேலை நாடுகளிடம் இருந்து வெளிவந்தபோதிலும் இதை அவர்கள் உலக
நிதியத்திற்கு பெரும் இலாபங்களுக்கான புதிய ஊற்று ஒன்று வந்துவிட்டது என்றுதான்
களிக்கின்றனர். எந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்தியா மோசமான ஏழை நாடாகத்தான்
உள்ளது.
இந்திய
முதலாளித்துவத்திற்கு இந்த இருட்டடிப்பு பெரும் அடியாகும். அதிலும் குறிப்பாக
நாட்டைச் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நடுவே. இவை வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் இந்தியாவில் மோசமான உள்கட்டுமானம் பற்றிக் கூறும் புகார்களைத்தான்
அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்திய முதலாளித்துவமோ பொருளாதாரச் சரிவைத்
தவிர்ப்பதற்கு, வெளிநாட்டு மூலதனத்தைத்தான் ஈர்க்க விரும்புகிறது
உலக
முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பில் இந்தியா தலைசுற்றி நிற்கிறது. ஏற்றுமதிகள்
சரிந்துள்ளன, சில்லறைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது, ரூபாய் எப்பொழுதும்
இல்லாத அளவிற்குக் குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் மத்திய
வங்கியின் தலைவர் இந்தியா 1991 வகையிலான நிதிய பற்றாக்குறை நெருக்கடியை
எதிர்கொள்ளக்கூடும் என்பது குறித்து விவாதித்தார்.
சந்தேகத்திற்கு இடம் இல்லாமல், இந்திய, மற்றும் சர்வதேசப் பெருவணிகம் இந்தவார
இருட்டடிப்புக்களை சந்தை ஆதரவுடைய சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளைத்
தீவிரப்படுத்தப் பயன்படுத்தும். இதில் தனியார் மின் உற்பத்தி, விநியோகம்
ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்பதும் அடங்கும். ஏற்கனவே திங்கள் மாலையில்
வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்தியாவின் விசை நிறுவனங்களை விவசாயிகளிடம் இருந்தும்
மற்றவர்களிடம் இருந்தும்
“சந்தை
விலையை”
மின்சாரத்திற்கு வாங்குவதில் வெற்றி பெறாததற்குக் குறைகூறுவதுடன், இந்தியாவின்
சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளும் நிலக்கரி உற்பத்தி விரிவடையாமல் இருப்பதற்கு ஒரு
தடை என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின்
எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பதிலாக அத்தகைய தனியார்மயமாக்கல், இலாபமடையும்
தீர்வுகள் பாரிய மின்சார கட்டண உயர்வையும் இன்னும் இருட்டடிப்புக்களையும்தான்
கொண்டுவரும். |