WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Afghan war crimes report suppressed
ஆப்கானியப்
போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கை அடக்கி வைக்கப்படுகிறது
Peter Symonds
1 August 2012
AIHRC
எனப்படும் சுயாதீன ஆப்கான் மனித உரிமைக் கழகத்தின் ஆப்கானிய அரசாங்கங்கள் மற்றும்
போர்ப்பிரபுக்கள் 1978ல் இருந்து 2001 வரை செய்த கொடுமைகள் மற்றும்
போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கையை அடக்கிவிடும் முயற்சி காபூலில் உள்ள அமெரிக்க
கைப்பாவை அரசாங்கத்தினை மோசமான வகையில் அம்பலப்படுத்தியுள்ளது.
AIHRC
என்பது காபூல் ஆட்சியினாலேயே நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். இது
ஆட்சியை நடத்தும் போர்ப்பிரபுக்கள், அவர்களுக்கு ஆதரவு தரும் சக்திகள்,
எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் குற்றம் நிறைந்த சான்றுகளை
ஆவணப்படுத்தியுள்ளது.
“1978ல்
இருந்து ஆப்கானிஸ்தானில் மோதல்கள் பற்றிய எடுத்துக்காட்டல்”
என்ற தலைப்பைக் கொண்ட இந்த 800 பக்க அறிக்கை, ஆறாண்டு காலத்திற்கும் மேலாக 40
ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு சர்வதேச சட்ட, குற்றத் தடவியல் வல்லுனர்களுடன் இணைந்து
தயாரிக்கப்பட்டது ஆகும். இது 180 பாரிய கல்லறைகள், நீதிக்குப் புறம்பான கொலைகள்,
ஒருதலைப்பட்சக் கைதுகள், கற்பழிப்புக்கள் மற்றும் சிறு நகரங்கள், கிராமங்கள்
அழிக்கப்படல் ஆகிவை குறித்துச் சான்றுகளை கண்டுபிடித்துள்ளது. அதன் ஆணையாளர் அஹ்மத்
நாடெர் நாடெரி இந்த அறிக்கை ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதைக் கணக்கில்
காட்டுகிறது—அனைத்தும்
போர்க்குற்றங்களால் அல்ல—மற்றும்
1.3 மில்லியன் ஊனமுற்றவர்களாக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் கொடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில்
நடைபெற்ற போரில் பங்கு பெற்ற அனைத்துத் தரப்பினர் செய்த குற்றங்களையும் இந்த
அறிக்கை பட்டியலிட்டுக் காட்டுகிறது. இதில் 1978-92 சோவியத் ஆதரவு பெற்ற மரபார்ந்த
முஜாஹிதின் போராளிகள் ஆப்கானிஸ்தானிற்கு எதிராகப்போராடியது, ஆட்சியை
அகற்றியது, பின்னர் தமக்குள் ஆப்கானிஸ்தானை பங்கு போட்டுக் கொண்டது அனைத்தும்
வந்துள்ளன.
சோவியத் ஆதரவு பெற்றிருந்த ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் நடந்த
மிருகத்தன உள்நாட்டுப்போர் பற்றிய விவரங்களையும் இது கொடுக்கிறது. அப்பொழுது
வாஷிங்டன்
“சுதந்திரப்
போராளிகள்”
என்று அமெரிக்கர்கள் பாராட்டிய இஸ்லாமியப் போர்ப்பிரபுக்கள்
அதிகாரம் மற்றும் மூலவளங்களின்மீது கட்டுப்பாட்டைக் கொள்வதற்குப் போராடினர். இதில்
இலாபம் செழித்த ஆப்கான் அபின் வணிகமும் அடங்கியிருந்தது. தலிபான் ஆட்சியின் கீழ்
கொடூரங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்தன. அவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவுடன்
மற்றும் அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவு ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டவர்கள் ஆவர்.
அதைத்தவிர அவர்களுடைய எதிரிகளான வடக்குப் பகுதிப் போர்ப்பிரபுக்களும் அத்தகைய
செயல்களில் ஈடுபட்டனர்.
கொடுமைகளுக்குப் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ள தற்போதைய ஆப்கானிய
அதிகாரிகள் அறிக்கை வெளியிடப்படக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததில் வியப்பு
ஏதும் இல்லை. அறிக்கையின் சில பகுதிகள்தான் செய்தி ஊடகத்திற்குக் கசிய விடப்பட்டன.
அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள ஆப்கானிய அதிகாரிகளில் முதல் துணை
ஜனாதிபதி முகம்மத் காசிம் பாகிம் என்னும் டாஜிக் போர்ப்பிரபு, இரண்டாம் துணை
ஜனாதிபதியான கரிம் கலிலி என்னும் ஹசாரா போர்பிரபு, தற்பொழுது ஒரு மாநில ஆளுனராக
இருக்கும் தளபதி அட்டா முகம்மத் நூர் என்னும் மற்றொரு டாஜிக் போர்க்குழுத் தலைவர்
மற்றும் ஆப்கானிய ஆயுதப் படைகளின் தலைமைக் கட்டுப்பாட்டிற்கு தலைவராக இருக்கும்
தளபதி அப்துல் ரஷித் தோஸ்டும் என்னும் இகழ்வான உஜ்பெக் போர்ப்பிரபு ஆகியோர்
உள்ளனர்.
இத்தகைய குண்டர்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது,
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் இன் ஆட்சியின்
கூலிக்கு
உழைக்கும்,
ஊழல் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இது
பிற்போக்குத்தன உள்ளூர் மற்றும் மாநிலப் போர்ப்பிரபுக்கள், ஆயுதக் குழுக்களின்
தளபதிகள் மற்றும் பழங்குடித் தலைவர்கள் ஆகியோரின் வலைப்பின்னலை அடித்தளமாகக்
கொண்டிருந்தது. போர்க்குற்றங்கள் அறிக்கை அடக்கி வைக்கப்படுதல் என்பது
அமெரிக்காவின் உடந்தையில்லாமல் நடக்க முடியாது. நியூ யோர்க் டைம்ஸ்
கூற்றின்படி, காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இது வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பைத்
தெரிவித்தது. அமெரிக்க அதிகாரிகள் இது வெளியிடப்படுவது
“பழைய
காயங்களைத் திறந்துவிடும்”
என்று கூறினர்.
இந்த அறிக்கை ஆப்கானியப் போர்ப்பிரபுக்களை மட்டும் இல்லாமல்,
அமெரிக்கா, சவுதி அரேபியா, பாக்கிஸ்தான் போன்ற அதன் நட்பு நாடுகளையும்
அம்பலப்படுத்துகிறது. இந்நாடுகள் 1980 களில் சோவியத் ஆதரவு பெற்றிருந்த ஆட்சிக்கு
எதிராகப் போராடிய பிற்போக்குத்தன இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு நிதி, ஆயுதங்களைக்
கொடுத்ததுடன். பயிற்சியையும் அளித்தன. அவை நாட்டை 1990களில் சிதற அடித்ததுடன்
கடந்த தசாப்தம் முழுவதும் வாஷிங்டனுடைய ஒத்துழைப்புடன் நாட்டை ஆள்கின்றன.
2001 உடன் குறிப்புக்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ஆவணம் அந்த
ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானத்தை ஆக்கிரமித்த அமெரிக்க, நேட்டோ படைகள் செய்த
குற்றங்களைப் பற்றி அதிகம் கூறவில்லை. ஆனால் 2001 இறுதி மாதங்களில் அமெரிக்கா
ஆப்கானிஸ்தானத்தில் செய்தவை குறித்த சிறு விவரங்கள் கூட போர்க்குற்றங்கள்தான்
என்பதை உணர்த்துகின்றன.
CIA
மிக நெருக்கமாக அதன் போர்ப்பிரபுக்கள் நண்பர்களுடன் செயல்பட்டது; இதில்
மஜார்-இ-ஷரிப்பிற்கு அருகே உள்ள
Qala-I Janga
கோட்டையில் இருந்த காவலில் வைக்கப்பட்டவர்கள் ஏராளமானோர்
கொலைசெய்யப்பட்டதும் அடங்கும்.
இந்த மிகப் பெரிய அறிக்கை
“அமெரிக்கப்
படைகளின் அத்துமீறல்கள்”
குறித்து இரண்டு பக்கங்களைத்தான் கொண்டுள்ளது. ஆனால் இவற்றுள்
குடிமக்கள்மீது அமெரிக்கா குண்டுத்தாக்குதல் நடத்தியது, கிளஸ்டர் குண்டுகள் உட்பட
பொறுப்பற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியது, நீதிவிசாரணையற்று கைதிகளைக் காவலில்
வைத்திருந்தது, சித்திரவதை மற்றும் கடத்தல்கள் ஆகியவை அடங்கும்.
ஆப்கானிய அறிக்கை பற்றிய வாஷிங்டனின் கவனஉணர்வு அதன் பழைய
குற்றங்களுடன் நின்றுவிடவில்லை. 1978ல் இருந்து 2001 வரையிலான தசாப்தங்களைப்
பரிசீலிக்கும் வகையில், இந்த ஆவணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் டொஸ்ரும், ஃவாகிம்,
ஹெலீலி போன்ற மிருகத்தன நபர்களை மட்டும் தோற்றுவிக்க உதவவில்லை
என்பது தெளிவாகும். அது தற்போது அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆப்கானிய,
வெளிநாட்டு இஸ்லாமியப் ஆயுதக்குழுக்களான பஷ்டுன் போர்ப்பிரபு குல்புத்தின்
ஹெக்மாட்யர், அல்குவேடா சர்வதேசப் பயங்கரவாத வலைப்பின்னலுக்கும் நிதியும்
ஆயுதங்களையும் கொடுத்துள்ளது.
ஹெக்மாட்யர் போன்ற இஸ்லாமியவாதிகள் அமெரிக்கச் செய்தி ஊடகத்தால்
“சுதந்திரத்திற்குப்
போராடுபவர்கள்”
என்று பெருமிதப்படுத்தப்பட்டாலும்,
“பயங்கரவாதிகள்”
என்று கண்டிக்கப்பட்டாலும், அது முற்றிலும் அவர்கள் அமெரிக்க
நலன்களுக்கு பணிபுரிந்தனரா என்பதைத்தான் பொறுத்துள்ளது. பெண்களுக்கு எதிரான
தலிபானின் பிற்போக்குத்தன ஆணைகள் 1990களின் இறுதியில் இருந்துதான் வாஷிங்டனால்
கண்டிக்கப்பட்டன. ஏனெனில் அப்பொழுதுதான் தலிபான் மத்திய ஆசியாவில் இருந்து
ஆப்கானிஸ்தான் மூலம் எண்ணெய், எரிவாயு குழாய்த் திட்டங்களுக்குத் தடையாயிற்று.
இந்த வரலாறு அமெரிக்காவின்
“பயங்கரவாதத்தின்
மீதான போர்”
என்று மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் எரிசக்தி செழிப்புடைய
பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தினை ஊக்குவிக்கும் போர்களுக்கும் மற்றும்
உள்நாட்டில் பொலிஸ் அரசாங்கத்தின் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும் போலிக்காரணமாக
முன்வைத்து நடத்தப்பட்டதின் போலித்தன்மையை அம்பலப்படுத்துகிறது.
மேலும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இப்பொழுது
ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளிலும் செய்துவந்த குற்றம் சார்ந்த
வழிவைகளைச் சுரண்டுகின்றன. லிபிய மக்களை
“விடுதலையாக்குதல்”
என்னும் பெயரில், அமெரிக்கா மற்றும் நேட்டோ எதிர்த்தரப்பு
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரித்துள்ளன. அவற்றுள் அல்குவேடாவுடனும்
தொடர்புடையவை உள்ளன. இந்தப் போர் கடாபியை பாரியளவிலான நேட்டோ குண்டுத் தாக்குதல்
மூலம் அகற்றியது. தற்போதைய திரிப்போலியில் உள்ள ஆட்சி இஸ்லாமியவாதிகள்,
சந்தர்ப்பவாதிகள் மற்றும் பிற அமெரிக்க ஆதரவாளர்களை கொண்டது. இவர்கள் காபூலில்
இருப்பவர்களைப் போலவே பிற்போக்குத்தனம் நிறைந்தவர்கள் ஆவர்.
இப்பொழுது ஒபாமா நிர்வாகம் இஸ்லாமியவாதிகளையும், அல்குவேடா
பிரிவினர் இன்னும் பிற இராணுவக் குழுக்களையும் ஆதரித்து ஜனாதிபதி பஷிர் அல் அசாத்தை
அகற்றி டமாஸ்கஸில் அமெரிக்கச் சார்புடைய ஆட்சியை பதவியில்இருத்த முயல்கிறது.
ஆப்கானிய அறிக்கையை அடக்கிவிட முடியும் என வாஷிங்டன் நம்புகிறது.
இதனால் அதன் ஆப்கானியக் குற்றங்கள் பற்றிய உண்மைகள் இப்பொழுது அது மத்திய கிழக்கு
முழுவதும் தொடரும் குற்றம் சார்ந்த கொள்கைகளுக்கு எதிர்ப்பை எரியூட்டக்கூடாது
என்பதுதான் நோக்கம். |